விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
கிவிடோவாவுக்கு கத்திக்குத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் விம்பிள் டன் முன்னாள் சம்பியனான செக். குடியரசு டென் னிஸ் வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார். உலக தரவரிசையில் 11-ஆவது இடம் வகிக் கும் கிவிடோவா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார். செக்.குடியரசின் கிழக்கு பகுதியில் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர் கிவிடோவாவின் வீட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்துள்ளார். அப்…
-
- 0 replies
- 358 views
-
-
மீண்டும் வருகிறார் முஸ்தபிஸுர் பங்களாதேஷ் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸுர் ரஹ்மான் 9 மாதங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளார். இவர் தன்னுடைய இடது கை வேகப்பந்து வீச்சால் எதிர் அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் விரைவில் உலகளவில் புகழ்பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கடைசியாக விளையாடினார். அதன்பின் ஐ.பி.எல். தொடரில் விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்தவுடன் இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அணிக்காக விளையாடினார். அப்போது அவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை …
-
- 0 replies
- 380 views
-
-
42 வருடங்களின் பின்னர் தரநிலைவரிசையில் முதலிரு இடங்களில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் 2016-12-22 10:47:21 (நெவில் அன்தனி) இந்தியாவின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் களான ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு பந்துவீச்ச தரநிலை வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றனர். 1974க்குப் பின்னர் பந்துவீச்சுக்கான தரநிலை வரிசையில் இந்திய சுழல்பந்துவீச்சாளர்கள் இருவர் முதல் இடங்களை அடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்த ஜடேஜா 66 புள்…
-
- 0 replies
- 321 views
-
-
அபார வெற்றிகளும் இன்னிங்ஸ் தோல்விகளும் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 477 ஓட்டங்களை பெற்ற பிறகு இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது இங்கிலாந்து அணி. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த அணிகளின் வரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி, 2001-இல் ஓவலில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 432 ஓட்டங்களை பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததே சாதனையாக இருந்தது. டெஸ்ட் வரலாற்றில் ஓர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த பிறகு இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது இது 6-ஆவது…
-
- 0 replies
- 284 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருது விழா 2016; தனஞ்செய, ஷஷிகலா அதி சிறந்த சகலதுறை வீர, வீராங்கனை 2016-12-21 10:56:26 இலங்கையில் நடத்தப்படும் ப்றீமியர் லீக் பிரதான கிரிக்கெட் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருதை தமிழ் யூனியன் கழக வீரர் தனஞ்செய டி சில்வா வென்றெடுத்தார். ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 65 வருடங்களின் பின்னர் சம்பியனான தமிழ் யூனியன் கழகம் சார்பாக கித்ருவன் வித்தானகே, டயலொக் வெற்றி விருதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிடமிருந்து பெறுகின்றார். …
-
- 0 replies
- 262 views
-
-
இது தொடக்கம் மட்டுமே; இன்னும் அதிகம் சாதிக்க விரும்புகிறோம்: விராட் கோலி சென்னையில் வெற்றி பெற்று டிராபியை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரிடமிருந்து பெறும் கேப்டன் விராட் கோலி. | படம்.| பிடிஐ. 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடையாமல் ஆடி வருகிறது. இது ஒரு ‘சிறுதுளியே’ என்கிறார் விராட் கோலி, இன்னமும் நிறைய சாதனைகள் செய்ய விரும்புகிறோம் என்கிறார் கேப்டனும், தொடர் நாயகனுமான கோலி. மேலும் 2016-ம் ஆண்டில் 9-வது டெஸ்ட் போட்டியை சென்னை வெற்றி மூலம் வென்றுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி கூறியதாவது: இரண்டு பின்னடைவுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவில…
-
- 1 reply
- 401 views
-
-
அஷ்வின் VS கோஹ்லி... தொடர்நாயகன் சர்ச்சை! பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த தொடரில் அசத்தல் ஆட்டம் ஆடியவர் அஷ்வின். ஆனால் அவருக்கு தொடர்நாயகன் விருது இல்லையா? தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் அஷ்வினுக்கு சொந்த மண்ணில் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்த்து ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் அது மிஸ்ஸிங் என உச் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அஷ்வின் ரசிகர்கள். வாட்ஸ் ஆப்பில் இந்த விவாதங்கள் தீயாய் பரவுகின்றன . என்ன நடந்தது? இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கியது. முதல் போட்டி ராஜ்காட்டில் நடந்தது, அதன் பின் விசாகப்பட்டினம், மொகாலி, மும்பை ஆகிய இடங்களில் அடுத்தடுத்த போட்ட…
-
- 0 replies
- 407 views
-
-
இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை… அசத்திய கோஹ்லி! இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி டிராவாகும் என்று எல்லோரும் நினைத்திருக்க, 207 ரன்களுக்கு இங்கிலாந்தை, இந்திய அணி சுருட்டியது ரசிகர்களுக்கு சின்ன சர்ப்பிரைஸ் தான். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்த ஆண்டை நம்பர் 1 அணியாக தர வரிசை பட்டியலில் உச்சத்தில் முடித்துள்ளது. இதைத் தாண்டி கோஹ்லிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டு. இது வரை உடைக்கப்படாத சில சாதனைகளை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது. 18… டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையவே இல்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் தொடங்கி இங்கி…
-
- 0 replies
- 376 views
-
-
2017 ஐ.பி.எல் சீசனில் களமிறங்கும் வீரர்கள் 2017 ஐ.பி.எல் சீசனில் ஏலத்துக்கு விடப்படும் வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பீட்டர்சன், இஷாந்த் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற சீசனில் விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 140 வீரர்கள் அந்தந்த அணிகளிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தோனி, கோலி, அஸ்வின், ரெய்னா, தவான், ரோஹித் சர்மா,ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், புவனேஷ்வர்குமார், ஜடேஜா, சமி, டிவில்லியர்ஸ், கெய்ல், வார்னர், பொல்லார்டு, மேக்ஸ்வெல், டுமினி, ரஸல், டூப்ளிஸ்ஸி, சுனில்நரைன் போன்றோர் கடந்த அணிகளில் விளையாடிய அதே அணிகளில் தக்கவை…
-
- 1 reply
- 513 views
-
-
அனித்தாவுக்கு வடக்கின் விளையாட்டுத்துறை நட்சத்திர விருது (நெவில் அன்தனி) வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இவ்வருடம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தேசத்துக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமையும் புகழும் ஈட்டிக்கொடுத்த வடக்கு மாகாண விளையாட்டு வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வர்ண விருது விழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. அனித்தா இவ்வருடத்திற்கான வடக்கின் விளையாட்டுத்துறை நட்சத்திர விருது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு வழங்கப்படவுள்ளது. இவ் வருடம் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்…
-
- 1 reply
- 481 views
-
-
199 ரன்களில் ஆட்டம் இழந்த வீரர்கள் விவரம் 139 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த சில முக்கியமான வீரர்களை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். * கர்நாடகாவைச் சேர்ந்த 24 வயதான லோகேஷ் ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் 199 ரன்களில் கேட்ச் ஆனார். இது, டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த 2-வது இந்தியர் லோகேஷ் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை நழுவ விட்டிருக்கிறார். அது தான் அசாருதீனின் அதிகபட்ச ஸ்கோராக நீடிக்கிறது. * லோகேஷ் ராகுல் 200…
-
- 0 replies
- 393 views
-
-
ரொனால்டோ ஹாட்ரிக்: கிளப் உலகக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் ஜப்பான் கிளப் அணியை வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை ரியல் மாட்ரிட் கைப்பற்றியது. கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜப்பானில் உள்ள யோகோஹாமாவில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட்- ஜப்பானின் கஷிமா அன்ட்லெர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக கஷிமா அன்ட்லெர்ஸ் அணியின் ககு ஷபாசகி அடுத…
-
- 1 reply
- 434 views
-
-
ஐ.எஸ்.எல் கால்பந்து: பெனால்டி சூட்டில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெனால்டி சூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் அரையிறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 37-வது நிமிடத்தில் கேரள அணியின் ரபி ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக கொல்கத்தா அணியின் சிரினோ ஒரு கோல் அ…
-
- 2 replies
- 418 views
-
-
செய்யும் தொழிலே தெய்வம்: புயலை வென்ற சேப்பாக்க பிட்ச் பராமரிப்பாளர்கள்! சென்னையை வர்தா புயல் புரட்டிப் போட்டி இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது டெஸ்ட் போட்டி தொடங்க இருந்தது. ஆனால், பெய்த பேய் மழையால் பிட்ச் சேதமடைந்துவிடும் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் கணித்திருந்தனர். வர்தா புயல் ஓய்ந்த பிறகு பேட்டியளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் காசி விஸ்வநாதன், 'மைதானத்தின் பிட்ச் சேதமடையவில்லை. சைட்ஸ்கிரீன் போர்டு உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. மைதானத்திற்கு வரும் சாலைகளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. எங்களால் எந்த அளவுக்கு போட்டிக்காக தயார் ஆக முடியுமோ... அதனை செய்கிறோம்' என சந்தேகத்துடனேயே க…
-
- 0 replies
- 412 views
-
-
கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆறு சென்னை டெஸ்ட் போட்டிகள் என்ன தெரியுமா? எப்போதும் பிரியாதது எதுவென கேட்டால் சென்னையும் கிரிக்கெட்டும் என உடனடியாக சொல்லிவிட முடியும் . கிரிக்கெட்டுக்கு எப்போதும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது சென்னை தான். அது சென்னை சூப்பர் கிங்ஸோ, சென்னை 600028 திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்திய அணிக்காகட்டும், சச்சின், ஷேவாக், தோனி போன்ற நட்சத்திர வீரர்களாகட்டும் எல்லோருக்கும் திருப்பம் தருவது சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் தான். ஆஸ்திரேலியாவிற்கு சிட்னியை போல, இந்தியாவிற்கு சென்னை மைதானத்தை குறிப்பிட முடியும். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும் வீரர்கள் அனைவருக்குமே சென்னையில், கிரிக்கெட்டை நேசிக்க…
-
- 0 replies
- 468 views
-
-
முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம் 19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கி…
-
- 1 reply
- 293 views
-
-
கிரிக்கெட் வரலாற்றில் அதிசயமான முறையில் ஓட்டங்களை குவித்த மகளிர் அணி தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 19 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் வரலாறு காணாத சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. டி20 போட்டியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் உள்ளூர் கிரிக்கெட் அணியான புமலங்கா அணியைச் சேர்ந்த சானியா லீ சுவார்ட் என்ற பெண் வீராங்கனை தனியொரு ஆளாக நின்று 84 பந்துகளில் 160 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவருடன் களமிறங்கிய அனைவரும் ஒரு ஓட்டத்தைக்கூட பெறாமல் டக்கவுட் ஆகிய நிலையில் தனியாளாக நின்று 160 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த போட்டியில் குறித்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை…
-
- 2 replies
- 367 views
-
-
கிளப் போட்டிகளில் ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை கிளப் அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் இவர் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கிளப் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிளப் அமெரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது அ…
-
- 0 replies
- 314 views
-
-
உலக கோப்பை கிளப் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ஜப்பானில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி கிலப் அமெரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. யோகஹமா : கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)-கிளப் அமெரிக்கா அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிலப் அமெரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட் …
-
- 0 replies
- 463 views
-
-
வார்தா புயல் பாதிப்பால், ரோட்டில் பயிற்சி எடுத்த ஜோ ரூட் வார்தா புயலால் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதைப்பற்றி கவலைப்படாமல் சாலையில் ஜோ ரூட் பயிற்சி எடுத்தார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயராகும் வகையில் வலைப் பயிற்சிக்காக இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்தது. ஆனால், வார்தா புயலால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை கடுமையான பாதித்தது. இதனால் வலைப்பயிற்சி நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் …
-
- 0 replies
- 333 views
-
-
கவாஸ்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா? வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன் குவித்ததே சாதனையாக இருக்கிறது. அதை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 4 டெஸ்டில் விளையாடி 640 ரன் (7 இன்னிங்ஸ்) குவித்துள்ளார். 2 ஆட்டத்தில் ‘அவுட்’ ஆகாததால் அவரது சராசரி 128 ஆக உள்ளது. அதிகபட்சமாக மும்பை டெஸ்டில் 235 ரன் குவித்தார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன் குவித்தத…
-
- 0 replies
- 345 views
-
-
மெஸ்சியை மிஞ்சும் ரொனால்டோ! #Ballond'or ரஜினிக்கு வயசாயிடுச்சு. முடி கொட்டிப் போச்சு. ஆனாலும் ஸ்க்ரீன்ல அவர் என்ன பண்ணாலும் ரசிக்கிறோம் இல்லையா? அதே மாதிரிதான் ஃபுட்பால்ல கிறிஸ்டியானோ ரொனால்டோ. வயசு ஏற ஏற ரொனால்டோ ஆட்டமும் மெருகேறுது. கிரவுண்ட்ல அவர் என்ன பண்ணாலும் அது வசீகரமா இருக்கு. இது ரொனால்டோ குறித்து, சந்தோஷ் டிராபியில் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக இருந்த ராபின் சார்லஸ் ராஜா சொன்னது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் (ballon d'or) விருதை, நான்காவது முறையாக வென்றிருக்கிறார் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஃபிரான்ஸில் நடந்த 2016 யூரோ கோ…
-
- 0 replies
- 349 views
-
-
இங்கிலாந்து தொடருக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் கோலி இங்கிலாந்து தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் விராட் கோலி. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்குப்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்திய மண்ணில் விராட் கோலி மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம், அவர் தென்ஆப்பிரிக்கா, இ…
-
- 0 replies
- 343 views
-
-
மும்பை தாக்குதல், சச்சின் சதம், இந்தியா வெற்றி... சென்னை டெஸ்ட் நினைவலைகள்! சென்னையில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் ஏதோ ஒரு வகையில் ஹிட் அடிக்கும். ஏற்கனவே இந்தியா 3-0 என டெஸ்ட் தொடரை வென்று விட்டது. வர்தா புயல் ஓய்ந்தாலும், மழை அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட், திட்டமிட்டபடி 16ம் தேதி தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் டெஸ்ட் ரசிகர்கள். இரு அணிகளும் கடைசியாக 2008 ல் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சச்சின் சதம், சேவாக் சரவெடி, நான்காவது இன்னிங்சில் பரபர சேஸ், யுவராஜ் சிங் டெஸ்ட் வீரராக அறியப்பட்டது என பல நினைவுகளைத் தந்தது அந்த டெஸ்ட். எல்லாவற்றைய…
-
- 0 replies
- 359 views
-
-
ஹமில்டனுடன் நான் சிரிக்கலாம் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் பந்தய சம்பியன்ஷிப்பில், பயங்கரமான போட்டியை மெர்சிடிஸ் அணியின் சக வீரர்களான, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனும், ஜேர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க்கும் எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில், இறுதியில் சம்பியனாகிக் கொண்ட றொஸ்பேர்க், தானும் தனது வைரி ஹமில்டனும் ஒன்றாக சிரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். சம்பியனாகி ஐந்து நாட்களில் ஓய்வுபெற்ற 31 வயதான றொஸ்பேர்க், பதின்ம வயதுகளிலிருந்த அடிப்படை மரியாதையால், பாரிய மோதல் ஏற்பட்டது தவிர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார். தனது ஓய்வுக்குப் பின்னர், சில நல்ல கலந்துரையாடல்களை தானும் ஹமில்டனும் கொண்டிருந்ததாகத் தெரிவித்த றொஸ்பேர்க், அவரிடமிருந்து சில மாதிரிய…
-
- 1 reply
- 454 views
-