விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7849 topics in this forum
-
லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் பின்னரான லாலிகா சுற்றுப் போட்டிகளின் மூன்றாம் கட்டப்போட்டிகள் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. போட்டியின் முடிவில் பார்சிலோனா கழகம் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பல அணிகளின் எதிர்பாராத போட்டி முடிவுகள் ஆதரவாளர்களை மகிழ்ச்சியிலும் அதேபோல் அதிருப்தியிலும் ஆளாக்கியுள்ளது. உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னரான ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப்போட்டிகள் 9ஆம் திகதி ஆரம்பமாகியது. ஓருவார கால இடைவெளியின் பின்னர் ஆதரவாளர்கள் தமது அணியின் வீரர்களை உற்சாகப்படுத்த திரள் திரளாக மைதானத்திற்கு சமூகமளித்திருந்தனர். அத…
-
- 0 replies
- 424 views
-
-
போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள ரியல் மெட்ரிடின் மூன்று தலைவர்கள் புதிய பருவகாலத்திற்கான அனைத்து கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தின் முதல் மூன்று தலைவர்களும் கடந்த ஒருமாத காலத்திற்குள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, பல போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுமுள்ளன. இந்நிகழ்வால் அவ்வணியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டி முதல் பிரீமியர் லீக் வரையிலான அனைத்து சுற்றுப்போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்றுவருகின்றது. போட்டி முடிவுகள் தமது அணிக்கு சாதகமாக அமையாத நிலையில் வீரர்கள் முதற்கொண்டு, ஆதரவ…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முரளீதரன் பெயர் நீக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI/AFP/GETTY IMAGES Image captionமுத்தையா முரளீதரன் (வலது) இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் அகற்றப்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 420 views
-
-
குத்துச்சண்டையில் வரலாற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி நான்கு தங்க பதக்கங்களை கைப்பற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது. நாடு பூராகவும் 48 பாடசாலைகளை சேர்ந்த 267 வீரர்கள் பங்குபற்றிய 16 பிரிவுகளைக் கொண்ட இந்த தேசிய போட்டித்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் குத்துச்சண்டை திடலில் இடம்பெற்றுவந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த ப…
-
- 2 replies
- 429 views
-
-
ஆஸி. வீரர்களின் சிக்ஸர் மழைக்கு மத்தியில் கில்லி போல பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்! 11 சிக்ஸர்கள். 50 ஓவர்களில் 347 ரன்கள். இந்த ரன் மழைக்கு மத்தியில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தன்னிரகற்ற பந்துவீச்சாளராக விளங்கினார். அட என்று அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் பந்துவீச்சு. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன்…
-
- 1 reply
- 439 views
-
-
பாகிஸ்தான் சென்று இலங்கை ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளைய…
-
- 0 replies
- 302 views
-
-
உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாக…
-
- 5 replies
- 701 views
-
-
வீடியோ... ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்கிய பேட்ஸ்மேன் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை, பேட்ஸ்மேன் தனது பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்குவது தொடர்பான வீடியோவை பார்த்து மகிழுங்கள். வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. ஆறு அணிகள் இடம்பிடித்த இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் - கயானா அமேசான் வாரியஸ் அணிகள் மோதின. கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் சாட்விக் வால்டன் பே…
-
- 0 replies
- 376 views
-
-
பார்சிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பார்சிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து சாதனைப் படைத்துள்ளார். லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா - எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67-வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடி…
-
- 0 replies
- 279 views
-
-
2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் 2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தமட்டில் போட்டியின் அரைவாசி பகுதி முழுவதும் தலைவரின் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் படிதான் அணி வழிநடாத்தப்படுவதுடன், போட்டி நிறைவடையும் வரை அனைத்து அழுத்தங்களையும் தனது தோள்களில் சுமந்துகொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் மும்முரமாக இருப்பார். வானம் உயர்ந…
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7 வருடங்களில் (அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டிய பயிற்சியாளர்கள் 10 பேர்கள் வரையில் மாற்றப்பட்டுள்ளனர். பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏன் மாற்றப்படுகின்றனர் என்கிற கேள்வியோடு இலங்கை அணியின் போராடும் தன்மையும் இப்போதைய நாட்களில் குறைந்து வருவதை பார்க்கலாம். இவ்வாறான நிலைமைகளை மாற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பய…
-
- 0 replies
- 418 views
-
-
அதிர்ச்சி முடிவுகளைக் கொடுத்த பிரீமியர் லீக்கின் இவ்வாரப் போட்டிகள் அதிர்ச்சி முடிவுகளைக் கொடுத்த பிரீமியர் லீக்கின் இவ்வாரப் போட்டிகள் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளிற்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னராக, மீண்டும் தற்போது பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் கடந்த நாட்களில் தமது நாட்டிற்காக எதிரணியாக இருந்து விளையாடிய பல வீரர்கள், இச்சுற்றுப் போட்டியில் மீண்டும் ஓன்றிணைத்துள்ளனர். ஏற்கனவே, அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தன. அதன் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை மென்சஸ்டர் யுனைடட் அணி பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 466 views
-
-
ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வுக்கு சங்கக்காரவுக்கு அழைப்பு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவை இந்திய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவ்ரவ் கங்குலி இவ் அழைப்பை விடுத்துள்ளதுடன், இதற்கு சங்கக்கார சாதகமான பதிலை வழங்கி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள…
-
- 0 replies
- 350 views
-
-
அரவிந்தவை நாடுகிறது இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது. அரவிந்த டி சில்வா, ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணி…
-
- 0 replies
- 289 views
-
-
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நடால்! அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் ஆடவர் பிரிவில், நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ், பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்டீஃபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் நடால் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆண்டர்சன் மோதினர். இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வென்று, அமெரிக்க ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, 58 நிமிடங்களில் போட்டியை முடித்து, தான் நம்பர் 1 பிளேயர் என்பதை நிரூபித…
-
- 0 replies
- 451 views
-
-
இந்திய வீரர்களுக்காக பிசிசிஐ சொந்தமாக விமானம் வாங்க வேண்டும்: கபில்தேவ் விருப்பம் இடைவிடாமல் விளையாடும் இந்திய வீரர்கள் சோர்வு தெரியாமல் இருக்க பிசிசிஐ விமானம் ஒன்றை வாங்க வேண்டும் என கபில்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் விளங்கி வருகிறது. வருமானம் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் இந்திய அணியுடன் எல்லா அணிகளும் இருநாடுகளுக்கு இடையிலான தொடரை அதிக அளவில் நடத்த விரும்புகிறது. ஐ.சி.சி. தொடர் என்றாலும் இந்தியா மோதும் போட்டிகள் மூலம் அதிக வருமானம் கி…
-
- 0 replies
- 379 views
-
-
கரீபியன் பிரிமீயர் லீக்: இறுதி போட்டி CPL 2017 Final Full Highlights || T. Knight Riders vs St Kitts & Nevis Patriots Final Highlights CPL 2017 Final Last 2 overs 12 off 22 CPL T20 2017 FINAL : Presentation Ceremony | St Kitts and Nevis Patriots vs Trinbago Knight Riders
-
- 1 reply
- 735 views
-
-
நெய்மார் முதல் டெம்பல்லே வரை... இவ்ளோ விலைக்கு இவர்கள் வொர்த்தா? #Football #SummerTransfer ஒவ்வொரு வருடமும் கால்பந்து உலகில் போட்டிகளே இல்லாவிட்டாலும், பரபரப்பாக இருக்கும் மாதங்களில் ஆகஸ்ட் மாதமும் ஒன்று. காரணம், சம்மர் டிரான்ஸ்ஃபர். அதாவது அடுத்த சீஸனுக்காக புதிய வீரர்களைக் கால்பந்து க்ளப்புகள் ஒப்பந்தம் செய்ய, அந்த மாதம்தான் கடைசி. சீஸன் முடிந்தவுடன் ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்தே டிரான்ஸ்ஃபர் நடைபெறும் என்றாலும், ஆகஸ்ட் மாதத்தில்தான் புதிய ஒப்பந்தங்கள் வெகுஜோராக நடைபெறும். ஏனெனில், ஐரோப்பாவில் செப்டம்பர் 1 வரைதான் சம்மர் டிரான்ஸ்ஃபர் விண்டோ உயிர்ப்புடன் இருக்கும். (இதேபோல் வருடம்தோறும் ஜனவரி மாதமும் டிரான்ஸ்ஃபர்கள் நடைபெறும். அதற்கு `வின்டர் டிர…
-
- 2 replies
- 607 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி சகநாட்டவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நியூயார்க்: ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை பெண்கள் ஒற்றையர் பிரி…
-
- 0 replies
- 367 views
-
-
இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலி…
-
- 60 replies
- 4.1k views
-
-
500 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி டெஸ்டில் பிராத்வெயிட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்கள் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றார். லண்டன்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 46 ரன்களுடன் திணறிக்…
-
- 1 reply
- 497 views
-
-
சிறையில் முதல் நாள் இரவே தூக்கில் தொங்க எண்ணினேன்: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் லூயிஸ் உருக்கம் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிறிஸ் லூயிஸ் - கோப்புப் படம். போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கி 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் லூயிஸ் சிறையில் தான் முதல்நாள் இரவிலேயே படுக்கை விரிப்பு மூலம் தூக்கில் தொங்க எண்ணியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 2008-ல் கிறிஸ் லூயிஸ் செயிண்ட் லூசியாவிலிருந்து விமானத்தில் திரும்பி வந்த போது காத்விக் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இவர் கொண்டு வந்த…
-
- 0 replies
- 361 views
-
-
இரானுக்கு எதிராக 2-வது கோலை சிரியா அடித்த போது உணர்ச்சிவசப்பட்டு அழுத சிரியா வர்ணனையாளர் சிரியா நாட்டு கால்பந்து ரசிகர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பை 2018-க்கான தகுதிச்சுற்றுக் கால்பந்து போட்டியில் 93-வது நிமிடத்தில் ஈரானுக்கு எதிராக அந்த 2-வது கோலை சிரியா அடித்து சமன் செய்த தருணத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த வர்ணனையாளர் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இவரது உணரர்ச்சிகரம். சிரியா வீரர் அல் சோமா 93-வது நிமிடத்தில் அடித்த கோலால் இரானுக்கு எதிராக 2-2 என்று டிரா சாத்தியமானதோடு, ஆசிய பிளே ஆஃப் சுற்றுக்கும்…
-
- 0 replies
- 327 views
-
-
பெடரருக்கு அதிர்ச்சியளித்த டெல் போட்ரோ: அரையிறுதியில் நடாலைச் சந்திக்கிறார் யு.எஸ். ஓபன் காலிறுதியில் டெல் போட்ரோவிடம் தோல்வியடைந்த பெடரர். - படம்.| ஏ.பி. யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்டின் டெல் போட்ரோ தகுதி பெற்றார், இன்று நடந்த காலிறுதியில் ரோஜர் பெடரரை 7-5, 3-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். ரபேல் நடால் தான் பெடரருக்காகக் காத்திருப்பதாக பேட்டி அளித்திருக்கும் சமயத்தில் யுவான் டெல் போட்ரோ அபாரமான ஆட்டத்தில் பெடரரை வெளியேற்றி நடாலைச் சந்திக்க தயாராகியுள்ளார். யுவான் டெல் போட்ரோ 2009-ல் ந…
-
- 0 replies
- 277 views
-
-
பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்ற சவூதி அரேபியா Image courtesy - Getty Images எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது முறையாகவும் தகுதி பெற்ற பெருமையை அவ்வணி கொண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஜப்பான் அணியை 1-௦ எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே சவூதி அரேபிய அணி இந்த தகுதியைப் பெற்றது. இதன்படி, ஆசியாவில் இருந்து சவூதியுடன் சேர்த்து ஜப்பான், ஈரான் மற்றும் கொரியா ஆகிய அணிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி …
-
- 0 replies
- 324 views
-