விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7849 topics in this forum
-
வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா! வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா! லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பொட்ஸ்வானாவைச் சேர்ந்த ஐசாக் மக்வாலா தனிச் சுவட்டில் ஓடி போட்டியை நிறைவு செய்து மெய்வல்லுனர் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார். 16ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் லண்டன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றிருந்த ஒரு சில வீரர்கள் உணவு நஞ்சானமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இதன் கார…
-
- 0 replies
- 518 views
-
-
பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பிரேசில் பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பிரேசில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தரவரிசை பட்டியலில் உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனியை பின்தள்ளி பிரேஸில் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பிஃபா, வியாழக்கிழமை (10) புதுப்பித்த தரவரிசையில் ஜெர்மனி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு இரண்டாவது இடத்திற்கு வந்ததோடு, பிரேஸில் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலாவது இடத்தைப் பிடித்தது. ஜெர்மனி அணி 2014 ஆம் ஆண்டுக்கு பின் கடந்த ஆண்டிலேயே முதலிடத்திற்கு முன்னேறிய…
-
- 0 replies
- 354 views
-
-
பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ: பார்சிலோனா விருப்பத்தை நிராகரித்தது லிவர்பூல் பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ கொடுக்க வந்த பார்சிலோனாவின் ஆஃபரை நிராகரித்துள்ளது இங்கிலீஸ் பிரிமீயர் லீக் கிளப் லிவர்பூல். ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணிக்கு விளையாடிய பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான நெய்மர், பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறினார். இதற்காக பி.எஸ்.ஜி. அணி பார்சிலோனாவிற்கு டிரான்ஸ்பர் பீஸாக 222 மில்லியன் யூரோ வழங்கியது. நெய்மர் ச…
-
- 0 replies
- 187 views
-
-
ஆஸியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக பிரெட் ஹாடின் தெரிவு அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரரும், அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளருமான பிரெட் ஹெடின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய கிரெக் பிளெவெட் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவரின் இடத்துக்கு ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரெட் ஹாடின் எதிர்வரும் 2019 ம் ஆண்டு நிறைவுவரை அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/22999
-
- 0 replies
- 486 views
-
-
இதற்காகவா பலமுறை சினமுற்றார் சங்கா...? (வீடியோ இணைப்பு) கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நேற்றைய போட்டியில் அதிக சினமுற்றமையை அவதானிக்க முடிந்தது. நேற்றைய தினம் இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஜமைக்கா டலவாஸ் அணி மோதிக்கொண்டன. குறித்த போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணித் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார அணித்தலைவராக செயற்பட்டார். முதலில் துடுப்பெடுத்தாடிய டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களை குவித்தது. 148 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடு…
-
- 1 reply
- 343 views
- 1 follower
-
-
உலக தடகளப் போட்டி ; 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தென்னாபிரிக்க வீரர் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள போட்டியில், நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கம் வென்றார். உலக தடகள சம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய தென்னாபிரிக்க வீரர் வான் நியரிக் பந்தய தூரத்தை 43.98 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். பஹமாஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், கட்டாரைச் சேர்ந்த ஹாரூன் 44.48 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும்…
-
- 0 replies
- 261 views
-
-
தன்னை அணியிலிருந்து நீக்கிய இங்கிலாந்துக்கு நன்றி: மனம் திறக்கிறார் கெவின் பீட்டர்சன் கெவின் பீட்டர்சன். - படம். | கெட்டி இமேஜஸ் 2014-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு எழுந்த பலவித சர்ச்சைகளில் பலிகடாவாக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். தன்னை இங்கிலாந்து நீக்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கெவின் பீட்டர்சன் இது குறித்து கூறியதாவது: 2014 ஆஷஸ் தொடருக்குப் பிறகு என்னை இங்கிலாந்து அணி நீக்கியதன் மூலம் எனக்கு நன்மை செய்துள்ளனர். இதனால் என் குடும்பத்தை காப்பாற்ற முடிந்தது, மனைவி குழந்தைகளுடனான உறவை மீட்டெடு…
-
- 0 replies
- 336 views
-
-
2012ம் ஆண்டு மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்த இங்கிலாந்து விருப்பம் 2012ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கு இங்கிலாந்து முயற்சி செய்ய உள்ளது. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியை பிரிட்டனில் …
-
- 0 replies
- 278 views
-
-
உலக மெய்வல்லுனர் தொடரில் தொடரும் அமெரிக்காவின் ஆதிக்கம் லண்டனில் நடைபெற்றுவருகின்ற 16ஆவது உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெள்ளிப் பதக்கங்களை அவ்வணி பெற்றுக்கொண்டுள்ளது. இப்பட்டியலில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று கென்யா 2ஆவது இடத்தையும், ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற எத்தியோப்பியா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. மெய்வல்லுனர் உலகின் முதல்நிலை அணியாக விளங்கிய ஜமைக்கா பதக்கப்பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 400 மீற்ற…
-
- 0 replies
- 449 views
-
-
விக்கெட்டில் பட்ட பந்து ; 4 ஓட்டங்கள் அணிக்கு கிடைத்தது ; என்ன நடந்தது தெரியுமா..? (வீடியோ இணைப்பு) கரிபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது நடந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிரின்பெகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏழாவது ஓவரில் சென்.லூசியா ஸ்டார்ஸ் அணி துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கும் வேளையில் டிரின்பெகோ அணியின் பந்து வீச்சாளர் வீசிய பந்து விக்கெட்டில் பட்டு பெய்ல்ஸ் விழாமல் 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. குறித்த பந்து துடுப்பாட்ட வீரரின் மட்டையில் படாமல் நேராக விக்கெட்டில் பட்டும் பெய்ல்ஸ் விழாதமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. htt…
-
- 0 replies
- 427 views
-
-
விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், சமூக ஊடக இணையத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் வெளிவரும் கேலிகளைப் பொருட்படுத்தக் கூடாது என, அணியின் வழிகாட்டியும் முன்னாள் தலைவருமான அரவிந்த டி சில்வா, அவ்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. முதலாவது போட்டியில், 304 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான கலந்துரையாடல் ஒன்று, இலங்கை கிரிக்கெட் சபையில், ந…
-
- 1 reply
- 399 views
-
-
ரியல் மெட்ரிட்டுக்கு அடுத்தடுத்து சுப்பர் கிண்ணம் Image courtesy - Skysports ஐரோப்பாவின் இரு பிரதான கழக போட்டிகளின் சம்பியன்களுக்கு இடையிலான UEFA சுப்பர் கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்திய ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழக அணி சம்பியனானது. மசிடோனிய தலைநகர் ஸ்கொப்ஜியில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் கசெமிரோ மற்றும் இஸ்கோ ஆகியோர் கோல்போட்டு ஆதிக்கம் செலுத்த, ரியல் மெட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிகொண்டது. இதன்மூலம் சினேடின் சிடேனின் பயிற்றுவிப்பின் கீழான ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் UEFA சுப்பர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. அந்த அண…
-
- 0 replies
- 346 views
-
-
110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார், ஜமைக்காவின் மெக்லியோட் உலக தடகளத்தின் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஜமைக்கா வீரர் மெக்லியோட், தனது பதக்கத்தை தாயாருக்கும், சக நாட்டவர் உசேன் போல்ட்டுக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்தார். லண்டன்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்…
-
- 0 replies
- 381 views
-
-
100 மீற்றரில் தங்கம் வென்ற மங்கை உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் இறுதித் தூரத்தை தாவி இலக்கை கடந்தார். ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோசி தாலு 10.86 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், நெதர்லாந்து வீராங்கனை ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக…
-
- 0 replies
- 373 views
-
-
அபார வெற்றி பெற்ற யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி புதிய சாதனை அகில இலங்கை பாடசாலை மட்ட வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் கொலன்னாவை மகளிர் வித்தியாலயத்தை வீழ்த்தி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பாடசாலை வலைப்பந்தாட்ட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 360 பாடசாலைகள் பங்கேற்றுள்ள 2017ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று பதுளை, விச்சென்ட் டயஸ் மைதானத்தில் ஆரம்பமாகின. இதன் முதல் சுற்றின் ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும், கொலன்னாவை மகளிர் வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடத்த…
-
- 0 replies
- 405 views
-
-
மான்செஸ்டர் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும்: ஜோஸ் மவுரினோ நம்பிக்கை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடும் என பயிற்சியாளர் மவுரினோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரோஸ் மவுரினோ கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை, ஐரோப்பா லீக் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியது. ஆனால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் 6-வது இடத்தையே பிடித்தது. இந்த முறை மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து…
-
- 0 replies
- 493 views
-
-
உலக தடகள போட்டி: 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனைக்கு தங்கம் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவை சேர்ந்த வீராங்கணை தங்கம் வென்றார். லண்டன்: உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 02.59 வினாடிகளில் கடந்தார். அமெரிக்காவை சேர்ந்த ஜெனீபர் சிம்சன் 4 நிமிடம் 02.76 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன…
-
- 0 replies
- 326 views
-
-
மனித எல்லைகளை மீறிய தங்க மகன்... உசைன் போல்ட்! தடகளப் போட்டியின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவரான உசைன் போல்ட், லண்டன் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியுடன் ஓய்வுபெற்றார். வரும் 21-ம் தேதியுடன் தனது 31-வது வயதை எட்டும் உசைன் போல்ட், இந்த அறிவிப்பை போன வருடம் வெளியிட்டார். `மின்னல் மனிதன்' உசைன் போல்ட் பற்றிய சிறிய அலசல்... 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, உசைன் போல்ட் பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் ஆர்வம்காட்டிய உசைன் போல்ட், தனது 15-வது வயதில் தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். கரிஃப்டா விளையாட்டுகளில் ஜமைக்கா சார்பில் முதல்முறையாகப் போட்டியிட்டு, 400 மீட்டர் ஓட்டத்தில் தனது அப்போதைய ச…
-
- 2 replies
- 469 views
-
-
திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் விஜயராஜ் மாகாண மட்டத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகள் தேசிய ரீதியில் பிரகாசிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன. ஆனால் இதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது. கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் என்ற கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்கள் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்டத்தில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் . அதற்கான சான்றுகள் பல உள்ளன. மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தி…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனாகத் தெரிவு கிழக்கு மாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அம்பாரை மாவட்ட அணியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தே மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அணி கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கு மாகாணம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங…
-
- 0 replies
- 484 views
-
-
வெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று லண்டனில் ஆரம்பமாகின்றன. உலகின் அதிகவேக மனிதன் என்று வர்ணிக்கப்படும் உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்பியன் மோ பரா ஆகியோர் இந்தத் தொடருடன் தமது தடகள வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். லண்டனில் நடைபெற்றுவரும் உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டி 2012 …
-
- 9 replies
- 3.2k views
-
-
இந்த இலங்கை வீரரைப் போல் ஆட முயற்சிக்கிறேன்: சங்ககாரா சொன்ன நெகிழ்ச்சியான பதில் இந்திய பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது துடுப்பாட்டத்திற்கு முன்மாதிரி முன்னாள் இலங்கை தலைவரான குமார் சங்ககாரா என தெரிவித்திருந்தார். அவரது துடுப்பாட்டத்தைக் கண்ட பலரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி போன்று இருப்பதாக கூறி வருகின்றனர். இது குறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில், நான் கங்குலின் ஆட்டத்தை ரசிப்பேன் , அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் சங்ககாரவின் துடுப்பாட்டத்தை பார்த்து ஆடுவது எனகு சிறு வயதிலியருந்தே பழகிவிட்டது. சங்ககாரவை போல் கவர் ட்ரைவ் ஆட முயற்ச்சி செய்து வருகிறேன். சங்க…
-
- 0 replies
- 464 views
-
-
பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10 கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 1,677 கோடி ரூபாய் கொடுத்தா போதும்! ஷாக் ஆயிடலயே? ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆமாங்க, தோராயமா 1,677 கோடி ரூபாய். துல்லியமா சொல்லணும்னா 222 மில்லியன் யூரோக்கள்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG). கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அது…
-
- 5 replies
- 911 views
-
-
இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை இங்கிலாந்து - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன்…
-
- 4 replies
- 616 views
-
-
ஹத்துருசிங்க இலங்கை அணிக்கல்ல, 2019 வரை பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சிவிப்பாளராக தற்போது கடமையாற்றி வருகின்றவருமான சந்திக ஹத்துருசிங்க, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுனராக கடமையாற்றவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இம்மாத இறுதியில் அவுஸ்திரேலிய அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள 20 இளம் வீரர்களைக் கொண்ட பங்களாதேஷ் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் தற்போது டாக்காவில் நடைபெற்றுவருகின்றது. இதில், நேற்றுமுன்தினம் நடைபெற்…
-
- 0 replies
- 329 views
-