Jump to content

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...


Recommended Posts

பாகிஸ்தானை வீழ்த்துவதோடு கோப்பையையும் வெல்வோம்: விவிஎஸ் லக்ஷ்மண் நம்பிக்கை

 

 
கோப்புப் படம்: கெட்டி இமேஜஸ்
கோப்புப் படம்: கெட்டி இமேஜஸ்
 
 

இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதோடு சாம்பியன்ஸ் கோப்பையையும் தக்க வைத்துக் கொள்ளும் என முன்னாள் வீரர் விவிஎஸ் ல‌ஷ்மண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் தொடங்கி பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி, முறையே நியூஸிலாந்து, வங்கதேசம் அணிகளை வென்றது. முக்கியமாக வங்கதேச அணியை 84 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியின் ஆட்டம் குறித்து பேசிய முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷமண், "சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா சிறப்பாக ஆடி கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என வெகு நிச்சயமாக நம்புகிறேன். முக்கியமாக அவர்களது இரண்டு பயிற்சி ஆட்டங்கள் ஆடிய விதத்தை பாருங்கள். இரண்டு போட்டிகளிலும் ஷிகர் தவனின் ஆட்டம் என்னை ஈர்த்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான வாய்ப்பை தினேஷ் கார்த்திக் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார். கேதர் ஜாதவ், ரவீந்த்ர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என பலர் ரன் சேர்த்தனர். இரண்டு போட்டிகளில் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். எதிரணியை திணறடிக்கும் லைன் மற்றும் லெந்தில் வீசினர். ஆக்ரோஷமாக ஆடி விக்கெட் எடுப்பதில் குறியாய் இருந்தனர்" என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றி பேசுகையில், "அது சிறந்த போட்டியாக இருக்கும். அதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி வெகு தீவிரமாக இருக்கும். ப்ரிமிங்கம் மைதானம் நிரம்பி வழியப் போகிறது. நாம் நமது முழு திறமையை காட்டினால் கண்டிப்பா வெற்றி பெறுவோம்" என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முறையே ஜூன் 8 மற்றும் 11ஆம் தேதி ஆடவுள்ளது.

http://tamil.thehindu.com/sports/பாகிஸ்தானை-வீழ்த்துவதோடு-கோப்பையையும்-வெல்வோம்-விவிஎஸ்-லக்ஷ்மண்-நம்பிக்கை/article9716792.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 236
  • Created
  • Last Reply

சம்பியன் டிராபி: மெத்தியூஸ் விளையாடுவது சந்தேகம்

 

சம்பியன் டிராபி: மெத்தியூஸ் விளையாடுவது சந்தேகம்

 

 
 
சம்பியன் டிராபி தொடரின் முதல் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் காயம் காரணமாக விலகலாம் என கூறப்படுகின்றது.

இங்கிலாந்தில் இன்று முதல் சம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இந்தத் தொடரின் பி பிரிவில் பங்கு பற்றியுள்ள இலங்கை அணி எதிர்வரும் 3ம் திகதி தென்னாபிரிக்க அணியுடன் தனது முதல் போட்டியை எதிர்கௌ்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தப் போட்டியில் மெத்தியூஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=91971

Link to comment
Share on other sites

அதிரடி இங்கிலாந்துக்கு சவால் அளிக்குமா வங்கதேசம்?: சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் மோதல்

 

 
 
 
 
இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி
 
 

8-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் வியாழனன்று தொடங்குகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த தொடர் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்று அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் தலா இரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். லீக் ஆட்டங்கள் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

13-ம் தேதி ஓய்வு நாளாகும். 14-ம் தேதி தேதி கார்டிப் நகரில் முதல் அரை இறுதி ஆட்டமும், 15-ம் தேதி பர்மிங்காமில் 2-வது அரை இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது. கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டம் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் (19-ம் தேதி) நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடக்க நாளான வியாழனன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, வங்கதேச அணியுடன் மோதுகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முதல் முறையாக தமிழில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானலில் இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களையும் தமிழ் வர்ணணையில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை இங்கிலாந்து அணி 3-வது முறையாக நடத்துகிறது. கடந்த 2004, 2013-ம் ஆண்டுகளில் தொடரை நடத்திய போது இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.

இந்த இரு தொடர்களிலும் அந்த அணி மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இம்முறை இங்கிலாந்து அணி அதீத பலத்துடன் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

வங்கதேச அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 2015 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.

கடந்த இரு ஆண்டுகளாகவே வங்கதேச அணி, குறுகிய வடிவிலான போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகக் கோப்பைக்கு பிறகு அந்த அணி 4 ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ளது. இவற்றில் மூன்று இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிரானவை ஆகும்.

வெளிநாட்டு தொடர்களிலும் சமீபகாலமாக வங்கதேச வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த போதிலும் வங்கதேச அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 341 ரன்கள் குவித்த வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்களில் சுருண்டிருந்தது.

இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்துகள் நன்கு ஸ்விங் ஆகும். மேலும் தட்பவெப்ப நிலை காரணமாக ஆடுகளத்தின் தன்மை அவ்வவ்போது மாறக்கூடும். மேலும் அங்கு ஜூன் மாதம் நடைபெறும் போட்டிகளில் பந்துகள் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் ஸ்விங் ஆகும். சமீபத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டியில் இதை கண்கூடாக காண முடிந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை தாரை வார்த்திருந்தது. இந்த ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை மணியாகவே அமைந்தது. 42 ஆண்டுகளாக பெரிய அளவிலான தொடர்களில் கோப்பை வெல்ல முடியாமல் தவிக்கும் இங்கிலாந்து அணி இம்முறை மிகுந்த கவனத்துடன் விளையாடக்கூடும்.

முதல் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணிகள் மிகக்குறைந்த ரன்களையே எடுத்துள்ளன, குறிப்பாக கடைசி 5 போட்டிகளில் முதலில் பேட் செய்யும் அணிகள் சராசரியாக 213 ரன்களையே எடுத்துள்ளன.

இங்கிலாந்து அணி கடந்த 2 ஆண்டுகளில் கடைசி 10 ஓவர்களில் எடுத்த ரன் விகிதம் ஓவருக்கு 8.63 ரன்களாகும் மாறாக வங்கதேசம் கடைசி 10 ஒவர்களில் 6.68 ரன்கள் என்ற விகிதத்திலேயே எடுத்துள்ளது. இது ஆட்டத்தில் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் ஒரு காரணியாகும்.

வங்கதேசத்தை எளிதாக நினைத்து இங்கிலாந்து ஆடினால் கடினம்தான், ஆனால் அதே வேளையில் வங்கதேச அணியின் பீல்டிங் சொல்லும்படியாக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

பரிசுத் தொகை

சாம்பியன்ஸ் டிராபிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.28.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.14 கோடி பரிசளிக்கப்படும். 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.7 கோடி கிடைக்கும். அரை இறுதிச் சுற்றுவரை முன் னேறும் அணிகளுக்கு தலா ரூ.2.8 கோடி பரிசளிக்கப்படும். லீக் சுற்றில் 3-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 57 லட்சம் வழங்கப்பட உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தானை 4-ம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. 8-ம் தேதி இலங்கையையும், 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி சந்திக்கிறது.

http://tamil.thehindu.com/sports/அதிரடி-இங்கிலாந்துக்கு-சவால்-அளிக்குமா-வங்கதேசம்-சாம்பியன்ஸ்-டிராபி-முதல்-போட்டியில்-மோதல்/article9717090.ece

Link to comment
Share on other sites

அந்த பாக்ஸை டிக் செய்து இங்கிலாந்து சாம்பியன் ஆகுமா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? - மினி தொடர் 8

Champions trophy

 

கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாக பெருமை கொண்டாடுவது என்னவோ இங்கிலாந்து மக்கள்தான். ஆனால் இன்னமும் ஒருநாள் ஃபார்மெட்டில் ஒரு கோப்பை கூட ஜெயிக்கவில்லை. ஆஷஸ் ஜெயிச்சாச்சு, இந்தியாவில் தொடரை வென்றாயிற்று, தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை ஜெயித்தாயிற்று, டி20  உலகக் கோப்பை ஜெயித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாகிவிட்டது. இன்னமும் இங்கிலாந்து டிக் அடிக்காத ஒரு பாக்ஸ் ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடரில் கோப்பையை வெல்வது மட்டும்தான். இங்கிலாந்து அணி அந்த பாக்சிலும் டிக் அடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஒரு தலைமுறையே இப்போது சீனியர் சிட்டிசனாகிவிட்டது. இம்முறையாவது  அந்த பாக்ஸை டிக் செய்யுமா இங்கிலாந்து? 

ENGLAND

சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை மூன்றுமுறை அரை  இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. இரண்டுமுறை இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறது. ஆனால் சாம்பியன் பட்டம் கிடைக்கவில்லை. கடந்தமுறை தொடர் நடந்தது இங்கிலாந்தில்தான், இறுதிப்போட்டி வரை வந்தது. இறுதிப்போட்டியில் இறுதி ஓவர்கள் வரை வந்தது. ஆனால் இறுதி பந்தில்கூட வெற்றி பெற வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் கூட கடைசி நேரத்தில் நம்பவே இயலாத வகையில் வெற்றியைக் கோட்டை விட்டது இங்கிலாந்து அணி. முதலில் சில புள்ளி விவரங்களைத் தெளிவாகப் பார்ப்போம். 

 1. 2015 உலகக் கோப்பைக்கு பிறகு  12 தொடர்களில் ஆடியுள்ளது. அதில் ஒரு தொடர் மழை காரணமாக நடைபெறவில்லை. விளையாடிய 11 தொடர்களில் எட்டு முறை கோப்பையை வென்றது  

2. கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறது இங்கிலாந்து. வேறு எந்த அணியும் இந்த அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வில்லை. 44 போட்டிகளில் மூன்று  போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. முடிவு கிடைத்த 41ல் 27 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. வெற்றி சதவீதம் - 65.85. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கும் அணி இங்கிலாந்து என்பது குறிப்பிடத் தக்கது.

WIN/LOSE

3. முடிவு கிடைத்த 41 போட்டிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதில், 22 முறை முதலில் பேட்டிங் செய்திருக்கிறது. இதில் 14 போட்டிகளில் வென்றுள்ளது. தோல்வி சதவீதம் - 36.36 

சேஸிங் செய்த 19 போட்டிகளில் 13ல் வெற்றியும், ஆறு போட்டிகளில் தோல்வியையும் தழுவியிருக்கிறது. சேஸிங்கில் வெற்றி சதவீதம் - 68.42% . சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் மற்ற ஏழு அணிகளை விடவும் சேஸிங்கில் அதிக வெற்றி குவித்திருப்பது இங்கிலாந்து மட்டுமே.

4. உள்ளூரில் நடந்த ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் என மற்ற அணிகளை எளிதாக வென்றது. அயல் மண்ணில் தென் ஆப்ரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியைத் தழுவியது.

5. நியூசிலாந்து , பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இந்தியா  என பெரிய அணிகள் தங்களது ஊருக்கு வந்த போதெல்லாம் தொடரை வென்று அதிர்ச்சியளித்தது வங்கதேசம் அணி. இங்கிலாந்து அணி அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரு போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றது. ஆனால் அதன் பிறகு தொடரை ஜெயித்தது இங்கிலாந்து. தனது நாட்டில் அடக்க முடியாத காளையாக வளைய வந்த வங்கதேசத்தை அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து தான் அடக்கியது.

ENGLAND

6.  ஒருநாள் போட்டிகளில் முன்னூறு ரன்கள் என்பதை இடது கையால் டீல் செய்கிறது மோர்கன் அணி. கடைசி இரண்டு ஆண்டுகளில் முதலில் பேட்டிங் பிடித்த 22 போட்டிகளில் 16 முறை முன்னூறு ரன்களுக்கு மேல் குவித்து வியக்க வைத்திருக்கிறது. சராசரி - 306.13. குறைத்த பட்சம் 138 ரன்களையும், அதிகபட்சமாக ஒரே போட்டியில் 444 ரன்களையும் குவித்திருக்கிறது.

இந்த புள்ளிவிவரங்களை கவனமாக கவனித்திருந்தால், இங்கிலாந்து கடந்த இரண்டு வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதை உணர முடியும். 2015 உலகக் கோப்பையில் கால் இறுதிக்குக் கூட தகுதி பெறாமல் படுதோல்வியடைந்த இங்கிலாந்து, அதன் பின்னர் வேறு லெவல் அணியாக உருவெடுத்திருக்கிறது. அணியில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்த்திருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பல்வேறு மாறுதல்களைச் செய்திருக்கிறது. ஸ்டூவர்ட் பிராடு, ஆண்டர்சன் போன்ற சீனியர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் பயன்படுத்த ஆரம்பித்தது. ஒருநாள் போட்டிக்கு விளையாடும் ஃபார்மெட்டை தகர்த்து அதிரடி பாணியை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்து 350 ரன்கள் எடுப்பது ஆச்சர்யமில்லாத விஷயம் என்பதை மனதில் விதைத்திருக்கிறது. இப்போது நாங்கள் பலமிக்க அணி என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் இப்படியொரு மாற்றம் ... 'வாவ்' . சந்தேகமில்லை  இந்த முறை சாம்பியன் ரேஸில் டாப்-3 இடங்களுக்குள் இங்கிலாந்துக்கும் இடம் உண்டு. 

ஏற்கெனவே இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி நடத்தியுள்ளது இங்கிலாந்து. இரண்டு முறையும் தோற்றது. இப்போது சாம்பியன்ஸ் டிராபி நடப்பதும் இங்கிலாந்தில்தான். 2019 உலகக் கோப்பை நடக்கப்போவதும் இங்கிலாந்து மண்ணில்தான். மோர்கன் அணியின் உச்சப்பட்ட இலக்கு 2019 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிதான். அந்த கிளைமாக்ஸில் பார்வையாளர்களை பரவசப்படுத்தி தங்களது நாட்டு ரசிகர்களை தலை நிமிரச்செய்ய வேண்டும் என்பது  ஆசை... லட்சியம்... இலக்கு. அதற்கு டிரைலர்தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி. இந்த கோப்பையை வென்றால் பெரும் தன்னம்பிக்கை கிடைக்கும் என நம்புகிறது இங்கிலாந்து அணி. 

இங்கிலாந்து

அணி எப்படி இருக்கிறது? 

தென் ஆப்ரிக்காவுக்கு அடுத்தபடியாக பக்கா காம்பினேஷனில் அமைத்திருப்பது இங்கிலாந்து அணிதான். ஏகப்பட்ட ஆல்ரவுண்டர்கள், வெளுத்துக்கட்டும் அதிரடி வீரர்கள் என பலமிக்க அணியாக உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் தற்போதைய ஒரே கவலை ஓப்பனிங்தான். அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் இருவரும் கடந்த சில ஒருநாள் போட்டிகளில் சொதப்பித் தள்ளியிருக்கிறார்கள். சேவாக்கை போல முதல் பந்தில் இருந்தே விளாசல் ஆட்டத்தை கடைபிடிக்கும் ஜேசன் ராய் சீக்கிரமே ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். முக்கியமான போட்டிகளில் மேட்ச் வின்னராக திகழக்கூடியவர்  ராய். அவர் ஃபார்முக்கு திரும்பினால் நானூறு ரன்கள் இலக்கு என்றாலும் எளிதாக சேஸ் செய்யும் இங்கிலாந்து. 

ஜோ ரூட் அற்புதமான பேட்ஸ்மேன். இங்கிலாந்தின் மொத்த ஸ்கோரில் 70-80 ரன்களை அவர் குத்தகைக்கு எடுத்து விடுகிறார். எவ்வளவு மோசமான பிட்ச்சாக இருந்தாலும் சரி, எதிரே எப்பேர்ப்பட்ட பவுலராக இருந்தாலும் சரி அனாயசமாக அரை சதம் விளாசும் ரூட் அதைச் சதமாக மாற்றுவதிலும், கடைசிவரை களத்தில்  நின்று அணிக்கு வெற்றியைத் தேடி தருவதிலும் கோட்டை விடுகிறார். விராட் கோலி - கேன் வில்லியம்சன் - ஸ்டீவன் ஸ்மித் - ஜோ ரூட் இந்த நான்கு பேர்தான் இனி கிரிக்கெட் உலகை ஆளப் போகும் ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். டெஸ்டில் அசத்தும் ரூட், ஒருநாள் போட்டிகளிலும் இந்த நால்வரில் நம்பர் ஒன்னாக வரவேண்டும் எனில், அதற்கு அவரது யுக்திகளில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை இந்த சாம்பியன்ஸ் டிராபியிலேயே கொண்டு வந்து பல புதிய உயரங்களை தொடுவார் என எதிர்பார்க்கலாம்.

இயான் மோர்கன் 2015- 16 கால கட்டத்தில் திணறினார். அதன் பிறகு பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார். குறிப்பாக சுழற்பந்துகளை எதிர்கொள்வதற்கு சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். கடந்த ஓராண்டாக அவரும் நல்ல பார்மில் இருக்கிறார். அடித்து நொறுக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசிவரை நிலைத்து நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பது மோர்கனுக்கு பிடித்தமான விஷயம். இம்முறை இறுதி வரை அணியை அழைத்துச் சென்று கோப்பையை பெற்றுத்தர ஆர்வமாக இருக்கிறார். 

பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டராக உருவெடுத்திருக்கிறார். பிளிண்டாப்புக்கு பிறகு இப்போதுதான் கிரிக்கெட் உலகம் இப்படியொரு சிறந்த  ஆல்ரவுண்டரை கண்டுள்ளது. மெதுவாக பந்துகளை வீசுவதில் வல்லவர் ஸ்டோக்ஸ். கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இவரது இறுதி ஓவரில்தான் நான்கு சிக்ஸர்கள் விளாசினார் பிராத்வெயிட். சிக்ஸர் மழை பொழிந்த பிராத்வெயிட் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறார். கோப்பையை தாரை வார்த்தது மட்டுமன்றி, ரசிகர்களின் கனவையும் கடைசி நேரத்தில்  கலைத்த ஸ்டோக்ஸ் பெருத்த சோகம் அடைந்தார். தோல்விகள் அவரைச் செதுக்கின. அதன் பின்பு தேர்ந்த ஆல்ரவுண்டராக மிளிர்கிறார். இப்போது செம ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல்லில் அசத்திய கையேடு தென் ஆப்ரிக்காவின் வலுவான பந்துவீச்சை நொறுக்கித்தள்ளி சதமடித்திருக்கிறார். அவர் இன்னமும் பல உயரங்கள் செல்வார். அதற்கு இந்த சாம்பியன்ஸ் டிராபி முதல் படிக்கட்டாக இருக்கட்டும். 

இங்கிலாந்து

ஜாஸ் பட்லர் அதிரடி வீரர், நல்ல விக்கெட் கீப்பர், நல்ல ஃபினிஷர். ஜானி பேர்ஸ்டோ  அணியின் சூழ்நிலை உணர்ந்து பொறுப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன். சுழற்பந்தை நன்றாக கையாளக்கூடியவர். பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறும் பட்சத்தில் இந்த இருவரில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுப்பார் மோர்கன். அது ஜாஸ் பட்லராகத் தான் இருக்கும். மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் பெஞ்சில் உட்கார வேண்டிய சூழ்நிலை பேர்ஸ்டோவுக்கு!

மொயின் அலி - அடில் ரஷீத் கூட்டணி மினி அஷ்வின் - ஜடேஜா கூட்டணி. மொயின் அலி அட்டகாசமான ஆல்ரவுண்டர். ரஷீத் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் படைத்தவர். இந்த இருவரிடமும் இருக்கும் ஒரு மைனஸ் என்னவெனில்  ரன்களை வாரி வழங்குவதே. இங்கிலாந்தின் தட்பவெட்ப மாறுதல்களை புரிந்து அதற்கேற்ற லைனில் பந்துவீசக்கூடியவர்கள் என்பதால் அணிக்கு பலம் பெருவாரியாக கூடுகிறது.

வேகப்பந்து துறையில் கிறிஸ் வோக்ஸ், ஜேக் பால், டேவிட் வில்லி , ஸ்டீவன் ஃபின், மார்க் வுட்  இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே நல்ல வீரர்கள். வோக்ஸ், வில்லி, மார்க் வுட் இப்போதைக்கு அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐவரும்  ரன்களை அதிகம் விட்டுத்தரக் கூடியவர்கள் என்பது பெரிய மைனஸ். இதுவே இங்கிலாந்து அணிக்கு போட்டி முடிவுகளில் பாதகமாகவும் அமைந்து விடக்கூடும். 

எதிர்பார்க்கப்படும் லெவன் :-

ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷீத், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்

இங்கிலாந்து

அணியின் மைனஸ் : -

தென் ஆப்ரிக்காவைப் போல  திடீர் பதற்றத்தில் தவறு செய்பவர்கள் கிடையாது. துரதிர்ஷ்டமாக மழையோ, டக் வொர்த் லூயிசோ கனவுகளை சிதைப்பது கிடையாது. பின்னர் எப்படி இங்கிலாந்து இன்னமும் ஒருநாள் ஃபார்மெட்டில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல்  தடுமாறுகிறது என இன்னமும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பி.ஹெச்.டி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காரணத்தை நாம் குறிப்பிட்டுச் சொல்லாம். அது அவர்களிடம் தொழில் நேர்த்தி இல்லை என்பதே. இம்முறை சாதகமான அம்சங்கள் அதிக சதவீதமும் பாதகமான அம்சங்கள் மிகக்குறைந்த சதவீதமும் உள்ளன.  இந்தத் தொடரை விட கோப்பையை வெல்ல மிகச்சிறந்த வாய்ப்பு தென் ஆப்ரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இனி கிடைக்குமா என்பது கேள்விக்குறி. 

 

லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசத்தை சந்திக்கிறது இங்கிலாந்து. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுடன் வெற்றி சதவீதம் வெறும் 39.09 மட்டுமே. நியூஸிலாந்துடனும் வெற்றி சதவீதம் 46.83 தான். வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் 78.94% போட்டிகளில்  வென்றுள்ளது. ஆஸ்திரேலியை வீழ்த்துவது எளிதல்ல. அவர்களுக்கு இங்கிலாந்தின் தட்பவெட்ப மாற்றம் பரிச்சயம். நியூசிலாந்தும் இப்போது பலமிக்க அணியாக உருவெடுத்திருக்கிறது. எனினும் சேஸிங்கில் அவர்கள் சற்றே சொதப்புவதால்  இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். வங்கதேசம் அபாயகரமான அணி. தங்களை விட பலம் குறைந்த அணிகளிடம் முக்கியமான தொடரில் தோற்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இங்கிலாந்து. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரைப் போல இன்று நடக்கும் போட்டியிலும் வங்கதேசம் அசத்தல் ஆட்டம் ஆடினால், இங்கிலாந்துக்கு அரை இறுதி கனவே அம்பேல்!

http://www.vikatan.com/news/sports/90994-will-england-win-the-champions-trophy.html

Link to comment
Share on other sites

இங்கிலாந்து வெற்றிக்கு 306 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்

 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தமீம் இக்பாலின் சதத்தால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 306 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.

 
 
 
 
இங்கிலாந்து வெற்றிக்கு 306 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்
 
ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணி, வங்காள தேசத்தை எதிர்த்து விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடனும், வங்காள தேசம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடனும் களம் இறங்கியது.

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:- 1. ஹேல்ஸ், 2. ஜேசன் ராய், 3. மோர்கன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. பட்லர், 6. மொயீன் அலி, 7. கிறிஸ் வோக்ஸ், 8. பிளங்கெட், 9. வுட், 10. ஜேக் பால் 11. ஜோ ரூட்

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:- 1. தமீம் இக்பால், 2. சவுமியா சர்கர், 3. இம்ருல் கெய்ஸ், 4. ஷகிப் அல் ஹசன், 5. முஷ்பிகுர் ரஹிம், 6. சபீர் ரஹ்மான், 7. மெஹ்முதுல்லா, 8. மொசாடெக் ஹொசைன், 9. மோர்தசா, 10. முஸ்டாபிஜூர் ரஹ்மான், 11. ருபெல் ஹொசைன்.

வங்காள தேசத்தின் தமீம் இக்பால், சவுமியா சர்கர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கத்திலேயே விக்கெட் இழந்து விடக்கூடாது என கவனமாக விளையாடினார்கள். முதல் நான்கு ஓவரில் வங்காள தேசம் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

201706011908413582_mushfiqurrahim-s._L_s
79 ரன்கள் எடுத்த முஷ்டாபிகுர் ரஹிம்

வோக்ஸ் இரண்டு ஓவர்களில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2 ஓவர்கள் வீசிய அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 5-வது ஓவரை ஜேக் பால் வீசினார். இந்த ஓவரில் சவுமியா சர்கர் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதன்பின் வங்காள தேச வீரர்கள் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12 ஓவரில் 56 ரன்கள் சேர்த்தது. சவுமியா சர்கர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து இம்ருல் கெய்ஸ் களம் இறங்கினார்கள் இவர் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்காள தேசம் 21.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தமீம் இக்பால் 71 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். முஷ்பிகுர் ரஹிம் 48 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.

வங்காள தேசம் 37.1 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. அரைசதம் கடந்த தமீம் இக்பால் 124 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய தமீம் இக்பால் 142 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 128 ரன்கள் எடுத்து 45-வது ஓவரின் 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் முஷ்பிகுர் ரஹிம் 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

201706011908413582_plunkett-s._L_styvpf.
நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பிளங்கெட்

அப்போது வங்காள தேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அதன்பின் வந்த ஷகிப் அல் ஹசன் 8 பந்தில் 10 ரன்களும், சபீர் ரஹ்மான் 15 பந்தில் 24 ரன்களும் எடுக்க, வங்காள தேசம் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பிளங்கெட் 10 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/01190835/1088541/Bangladesh-306-runs-target-to-england-won.vpf

Link to comment
Share on other sites

#Champions Trophy: முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

 

சாம்பியன்ஸ் ட்ராஃபி முதல் போட்டியில் வங்காள தேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து

Photo Courtesy: ICC

கிரிக்கெட்டின் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் 'சாம்பியன்ஸ் ட்ராஃபி' போட்டி இன்று இங்கிலாந்திலுள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் தாய் மண்ணில் விளையாடும் இங்கிலாந்தை, வங்காள தேசம் எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து, வங்காள தேசத்தைப் பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் வங்காள தேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது. தமீம் இக்பால் நிதானமாக விளையாடி 142 பந்துகளுக்கு 128 ரன்களும் முஷ்ஃபிகர் ரஹீம் 79 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து 47 .2 ஓவர்களில் 308 ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 129 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து கேப்டன் மார்கன் 75 ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ரன்களும் குவித்தனர். நல்ல ஸ்கோர் குவித்தும் தோல்வியை தழுவியுள்ளது வங்காள தேச அணி.

http://www.vikatan.com/news/sports/91078-england-beats-bangladesh-by-8-wickets.html

Link to comment
Share on other sites

பங்களாதேஸூக்கு இங்கிலாந்து பதிலடி

உலகக்கிண்ணத் தோல்விக்கு மினி உலகக்கிண்ணத்தில்

 
பங்களாதேஸூக்கு இங்கிலாந்து பதிலடி
 

மினி உலகக்கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பங்களாதேஸை  வீழ்த்தியது இந்கிலாந்து.

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆடுகளம் துடுப்பாட்டத்துக்குச் சாதகமானதாக இருந்ததால் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி குறைந்தபட்சம் 350 ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸூக்கு அந்த அணியின் ஆரம்ப வீரர்களான இக்பால் மற்றும் சர்க்கர் இணைந்து மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அணி 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் சர்க்கர். 19 ஓட்டங்களுடன் கையிஸை வெளியேற்றினார் பிளங்கட். இக்பால் – ரகிம் இணைந்து இங்கிலாந்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தினர். அரைச்சதம் கடந்தார் இக்பால். ரகிமின் அரைச்சதம் 48 பந்துகளில் பதிவானது. இணைப்பாட்டமாகவும் 100 ஓட்டங்கள் பகிரப்பட்டன. சதம் கடந்தார் இக்பால். 45 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 128 ஓட்டங்களுடன் இக்பாலின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இக்பாலை வீழ்த்திய பிளங்கட் அடுத்த பந்தில் ரகிமையும் வீழ்த்தினார். முடிவில் 6 இலக்குகள் இழப்புக்கு 305 ஓட்டங்களைக் குவித்தது பங்களாதேஸ்.

பந்துவீச்சில் பிளங்கட் 4 இலக்குகளையும், போல், ஸ்ரோக்ஸ் இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கிய இங்கிலாந்துக்கு வெறும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார் றோய். றோயின் ஆட்டமிழப்பு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் ரூட், கேல்ஸ் இணைந்து இங்கிலாந்தின் பக்கம் படிப்படியாக வெற்றிவாப்பை இழுத்து வந்தனர். பலரும் எதிர்பார்ப்ததைப் போன்று இங்கிலாந்தின் தூணாகச் செயற்பட்டார்  ரூட். அணி 165 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 95 ஓட்டங்களுடன் கேல்ஸ் ஆட்டமிழந்தார். அணியின் தலைவர் மோர்கன், உபதலைவர் ரூட் நிலைத்துநின்று இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினர். சதம் கடந்தார் ரூட். மோர்கன் அரைச்சதம் கடந்தார். முடிவில் 2 இலக்குகளை மட்டும் இழந்து 16 பந்துகள் மீதமிருக்க வென்றது இங்கிலாந்து. ரூட் 133 ஓட்டங்களுடனும், மோர்கன் 75 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பதிலடியாகப் பதிவு
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து பாதியில் வெளியேறுவதற்கு பங்களாதேஸ் முக்கிய காரணமாக இருந்தது. இந்தத் தோல்விக்கு தனது சொந்த மண்ணில் வைத்து பதிலடி கொடுத்தது இங்கிலாந்து. 

 

 

 

263823.jpg

263832.jpg

263834.jpg

263839.jpg

18839490_1613705835315173_5698499839046252279_o-1024x699.jpg

http://uthayandaily.com/story/4889.html

Link to comment
Share on other sites

வலிமை மிக்க அணிகளை வீழ்த்த புது வியூகத்துடன் உள்ள இலங்கை அணி

 
Sri Lanka Team Preview
icc-clips-728-90-newest.jpg

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விறுவிறுப்பான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் அவாவை பூர்த்தி செய்யும் நோக்கில் சகல அணிகளும் பல்வேறுப்பட்ட வியூகங்களுடன் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் களம் காணவுள்ளன.

அந்த வகையில் பி குழுவில் இடம்பிடித்திருக்கும் இலங்கை அணி, சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினாலும் குழுமட்டப் போட்டிகளுடன் வெளியேறிவிடும் என்று பல்வேறுப்பட்ட கிரிக்கெட் நிபுணர்களினால் தெரிவிக்கப்பட்டு வந்தது. அண்மைய காலங்களில் அணி வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் இந்த  எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், இதுவரை நடைபெற்றுள்ள பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தாலும் குறித்த போட்டிகளில் 300க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்திருந்தது.

 

இலங்கை அணியினர் ஐசிசியினால் கடந்த காலங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். 2007, 2009, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் உலக T-20 தொடர்களில் எதிரணிகளுடன் கடுமையாகப் போராடிய நிலையில் இறுதியாக, 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற T-20 இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்தது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கையின் வரலாறு

2002ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் மழை குறுகீட்டின் காரணமாக தொடரின் சம்பியன் கிண்ணத்தை இந்திய அணியுடன் பகிர்ந்து கொண்டது இலங்கை அணி. எனினும் இலங்கை 2004, 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களிலிருந்து குழு மட்டப் போட்டிகளுடன் வெளியேறியிருந்தது.

இறுதியாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் வலிமை மிக்க அவுஸ்திரேலியா மற்றும் போட்டி இடம்பெற்ற இங்கிலாந்து அணிகளையும் வெற்றியீட்டி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. எனினும் அரையிறுதிப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணியிடம் தோல்வியுற்றது.

இலங்கை அணியின் பந்து வீச்சு

பந்து வீச்சை பொறுத்தவரை கடந்த ஸ்கொட்லாந்து, அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கெதிரான நான்கு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி சராசரியாக 45.4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற வீதத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இவ்வணி மொத்தமாக 1,135 ஓட்டங்களை வழங்கியுள்ள அதேநேரம் 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது. குறித்த போட்டிகளின்போது இலங்கை அணி தமது பந்து வீச்சாளர்களை பரிச்சார்த்தமாக முயற்சித்து பார்த்தது.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கு லசித் மாலிங்கவின் மீள்வருகை இலங்கை அணியின் பந்து வீச்சை பலப்படுத்தியிருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அந்த வகையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் எட்டு ஓவர்கள் பந்து வீசி வெறும் 32 ஓட்டங்களை மட்டும் வழங்கி தனது அனுபவம் மற்றும் உடல் தகுதியை அவர் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் தனது நான்காவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் லசித் மாலிங்க அனுபவம் மிக்க நுவன் குலசேகரவுடன் இணைந்து பந்து வீச்சை பலப்படுத்தவுள்ளார்.

 

2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அணி சார்பில் ஒருநாள் போட்டிகளில் கூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுரங்க லக்மால், இம்முறை எவ்வாறு பந்து வீச்சினை மேற்கொள்வார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம், இளம் பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அந்த வகையில் போட்டியின் இடை ஓவர்களை அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இணைந்து பலப்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனினும் மீண்டும் காயத்திற்கு உள்ளாகியுள்ள மெதிவ்ஸ் தென்னாபிரிக்காவுடனான முதலாவது போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அவர் அணியில் இணைய வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

சண்டகன் மற்றும் சீகுகே பிரசன்ன போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களை அணிக்குள் உள்ளவாங்க முன்னர், இரண்டு தடவைகள் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் தரப்பினர் உள்ளனர். முக்கியமாக பலமான காற்று மற்றும் குளிர் போன்ற நிலைமைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். எனினும், எதிரணிக்கு இவர்கள் இருவரும் அச்சுறுத்தல் விடுக்கக்கூடியவர்களே.

துடுப்பாட்ட பலம் மற்றும் பலவீனம்

அண்மைய காலமாக இருந்து வரும், நிலையில்லாத துடுப்பாட்டம் காரணமாக அனுபவம்மிக்க அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமல் மற்றும் உபுல் தரங்க ஆகியோர்மேல் அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த வகையில், முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்குபற்றும் குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல போன்ற இளம் வீரர்களுடன் இணைந்து அதிரடி துடுப்பாட்டதினை தொடர் முழுவதும் வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிரேஷ்ட வீரர்கள் உள்ளனர்.

கடந்த போட்டிகளின்போது சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த உபுல் தரங்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர், தம்மை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக நிலைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமல் மற்றும் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

அதிரடி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சாமர கபுகெதர ஆகியோரின் பங்களிப்பும் அணியின் வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அசேல குணரத்ன கடந்த அவுஸ்திரேலிய T-20 போட்டிகளின்போது அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றி கொள்வதற்கு பங்களிப்பு செய்திருந்தமை யாவரும் அறிந்ததே.

அதேநேரம், இறுதி 11 பேர் கொண்ட அணிக்கு சீகுகே பிரசன்ன மற்றும் திசர பெரேரா ஆகியோர் தெரிவாகும் பட்சத்தில் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் முக்கிய வீரர்களாக அவர்கள் கணிக்கப்படுவர்.

 

களத் தடுப்பு

கடந்த காலங்களில் சிறந்த களத்தடுப்பு அணியாக இலங்கை அணி கணிக்கப்பட்டிருந்தது. எனினும், அண்மைய காலங்களில் இலங்கை அணியின் களத்தடுப்பு தரம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. எவ்வாறெனினும் தலைமை பயிற்றுவிப்பாளர் கிராம் போர்ட் மற்றும் அணி மேலாளர் அசங்க குருசிங்க ஆகியோர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெறவுள்ள போட்டிகளின்போது சிறந்த களத் தடுப்பை இலங்கை அணி வெளிப்படுத்தும்  என உறுதி கூறியுள்ள அதேநேரம், சிறந்த களத்தடுப்பு வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக

இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மீதான எதிர்பார்ப்புகள் குறைந்திருந்தாலும், இலங்கை அணி ஆக்ரோஷ ஆட்டத்தினை வெளிப்படுத்தி எதிரணிகளை வெற்றிக்கொள்ளும் என்பது இலங்கை கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். வலுவற்ற அணியாக கருதப்பட்டாலும் இலங்கை அணியானது எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் சவால் விடுக்கக்கூடிய அணியாக திகழ்கின்றது என்பதில் ஐயமில்லை

இலங்கைத் தரப்பின் கருத்துகள்

”இந்த போட்டித் தொடரில் வலிமைமிக்க தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணியுடன் வெற்றி பெரும் பட்சத்தில், பாகிஸ்தான் அணியை இலகுவாக வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதற்கு பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட வேண்டும்.

இம்முறை நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பாரிய சவால்கள் கொண்ட மாபெரும் தொடராகும். அண்மைய போட்டிகளில் இலங்கை அணி வெளிப்படுத்திய பெறுபேறுகளின் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். எனினும் எமது வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், தமது திறமைகளை மேம்படுத்த கடுமையான உழைப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் கண்டு வரும் எமது அணி, நிச்சயமாக எதிர்வரும் போட்டிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் வலிமை மிக்க அணிகளுக்கெதிரான போட்டிகளின்போது இது பாரிய சவாலாகும். என்றாலும் சவால்களை எதிர்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம்”  என்று இலங்கை அணியின் தலைமப் பயிற்சியாளர் கிராம் போர்ட் தெரிவித்தார்.  

 

 

”இங்கிலாந்து களங்களில் நாம் சிறப்பாக விளையாடியுள்ளோம். அத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தோம். அனுபவமற்ற மற்றும் இளம் வீரர்களை கொண்டிருந்தாலும் எங்களில் சிலர் இங்கிலாந்து களங்களில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அந்த வகையில், அணியில் யாரும் போட்டியின் நிலைமையை மாற்றியமைக்கலாம். எங்களிடம் திறமை உள்ளது. அந்த வகையில் எதிர்வரும் போட்டிகளில் எமது திறமைகளை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” என்று அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.   

இலங்கை அணிக் குழாம்

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), உபுல் தரங்க (துணைத் தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, அசேல குணரத்ன, சாமர கப்புகெதர, சுரங்க லக்மால், நுவன் குலசேகர, திஸர பெரேரா, சிக்குகே பிரசன்ன, லக்ஷான் சண்டகன், நுவான் பிரதீப்,

அசங்க குருசிங்க – அணி மேலாளர்

ரஞ்சித் பெர்னாண்டோ – போக்குவரத்து மேலாளர்

கிரஹாம் ஃபோர்ட் – தலைமைப் பயிற்சியாளர்

அலன் டொனால்ட் – ஆலோசகர், வேகப் பந்து வீச்சு பயிற்சியாளர்

நிக் போதஸ் – களத்தடுப்பு பயிற்சியாளர்

நிக் லீ – பயிற்சியாளர்

அஜந்தா வேதகம – மருத்துவர்,

ஸ்ரீராம் சோமாயஜுல – ஆய்வாளர்

குழுநிலை போட்டி அட்டவணை

ஜூன் 3 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா – கென்னிங்டன் ஓவல், லண்டன்

ஜூன் 8 – இலங்கை எதிர் இந்தியா – கென்னிங்டன் ஓவல், லண்டன்

ஜூன் 12 – இலங்கை எதிர் பாகிஸ்தான் – சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

 

சாம்பியன்ஸ் கிண்ணம் : ஜோ ரூட் அதிரடி சதம் : முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து - Highlights

Link to comment
Share on other sites

தமீம் சதத்தை நிழலுக்குள் தள்ளிய ஜோ ரூட் சதம்: இங்கிலாந்துக்கு வியர்வை சிந்தாத வெற்றி

 

 
 
 
தமீம் இக்பால்
தமீம் இக்பால்
 
 

ஓவல் மைதனத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசப் பந்து வீச்சை புரட்டி எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

306 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து 47.2 ஓவர்களில் 308/2 என்று அபார வெற்றி பெற்றது. மிகவும் தொழில் நேர்த்தியுடன் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ரன்களையும், கேப்டன் மோர்கன் விரைவு ரன் குவிப்பில் 75 ரன்களையும் எடுக்க சமகாலத்திய சிறந்த பேட்ஸ்மெனான ஜோ ரூட் 129 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 133 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்த இன்னிங்ஸ் மூலம் முதலில் பேட் செய்த வங்கதேச அணியின் ‘சயீத் அன்வர்’ தமீம் இக்பால் சதத்தை நிழலுக்குள் தள்ளினார் ரூட்.

பஞ்சு மெத்தை பிட்சில் 400 ரன்கள் கூட போதாது. இதே வகையான பிட்சை இங்கெல்லாம் அமைத்தால் ‘சப்காண்டினண்ட் டஸ்ட் பவுல்’ என்றும் ‘ஃபெதர் பெட்’ என்றும் கேலி பேசுவார்கள்.

ஆனால் மஷ்ரபே மோர்டசாவின் கேப்டன்சியில் நிறைய முதிர்ச்சியின்மை தெரிந்தது. 305 ரன்களை அடித்து விட்டு ஷாகிப் அல் ஹசன் என்ற ‘லாலிபாப்’ (பாய்காட் பாணியில் கூற வேண்டுமெனில்) பவுலரிடமா புதிய பந்தைக் கொடுப்பது? வங்கதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புள்ளி விவரங்கள் படியும் திறமையின் படியும் அற்புதமான பந்து வீச்சாளர் இடது கை முஸ்தபிசுர் ரஹிம். அவரையல்லவா தொடக்கத்தில் கொடுத்திருக்க வேண்டும்? குறைந்தது ஜேசன் ராய் மட்டமான ஸ்கூப் ஷாட் ஆடி ஷார்ட் பைன் லெக்கில் ஆட்டமிழந்த பிறகாவது உடனடியாகக் கொண்டு வந்து ஜோ ரூட்டை நெருக்கியிருக்க வேண்டாமா? ஏன் இந்தக் கேள்விகளெல்லாம் எழுகிறது எனில் ஜோ ரூட் நன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதும் முஸ்தபிசுர் ரஹ்மான் அவரை சில சிக்கல்களுக்குட் படுத்தினார் என்பதே.

ஜேசன் ராய் ஆட்டமிழந்த பிறகு இருந்த வங்கதேச ரசிகர்களின், வீரர்களின் கத்தல்கள், ஆர்பரிப்புகளை அமைதியான முறையில் இங்கிலாந்து எதிர்கொண்டு மிகவும் அனாயசமாக வங்கதேசத்தை ஊதியது என்றே கூற வேண்டும்.

ஜேசன் ராயின் ஃபார்ம் இன்மை தொடர்ந்தது. தேவையில்லாமல் நேராக ஆட வேண்டிய இன்ஸ்விங்கரை ஸ்கூப் செய்து ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். நன்றாக எழும்பி முஸ்தபிசுர் ரஹ்மான் அந்தக் கேட்சை பிடித்தார். ஜோ ரூட் இறங்கி அனாயசமாக ஒரு கவர் டிரைவ் அடித்து வரப்போகும் இன்னிங்ஸிற்கு கட்டியங்கூறினார்.

ஹேல்சும், ரூட்டும் வியர்வை சிந்தாம்ல் வங்கதேச பந்து வீச்சை மைதானம் நெடுக செலுத்தினர், வங்கதேச பவுலர்களும் வியர்வை சிந்தவில்லை. ஒன்று, இரண்டு ரன்களுடன் கட், புல், சில டிரைவ்கள் என்று ஹேல்ஸ், ரூட் வங்கதேச பந்து வீச்சுடன் பொம்மை விளையாட்டு விளையாடினர்.

இருவரும் இணைந்து 159 ரன்களை 2-வது விக்கெட்டுக்காக சேர்த்த போது 86 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து சதத்தை எதிர்நோக்கிய ஹேல்ஸ் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தும் திருப்தியுறாமல் ஒரு பெரிய ஸ்வீப் ஆடி பகுதி நேர பவுலர் சபீர் ரஹ்மானிடம் டீப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் வங்கதேசத்துக்கும் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது, ஆனால் அதை இயான் மோர்கனின் வருகை முடித்து வைத்தது. கடைசி 10 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன்கள் பக்கம் தேவைப்பட்ட நிலையிலும் மோர்கன் (61 பந்துகளில் 75 ரன்கள்) ,ஜோ ரூட் அபாரமாக வெற்றிக்கு சிரமமின்றி இட்டுச் சென்றனர். கடைசியில் 2 பவுண்டரிகளை அடித்து ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். முழுதும் பேட்டிங் திறமையை நம்பியே இங்கிலாந்து அணி வென்று 2 புள்ளிகளைப் பெற்றது.

http://tamil.thehindu.com/sports/தமீம்-சதத்தை-நிழலுக்குள்-தள்ளிய-ஜோ-ரூட்-சதம்-இங்கிலாந்துக்கு-வியர்வை-சிந்தாத-வெற்றி/article9718149.ece

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா நியூசிலாந்து?

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து மல்லுகட்டுகிறது.

 
 
 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா நியூசிலாந்து?
பயிற்சியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்
பர்மிங்காம் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 2-வது லீக்கில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

2006, 2009-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா கடந்த முறை முதல் சுற்றுடன் வெளியேறியது. மறுபடியும் அரியணை ஏறுவதில் தீவிரம் காட்டும் ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. கேப்டன் ஸ்டீவன் சுமித், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், கிறிஸ்லின், டேவிட் வார்னர் என்று பேட்டிங்கிலும், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பேட்டின்சன், கம்மின்ஸ் என்று பந்து வீச்சிலும் ஆஸ்திரேலியா மிக வலுவாக திகழ்கிறது.

புதிய ஊதிய ஒப்பந்த பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் அதை கிரிக்கெட் வீரர்களின் சங்கம் பார்த்துக் கொள்ளும்; எங்கள் கவனம் எல்லாம் இந்த தொடர் மீதே இருக்கிறது என்று ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். இது போன்ற தொடர் 4 ஆண்டு அல்லது 2 ஆண்டுக்கு ஒரு முறை தான் வருகிறது. அதை வெல்வது மிகவும் முக்கியமானது என்றும் சுமித் குறிப்பிட்டார்.

திடீரென சீறிப்பாயக்கூடிய ஒரு அணியான நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். கடந்த 6 மாதங்களில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை சேப்பல்-ஹாட்லீ கோப்பைக்கான ஒரு நாள் தொடரில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒன்றில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 357 ரன்களை வெற்றிகரமாக துரத்திப்பிடித்தது, நியூசிலாந்துக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

201706020951232505_Australia-vs-New-Zeal

இவ்விரு அணிகளும் இதுவரை 135 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 90-ல் ஆஸ்திரேலியாவும், 39-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. 6 ஆட்டத்தில் முடிவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து ஒரு போதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை. 5 ஆட்டங்களில் மோதி 4-ல் தோற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், ஜான் ஹேஸ்டிங்ஸ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டாம் லாதம் அல்லது லுக் ரோஞ்ச், கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நீல் புரூம், ஜேம்ஸ் நீஷம், கோரி ஆண்டர்சன், மிட்செல் ஜான்ட்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், மெக்லெனஹான் அல்லது கிரான்ட் ஹோம் அல்லது ஆடம் மில்னே.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/02095116/1088592/Champions-Cup-Cricket-Australia-vs-New-Zealand-match.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சிக்காக ஒதுக்கிய இடம் சரியில்லாததால் கோலி, கும்ப்ளே அதிருப்தி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பயிற்சி எடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் வசதியில்லாமல் இருப்பதால் டோனி மற்றும் அனில் கும்ப்ளே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 
 
சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சிக்காக ஒதுக்கிய இடம் சரியில்லாததால் கோலி, கும்ப்ளே அதிருப்தி
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்திய அணி கடந்த 30-ந்தேதி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இதற்கான இந்திய அணி பர்மிங்காமில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் இன்று நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு எட்ஜ்பாஸ்டனில் உள்ள முதன்மையான பயிற்சி இடம் வழங்கப்படவில்லை. அதற்குப்பதிலாக அருகில் உள்ள ஒரு மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வசதியாக இல்லை என விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே ஆகியோர் தங்களது அதிருப்தி தெரிவித்துள்ளனர். புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி ஆகியோர் சுமார் 30 யார்டு தூரம் ஓடிவந்து பந்து வீசுவார்கள். அங்கு 30 யார்டு ஓடுவதற்கு வசதியில்லை.

இதுகுறித்து விராட் கோலி மற்றும் அனில் கும்ப்ளே அணியின் மானேஜர் கபில் மல்கோத்ராவிடம் புகார் அளித்தனர். அவர் வார்க்‌ஷைர் அதிகாரிகளுடன் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இன்றைய போட்டி முடிந்த பின்னர், நாளை எட்ஜ்பாஸ்டன் மைதானம் இந்திய அணியின் பயிற்சிக்கு வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பாகிஸ்தான் அணி கடந்த ஒரு வாரமாக எட்ஜ்பாஸ்டனில் பயிற்சி மேற்கொண்டதால் அந்த அணிக்கு முதன்மையான மைதானத்தில் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/02115317/1088620/Virat-Kohli-Anil-Kumble-Unhappy-With-Training-Facilities.vpf

 

 

கும்ப்ளேயின் பயிற்சியை புறக்கணித்த கோலி

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அனில் கும்ப்ளே பயிற்சியளிக்க வந்ததும் வீராட்கோலி வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
 
 
 
கும்ப்ளேயின் பயிற்சியை புறக்கணித்த கோலி
 
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட்கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதையடுத்து இருவரையும் சமதானப்படுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் முயற்சி செய்து வருகிறார். இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வருகிற 4-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
 
201706021212086355_iis8e7er._L_styvpf.gi


முக்கியமான இந்தப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கேப்டன் வீராட்கோலி அங்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சில கருவிகளை கொண்டு வரும்படி கூறியதாகவும் உடனே வீராட்கோலி பயிற்சியில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இருவரும் இடையே மோதல் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/02121202/1088626/Did-Virat-Kohli-walk-out-as-Anil-Kumble-came-in-for.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்று நியூஸிலாந்து முதலில் பேட்டிங்

 

 
வில்லியம்சன், ஸ்மித். | கோப்புப் படம்.| ஏ.பி.
வில்லியம்சன், ஸ்மித். | கோப்புப் படம்.| ஏ.பி.
 
 

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

ஸ்டீவன் ஸ்மித்துக்கு இன்று பிறந்த தினம், டாஸ் தோற்றது பற்றி அவர் வழக்கமாக கூறும்போது, “எப்படியிருந்தாலும் நான் முதலில் பவுலிங்கைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். நன்றாக தயாரித்துக் கொண்டுள்ளோம். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது வெறுப்பை ஏற்படுத்தியது.

பிட்ச் ரிப்போர்ட்டில் ஷேன் வார்ன் கூறும்போது, “புற்கள் சரிசம விகிதத்தில் உள்ளன. பிட்ச் வன்மையாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பவுன்ஸ் அதிகம் கிடைக்கும்” என்றார்.

நியூஸிலாந்து அணி: கப்தில், ரோங்கி, வில்லியம்சன், டெய்லர், புரூம், நீஷம், ஆண்டர்சன், சாண்ட்னர், மில்ன, சவுதி, போல்ட்

ஆஸ்திரேலிய அணி: வார்னர், பிஞ்ச், ஸ்மித், மேக்ஸ்வெல், ஹெட், ஹென்றிக்ஸ், வேட், ஹேஸ்டிங்ஸ், ஸ்டார்க், கமின்ஸ், ஹேசில்வுட்

நியூஸிலாந்து அணீ 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது. கப்தில் 16 ரன்களுடனும், ரோங்கி 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/சாம்பியன்ஸ்-டிராபி-டாஸ்-வென்று-நியூஸிலாந்து-முதலில்-பேட்டிங்/article9718430.ece?homepage=true

Link to comment
Share on other sites

வங்கதேசத்தின் அந்த ஒரு தவறு... இங்கிலாந்துக்கு சாதகமானது எப்படி? #MatchAnalysis

 

2007 - 2009 காலகட்டத்தில் 23 முறை ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்தது இந்திய அணி. கங்குலி, டிராவிட், கும்ளே என சீனியர் வீரர்கள் ஒதுங்க, சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ், தோனி போன்ற வீரர்களுடன் விராட் கோலி, ரெய்னா மாதிரியான இளம் வீரர்களும் இந்திய அணிக்குள் நுழைந்தார்கள். அனுபவமும் இளமையும் நிரம்பிய இந்த அணி பல சாதனைகளை செய்தது. அதன் உச்சம் 2011 உலகக்கோப்பை. இன்றளவும் இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலம் என்றால் அது 2007 - 2011 தான்.

ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 2007 உலகக் கோப்பையில்  இந்திய அணி  வங்கதேசத்திடம் தோற்று எப்படி லீக் சுற்றோடு வெளியேறியதோ, அதே போல 2015 உலகக் கோப்பையில் வலிமையான இங்கிலாந்து அணி வங்கதேசத்திடம் தோல்வியடைந்து லீக் சுற்று முடிந்து பெட்டிப் படுக்கையோடு லண்டனுக்கு விமானம் ஏறியது. சொதப்பிய சீனியர்கள் நீக்கப்பட்டனர். இளங்கன்றுகள் அணியில் நுழைந்தன. அனுபவமும் இளமையும் ஒன்று சேர்ந்தது.

2011 உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தைத் தான் சந்தித்தது இந்திய அணி. எளிதாக வென்றது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது இங்கிலாந்து. அனாயசமாக வென்றது. 19  ஆண்டுகால சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் நேற்று நடந்தது தான் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங். 

இந்த இரண்டு ஆண்டுகளில் 25 ஒருநாள் போட்டிகளில் முன்னூறு ரன்களை கடந்திருக்கிறது இங்கிலாந்து. வரலாறும் புள்ளிவிவரங்களும் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன. நேற்று நடந்த போட்டியில் வங்கதேசம் ஏன் தோற்றது? 

வங்கதேசம் கடந்த சில வருடங்களாகவே நன்றாக விளையாடிவருகிறது . இந்த முறை சில அணிகளுக்கு ஆப்பு வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வங்கதேசம் நிச்சயம் அரை இறுதி வரை செல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் நம்பினார்கள். நேற்றைய தினம் மைதானத்தில் சுமார் 40 % வங்கதேச ரசிகர்கள் நிறைந்திருந்தனர் . கோப்பையை வெல்ல வேண்டும் என உறுதியுடன் நின்ற மோர்கனுக்கு நேற்றைய தினம் டாஸிலேயே வெற்றி கிடைத்தது. காலை போட்டிகளில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வங்கதேசம் சுருண்டு விழும் என எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்து பவுலர் வோக்ஸ் அபாரமாகவே பந்து வீசினார். மார்க் வுட்டும் அவருக்கு உறுதுணையாக நின்றார். எனினும் ஜேக் பால் நேற்று மோசமான லைனில் பந்து வீசியதால் வங்கதேசம் கவனமாக ஆடியது. ஜேக் பாலின் பந்துகளை மட்டும் துவைத்து எடுத்தது. ஓவல் மைதானத்தில் ஒரு பக்கம் பிட்சில் இருந்து எல்லைக் கோட்டின் தூரம் குறைவு என்பதால் கவனத்துடன் பந்து வீசியது இங்கிலாந்து. 

தமீம் இக்பால்

பொதுவாக நான்கு அல்லது ஐந்தாம் நிலையில் இறங்கும் முஷ்பிகுர் ரஹீம் நேற்று ஒன்டவுனாக இறங்கினார். தமீம் இக்பால் நல்ல டச்சில் இருந்தார். அவருக்கு  உறுதுணையாக ஆடினார் ரஹீம். ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. 25 - 44 ஓவர்களில் அருமையாக ஆடியது வங்கதேசம். 330 நிச்சயம் 350 லட்சியம் எனும்  இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 45 வது ஓவரில் பிளென்கட் பந்து வீச வந்தார். நான்காவது கியரில் இருந்து ஐந்தாவது கியருக்கு மாற்ற நினைத்தனர் தமீம் - ரஹீம். பிளென்கட் வெவ்வேறு லெந்த்தில் பந்து வீசினார். 44.3வது ஓவரில் தமீம் பேட்டில் பட்டு டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் பட்லரிடம் கையில் தஞ்சமடைந்தது பந்து. நான்கில் இருந்து ஐந்துக்கு செல்ல வேண்டியதற்கு பதில் மூன்றாவது கியருக்கு இறங்கியது. அடுத்த பந்தை ஆர்வக்கோளாறில் ஒரு மோசமான ஷாட் ஆடினார் ரஹீம். அவுட்! இந்த விக்கெட்டை பார்க்கும் போது கடந்த டி20 உலகக்கோப்பையில்  வெற்றியின் அருகில் வந்தபோது ஆர்வக்கோளாறில் ஷாட் ஆடிய ரஹீமின் நினைவு சடாரென வந்துபோனது. 

முக்கியமான கட்டத்தில் இரண்டாவது கியருக்கு சென்றது ரன் ரேட். ஷகிப் நல்ல டச்சில் ஆரம்பித்தாலும் சிக்ஸர்கள் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு போட்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. 305 ரன்கள் குவித்தது வங்கதேசம். ஆசிய மண்ணுக்கு அப்பால், சர்வதேச போட்டிகளில் வங்கதேசத்தின் அதிகபட்ச ரன் இது. 

இங்கிலாந்து சேஸிங்கில் அபாயகரமான அணி. அதிலும் ஜேசன் ராய் அபாயகரமான வீரர். அவரை மூன்றாவது ஓவரில் வீழ்த்தியது வங்கதேசம். உலகக் கோப்பை போன்ற தொடர்களில் 300 ரன்கள் என்பது கடினமான இலக்கு . எனினும் இங்கிலாந்திடம் நீண்ட பேட்டிங் வரிசை இருந்ததால் பொறுமையாக ஆடினால் வெற்றி பெற முடியும் எனும் சூழ்நிலை இருந்தது. ஹேல்ஸ் வெளுத்தபோது ரூட் அமைதியாக இருந்தார். பின்னர் ஹேல்ஸ் வெளியேறிய பிறகு மோர்கன் வந்தார். இந்த இணை கவனமாக ஆடி நேர்த்தியாக வென்றது. கடைசி பத்து ஓவர்களில் 75 ரன்கள் தேவை. வெறும் 44 பந்துகளில் அந்த ரன்களை எடுத்து மோர்கன் - ரூட் கூட்டணி. ஜோ ரூட் அபாரமாக சதம் எடுத்தார். நேற்றைய போட்டியில்  வங்கதேசம் செய்த ஒரு மிகப்பெரிய  தவறு மெஹந்தி ஹாசனை அணியில் சேர்க்காததுதான். 

வங்கதேசம் அணியை வென்ற ரூட் - மோர்கன் கூட்டணி

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 19 விக்கெட்டுகளை அள்ளி  புது ஹீரோவாக உருவெடுத்தார் மெஹந்தி ஹாசன். அவரது சுழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். நேற்றைய போட்டியில் பிட்சில் பந்து அதிகம் சுழலவில்லை. எனினும் மெஹந்தி ஹாசன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு  அபாயகரமான பவுலர்  என்பதால் அவரது ஓவரில் விக்கெட்டுகள் ஒரு வேளை கிடைக்காமல் போயிருந்தாலும் ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவரது ஓவரை இங்கிலாந்து பேட்ஸ்மென் கவனமாக விளையாடியிருக்கவே வாய்ப்பு அதிகம்.

 

ஏற்கவே டஸ்கின் அகமதுவும் இல்லாத சூழ்நிலையில் மெஹந்தி ஹாசனும் இல்லாததால் இங்கிலாந்தின் வெற்றி எளிதானது. முஸ்தாபிசுர் மட்டுமே தனது முதல் எட்டு ஓவர்களில் நேர்த்தியாக வீசினார். இந்தியாவுடன் பேட்டிங்கில் சொதப்பியதால் நேற்றைய தினம் சுமார் ஒன்பது பேர் பேட்டிங் செய்யும் அளவுக்கு அணியை கட்டமைத்திருந்தது வங்கதேசம். நல்ல பேட்ஸ்மேன்கள், நல்ல பவுலர்கள் என அணி சமநிலையில் வங்கதேசம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்போதுதான் வெற்றிப்படியில் ஏற ஆரம்பித்திருக்கிறது வங்கதேசம், உச்சிக்குச் செல்ல நிறைய தூரம் இருக்கிறது, இடையில் ஏகப்பட்ட தடை இருக்கிறது. ஆர்வ மிகுதியில் செய்யும் சிறு சிறு தவறுகளும் ஒரு அடி பின்னோக்கித் தள்ளும். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து போட்டிகளில் வங்கதேசத்துக்கு தேவை - அதிக கவனம்!

http://www.vikatan.com/news/sports/91119-why-did-bangladesh-lose-to-england.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி: மழை காரணமாக ஆஸி. - நியூசி. இடையேயான போட்டி கைவிடப்பட்டது

 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

 
சாம்பியன்ஸ் டிராபி: மழை காரணமாக ஆஸி. - நியூசி. இடையேயான போட்டி கைவிடப்பட்டது
 
பிர்மிங்காம்:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக குப்தில், ரோஞ்சி களமிறங்கினர். 6-வது ஓவரின் போது 40 ரன்களை சேர்த்திருந்த நிலையில், 26 ரன்களை குவித்திருந்த குப்தில் ஹாசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஞ்ச் - கேப்டன் வில்லியம்சன் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. 117 ரன்களை எடுத்திருந்த நிலையில், 65 ரன்களை எடுத்திருந்த ரோஞ்ச் ஹேஸ்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சதம் விளாசிய வில்லியம்சன் ரன் அவுட் ஆனார். டெய்லர் 46 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹாசில்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே சேர்த்தனர். இறுதியில் 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களை எடுத்தது.

201706022357099970_ICC2._L_styvpf.gif

நடு நடுவே மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி போட்டி 33 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 235 ரன்களை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக பிஞ்ச், வார்னர் களமிறங்கினர். இதில் 18 ரன்களை சேர்த்த வார்னர் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிஞ்ச் 8 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 18 ரன்னில் வெளியேறிய போது மீண்டும் மழை குறுக்கிட்டது.

கேப்டன் ஸ்மித் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து மீண்டும் பெய்த மழை தீவிரவமடைந்ததை அடுத்து போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/02235703/1088740/ICC-Match-between-Australia-and-Newzealand-has-been.vpf

Link to comment
Share on other sites

முதல்தர தென்னாபிரிக்காவுக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா இலங்கை?

 
South Africa vs Sri Lanka
icc-clips-728-90-newest.jpg

லண்டனில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான போட்டியுடன் இலங்கை அணி, பாரிய சவால்களுக்கு மத்தியில்  இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின்போது தென்னாபிரிக்க அணி,  5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இலங்கை அணியை திணறடித்திருந்தது. இலங்கையை மட்டுமன்றி, குறித்த காலப்பகுதியில் தென்னாபிரிக்க அணி விலிமைமிக்க அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் பாரிய வெற்றியைப் பெற்றிருந்தது

வலிமை மிக்க அணிகளை வீழ்த்த புது வியூகத்துடன் உள்ள இலங்கை அணி

குறித்த தொடர் வெற்றிகளால் ஐசிசி தர வரிசையில் தென்னாபிரிக்க அணி முதலிடத்தை பிடித்திருந்தாலும், அவ்வணி ஐசிசி போட்டித் தொடர்களின் முக்கிய தருணங்களில் கோட்டை விடுவது வழக்கமாகும். எனினும், 1998ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சம்பியன்ஸ் கிண்ண தொடரை வென்று சர்வதேச தொடர் ஒன்றின் முதலாவது கிண்ணத்தை தன்வசப்படுத்தியது அவ்வணி. இன்று வரை அந்த ஒரே கிண்ணமே அவர்களுக்கு சொந்தமான சர்வதேச தொடர் ஒன்றின் கிண்ணமாகும்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணி

லண்டனில் நடைபெறவுள்ள போட்டியில் உலக தர வரிசையில் முதலாவது மற்றும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் பந்து வீச்சாளர்களுடன்கூடிய அதி சக்திவாய்ந்த அணியாகவே இம்முறை தென்னாபிரிக்கா களம் காணவுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி.டி. வில்லியர்ஸ் முதல் இடத்திலும், குயிண்டன் டி கொக், டுப்ளசிஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோர் முறையே 3ஆம், 6ஆம் மற்றும் 10ஆவது இடங்களில் உள்ளனர். மேலும், பந்து வீச்சில் காகிஸோ றபாடா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

எனினும் அவ்வணியை எதிர்கொள்ள துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் முதல் 10 இடங்களுக்குள் எவருமே இல்லாத நிலையில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

எனினும், சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் நான்காவது இடத்திலிருக்கும் இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மீது பலருக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், அவர் மீண்டும் உபாதைக்கு உள்ளாகியுள்ளமையினால் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

 

எனினும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பாரிய சவால்களுக்கு மத்தியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியில், காயம் காரணமாக கடந்த 2015 ஆண்டிலிருந்து சர்வதேச போட்டிகளிலிருந்து விலகியிருந்த லசித் மாலிங்க மீண்டும் இணைந்திருப்பது அணியை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது. தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும் தனது யோக்கர் பந்து வீச்சினால்  அச்சுறுத்திய அனுபவமும் மாலிங்கவுக்கு உண்டு.

அதேநேரம், அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சுக்கு காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தென்னாபிரிக்காவுடனான போட்டியிலிருந்து விலக நேர்ந்தால், அது இலங்கை அணிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இறுதியாக நடைபெற்றிருந்த நியூசிலாந்து அணியுடனான  பயிற்சிப் போட்டியிலும் மெதிவ்ஸ் பங்கெடுக்கவில்லை.

எனினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து  மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடனான பயிற்சிப் போட்டிகளில் இலங்கை தோல்வியுற்றிருந்தாலும், துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தது.  அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் 300 ஓட்டங்களை விட அதிக ஓட்டங்களைப் பெற்றமை இலங்கை வீரர்கள் சிறந்த துடுப்பாட்ட திறமையை கொண்டுள்ளமைக்கு சான்றாக உள்ளது.

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான லக்ஷன் சண்டகன் களமிறக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதுவரை 6 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியுள்ள சண்டகன் மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய வித்தியாசமான பந்து வீச்சு தென்னாபிரிக்க அணியை அச்சுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

அனுபவமற்ற மற்றும் இளம் வீரர்களை கொண்டிருந்தாலும் எங்களில் சிலர் இங்கிலாந்து களங்களில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அந்த வகையில், அணியில் யாரும் போட்டியின் நிலைமையை மாற்றியமைக்கலாம். எங்களிடம் திறமை உள்ளது. எனினும் எதிர்வரும் போட்டிகளில் சவால்களை எதிர்கொள்வோம் என்று அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இலங்கை?

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், லண்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் (பி பிரிவு) மோதுகின்றன.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இலங்கை?
 
லண்டன் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், லண்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் (பி பிரிவு) மோதுகின்றன. ‘நம்பர் ஒன்’ அணியான தென்ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் தலைமையில் களம் இறங்குகிறது.

ரன்வேட்டைக்கு டிவில்லியர்ஸ், மில்லர், குயின்டான் டி காக், அம்லா, பிளிஸ்சிஸ், விக்கெட் வேட்டைக்கு ‘நம்பர் ஒன்’ பவுலர் காஜிசோ ரபடா, கிறிஸ்மோரிஸ், இம்ரான் தாஹிர் என்று தென்ஆப்பிரிக்கா எல்லா வகையிலும் மிக வலுவாக விளங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 5-0 என்ற கணக்கில் இலங்கையை பந்தாடியது நினைவிருக்கலாம்.

இலங்கை அணியை பொறுத்தவரை சமீப காலமாக மிகவும் தடுமாறி வருகிறது. பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் முறையே 318 ரன், 356 ரன்கள் எடுத்தும் தோல்வியே மிஞ்சியது. பின்னங்கால் காயத்தால் அவதிப்படும் கேப்டன் மேத்யூஸ் இந்த ஆட்டத்தில் ஆட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தரங்கா அணியை வழிநடத்துவார்.

201706030943468672_today._L_styvpf.gif

நடப்பு தொடரில் இலங்கையை வெற்றி வாய்ப்புள்ள அணியாக யாரும் பார்க்கவில்லை. இதுவே தங்களுக்கு முழு உத்வேகத்துடன் நெருக்கடியின்றி விளையாட உதவும் என்று இலங்கை வீரர்கள் நம்புகிறார்கள். தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஙஸ், டுமினி, டேவிட் மில்லர், பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, மோர்னே மோர்கல் அல்லது வெய்ன் பார்னல், இம்ரான் தாஹிர்.

இலங்கை: நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா (கேப்டன்), குசல் மென்டிஸ், தினேஷ் சன்டிமால், குணரத்னே, குசல் பெரேரா, கபுகேதரா, திசரா பெரேரா, குலசேகரா, மலிங்கா, பிரசன்னா அல்லது சன்டகன்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/03094346/1088770/Champions-Cup-Cricket-South-Africa-vs-Sri-Lanka.vpf

Link to comment
Share on other sites

பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்: வங்கதேச கேப்டன் மோர்டசா வருத்தம்

 

 
மோர்டசா
மோர்டசா
 
 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. தமீம் இக்பால் 128, முஸ்பிஹூர் ரகிம் 78 ரன்களும் சேர்த்தனர்.

இங்கிலாந்து அணியில் பிளங்கெட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 306 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 133, அலெக்ஸ் ஹேல்ஸ் 95, கேப்டன் மோர்கன் 75 ரன்கள் சேர்த்தனர்.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறும்போது, “பிரதான பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அவர் இல்லாத நிலையில் பந்து வீச்சு சுமையை அணியில் உள்ள மற்ற வீரர்கள் சரியாக கையாண்டனர்.

ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 330 ரன்களை சேர்க்கும் என்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்துக்கு தகுந்தபடி அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கடைசி கட்டத்தில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது.

ஒரே ஓவரில் இரு விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது சிறப்பான விஷயம். ஜோ ரூட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. அடுத்த ஆட்டத்துக்குள் அவர் முழு உடல் தகுதியை அடைந்து விடுவார்” என்றார்.

வங்கதேச அணியின் கேப்டன மோர்டசா கூறும்போது, “நடு ஓவர்களில் நாங்கள் விக்கெட்கள் கைப்பற்ற தவறிவிட்டோம். மேலும் பேட்டிங்கில் 330 முதல் 340 ரன்கள் வரை எடுக்கும் நிலையில் இருந் தோம்.

ஆனால் அதை நாங்கள் செய்ய தவறினோம். கடைசி கட்டத்தில் அதிக விக்கெட்களை இழந்தோம். தமீம் ஆட்டமிழந்த அடுத்த பந்தி லேயே முஸ்பிஹூர் ரகிமும் ஆட்ட மிழந்ததே பெரிய பிரச்சினையாக அமைந்தது. 20 முதல் 30 ரன்கள் குறைவாக நாங்கள் சேர்த்ததாகவே கருதுகிறோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/பேட்டிங்கில்-30-ரன்கள்-குறைவாக-எடுத்துவிட்டோம்-வங்கதேச-கேப்டன்-மோர்டசா-வருத்தம்/article9718948.ece

 

Link to comment
Share on other sites

நியூஸி. – ஆஸி. போட்டி மழையினால் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது

 

நியூ­ஸி­லாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்­லை­யென்­றுதான் சொல்ல வேண்டும். காரணம் மழை குறுக்­கிட்­டதால் வெற்­றி­பெற வேண்­டிய போட்­டியை பறி­கொ­டுத்த சோகத்தில் ஆழ்ந்­துள்­ளது நியூ­ஸி­லாந்து. ஆனால் மறு­மு­னையில் ஆட்­டம் கைவி­டப்­பட்­டதால் அவுஸ்­தி­ரே­லிய வீரர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

263858.jpg

இங்­கி­லாந்தில் எட்­டா­வது ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடை­பெற்­று வ­ரு­கி­றது. நேற்று பர்­மிங்­ஹோமில் நடை­பெற்ற இரண்டாவது லீக் போட்­டியில் நியூ­ஸி­லாந்து மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதின.

263853.jpg

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற நியூ­ஸி­லாந்து அணித் தலைவர் வில்­லி­யம்சன் துடுப்­பாட்­ட­த்தை தேர்வு செய்தார்.

263861.jpg

நியூ­ஸி­லாந்து அணிக்கு குப்தில் மற்றும் ரான்கி ஜோடி சுமா­ரான ஆரம்­பத்தை கொடுத்­தது. ஹசில்வுட் வேகத்தில் குப்தில் 26 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

263866.jpg

நியூ­ஸி­லாந்து அணி 9.3 ஓவர்­களில் ஒரு விக்­கெட்டை இழந்து 67 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­த­போது மழை குறுக்­கிட்­டது. ஒன்­றரை மணி நேரத்­திற்குப் பின் மீண்டும் ஆரம்­ப­மான போட்டி தலா 46 ஓவர்கள் என குறைக்­கப்­பட்டு ஆடப்­பட்­டது. 

263857.jpg

அதைத் தொடர்ந்து இணைந்த ரோஸ்­டெய்லர் மற்றும் வில்­லி­யம்சன் ஜோடி எதி­ரணி பந்­து­வீச்சை சிறப்­பாக எதிர்­கொண்­டது. 3 விக்­கெட்­டுக்கு 99 ஓட்­டங்­களை சேர்த்­த­போது, ரோஸ் டெய்லர் 46 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அபார ஆட்­டத்தை தொடர்ந்த வில்­லி­யம்சன் ஒருநாள் அரங்­களில் தனது ஒன்­ப­தா­வது சதத்தை விளா­சினார்.

263862.jpg

இதன் பின் ஹசில்வுட் வேகத்தில் மிரட்ட, நியூ­ஸி­லாந்து அணியின் துடுப்­பாட்ட வீரர்கள் அடுத்­த­டுத்து விக்­கெட்டுகளை பறி­கொ­டுத்­தனர். ஹசில்வுட் வீசிய 45ஆவது ஓவரின் மூன்­றா­வது மற்றும் நான்­கா­வது பந்­து­களில் மில்னே (11), சான்ட்னர் (8) ஆட்­ட­மி­ழந்­தனர். அடுத்த பந்தை பெளல்ட் தடுத்­தாட 'ஹெட்ரிக்' விக்கெட் பெறும் வாய்ப்பு நழு­வி­யது. கடைசி பந்தில் இவரும் ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழக்க நியூ­ஸி­லாந்து அணி 45 ஓவர்­களில் 291 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. அவுஸ்­தி­ரே­லியா சார்பில் அதி­க­பட்­ச­மாக ஹசில்வுட் 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

263870.jpg

அவுஸ்­தி­ரே­லியா துடுப்­பெ­டுத்­தாட வரும்­போது மீண்டும் மழை குறுக்­கிட்­டது. இதனால் அவுஸ்­தி­ரே­லிய அணிக்கு 'டக்வோர்த் லூயிஸ்' முறைப்­படி 33 ஓவர்­களில் 235 ஓட்­டங்கள் என வெற்றி இலக்கு மாற்­றப்­பட்­டது. 

263876.jpg

இந்­நி­லையில் கள­மி­றங்­கிய அவுஸ்­தி­ரே­லிய அணி­யி­னரை நியூ­ஸி­லாந்து வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் ஆரம்­பத்­தி­லேயே கட்­டுப்­ப­டுத்­தி­விட்­டனர். பௌல்டின் பந்தில் டேவிட் வோர்னர் 18 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். மின்னேவின் பந்­து­வீச்சில் பின்ச் 8 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். ஹென்­ரிக்ஸும் 18 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

263886.jpg

இதனால் அவுஸ்­தி­ரே­லிய அணி 9 ஓவர்­களில் 53 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை எடுத்து திண­றிக்­கொண்­டி­ருந்த வேளையில் மீண்டும் மழை பெய்­தது. இதனால் போட்டி கைவி­டப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட இரு அணி­க­ளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது. ஆரம்­பத்­தி­லேயே மூன்று விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்த அவுஸ்­தி­ரே­லிய அணி நிம்­மதி பெரு­மூச்­சு­விட்­டது.

263884.jpg

நேற்­றைய போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஹசில்வுட் 9 ஓவர்கள் பந்­து­வீசி 52 ஓட்­டங்­களை விட்­டுக்­கொ­டுத்து 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். இதன் மூலம் சம்­பியன்ஸ் கிண்ண வர­லாற்றில் சிறந்த பந்­து­வீச்சை பதி­வு­செய்த இரண்­டா­வது பந்­து­வீச்­சாளர் என்ற பெரு­மையை பெற்றார். முத­லி­டத்தில் இலங்கை அணியின் பர்வேஸ் மஹ்ருப் உள்ளார். இவர் 14 ஓட்­டங்­களை விட்டுக் கொடுத்து 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்தியுள்ளார். 

 

அத்தோடு அவுஸ்திரேலி யாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசினார் வில்லியம்சன். அதேபோல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் அரங்கில் தனது அதி பட்ச ஓட்ட எண்ணிக்கையை யும் (291) பதிவுசெய்தது நியூஸிலாந்து. இதற்குமுன் 186 ஓட்டங்கள் எடுத்ததே அதிகமான ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/20581

Link to comment
Share on other sites

மத்தியூஸ் இல்லை தரங்க தலைவர்

இலங்கை களத்தடுப்பு

 
மத்தியூஸ் இல்லை தரங்க தலைவர்
 

மினி உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் விளையாடும் பதினொருவர் கொண்ட குழாம் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. மத்தியூஸ் விலகியுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மத்தியூஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை. தரங்க தலைவராகச் செயற்படவுள்ளார். டிக்வெல்ல, சந்திமல் என்று இரு இலக்குக் காப்பாளர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். எனினும் டிக்வெல்லவே இலக்குக் காப்பாளராகச் செயற்படவுள்ளார்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

 

http://uthayandaily.com/story/5051.html

Link to comment
Share on other sites

தப்பித்தது அதிர்ஷ்டம்தான் என்றாலும் மிக மோசமாக பந்து வீசினோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித் ஒப்புதல்

 

 
ஸ்டீவ் ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி.
ஸ்டீவ் ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

மழை காரணமாக நியூஸிலாந்திடம் தோல்வியடைவதிலிருந்து தப்பியதற்கு ஆஸி.கேப்டன் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்தாலும், தங்கள் அணி படுமோசமாக பந்து வீசியது என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மழையினால் தப்பித்தது அதிர்ஷ்டம் என்றாலும் பந்து வீச்சு படுமோசம் என்பதை ஸ்மித் ஒப்புக் கொண்டார்.

வார்னர், பிஞ்ச், ஹென்ரிக்ஸ் ஆகியோர் விக்கெட்டை இழந்து 235 ரன்கள் இலக்கை விரட்டும் போது மழை ஆஸ்திரேலியா சொதப்பிய தருணத்தில் மழை காப்பற்றியது. இரு அணிகளும் புள்ளிகளை பிரித்துக் கொண்டன.

நடுநிலை மைதானங்களில் இதற்கு முன்னர் 18 முறை ஆஸி.-நியூஸி. அணிகள் மோதியதில் ஆஸ்திரேலியா 17 முறை வெற்றி பெற்றுள்ளது, நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மழையினால் ஆஸ்திரேலியா தப்பித்தது.

இந்நிலையில் ஆஸி. கேப்டன் ஸ்மித் கூறியதாவது:

நீண்ட நாட்களுக்குப் பிறகு படுமோசமாக பந்து வீசினோம் என்றே கருதுகிறேன். நிறைய பவுண்டரி பந்துகளை நியூஸிலாந்துக்கு வாரி வழங்கினோம். மிகவும் சாதாரணமான பந்து வீச்சாக அமைந்தது. ஆட்டம் முடிந்த போது நியூஸிலாந்து நிலையில் நாங்கள் இருந்திருக்கலாம் என்று நினைத்தோம். நியூஸிலாந்திடம் தரமான பந்து வீச்சு உள்ளது. இன்னும் நாங்கள் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது.

மிகவும் சாதாரணமான ஆட்டத்தை ஆடி விட்டோம் அது நேற்றோடு தொலையட்டும் என்றே நான் விரும்புகிறேன். நியூஸிலாந்து அணிக்குப் பாராட்டுகள். அவர்கள் எங்களை ஆதிக்கம் செலுத்தினார்கள். கேன் வில்லியம்சன் தன் இன்னிங்ஸை எங்களுக்கு எதிராக சரியான நேரத்தில் ஆடினார். மிகவும் சிறப்பாக ஆடினார் கேன்.

நிச்சயம் ஆட்டம் மழையால் பாதிக்கப்படுவது நல்லதல்ல. இனி என்ன ஒவ்வொரு போட்டியுமே எங்களுக்கு இறுதிப் போட்டிதான். இது விரைவு கதியில் செல்லும் தொடராகும் இதில் வாஷ் அவுட், தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/தப்பித்தது-அதிர்ஷ்டம்தான்-என்றாலும்-மிக-மோசமாக-பந்து-வீசினோம்-ஆஸி-கேப்டன்-ஸ்மித்-ஒப்புதல்/article9719163.ece?homepage=true

Link to comment
Share on other sites

‘இந்தியா பாகிஸ்தானை வெல்லும்... ஆனால், சாம்பியன் ஆஸ்திரேலியா!' மெக்ராத் லாஜிக்

 
 

கிரிக்கெட் உலகின் டாப் - 8 அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் அசத்தலாக விளையாடி, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளை எளிதாக வென்றது. இதில் முக்கியமான விஷயம், இரு அணிகளையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்ததுதான். எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நடப்பு சாம்பியனாகக் களமிறங்கும் இந்தியா, நாளை நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 8-ம் தேதி இலங்கை அணியையும், ஜூன் 11-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணியின் பலம்குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  கருத்து தெரிவித்துவருகின்றனர். 

குமார் சங்கக்காரா: 

``இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நான்கு ஆசிய அணிகள் உள்ளன. இவற்றில் இந்திய அணிதான் சிறப்பானதாக இருக்கிறது. 2013-ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு, இந்திய அணிக்கே பிரகாசமாக உள்ளது. ஏனெனில், இந்திய அணியின் வலுவான பேட்டிங் - தீப்பொறி பறக்கும் வேகப்பந்து வீச்சு - ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என, பலமான அணியாகத் திகழ்கிறது இந்திய அணி. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் சொதப்பினாலும், கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் வலுவான அணியைத் தேர்ந்தெடுத்துத் தலைமை தாங்குவதில் விராட் கோலி நிச்சயம் தீவிரம் காட்டுவார். இந்திய அணி தேர்வுசெய்யப்பட்டவிதத்தில் சற்றே பழைமையான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பலம் வாய்ந்த அணியாகவே இந்தியா திகழ்கிறது. 

இந்தியா கேப்டன் விராட் கோலி

எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதை, இப்போதே கணிப்பது கடினம். ஆனால், அரை இறுதியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத வாய்ப்புள்ளன. ஒரு காலகட்டத்தில் இரு அணிகள் மட்டுமே லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல அணிகள் சாம்பியனாகும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் ஆடிவரும் ஆட்டத்தில் உண்மையான ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது. ஏனெனில், மற்ற அணிகளுடன் ஒப்பிட்டால் போட்டியை அணுகும் முறை மற்றும் அதற்கான உத்திகளில் இங்கிலாந்து அணி பின்தங்கியே இருக்கும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அந்த அணி, ஆக்ரோஷமாகவும் உற்சாகமாகவும் கிரிக்கெட்டை ஆடும் அணியாக முன்னேறியுள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் சிலர், அந்த அணியை இந்த நிலைக்கு நடத்திவருகின்றனர். கடந்த சாம்பியன்ஸ் டிராபியைப்போலவே, இந்த முறையும் சொந்த மண்ணில் போட்டிகளில் பங்கேற்பது, அவர்களுக்குக் கூடுதல் ப்ளஸ்ஸாக அமையும்'' எனக் கூறியுள்ளார் சங்கக்காரா.

வி.வி.எஸ்.லட்சுமண்:

இந்தியா - வி.வி.எஸ்.லட்சுமண்

''8-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா சிறப்பாக ஆடி கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு அவர்கள் தன் இரண்டு பயிற்சி ஆட்டங்களையும் ஆடியவிதம் சிறந்த உதாரணம். இரண்டு போட்டிகளிலும் ஷிகர் தவானின் பேட்டிங் என்னை ஈர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராகச் சொதப்பினாலும், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை, தினேஷ் கார்த்திக் அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார். கடைசிக்கட்டத்தில் கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர். இரண்டு போட்டிகளிலும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள், எதிர் அணியைத் திணறடிக்கக்கூடிய லைன் மற்றும் லெங்த்தில் தொடர்ச்சியாகப் பந்து வீசினர். மேலும், ரன்களைக் கட்டுப்படுத்துவதைவிட, ஆக்ரோஷமாக ஆடி விக்கெட்டை எடுப்பதில்தான் அவர்கள் குறியாக இருந்தனர்'' என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றிப் பேசுகையில், "நிச்சயம் அது சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும். போட்டி நடைபெறும் பர்மிங்காம் மைதானம், கிரிக்கெட் ரசிகர்களாலும், கரவொலியாலும் நிரம்பி வழியப்போகிறது. நாம் நமது முழுத்திறமையைக் காட்டினால், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி வெற்றிபெறலாம்" எனத் தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

கிளென் மெக்ராத்:

ஆஸ்திரேலியா

"கடந்த மூன்று வருடங்களாக, இந்திய அணியின் பெளலர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் சுழல் - வேகப்பந்து வீச்சு கூட்டணி, மற்ற அணிகளைவிட சாதகமான விஷயமாக இருக்கிறது. எனவே, இந்திய அணியிடம் மிக வலிமையான பேட்டிங்குடன் தாக்குதல் பாணியிலான பெளலிங் இருப்பதாகவே நினைக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பொறுத்தவரை, அது எப்போதும்போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். அதில் இந்த முறை இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் எனக் கருதுகிறேன். இதற்கு முன் இருந்த அளவுக்குப் பலமாக இல்லாவிட்டாலும்,  பாகிஸ்தான் அணியில் தரமான சில பெளலர்களும், அனுபவமிக்க பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். ஆதலால், ஒருவேளை பாகிஸ்தானும் இந்தியாவை ஆச்சர்யப்படுத்தலாம்'' என்றார்.

அரையிறுதிக்குத் தகுதிபெறும் அணிகளைப் பற்றிக் கேட்டபோது ''இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் நிச்சயமாக  அரையிறுதில் இருக்கும். நான்காவது அணியாக தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்துக்கு வாய்ப்புகள் அதிகம்'' என மெக்ராத் கணித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றி அவர் கூறியதாவது, "இந்தியாவின் பெளலர்கள் என்னை ஈர்த்துள்ளனர். தொடக்க ஓவர்களில் உமேஷ் யாதவ் சிறப்பாகப் பந்து வீசுகிறார். டெத் ஓவர்களில் அற்புதமாகப் பந்து வீசும் பும்ரா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான சிறந்த வீரராக இருக்கிறார். புவனேஷ்வர் குமார் சரியான லெங்த்தில் பந்து வீசுவதோடு, பும்ராவைப்போலவே நல்ல வேகத்தில் யார்க்கர்களையும் வீசுகிறார். இவர்கள் அனைவரும் தொடர்ந்து திறமைகளை மேம்படுத்துவார்கள்'' என மெக்ராத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

கோப்பை வெல்லப்போகும் அணியைப் பற்றி கேட்டபோது, "நான் என்றுமே ஆஸ்திரேலியாவுக்குத்தான் ஆதரவு தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்தான் இப்போதைக்கு கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையே நடந்துவரும் சர்ச்சைக்கு, சீக்கிரமே நல்ல தீர்வு வரும். இங்கிலாந்து அணியை, அவர்களது ஊரில் தோற்கடிப்பது கடினமானதாக இருக்கலாம். ஏனெனில், இப்போதுதான் அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளனர். அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரராக இருக்கிறார்" என மெக்ராத் கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/sports/91235-what-do-these-former-players-think-about-team-india.html

Link to comment
Share on other sites

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: நாளையும் மழையால் ஆட்டம் பாதிக்குமா?

 

 
kohli89090

 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை நாளை ஆரம்பிக்கிறது. பாகிஸ்தானுடனான போட்டி என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் முறையாக பெரிய போட்டியில் தலைமை வகிக்கிறார். எனவே அவருக்கு இந்தத் தொடர் முக்கியமான ஒன்றாகும். அதனால் இதில் வெல்வதற்கு அவர் தீவிரம் காட்டுவார். இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கவுள்ள ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி, கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முறையும் அந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பலாம். இதுதவிர கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியும் பலம் சேர்க்கிறது. இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத அணியாகவே உள்ளது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடர் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து அசார் அலிக்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அஹமது புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை சர்ஃப்ராஸ் கொண்டுவருவாரா என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான், கோலியை வம்புக்கு இழுக்கும் விதத்தில் பேட்டியளித்துள்ளார்.

கோலியைக் கண்டு பாகிஸ்தான் அணி அஞ்சவில்லை. அவரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும். கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் நான்கு போட்டிகளில் நான் அவரை மூன்றுமுறை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.

இந்திய ரசிகர்கள் முன்னிலையிலேயே கோலிக்குப் பந்துவீசியுள்ளேன். எனவே இங்கிலாந்தில் அவரை எதிர்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. நான் இந்தமுறை அவரை எதிர்கொள்ளும்போது என்னிடம் தடுமாறிய அதே கோலியாகவே அவரை எண்ணுவேன். இது தவறாக இருக்கலாம். அவரும், அவர் விக்கெட்டுகளை எடுத்த அதே ஜுனைத் கானாகவே என்னை எண்ணுவார். இதனால் அவர் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டைப் பறிகொடுக்கலாம். 

கோலி, உலகம் முழுக்க சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசியுள்ளார். ஆனால் என்னிடம் அவரால் ரன்கள் எடுக்கவே முடியவில்லை. இது எனக்குப் பெருமைக்குரிய விஷயம். அந்தச் சாதனையை சாம்பியன் டிராபி போட்டியிலும் தொடர்வேன் என்று கூறியுள்ளார். இதனால் கோலி - ஜூனைத் கான் மோதலையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் கடைசி 5 பெரிய போட்டிகளில் இந்தியாவுடன் தோல்வியடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி ஜெயிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  

எட்பாஸ்டனில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 291 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்பிறகு அற்புதமாகப் பந்துவீசிய நியூஸிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை மழை தடுத்துவிட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் எட்பாஸ்டனில் நடைபெறுகிறது. நாளையும் காலை மற்றும் மதியம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. 

நாளை இந்திய நேரம் மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/03/icc-champions-trophy-india-v-pakistan-2713786.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.