விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு பின் ஜயசூரிய பதவி விலகுவார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது. சமீபத்தில் அவரின் ஆபாசபடம் வெளியாகி மக்களிடையே மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை அவர் தான் கசிய விட்டார் என கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை. அவர் நாட்டிற்கும், விளையாட்டிற்கும் இழிவு ஏற்படுத்திவிட்டார். அதனால் அவர் இலங்க…
-
- 0 replies
- 761 views
-
-
கவுண்டி கிரிக்கெட்: தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்ககாரா சாதனை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்ககாரா தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் Surrey அணியும், Essex அணியும் மோதின. Surrey அணி சார்பாக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக கவுண்டி கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த 8வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் Surrey அணி சார்பில் இந்த சாதனையை செய்த முதல் வீ…
-
- 3 replies
- 565 views
-
-
டோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும்: பிளமிங் விரும்புகிறார் இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த டோனி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று ஸ்டீபன் பிளமிங் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று பெயரெடுத்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பணியை மட்டுமே செய்து வருகிறார். டோனியின் பேட்டிங் திறமை குறைந்து வருகிறது. அவரது இடத்திற்கு வருவதற்காக ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்…
-
- 0 replies
- 255 views
-
-
மீண்டும் குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் சகோதரி: இம்முறை வீனஸ் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் கூறுவது சரியாக இருந்தால், செரீனா பெண் குழந்தையைத்தான் பெற்றெடுப்பார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image caption'செரீனாவின் கருவில் பெண் குழந்தை' ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்றுவரும் வீனஸ் வில்லியம்ஸ், தனது போட்டிக்கு பிறகு அளித்த தொலைக்காட்சி பேட்டியில் இந்த தகவலை எதேச்சையாக தெரிவித்துள்ளார். தனது தங்கைக்கு பிறக்கப்போகும் குழந்தையை 'அவள்' என்று குறிப்பிட்ட வீனஸ் வில்லியம்ஸ், தங்கையின் மகளுக்கு வைப்பதற்கென சில பெண் பெயர்கள…
-
- 0 replies
- 668 views
-
-
பேட்டிங்கை அலசி ஆராய்ந்து மெருகேற்ற மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பேட்கள்: ரோஹித் சர்மா, ரஹானே பயன்படுத்துகின்றனர் ரோஹித் சர்மா, ரஹானே. | படம்.| ஏ.எஃப்.பி. வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கணினிமயமாக்கப்பட்ட சிப்களை தங்கள் மட்டைகளில் பொருத்தி இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே ஆகியோர் விளையாடவிருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு அணியிலும் 3 பேட்ஸ்மென்கள் இத்தகைய சிப் பேட்களை பயன்படுத்துவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எதற்காக சிப் பொருத்தப்பட்ட பேட் என்றால், மட்டையின் இயக்கம், மட்டையாளரின் நகர்தல் ஆகியவை பற்றிய தரவுகளை சிப்கள் மூலம் சேகரித்து தங்கள் பேட்டிங்கை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம், தவறுகளை திருத்திக் க…
-
- 0 replies
- 275 views
-
-
ஸ்பெயினில் மெஸ்சி... மற்ற நாடுகளில் யார் டாப்? 2016-17 சீஸன் டாப் ஸ்ட்ரைக்கர்கள்! கால்பந்து உலகின் 2016 - 17 ஆண்டுக்கான சீஸன் முடிந்துவிட்டது. இந்த சீஸனில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல இளம் திறமையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் கலந்துகட்டி கலக்கிய 2016 - 17 சீஸனின் டாப் - 5 கோல் ஸ்கோரர்கள் பற்றிய விவரம் இங்கே... லியோனல் மெஸ்சி – லா லிகா – ஸ்பெயின் உலகின் நம்பர் - 1 வீரரான லியோனல் மெஸ்சிதான் ஸ்பெயின் நாட்டின் இந்த வருட லா லிகா தொடரின் டாப் ஸ்கோரர். பார்சிலோனா அணியின் அடையாளமான இவர், அர்ஜென்டினா தேசிய அணியையும் தோள்களில் சுமப்பவர். பந்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டிலேயே வ…
-
- 0 replies
- 416 views
-
-
முதன்மை வீராங்கனையாக யாழ். மாணவி - கே.கண்ணன் இலங்கையின் கனிஷ்ட பிரிவில், முதன்மை வீராங்கனையாக, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சிறந்த வீர, வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது. இதில், கனிஷ்ட பிரிவில், இலங்கையின் முதன்மை வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டதோடு, இவரின் பயிற்றுநர் விஜயபாஸ்கர், சிறந்த கனிஷ்ட பிரிவினருக்கான பயிற்றுநராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வி.ஆசிகா, மலேஷியாவில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு …
-
- 0 replies
- 488 views
-
-
போட்டியில் தோல்வியடைந்ததும் அநாகரிகமாக நடந்துக்கொண்ட வீரர் : குவியும் விமர்சனங்கள்! (காணொளி இணைப்பு) பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவாக்கிய வீரர் மார்ட்டின் க்லிஷன், தரப்படுத்தலில் 285வது இடத்தில் உள்ள பிரன்ச் வீரர் லவுரன்ட் லொக்கோலியுடன் மோதினர். 3 மணித்தியாலம் 39 நிமிடங்களாக மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற இந்த போட்டியில் க்லிஷன் 5-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். முதல் இரண்டு சுற்றுகளை 7-6 மற்றும் 6-4 என கைப்பற்றிய க்லிஷன், அடுத்த இரண்டு சுற்றுகளை 4-6 மற்றும் 0-6 என தோல்வியடைந்தார். எனினும் இறுதிச் சுற்றில் ச…
-
- 1 reply
- 422 views
-
-
வலைகளின் துளை வழியே இனி எதிர்காலத்தை பார்க்க முடியாது: உருக்கமாக விடை பெற்றார் பிரான்செஸ்கோ டோட்டி பிரான்செஸ்கோ டோட்டி இத்தாலியின் ஏஎஸ் ரோமா கால்பந்து கிளப்புக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த பிரான்செஸ்கோ டோட்டி கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். 24 ஆண்டு காலம் ரோமா அணிக்காக விளையாடி வந்த டோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி சீரி ஏ போட்டியில் ஜெனோவா அணிக்கு எதிராக விளையாடினார். தலைநகரான ரோமில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ரோமா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் எடின் ஸேகோ, டேனியல் டி ரோஸ்ஸி, தியாகோ பெரோட்டி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தின் 54-வது நிம…
-
- 0 replies
- 225 views
-
-
பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமனம் பார்சிலோனா கால்பந்து கிளப் அணயின் புதிய பயிற்சியாளராக அத்லெடிக் பில்பாயோ அணியின் பயிற்சியாளரான எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமிக்கப்பட்டுள்ளார். பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர் லூயிஸ் என்ரிக். இவர் பார்சிலோனா அணியின் மானேஜராக கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார். தற்போது வரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் இந்த சீசனோடு பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பதவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பார்சிலோனா ஆணி கோப…
-
- 0 replies
- 344 views
-
-
"எங்களுக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே" - வங்கதேச வீரர் தமீம் இக்பால் தமீம் இக்பால் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி எங்கள் அணிக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாங்கள் தகுதியானவர்களே என வங்கதேச துவக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் கூறியுள்ளார். வங்கதேச அணி சமீபத்தில் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் 6ஆம் இடத்துக்கு முன்னேறியது. 2015 உலகக் கோப்பையில் அவர்கள் ஆட்டம், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றது என கவனத்தை ஈர்த்துள்ளனர். இது குறித்து கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அணியில் விளையாடி வரும் தமீம் இக்பால் பேசுகையில், "ஒரு அணி தொடர்ந்து வெற்றி …
-
- 0 replies
- 403 views
-
-
ஐரோப்பியன் கோல்டு ஷூவை 4-வது முறையாக கைப்பற்றினார் மெஸ்சி ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடிய வீரர்களில் அதிக கோல்கள் அடித்து மெஸ்சி 4-வது முறையாக கோல்டன் ஷூவை பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கு இடையே ‘லா லிகா’ தொடர் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கிடையே ‘லீக் 1’ நடைபெறுகிறது. இதேபோன்று இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு ‘ஐரோப்பியன் கோல்டன் ஷூ’ வழங…
-
- 0 replies
- 246 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ரோலண்ட்-ஜோன்ஸ் அறிமுகமாகியுள்ளார். அவருடன் ஃபின், வில்லே ஆகியோர் ஆடும் லெவனில…
-
- 3 replies
- 346 views
-
-
புதிய மைல் கல்லை எட்டினார் வில்லியர்ஸ்! இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாபிரிக்க அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளதுடன், தென்னாபிரிக்க அணித்தலைவர் வில்லியர்ஸுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் தென்னாபிரிக்க அணித்தலைவரான வில்லியர்ஸ் இன்றைய போட்டியுடன் 100வது ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்குகின்றார். இதனால் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பும் அவர் மீது உள்ளது. 100 ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கியுள்ள வில்லியர்ஸ் 60 என்ற சராசரியில் 57 போட்டிகள…
-
- 1 reply
- 659 views
-
-
ஜேர்மன் கிண்ணத்தை வென்றது டொட்டமுண்ட் ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே விலகல் முறையில் இடம்பெற்றுவந்த ஜேர்மன் கிண்ண இறுதிப் போட்டியில், பொரிசியா டொட்டமுண்ட் வெற்றிபெற்றுள்ளது. ஐன்ராட் பிராங்பேர்ட்டையே, இறுதிப் போட்டியில், டொட்டமுண்ட் வென்றுள்ளது. புண்டெலிஸ்கா தொடரில் மூன்றாமிடம் பெற்ற டொட்டமுண்ட்டுக்கு, இந்த வெற்றி ஆறுதலாய் அமைந்தது. இத்தடவையுடன் சேர்த்து, நான்கு தடவைகள், ஜேர்மன் கிண்ண இறுதிப் போட்டியை பொரிசியா டொட்டமுண்ட் வென்றுள்ளது. இப்போட்டியின் எட்டாவது நிமிடத்தில், உஸ்மன் டெம்ப்பிளி பெற்ற கோலின் மூலம் டொட்டமுண்ட் முன்னிலை பெற்றது. பின்னர் 29ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற அன்டே …
-
- 0 replies
- 319 views
-
-
மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார் பார்முலா-1 கார் பந்தயத்தின் மொனாகோ கிராண்ட் பிரிக்ஸில் பெராரி அணி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். பார்முலா-1 கார் பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெறும். இன்று மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்றது. இதில் பெராரி அணி வீரர் செபஸ்டியான் வெட்டல் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதே கம்பெனியின் மற்றொரு வீரரான கிமி ரெய்க்கோனென் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றியின் மூ…
-
- 1 reply
- 407 views
-
-
இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா --> இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் சாதனை நாயகியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் முதல் முறையாக சர்வதேச மட்டப் போட்டி நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்வில் இலங்கையின் தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான அனித்தா, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் தகதி முதல் 15ஆம் திகதி வரை தாய்லாந்தில் இடம்பெறும் “தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்” போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே தனது முதல் சர்வதேச போட்டியில் களம் காணவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதலாவ…
-
- 0 replies
- 818 views
-
-
பெயர் சொல்ல வைத்த சென்னைப் பசங்க! வாஷிங்டன் சுந்தர் - தினேஷ் கார்த்திக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியிருக்கிறார். 18 வயதில் ஐபிஎல் அறிமுகத் தொடரில் விளையாடிக் கவனம் ஈர்த்திருக்கிறார் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வீரர்களைப் பற்றித்தான் இப்போது பரபரப்பாகப் பேசுகிறார்கள்! தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு வரை சில ஆண்டுகள் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். நேர்த்தியான ஷாட்கள் அட…
-
- 0 replies
- 759 views
-
-
20 ஓவர் கிரிக்கெட்டிலும் டி.ஆர்.எஸ். முறை: ஐ.சி.சி. பரிந்துரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கிரிக்கெட் கமிட்டியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை கொண்டுவர பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறை உள்ளது. அதை 20 ஓவர் கிரிக்கெட்டிலும் நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு டி.ஆர்.எஸ். முறையில் 2 வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதை பயன்படுத்தும்போது அணிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் …
-
- 0 replies
- 271 views
-
-
100 மணி நேரம் சமூக சேவை: குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசி. வீரருக்கு நூதன தண்டனை குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல்லுக்கு 100 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல். 26 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி மது அருந்திய நிலையில் கார் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். ஹாஸ்டிங்ஸ் பகுதியில் வரும்போது போலீசார் இவரது காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அப்போது பிரேஸ்வெல் குடித்திருந்தது தெ…
-
- 1 reply
- 320 views
-
-
9 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு?: சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9 மில்லியன் டாலர் அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில் வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், விளம்பரங்கள் மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதுபோன்று சம்பாதித்த வருமானத்திற்கு உரிய வகையில் வரி கட்டவில்லை என்ற விமர்சனம் எழ…
-
- 0 replies
- 368 views
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக்: அடுத்த தொடரில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அடுத்த சீசனில் (2018) எட்டு போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அணி சுமார் 10 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாட விரும்ப…
-
- 0 replies
- 263 views
-
-
மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி! சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது. எனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரு…
-
- 0 replies
- 227 views
-
-
இங்கிலாந்து கால்பந்து அணியில் ரூனிக்கு இடமில்லை உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. லண்டன் : உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துடன் மோத இருக்கிறது. மேலும் பிரான்சுடன் நட்புறவு ஆட்டம் ஒன்றிலும் விளையாட உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் சேர்க்கப்படவில்லை. ஆனால் …
-
- 0 replies
- 289 views
-
-
50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்: அணியின் ஸ்கோர் 556 பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் 50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தானில் பாஸல் மெஹ்மூத் இண்டர்-கிளப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றொரு அணியுடன் மோதியது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிலால் இர்ஷாத் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி சிக்ஸ், பவுண்டரிகளா…
-
- 0 replies
- 414 views
-