Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. புரூம் சதம் ; நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பங்களாதேஷ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. நியுஸிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புரூம் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மஷ்ரபீ மூர்தஷா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ…

  2. டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். 12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி வீராங்கனையாக விளங்கி வந்த அவர், சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் …

  3. டெஸ்ட் சாம்பியன்களின் மறுபக்கம் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காமல் முன்னேறி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள். விராட் கோலி தன் தந்தையார் இறந்ததற்கு அடுத்த நாளே டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய கோலி, துக்கத்துக்கு நடுவிலும் 90 ரன்களைக் குவித்தார். கோலிக்கு டாட்டூக்கள் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்தது சாமுராய் வீரன் உருவம் பொறித்த டாட்டூ. ரவீந்திர ஜடேஜா இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடே…

  4. இன்சமாம், யூசுப் சாதனை: சமன் செய்த அஸார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவரும் அஸார் அலி இந்த வருடத்தில் 1000 ரன்களை கடந்தார். இந்த வருடம் விராட் கோலிக்குப் பிறகு 1000 ரன்களை கடக்கும் 2-வது ஆசிய வீரர் இவர் தான். மேலும் இன்சமாம், யூசுப், மொயின் கான், யூனிஸுக்கு பிறகு 1000 ரன்களை கடக்கும் பாக் வீரர் அஸார் அலி தான். பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அஸார் அலியின் ஆட்டம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்து ஆடி வருகிறது பாக் அணி, அஸார் 90 ரன்களில் இருந்த போது மூன்றாவது நடுவர் நாட் அவுட் பட்டனுக்கு பதில் அவுட் பட்டனை அழுத்தியது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/76115-azar-ali-equals-inzamam-recor…

  5. விராட் கோலியைச் சீண்டி கோபப்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித் டிசம்பர் 28, 2014-ல் மெல்போர்னில் சதம் எடுத்துத் துள்ளிக் குதிக்கும் கோலியை பார்க்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலியின் பண்பை சோதிப்போம் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார். 3 வடிவங்களிலும் 50 ரன்கள் சராசரி என்ற சாதனை ஆண்டை கோலி அணியின் வெற்றிகளுடன் கொண்டாடி வரும் நிலையில் பயணிக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அவரது குணாம்சத்திற்கு சோதனை கொடுப்போம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கூறும்…

  6. இந்திய கிரிக்கெட் 2016: களம் ஆளும் கோலி-கும்ப்ளே கூட்டணி! கோலி, கும்ப்ளே | கோப்புப் படம்: சம்பத் குமார் 2016... இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த ஆண்டு. வீரர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. ஐசிசி பவுலிங் தரவரிசையிலும், ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வகித்தார். மேலும், பவுலிங் தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல் இரண்டு இடங்களை முதல் முறையாகப் பிடித்தனர். கோலி கேப்டனாக வீரராக பல சாதனைகளை நிகழ்த்திய ஆண்டாக 2016 அமைந்தது. உலக அளவில் இந்திய அணியை பெரிய டெஸ்ட் அணியாக வீழ்த்த முடியாத டெஸ்ட் அணியாக மாற்றமடையச் …

  7. ஆங்­கி­லேய ப்றிமியர் லீக் போட்­டியில் செல்சி கழகம் 12 ஆவது நேரடி வெற்றி 2016-12-28 10:56:27 இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் ஆங்­கி­லேய ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் செல்ஸி விளை­யாட்டுக் கழகம் தொடர்ச்­சி­யாக 12 வெற்­றி­களை ஈட்டி சாதனை நிலை­நாட்­டி­யுள்­ளது. போர்ன்மௌத் கழ­கத்­திற்கு எதி­ராக திங்­க­ளன்று நடை­பெற்ற ப்றீமியர் லீக் போட்­டியில் 3 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யதன் மூலம் இந்த சாத­னையை செல்சி கழகம் படைத்­தது. இப் போட்­டியில் ஒரு தட்டு, இரண்டு தட்­டுகள் என்ற பந்து பரி­மாற்­றங்­க­ளுடன் மிக வேக­மாக விளை­யா­டிய செல்சி கழகம் எதி­ர­ணியை மாத்­தி­ர­ம…

  8. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சீக்கிய வீரர் தேர்வு! கராச்சி: பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு முதல் முறையாக மகேந்தர் பால் சிங் என்ற என்ற சீக்கிய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சிக்கு சீக்கியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமி வளாகத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் பயின்று வரும் மகேந்தர் பால் சிங் (21) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். …

  9. மனைவியின் உடையால் சமூக ஊடகங்களில் சர்ச்சை: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசம் 22 போட்டிகளில் ஆடியுள்ளார் முகமது ஷமி சமூக ஊடகங்களில், தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்' என வர்ணித்திருந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர். அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து, திங்கள்கிழமை கருத்து வெளியிட்டுள்ள முகமத…

  10. இப்போதைக்கு ஓய்வு இல்லை: அப்ரிடி அறிவிப்பு ஷயித் அப்ரிடி | கோப்புப் படம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வுபெறுவதாக இல்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்ப தாவது: பாகிஸ்தான் அணிக்காக நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறேன். நான் ஓய்வு பெற விரும்புவதாக வும், எனக்கு விடை கொடுக்கும் வகையில் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நான் கேட்டுள்ளதாகவும் சில செய்திகள் வந்துள்ளன. அவை உண்மை அல்ல. எந்த கட்டத்திலு…

  11. ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை ஒரு யுத்தமாக பார்க்கிறது என்றால் அதற்கு இணையானது தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும். அதாவது எல்லா வருடமும் எதாவது ஒரு அணியுடன் ஆஸ்திரேலிய அணி டிசம்பர் 26-ம் தேதி மெல்பெர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும். அதனை வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு முறையும் ஆக்ரோஷமாக ஆஸி அணி களமிறங்கும். பாக்ஸிங் டே வரலாறு! விக்டோரியா அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி கிறிஸ்துமஸ் சமயத்தில் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் பாக்ஸிங் டேயும் அடக்கம். நியூ சவுத் வேல்ஸ் வீரர்கள் கி…

  12. கிளப் லீக்: பெங்கால் பேட்ஸ்மேன் அவுட்டாகாமல் 413 ரன் அடித்து சாதனை கிளப் லீக் போட்டியில் மேற்கு வங்காள பேட்ஸ்மேன் பங்கஜ் ஷா அவுட்டாகாமல் 413 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பரிஷா ஸ்போர்ட்டின் அணி சார்பில் 28 வயதான பங்கஜ் ஷா 44 பவுண்டரிகள், 23 சிக்சர்கள் மூலம் அவுட்டாகாமல் 413 ரன்கள் குவித்துள்ளார். 6-வது விக்கெட்டுக்கு அஜ்மிர் சிங் (47) உடன் இணைந்து 203 ரன்களும், 7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயன் சக்ரபோர்ட்டி (22) உடன் இணைந்து 191 ரன்களும் குவித்தார். இவரது அபார ஆட்டத…

  13. பேசும் படங்கள்: சென்னை களத்தில் கருணின் முச்சத தருணம்! சென்னை டெஸ்ட் போட்டியில் 4-ம் நாளான திங்கள்கிழமை கருண் நாயர் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்தார். இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் என்று டெஸ்ட் போட்டியில் தங்கள் அதிகபட்ச ரன்களை எட்டியது. | விரிவான செய்தி > முதல் சதமே முச்சதம்; வரலாறு படைத்த கருண் நாயர் : இந்தியா 759 ரன்கள் குவித்து புதிய சாதனை கருண் களத்தில் நின்று முச்சதம் எட்டிய தருணங்கள் வீ.கணேசன் கேமரா வழியில்... …

  14. ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன்அலி இந்த ஆண்டு டெஸ்ட்டில் 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன் அலி. இந்த ஆண்டு டெஸ்ட்டில் மொய்ன்அலி 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் மொய்ன்அலி சாதனை படைத்து உள்ளார். ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்க…

  15. 2016ம் ஆண்டின் சிறந்த டி20 போட்டி எது? #Top10T20 #2016Special டெஸ்ட் போட்டியை உலகச் சினிமா என்றால், டி 20 தான் பக்கா கமர்ஷியல் சினிமா. நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸ், ஓவருக்கு ஓவர் மாறும் வெற்றி வாய்ப்பு, பரபர சேஸ், ஆட்டத்தையே மாற்றி விடும் ஒரு ரன் ..ஒரு விக்கெட் ..ஒரு நோபால் என செம த்ரில், செம டிவிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கியாரண்டி எப்போதுமே உண்டு. அதுவும் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை என டி20 போட்டிகளை நம்மவர்கள் கொண்டாடினார்கள். அப்படி இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்து சிறந்த டி20 போட்டிகளை பற்றிப்பார்ப்போமா? 10. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் : - அமெரிக்காவில் நடந்த டி20 போட்டி இது. இந்திய வீரர்கள் முதன் முதலாக அமெரிக்க…

  16. அன்று சுவர்... இன்று சிற்பி...! இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் டிராவிட் Extremely pleased to see the India-A plan giving rich rewards under #RahulDravid. Jayant & Karun shinning examples. @BCCI #TeamIndia — Anurag Thakur (@ianuragthakur) December 19, 2016 இது, கருண் நாயர் முச்சதம் அடித்த சில நிமிடங்களில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு. எல்லோரும் கருண் நாயரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அனுராக் தாக்கூர் சம்மந்தமில்லாமல் டிராவிட்டை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கிறது! இரண்டு ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர்,செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பி.சி.சி.ஐ.யி…

  17. இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று 19 வய­திற்­குட்­பட்­டோருக் ­கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன. இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14598

  18. செல்சியாவின் ஆஸ்காரை 60 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கும் சீன கிளப் பிரேசில் நாட்டின் முன்னணி நடுக்கள வீரரான ஆஸ்காரை செல்சியாவிடம் இருந்து 60 மில்லியன் பவுண்டு கொடுத்து சீனாவின் முன்னணி கால்பந்து கிளப் வாங்குகிறது. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து கிளப் அணி செல்சியா. இந்த அணிக்காக 25 வயதான பிரேசில் அணியின் முன்னணி நடுக்கள ஆட்டக்காரர் ஆஸ்கார் விளையாடிவருகிறார். இவரை சீனாவின் முன்னணி கிளப் அணியான ஷாங்காய் எஸ்.ஐ.பி.ஜி. அணி வாங்க விருப்பம் தெரிவித்தது. இதற்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஷாங்காய் 60 மில்லியன் பவுண்டு கொடுத்து ஆ…

  19. ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே' 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார். 2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் அறிவிப்பு அதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, சச்சின் டெண்ட…

  20. இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என பலரும் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது இனி தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் பெஸ்ட் கிரிக்கெட் தான், அதை கொண்டாடவும், வரவேற்கவும், ஆராதிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள் என்பதை இந்தாண்டு நிரூபித்தது. உலகம் முழுவதும் சுமார் 45 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல தொடர்களில் பல்வேறு ஆச்சர்ய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன. அப்படி, இந்த ஆண்டு நடந்த தி…

  21. குக் பதவி விலகுகிறாரா? இங்­கி­லாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைமைப் பொறுப்­பி­லி­ருந்து அலஸ்டர் குக் வில­கு­வ­தற்­கான நேரம் வந்­து­விட்­ட­தாக, இங்­கி­லாந்தின் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் வோகன் தெரி­வித்­துள்ளார். இந்­தி­யா­வுக்கு எதி­ராக நடை­பெற்ற 5 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்­டி­க­ளிலும் தோல்­வி­ய­டைந்­ததால் இங்­கி­லாந்து அணி மீது விமர்­ச­னங்கள் எழு­கின்­றன. இது­கு­றித்து அலஸ்­டயர் குக் கூறி­ய­தா­வது, தோல்­விக்கு எந்­த­வித சாக்­கு­போக்கு கார­ணமும் சொல்ல முடி­யாது. இந்­திய அணி எங்­களை விட சிறப்­பாக விளை­யா­டி­யது. வெற்­றிக்கு இந்­தியா தகு­தி­யான அணி தான். இந்த டெஸ்டில் கடைசி நாள் கடி­ன­மாக இருக…

  22. பிக் பாஷ் லீக்: சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங…

  23. ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.சி.சி.டெஸ்ட் அணியின் தலைவரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி. தெரிவுசெய்துள்ள 2…

  24. இந்திய டெஸ்ட் அணி விபரம் நாளை வெளியாகும் இந்திய டெஸ்ட் அணி விபரம் நாளை வெளியாகும். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விபரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இஷாந் சர்மா அணிக்கு திரும்புவார் என்று நம்பப்படுகின்றது, அத்தோடு லோகேஸ் ராகுல், காம்பிர் ஆகிய வீரர்களும் அணியில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%…

  25. பிபா தரவரிசை: முதல் இடத்துடன் 2016-ஐ நிறைவு செய்தது அர்ஜென்டினா பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா 2016-ம் ஆண்டை முதல் இடத்துடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரேசில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்த அர்ஜென்டினா, இந்த வருடம் முடிவில் முதல் இடத்தோடு நிறைவு செய்துள்ளது. அர்ஜென்டினா இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியத்திடம் இருந்து முதல் இடத்தை பற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.