விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
கோஹ்லி ஏன் சொதப்புகிறார்? சார்லஸ் சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே. இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்…
-
- 1 reply
- 554 views
-
-
சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அனைத்து மீடியாக்களும் வீரர்களை அழைத்து பேட்டி கண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான்…
-
- 0 replies
- 432 views
-
-
சங்காவின் அதிரடி தொடர்கிறது இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பலமிக்க யோர்க்ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார். பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாக…
-
- 2 replies
- 367 views
-
-
மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை; ஒப்பந்தத்தை மீறியதால் நடவடிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருமானத்திலிருந்து 50 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அறிவித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, இரண்டு முறை லசித் மலிங்க, ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியி…
-
- 3 replies
- 536 views
-
-
இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் Tamil இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடரின் இரண்டாவது பருவகால சம்பியன்களாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் முடிசூடியுள்ளனர். இந்த பருவகாலத்திற்கான ப…
-
- 0 replies
- 367 views
-
-
கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்? ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக மாறிய விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றனர். அந்த வகையில் பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்த இரு கிரிக்கெட் வீரர்களில் டேரன் லீமன் மற்றும் ஜெஃப் மார்ஷ் காணப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜெஃப் மார்ஷை எவ்விதமான பாரபட்சமின்றி 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையானது பணிநீக்கம் செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்ப…
-
- 0 replies
- 385 views
-
-
மோசடியால் வாய்ப்புப் பெற்றதா கட்டார்? 2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை, மோசடி செய்து கட்டார் பெற்றது என்று கூறப்படுவது தொடர்பான அறிக்கையை, ஜேர்மனியப் பத்திரிகையான பில்ட் பிரசுரித்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நன்னெறிக் கோவை மீறல் முன்னாள் விசாரணையாளரான மைக்கல் கர்சியாவின் 2014ஆம் ஆண்டு அறிக்கையையே தாம் பெற்றதாக, பில்ட் தெரிவித்துள்ளது. பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அதிகாரி ஒருவரின் 10 வயது மகளுக்கு, இரண்டு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டன என்று கூறப்பட்ட விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டாருக்…
-
- 0 replies
- 274 views
-
-
என்னை விட்டுவிடுங்கள்: செரினா உலகில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் செரினா வில்லியம்ஸ், ஆண்களுக்கான போட்டியில் பங்குபற்றினால், 700ஆவது இடத்துக்கு அருகிலேயே தரப்படுத்தப்பட்டிருப்பார் என, டென்னிஸ் ஜாம்பவானான ஜோன் மக்என்ரோ தெரிவித்த கருத்துகளுக்கு, செரினா, பதிலளித்துள்ளார். கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் 7 பட்டங்களையும் இரட்டையர் பிரிவில் 9 பட்டங்களையும் வென்றவராவார். இந்நிலையில், தனது புதிய புத்தகத்தைப் பிரபல்யப்படுத்துவதற்காக, வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஜோன், செரினாவை, “சிறந்த பெண் வீரர். எந்தவிதக் கேள்வியும் இல்லை” என்று குறிப்பிட்டார். ஆனால்…
-
- 0 replies
- 502 views
-
-
இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பங்களாதேஷ் பயிற்சியாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவிடமும், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளமிங்குடனும், அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் சிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி விளையா…
-
- 1 reply
- 434 views
-
-
சந்திமல், திஸர வெளியே : அகில தனஞ்சய உள்ளே , மலிங்க விளையாடுகிறார் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இதேவ…
-
- 0 replies
- 909 views
-
-
டி.ஆர்.எஸ் முதல் ட்ரோன் அனாலிசஸ் வரை... இது ‘டெக்னாலஜி’ கிரிக்கெட்! ஆறிலிருந்து அறுபது வரை மட்டுமல்ல, தள்ளாடும் தாத்தாக்கள் வரை கிரிக்கெட் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உலக கிரிக்கெட் அரங்கிலேயே மிகவும் செல்வாக்குடைய, மிகுந்த செல்வம் கொழிக்கும் கிரிக்கெட் போர்டு இந்தியாவினுடையது என்றால் அதற்கு இந்திய ரசிகர்கள் தரும் பேராதரவு தான் காரணம். ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரர்களின் ஆட்டத்திறன் மட்டுமல்ல, நடுவர்கள் தரும் தீர்ப்புகளும் தான் என்றால் மறுப்பதற்கில்லை. நடுவர்கள் தரும் தவறான தீர்ப்புகள் பலமுறை ஆட்டத்தின் முடிவையே மாற்றி இருக்கின்றது! இது இயல்புதான் என்றாலும், இந்த தவிர்க்க முடியாத மனிதப் பிழைகளை சரிக்க…
-
- 0 replies
- 366 views
-
-
விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மலிங்க Tamil விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மலிங்க கடந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண குழு மட்ட போட்டிகளில் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்து சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியிருந்தமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகற அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி பலவீனமான அணி என்றும், அணியின் வீரர்களை வலுவான வீரர்களாக உருவாக்குவத…
-
- 2 replies
- 750 views
-
-
எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு: 360 டிகிரி சொல்கிறார் கிரிக்கெட்டில் தன்னுடைய எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு செய்வேன் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து வருபவர் ஏபி டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை பறக்கவிடும் திறமை படைத்தவராக திகழ்வதால், இவரை 360 டிகிரி என்று அழைக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ…
-
- 0 replies
- 419 views
-
-
இந்திய வீரர்களுக்கு விருந்து அளித்து உபசரித்த வெயின் பிராவோ ஐ.பி.எல். தொடரில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் வெயின் பிராவோ, இந்திய அணிக்கு விருந்து அளித்து உபசரித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியதை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது அவருக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது. டோனியின் தலைமையின் கீழ் அவர் மிகவும் ரசித்து கிரிக்கெட் விளையாடினார். டோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் இந்திய வீரர்களை தனது சகோதரர்கள் போல்தான் நினைத்து வருகிறார். இந்திய அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிர…
-
- 0 replies
- 242 views
-
-
தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் களம் இறங்கிய யுவராஜ் சிங் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2-வது போட்டியின்போது யுவராஜ் சிங் தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கைக்கு பயிற்சியளிக்க இப்போதைக்கு மஹேலவுக்கு முடியாது இலங்கை அணிக்கு பயிற்சியளிப்பதற்கு மஹேல ஜயவர்தனவால் தற்போதைக்கு முடியாது என்றும், தேசிய அணியொன்றுக்கு பயிற்சியாளராவதற்கு அவருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். அதேபோல் அவருடன் விளையடிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளையாடி வருவதால் அவரை உடனடியாக பயிற்சியாளராக்க முடியாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்பிலிருந்து நேற்றும…
-
- 3 replies
- 546 views
-
-
கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. கார்டிப்: தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் திடீரென தானாகவே ஒதுங்கிக் கொண்டதால், ஜோஸ் பட்லர்…
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கைக்கு வருகிறார் ஹத்துருசிங்க? இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகப் பதவியேற்பது குறித்து, பங்களாதேஷ் அணியின் பயிற்றுநரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சந்திக்க ஹத்துருசிங்கவுடன், இலங்கை கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்றுநராக இதுவரை பதவிவகித்த கிரஹம் ஃபோர்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம், உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். எனினும் அதற்கு முன்னரே, அவர் பதவியிலிருந்து விலகுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இடைக்காலப் பயிற்றுநராக, தற்போது களத்தடுப்புப் பயிற்றுநராக இருக்கும் நிக் போதாஸ் பதவியேற்றுள்ளார். …
-
- 0 replies
- 641 views
-
-
இந்திய - மேற்கிந்திய தொடர் இன்று ஆரம்பம் இந்திய – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடைபெறவுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு இருபதுக்கு 20 ஆட்டத்தில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடிய இந்திய அணி லண்டனில் இருந்து அப்படியே மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு சென்றது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிகவும் மோச…
-
- 6 replies
- 826 views
-
-
5 மாத கர்ப்பம்... 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசத்தினார் அலிசியா மொன்டானோ. அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த அலிசியா மொன்டானோ கலந்து கொண்டு அசத்தினார். சாதனை என்று வந்துவிட்டால் நம் உடல்நலன் குறித்து மறந்துவிடும். பிறந்தோம் , வளர்ந்தோம் என்றில்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும். அப்போதுதான் பிறந்ததில் அர்த்தம் உண்டு என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டனர். மனம் உறுதி இருந்தால் போதும் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்பதை நாம் எத்தனையோ விஷயங்களில் கண்கூடாக பார்த்துள்ளோம்.அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை யுஎஸ்ஏ டிரக் மற்றும் பீல்டு சாம்பியன்ஷிப் தடகள போ…
-
- 0 replies
- 436 views
-
-
அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் டேனியல் ரிக்கார்டியோ பாரமுலா ஒன் கார்பந்தயத்தின் இறுதி போட்டியில் 10-வது இடத்தில் துவங்கிய டேனியல் ரிக்கார்டியோ முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பார்முலா ஒன் கார்பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெற்றது. இதற்கான தகுதிச்சுற்றில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம் பிடித்து ‘போல்’ நிலையை அடைந்தார். போல் நிலையை அடைந்த ஹாமில்டன் பந்தயத்தில் முதல் நபராக புறப்பட்டார். இந்த பந்தயத்தில்…
-
- 0 replies
- 351 views
-
-
குசல் மெண்டிஸ் என்னைவிடத் திறமையானவர் – குமார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, இளம் வீரரான குசல் மெண்டிஸ் அவரது தற்போதைய வயதில் அடைந்திருக்கும் (சாதனை) அடைவுமட்டத்தினை தான் அப்போதைய தனது வயதில் பெற்றிருக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றார். மேலும், குசல் மெண்டிஸ் தனது இளவயதில் வெளிக்காட்டிய திறமைகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்கார பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, தற்போதைய மெண்டிசின் வயதில் தான் இருந்த போது தான் வெளிக்காட்டிய ஆட்டத்தினை விட மிகவும் முன்னேற்றகரமான ஆட்டத்தினை அவர் காட்டுவதாகவும் கூறியிருக்கின்றார். குசல் மெண்டி…
-
- 0 replies
- 392 views
-
-
உடற் தகுதியை நிரூபித்து காட்டிய நுவன் குலசேகர, லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுக்கோளுக்கு இணங்க பயிற்சிக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட 20 மீற்றர் ஓட்டப்போட்டியில், முதல் இடங்களை அணியின் சிரேஷ்ட வீரர்களான நுவன் குலசேகர மற்றும் லசித் மாலிங்க பெற்றுள்ளனர். சிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை கருத்திற் கொண்டு 30 பேர் கொண்ட பயிற்சிக் குழாமொன்றை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது. ஐ.சி.…
-
- 0 replies
- 204 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20-ல் 3 ரன்களில் வெற்றி: பதிலடி கொடுத்தது தென் ஆப்ரிக்கா தென் ஆப்பிரிக்கா வெற்றி. | படம்.| ஏ.எஃப்.பி. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நல்ல பார்மில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய், பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டதால் (ரன் அவுட்) அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. கவுன்டி கிரிக்கெட் மைதானமான டான்டனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 …
-
- 0 replies
- 199 views
-
-
அனில் கும்ப்ளே - விராட் கோலி முட்டல்.. மோதல்..! நடந்தது என்ன? கடந்தாண்டு இதே மாதம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான், அனில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் தொடர்! ஆனால் இம்முறை அதே வெஸ்ட் இண்டீஸ்... அதே இந்தியா... ஆனால் பயிற்சியாளர் இல்லை என்பது நெருடலாக இருக்கிறது. அனில் கும்ப்ளேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சாம்பியன்ஸ் டிராபி பைனலில், இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததைவிட, தலைப்புச் செய்திகளில் விராட் கோலியே அதிக முக்கியத்துவம் பெற்றார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பாங்கர்தான், இப்போதைக்கு …
-
- 0 replies
- 486 views
-