விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
சிறையில் முதல் நாள் இரவே தூக்கில் தொங்க எண்ணினேன்: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் லூயிஸ் உருக்கம் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிறிஸ் லூயிஸ் - கோப்புப் படம். போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கி 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் லூயிஸ் சிறையில் தான் முதல்நாள் இரவிலேயே படுக்கை விரிப்பு மூலம் தூக்கில் தொங்க எண்ணியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 2008-ல் கிறிஸ் லூயிஸ் செயிண்ட் லூசியாவிலிருந்து விமானத்தில் திரும்பி வந்த போது காத்விக் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இவர் கொண்டு வந்த…
-
- 0 replies
- 361 views
-
-
மைலோ பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை முதற்தடவையாக யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்துகின்ற இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 164 ஆண்கள் பாடசாலைகளும், 138 பெண்கள் பாடசாலைகளும் (302 பாடசாலைகள்) கலந்துகொள்ளவுள்ளன. பாடசாலைகள் விளையாட்டுத்துறை வரலாற்றில் முக்கிய தொடராக 1984ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வந்த இப்போ…
-
- 1 reply
- 663 views
-
-
சங்காவின் அதிரடி வீண் : CPL தொடரிலிருந்து ஜமெய்க்க அணி வெளியேற்றம் Image Courtesy - Getty image மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின், பிளே ஒப் சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. இச்சுற்றில் நடைபெற்று முடிந்திருக்கும் வெளியேறல் (Eliminator) நொக்அவுட் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியினால் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் நடப்புச் சம்பியன் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறுகின்றது. கடந்த மாத ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஒப் போட்…
-
- 1 reply
- 284 views
-
-
இரானுக்கு எதிராக 2-வது கோலை சிரியா அடித்த போது உணர்ச்சிவசப்பட்டு அழுத சிரியா வர்ணனையாளர் சிரியா நாட்டு கால்பந்து ரசிகர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பை 2018-க்கான தகுதிச்சுற்றுக் கால்பந்து போட்டியில் 93-வது நிமிடத்தில் ஈரானுக்கு எதிராக அந்த 2-வது கோலை சிரியா அடித்து சமன் செய்த தருணத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த வர்ணனையாளர் உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இவரது உணரர்ச்சிகரம். சிரியா வீரர் அல் சோமா 93-வது நிமிடத்தில் அடித்த கோலால் இரானுக்கு எதிராக 2-2 என்று டிரா சாத்தியமானதோடு, ஆசிய பிளே ஆஃப் சுற்றுக்கும்…
-
- 0 replies
- 326 views
-
-
பெடரருக்கு அதிர்ச்சியளித்த டெல் போட்ரோ: அரையிறுதியில் நடாலைச் சந்திக்கிறார் யு.எஸ். ஓபன் காலிறுதியில் டெல் போட்ரோவிடம் தோல்வியடைந்த பெடரர். - படம்.| ஏ.பி. யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்டின் டெல் போட்ரோ தகுதி பெற்றார், இன்று நடந்த காலிறுதியில் ரோஜர் பெடரரை 7-5, 3-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். ரபேல் நடால் தான் பெடரருக்காகக் காத்திருப்பதாக பேட்டி அளித்திருக்கும் சமயத்தில் யுவான் டெல் போட்ரோ அபாரமான ஆட்டத்தில் பெடரரை வெளியேற்றி நடாலைச் சந்திக்க தயாராகியுள்ளார். யுவான் டெல் போட்ரோ 2009-ல் ந…
-
- 0 replies
- 277 views
-
-
பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்ற சவூதி அரேபியா Image courtesy - Getty Images எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது முறையாகவும் தகுதி பெற்ற பெருமையை அவ்வணி கொண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஜப்பான் அணியை 1-௦ எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே சவூதி அரேபிய அணி இந்த தகுதியைப் பெற்றது. இதன்படி, ஆசியாவில் இருந்து சவூதியுடன் சேர்த்து ஜப்பான், ஈரான் மற்றும் கொரியா ஆகிய அணிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி …
-
- 0 replies
- 322 views
-
-
தமிழ்மகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் டைக்கொண்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனை 43 ஆவது தேசிய விளையாட்டுப் பொட்டியில் இடம்பெற்ற தைக் கென்டோ போட்டியில் கிளிநொச்சி பெண் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு, ரொறின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் டைக்கொண்டோ போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டார். இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28:17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார். விளையாட்ட…
-
- 0 replies
- 458 views
-
-
எங்கள் அணியை எங்கள் மண்ணில் வீழ்த்த முடியாது: ஆஸி.க்கு ஷாகிப் அல் ஹசன் சவால் இலங்கைக்கு எதிராக சதம் கண்ட ஷாகிப். - படம். | ஏ.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வருகை தரும் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்துள்ளார். அதாவது தங்கள் நாட்டில் தங்கள் அணி ஏறக்குறைய வீழ்ட்த முடியாத அணியே என்று ஷாகிப் அல் ஹசன் ஆஸ்திரேலியாவைச் சீண்டியுள்ளார். தி கார்டியன் இதழில் அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பயணம் மிக நீண்ட பயணம், நம்ப முடியாத பயணம். வங்கதேசத்தில் கூட நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறுவோம் என்று யாரும் நம்பவில்லை. எங…
-
- 25 replies
- 1.8k views
-
-
ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை நடக்கிறது. இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது. கொழும்பு: வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. 20 ஓவர் போட்டியிலும் வெ…
-
- 4 replies
- 710 views
-
-
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் தொடர்களை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது. இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்க…
-
- 1 reply
- 346 views
-
-
யாழில் மாபொரும் “துடுப்பாட்டத் தாக்குதல் - 2017” இருபதுக்கு - 20 துடுப்பாட்ட தாக்குதல் ( CRICKET BASH - 2017 ) போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு பாடசாலைகளின் மைதானங்களில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பிரித்தானிய தமிழ் துடுப்பாட்ட லீக் (British Tamil Cricket League) லெபாறா (Lebara) நிறுவனத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்துடன் இணைந்து இந்த இருபதுக்கு 20 துடுப்பாட்ட தாக்குதல் CRICKET BASH - 2017 முன்னெடுத்துள்ளன. நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 20 பாடசாலைகளின் 19 வயதிற்குட்ட துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குபற்றுகின்றன. செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமான இப்போட்டிகள் எதிர்வரும்…
-
- 10 replies
- 1.7k views
-
-
மெஸ்ஸி சோபிக்கவில்லை, மீண்டும் அர்ஜெண்டினா, சிலி அணிகள் தடுமாற்றம் YouTube லயோனல் மெஸ்ஸி, வெனிசூலா வீரர் ஜூனியர் மொரீனோவுக்குக் கைகொடுக்கிறார். - படம். | ஏ.எஃப்.பி. 2018 உலகக்கோப்பை கால்பந்துத் தொடருக்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன இதில் அர்ஜெண்டினா அணி வெனிசூலாவுக்கு எதிராக 1-1 என்று டிரா செய்ய சிலி அணி பொலிவியாவுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. அர்ஜெண்டினா அணி இடைவேளை வரை ஏகப்பட்ட கோல் வாய்ப்புகளை கோல் அருகில் சென்று மோசமான பினிஷிங்கினால், திட்டமிடலின்மையால் தவற விட்டது. கடைசியில் வெனிசூலா அணி தன் கோலில் அடித்த ஷாட்டின் மூலமே அர்ஜெண…
-
- 0 replies
- 288 views
-
-
ரந்தீவை ஞாபகப்படுத்திய பொலார்ட் கரீபியன் பிறீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற போட்டியொன்று, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவின் செய்கைகளை ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றது. பிரிட்ஜ்டௌணில் இடம்பெற்ற இந்தப் போட்டி, பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும் சென். கிற்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய, பொலார்ட் தலைமையிலான ட்ரைடென்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டியோன் வெப்ஸ்டர் 32 (25) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கார…
-
- 2 replies
- 366 views
-
-
ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி Image courtesy - Kholi's twitter உலக ஆசிரியர்கள் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் தமது ஆசான்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியாளர்களுடன் முன்னாள் ஜாம்பவான்கள்தான் ஆசிரியர்கள். அவர்களது ஆட்டத்…
-
- 0 replies
- 456 views
-
-
கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான சீசனில் லீக் போட்டிகள் முடிவில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் முதல் நான்கு இட…
-
- 0 replies
- 303 views
-
-
முழு வட மாகாணமுமே எனக்கு ஆதரவு தருகின்றது – அனித்தா 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்த யாழ் வீராங்கனை அனித்தா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் சுபாஸ்கரனுடனான ThePapare.comஇன் சிறப்பு நேர்காணல்.
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; இந்திய கிரிக்கெட் வீரர் அகால மரணம் இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப…
-
- 0 replies
- 233 views
-
-
ஷேவாக், கெய்ல், அப்ரிடியின் அதிரடியை மீண்டும் பார்க்கலாம்! #T10Cricke கிரிக்கெட் போட்டிகளை அடுத்த லெவலுக்கு நகர்த்திச் செல்லும் முன்னெடுப்புகளில் ஒன்றாக, பத்து ஓவர்கள் மட்டுமே கொண்ட 'டி-10 கிரிக்கெட்' போட்டித் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ் கெய்ல், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்கரா ஆகியோர் இப்போட்டிகளுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, நால்வருமே களத்திலும் இறங்கி கலக்க இருக்கிறார்கள். ஆசிய நாடுகளைச…
-
- 1 reply
- 683 views
-
-
மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி நடுவர் மீதான அதிருப்தியில் ஸ்டம்பை உதைக்கும் ஹோல்டிங். - படம். | கெட்டி இமேஜஸ். பிரையன் லாரா. - கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். லார்ட்ஸில் எம்.சி.சி. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான கவுட்ரி சொற்பொழிவாற்றிய பிரையன் லாரா, முன்னணி அணிகள் ஆட்டத்தின் நேர்மையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் 90-களில் மே.இ.தீவுகள் அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்றும் ஒரு மு…
-
- 0 replies
- 348 views
-
-
முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஒரேஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் நிறைவடைந்தவுடன் இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது. அனைத்து சர்வதேச அணிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் தனது போட்டிகளை ஐக்கிய அரபு எம…
-
- 0 replies
- 365 views
-
-
உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்காகத் தகுதிபெற்ற முதலாவது ஐரோப்பிய அணியாக, பெல்ஜியம் அணி மாறியுள்ளது. கிரேக்க அணிக்கெதிராகப் பெற்ற 2-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியே, அவ்வணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. முதற்பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில், 2ஆவது பாதியில் பெல்ஜியம் அணி தனது முதலாவது கோலைப் பெற, கிரேக்க அணி பதிலடி வழங்கியது. ஆனால் 74ஆவது நிமிடத்தில், பெல்ஜியத்தில் றொமேலு லூக்காகு, தனது அணிக்காகக் கோலொன்றைப் பெற்று, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதன் மூலம், உலகக்கிண்ண தகுதியும் உறுதியானது. அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குப…
-
- 0 replies
- 270 views
-
-
சச்சின் சாதனைகளை கோலி தாண்டுவாரா? புள்ளிவிவரங்கள் சொல்லும் கணிப்புகள்! இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 ஆட்டங்களைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா. இரு அணிகளுக்கு இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வென்றது.…
-
- 0 replies
- 464 views
-
-
கோலி 100... தோனி 100... இலங்கை 1... சாதனைத் தொடரின் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics http://www.vikatan.com/news/sports/101311-india-whitewashed-srilanka-here-are-the-stats.html
-
- 0 replies
- 393 views
-
-
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வாஷிங்டன்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லிய…
-
- 0 replies
- 303 views
-
-
இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் இத்தாலி பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். மோன்ஸா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி அங்குள்ள மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.72 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் முன்னாள் சாம…
-
- 0 replies
- 177 views
-