விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்த பாகிஸ்தான்: வங்கதேசம் அதிர்ச்சி வங்கதேச அணி. | படம்.| ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் தனது வங்கதேச கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்தது குறித்து வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறும்போது, “ஒரு மாதம் முன்பு வரை கூட இந்தத் தொடர் நடைபெறும் என்றே பேசி வந்தோம். இப்போது பாகிஸ்தானின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” என்றார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொள்ளைவிருந்தது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரிய பிரதிநிதி கூறும்போது, “2015-ல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட போது இரு வாரியங்களுக்கும் இடையே நித…
-
- 0 replies
- 396 views
-
-
லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன லா லிகா தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை பொழிந்தன. பார்சிலோனா 7-1 எனவும், ரியல் மாட்ரிட் 6-2 எனவும் எதிரணிகளை வீழ்த்தின. லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா- ஒசாசுனா அணிகள் மோதின. பலம் வாய்ந்த பார்சிலோனா அணியின் முன் ஒசாசுனா அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய…
-
- 0 replies
- 406 views
-
-
கிரிக்கெட்டுக்கு பை-பை... அடுத்து லாயர்... 25 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜபர் அன்சாரி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இடது கை சுழற்பந்து வீச்சுக்காக அறியப்பட்ட இவருக்கு 25 வயதேயாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2015-ம் ஆண்டுதான் அவர் முதன்முறையாக விளையாடத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அணியில் இருந்தார். இப்படி தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விளையாடி வந…
-
- 0 replies
- 285 views
-
-
உலகக்கோப்பை கால்பந்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்ப வசதி என்ன தெரியுமா?! கால்பந்து விளையாட்டில் வீடியோ உதவியுடன் தீர்ப்பளிக்கும் புதிய தொழிநுட்ப முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தங்களால் உறுதியாக முடிவெடுத்து தீர்ப்பு வழங்க முடியாத சூழ்நிலையில், மூன்றாவது அம்பயர் எனப்படும் டி.வி அம்பயரின் உதவியை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் நாடுவார்கள். ஹாக்-ஐ (Hawkeye), ஸ்னிக்கோ மீட்டர் (Snick-o-Meter), ஹாட் ஸ்பாட் (Hot Spot) போன்ற தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் வீடியோ காட்சியை சோதித்து மூன்றாவது நடுவர் தீர்ப்பு வழங்குவார். 1992-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட்டில் தேர்ட் அம்பயர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பல விளையாட்டு…
-
- 0 replies
- 296 views
-
-
கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 5 புதிய சாதனைகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் பிற்பகல் 4.00 மணிவரை ஐந்து புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன் ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டது. இதேவேளை வட மாகாண பாடசாலை ஒன்றுக்கு நேற்றைய தினமும் ஒரு தங்கப் பதக்கம் சொந்தமானது. 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் அருந்தவராஜா புவிதரன் (4.20 மீற்றர்) முன்னைய சாதனையை சமப்படுத்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூர…
-
- 1 reply
- 440 views
-
-
முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 286 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 407 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் மிஸ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை பெற, சகல விக்கட்டுகளும் இழக்கப்பட்ட நிலையில், அவர் தனது சதத்தை பெறமுடியாமல் போனது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங…
-
- 0 replies
- 372 views
-
-
என் துணிகளை விற்று தோனியை வாங்குவேன், ஷாருக் கான் ஆவல் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக தோனியை வாங்க என் உடைகளைகூட விற்கத் தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பொழுதுபோக்கே முதல் குறிக்கோள். இப்பொழுதுபோக்கில் தோனியை ரசிக்காதவர்கள் மிகக் குறைவே! இதில் ஷாருக் கானும் விதிவிலக்கல்ல. காரணம் தனது சமீபத்திய பேட்டியில் தோனியை தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டி அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில்,'தோனி போன்ற ஒரு சிறந்த வீரரை எங்கள் அணிக்காக வாங்குவதற்கு, எனது பைஜாமா உடைகளைக்கூட நான் விற்க தயார். ஆனால் அவர்…
-
- 1 reply
- 624 views
-
-
சாதனை நிலைநாட்டிய ஜொய்சனின் குதிக்காலில் ஐந்து தையல்கள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை நிலைநாட்டிய அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன், குதிக்காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஐந்து தையல்கள் போட நேர்ந்தது. இப் போட்டியில் 4.61 மீற்றர் உயரம் தாவி போட்டிக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய ஜொய்சன், 4.76 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தபோது மெத்தையில் சிக்குண்டு குதிக்காலில் காயத்திற்குள்ளானதாக அவரது பயிற்றுநர் பாகீஸ்வரன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 438 views
-
-
சகரிகா கட்ஜ்க்கு கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுடன் நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம் பிரபல கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் - பாலிவுட் நடிகை சகரிகா கட்ஜ்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சகரிகா கட்ஜ். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து கடந்த 2007-ல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாபாத்திர…
-
- 0 replies
- 358 views
-
-
வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி Tamil வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி தொடர்ச்சியான திறமை வெளிப்பாட்டின்மூலம் வடக்கின் முதல்தர கால்பந்துக் கழகமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், தற்பொழுது தேசிய மட்டத்தின் கால்பந்துத் துறையைச் சேர்ந்த பலராலும் பேசப்படும் ஒரு கழகமாக மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரிவு-2 இன் சம்பியனாகத் தெரிவாகி…
-
- 0 replies
- 451 views
-
-
15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தண்டனை காலம் முடிந்து 15 மாதங்களுக்குப்பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் புதன்கிழமை களமிறங்குகிறார் மரியா ஷரபோவா. ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்திய தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவருக்கு 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால் அவர் மீண்டு…
-
- 6 replies
- 627 views
-
-
மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே எனது இலக்கு – அனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (23) ஆரம்பமானது. 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன் போட்டி சாதனையை புதுப்பித்தார். இதேவேளை 20 வயதிற்குட்ப…
-
- 0 replies
- 244 views
-
-
பத்தாயிரம் ரன்களைக் கடந்து யூனிஸ்கான் புதிய சாதனை! இன்னும் 23 ரன்கள் எடுக்க வேண்டும். அதைச் செய்தால், 10,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைய முடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு களமிறங்கினார், யூனிஸ்கான். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் யூனிஸ்கான். இவர், இந்தத் தொடரோடு ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 22 ரன்களில் இருந்தபோது, ராஸ்டன் சேஸ் பந்தில் அழகான ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி எடுத்தார். அந்த பவுண்டரியோடு 10,000 ரன்களைக் கடந்த பெருமையும் கிடைத்தது. இன்று, அவர் சந்தித்த…
-
- 1 reply
- 386 views
-
-
பார்ஸிலோனாவுக்காக 500-வது கோலை அடித்தார் மெஸ்ஸி! ரியல் மாட்ரிடுக்கு எதிரான லா-லிகா போட்டியில், இரண்டாவது கோலை அடித்தபோது, பார்ஸிலோனோ அணிக்காக 500-வது கோலை அடித்து சாதனை படைத்தார், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இரண்டாவது கோலை மெஸ்ஸி எக்ஸ்ட்ரா டைமில் அடித்துள்ளார். இதனால் பார்ஸிலோனா, மாட்ரிட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மெஸ்ஸி ஆக்ரோஷமாக விளையாடியபோது, சக வீரர் ஒருவரால் தற்செயலாகத் தாக்கப்பட்டார். இதனால், அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் மெஸ்ஸி தொடர்ச்சியாக விளையாடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக 500-வது கோல் அ…
-
- 0 replies
- 160 views
-
-
வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல் கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் 'எல் கிளாசிகோ' நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள். 'எல் கிளாசிகோ' மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் …
-
- 5 replies
- 518 views
-
-
அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை பிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் பிரியன்னா ரோலின்ஸ், கடந்த ஆண்டில் மூன்று முறை இந்த தகவலை…
-
- 0 replies
- 150 views
-
-
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பயின்ஸ் லீக் காலிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முடிவடைந்தது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), யுவான்டஸ் (இத்தாலி), மொனாகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத…
-
- 0 replies
- 168 views
-
-
பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர் இங்கிலாந்தில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 18 வயதே ஆன இளம் வீரர் இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுர்ரே பகுதியைச் சேர்ந்தவர் பில்லி மாங்கர். கடந்த வாரம் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. டோனிங்க்டன் பார்க் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜே.எச்.ஆர். டெவ்லெப்மென்ட்ஸ் அணி சார்பாக பில்லி மாங்கர் பங்கேற்றார். எதிர்பாராத விதமாக இவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ள…
-
- 0 replies
- 180 views
-
-
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ் ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் இரண்டு லெக்குகள் முடிவில் பார்சிலோனாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது யுவான்டஸ். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதியின் 2-வது லெக் போட்டிகள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. 2-வது லெ…
-
- 1 reply
- 177 views
-
-
புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ் மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார். கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்ன…
-
- 2 replies
- 368 views
-
-
இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஆல் ரவுண்டரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க், லின் இடம்பிடித்துள்ளனர். மெல்போர்ன், ஏப்.20- இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்…
-
- 236 replies
- 21.8k views
- 1 follower
-
-
சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்? அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் திருவிழாவாக அமையவிருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகும் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை சார்பாக விளையாடப்போகும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இத்தருணத்தில், முக்கியமான இத்தொடரில் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாட தகுதி உள்ள வீரர்களை பற்றி ஒரு விரிவான ஆய்வினை ThePapare.com மேற்கொள்கின்றது. கடந்த காலங்களில் அதிவலுவான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியதற்கு பெயர் சொல்லப்பட்ட ஒரு நாடாக இலங்கை…
-
- 0 replies
- 146 views
-
-
Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இதன் மூலம் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்க…
-
- 2 replies
- 486 views
-
-
ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி. வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின. …
-
- 4 replies
- 239 views
-
-
ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் …
-
- 0 replies
- 466 views
-