விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் சர்ரே (Surrey) அணி யோர்க்ஷையர் (Yorkshire) அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்களைக் குவித்துள்ளது. டிவிஷன் – I அணிகளான சர்ரே மற்றும் யோர்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சர்ரே அணிக்கு ஆ…
-
- 5 replies
- 696 views
-
-
‘நடுவர்’ குமார் தர்மசேனவின் புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் குமார் தர்மசேன, நடுவராகப் பணிபுரிவதில் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நூற்றைம்பதில் நடுவராகப் பணிபுரிந்த நடுவர்களின் குழுவில் குமார் தர்மசேனவும் இணைந்துள்ளார். 2010 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 46 டெஸ்ட் போட்டிகளிலும், 2009 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 82 போட்டிகளிலும், 22 இ-20 போட்டிகளிலும் குமார் தர்மசேன நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில், அசோக டி சில்வாவே 150 போட்டிகளில் பணியாற்றிய முதல் நடுவராவார். இதுவரை அதிக போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சாதனையை…
-
- 0 replies
- 943 views
-
-
இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்த இங்கிலாந்து 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும். இந்த நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது உறுதியற்றதாக இருந்தது. எனினும், நேற்று இங்கிலாந்துடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்து தரவரிசையில் பின்தள்ளப்பட்டதால், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ…
-
- 2 replies
- 427 views
-
-
மெத்தியூஸை துரத்தும் உபாதை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24694
-
- 0 replies
- 302 views
-
-
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நான்காவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தமையே இதற்கான காரணம் ஆகும். கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் விக்கெட் 06 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. என்றாலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஜோடி 219 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது. …
-
- 2 replies
- 642 views
-
-
பெனால்டி கோல் அடிப்பதில் நெய்மர் - கவானி இடையே ‘ஈகோ’ போர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னணி வீரர்களான நெய்மர் மற்றும் கவானி இடையே பெனால்டி கோல் அடிப்பதில் ஈகோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார். இதற்காக பார்சிலோனாவிற்கு 220 மில்லியன் யூரோவை டிரான்ஸ்பர் பீஸாக வழங்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். அதிக தொகை கொடுத்து வாங்கியதால் பி.எஸ்.ஜி. அணியின் முன்னணி வீரராக நெய்மர் திகழ்கிறார். அதேவேளையில் அந்த அணிக்காக 2013-ல் இருந…
-
- 0 replies
- 496 views
-
-
தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive ‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’ ‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’ ‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...!’ குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. இடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30. வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிரு…
-
- 0 replies
- 732 views
-
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள்: கிறிஸ் கெய்லின் தனித்துவ சாதனை கெய்ல். - கோப்புப் படம்.| ஜி.பி.சம்பத் குமார் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்து சாதனை புரிந்துள்ள மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்த முதல் வீரரானார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் சனிக்கிழமையன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் 21 ரன்களில் வீழ்த்தியது மே.இ.தீவுகள். அதில் கெய்ல் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார், இதில் 3 நான்குகள், 4 ஆறுகள் அடங்கும். அப்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்துச் சாதனை புரிந்த முதல் வீரர் ஆ…
-
- 0 replies
- 447 views
-
-
இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள் Source - Getty Images ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் இம்மாதம் 16, 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இவ்வாரம் நடைபெற்ற அதிகமான போட்டிகளில் பங்குபற்றிய அணிகள் போட்டியின் இறுதித் தருவாயிலேயே தமது வெற்றியை உறுதி செய்ததை காணக்கூடியதாக இருந்தது. நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எது எவ்வாறாயினும் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தமது ஆதரவாளர்களுக்கு சிறந்த விளையாட்டை காட்டத் தவறவில்லை. இவ்வாரம் 16 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஓர…
-
- 0 replies
- 342 views
-
-
சிங்கப்பூர் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் பார்முலா1 கார்பந்தயத்தில் இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பார்முலா1 கார்பந்தயத்தில் ரெய்க்கோனன் (வலது), வெட்டல் ஆகியோரின் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சி சிங்கப்பூர்: பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா ஓடுதளத்தில் நேற்று மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்தது. இதில் 308.828 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்…
-
- 0 replies
- 429 views
-
-
"ஒரு தலைமுறையையே இலங்கைக் கிரிக்கெட் இழந்துவிட்டது" ஆதங்கத்துடன் லசித் மலிங்க ஒரு தலைமுறையையே இலங்கைக் கிரிக்கெட் இழந்துவிட்டது என்று லசித் மலிங்க ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்களின் விருப்பத்திற்கு புதிய இளம் வீரர்களை அணியில் சேர்த்து, சேர்த்தவர்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொண்டார்கள். அணி வீழ்ச்சியைக் கண்டுவிட்டது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக கண்டுவரும் தொடர் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றது. அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் …
-
- 0 replies
- 617 views
-
-
800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak மார்ச் 3, 2009. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ், லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கி பயணிக்கிறது. சுற்றிலும் பாதுகாப்பு. பஸ் லிபர்டி செளக் பகுதியில் சென்றபோது அங்கு ஊடுருவியது, துப்பாக்கி ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல். பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது தாக்குதல். இலங்கை வீரர்கள் ஆறு பேர் காயம். ஆறு போலீஸார், பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி. அஷன் ரஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த அம்பயர். லாகூர் டெஸ்ட் போட்டியின் ரிசர்வ…
-
- 0 replies
- 562 views
-
-
தர்ஜினியின் உதவியால் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள புனித அல்பான்ஸ் உலகின் அதிக உயரமான வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின் அசாத்தியமான 208 சென்டிமீற்றர் உயரம் மற்றும் அபாரமான ஷூட்டிங்கினால் புனித அல்பான்ஸ் அணி அவுஸ்திரேலியாவின் GFL தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ளது. வலைப்பந்து அரங்கில் கோல் ஷூட்டரான தர்ஜினி சிவலிங்கம் கூட்டமொன்றுக்கு மத்தியில் நிற்க எந்த சிரமத்திற்கும் முகம் கொடுக்கமாட்டார். அது தனது சொந்த ஊரான வட இலங்கையின் யாழ்ப்பாணம் அல்லது சுப்பர்செயின்ட்ஸ் வலைப்பந்து அரங்காக இருந்தாலும் சரியே. 37 வயதான அந்த வீராங்கனை பொதுவாக எப்போதும் அனைவரது அவதானத்துக்கும் உள்ளாவார். அவரது 208 செ…
-
- 1 reply
- 543 views
-
-
சாமர சில்வாவுக்கு 2 வருட சகல கிரிக்கெட் போட்டி தடை கிரிக்கெட் வீரர் சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=95464
-
- 0 replies
- 313 views
-
-
இன்று மே.இ.தீவுகள் டி 20ல் மோதல் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டி 20 ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதில் டி 20 ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ட்ரிட்டில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. அதேவேளையில் வெற்றி ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்…
-
- 3 replies
- 351 views
-
-
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில், இலங்கையிலிருந்து 9 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகின்ற பங்…
-
- 0 replies
- 701 views
-
-
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை பெற பாரீஸ் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஆகிய நகரங்கள் இடையே நேரடி போட்டி நிலவியது. இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேலும் 4 ஆண்டுகள் காத்திருந்து 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ்ஏஞ்சல்ஸ் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் பெரு தலைநகர் லிமாவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை பாரீசுக்கும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வழங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக…
-
- 0 replies
- 422 views
-
-
டுமினியின் திடீர் முடிவு! தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜீன் போல் டுமினி டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். அதன்பின் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும் ஒருநாள் மற்றும் இ-20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 33 வயதாகும் டுமினி இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 2,103 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் அவர், பந்துவீச்சில் 42 விக்கட…
-
- 0 replies
- 324 views
-
-
சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி Tamil சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணம், பனிக்கர் தனபாலசிங்கம் ஞாபகார்த்த கேடயத்துக்கான கிரிக்கெட் போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 50 ஓவர்களைக் கொண்டிருந்ததாக அமைந்திருந்த இந்தப்போட்டியில் ஆனந்த கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது ஆரம்ப வ…
-
- 0 replies
- 529 views
-
-
உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாக…
-
- 5 replies
- 709 views
-
-
தரப்பட்டுத்தல் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் ஜெர்மனி உலக காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA நேற்று வெளியிட்ட , தரப்படுத்தல் பட்டியலில் , ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது . செக் குடியரசுக்கு எதிராகவும் , நோர்வேக்கு எதிராகவும் , இந்த மாதம் விளையாடி வென்ற காரணத்தால் , அதற்கு முன்னணி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . லயனல் மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனா , நான்காம் இடத்துக்கு இறங்கி உள்ளது. ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி , மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரித்தானியாவின் சிறந்த அணியாகி உள்ள வேல்ஸ் ,இங்கிலாந்தை 15ம் இடத்துக்கு தள்ளி விட்டு , 13ம் இடத்துக்கு தாவி இருக்கின்றது. முதல் பத்து இடத்திலுள்ள அணிகளின் பட்டியல் இதோ : ஜேர்மனி , ப…
-
- 0 replies
- 308 views
-
-
முதலிடத்தை பிடிப்பது யார்? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், முதலிடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அணிகளுக்கான தற்போதைய தரவரிசையில் தென்னாபிரிக்கா 119 தரப்புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தலா 117 தரப்புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா (5,505) 2ஆவது இடத்திலும், இந்தியா (5,266) 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முடிவைப் பொறுத்து தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தொடரை இந்தியா …
-
- 0 replies
- 526 views
-
-
பேட்டிங்கில் தோனியிடமிருந்து சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்: ரவி சாஸ்திரி இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி வெற்றிக்குப் பிறகு.. - படம்.| பிடிஐ. தோனி தனது ஆரம்பகால அதிரடி பேட்டிங்குக்கு எப்போது திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் வேளையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதற்கான சாத்தியங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்க்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா டுடே நேர்காணலில் தோனி பற்றிய பலரது சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக ரவி சாஸ்திரி, “தோனி இவ்வாறு ஆடிவரும் போது நாம் எப்படி மாற்றி யோசிக்க முடியும்?” என்று 2019 உலகக்க…
-
- 0 replies
- 330 views
-
-
பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்தார் விராட் கோலி பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் இந்தத் தகவலை உறுதி செய்த போது, காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்தார். கோலி கடைபிடிக்கும் கொள்கைக்கு இது சற்றும் பிசகாமல் உள்ளது. அதாவது தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அது. அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால்…
-
- 0 replies
- 510 views
-
-
UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட் Getty UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டி…
-
- 0 replies
- 417 views
-