Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் போட்டியில் கார்ல்சென்-செர்ஜி கர்ஜாகின் மோதிய காட்சி. நியூயார்க் : மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இது 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் 7 சுற்று வரை எல்லா ஆட்டமும் டிராவில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின், …

  2. கொமென்வெல்த் போட்டியில் யாழ் மாணவிக்கு வெண்கலப் பதக்கம் 2016இற்கான இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில், யாழ் சுண்டிக்குளி மகளிர் பாடசாலை மாணவியான வீ.அர்ஸிகா வெண்கலப் பத க்கத்தை வென்றெடுத்துள்ளார். 58 கிலோ எடை தூக்கும் போட்டியிலேயே இச் சாதனையை இவர் புரிந்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பதக்கத்தை வென்ற அர்ஸிகா தரம் - 10 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயின் அனுசரணையுடன் இந்த மாணவிக்கானபாராட்டு விழாவை யாழ் மாவட்ட பாரந்தூக்கும் அமைப்பு , யாழ் வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. http://onlineuthayan.com/news/20633

  3. சம்பியன்ஸ் லீக்: வென்று அடுத்த சுற்றில் பார்சிலோனா ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலைப் போட்டிகளில், நேற்றுப் புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியொன்றில் வெற்றி பெற்ற பார்சிலோனா, இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. பார்சிலோனா, 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணியான செல்டிக்கைத் தோற்கடித்தே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லியனல் மெஸ்ஸி பெற்றார். இந்நிலையில், ஜேர்மனியின் புண்டெலிஸ்கா தொடர் சம்பியன்களான பெயார்ண் மியூனிச், ரஷ்ய அணியான எஃப்.சி றொஸ்டோவ்விடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. எவ்வாறெ…

  4. தென்ஆப்பிரிக்கா அணியின் வரலாற்று நினைவில் தந்தை - மகனின் ஒற்றுமை தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஸ்டீபன் குக் அவரது தந்தை ஜிம்மி குக் ஆகியோர் தொடக்க பந்தை சந்தித்து வரலாற்று நினைவில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் முதல் பகல் - இரவு சர்வதேச போட்டி இதுவாகும். டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ஸ்டீபன் குக், எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி…

  5. '11 முதல் 15 வயதுவரை கால்பந்து பயிற்றுநரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்' - இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம் போல் ஸ்டுவர்ட் தெரிவிப்பு இங்­கி­லாந்தின் பிர­பல முன்னாள் கால்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான போல் ஸ்டுவர்ட், தனது சிறு பரு­வத்தில் கால்­பந்­தாட்டப் பயிற்­றுநர் ஒரு­வரால் 4 வருட காலம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார். போல் ஸ்டுவர்ட் 1981 முதல் 2000 ஆம் ஆண்­டு ­வரை இங்­கி­லாந்தின் புகழ்­பெற்ற கால்­பந்­தாட்டக் கழ­கங்­களின் சார்பில் விளை­யா­டி­யவர் போல் ஸ்டுவர்ட். மன்­செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், டொட்­டன்ஹாம் ஹொட்ஸ்பு…

  6. இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு ஓய்வு இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு தொழில்முறை கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும், லிவர்பூல் கால்பந்து கிளப் அணிக்காகவும் விளையாடியவர் ஸ்டீவன் ஜெரார்டு. 36 வயதாகும் இவர் தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 17 வருடங்களாக லிவர்பூல் அணிக்காக விளையாடிய அவர், அதில் 12 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2005-ம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் உள்பட 7 முக்கிய சாம்பியன் கோப்பைக…

  7. சிங்கப்பூரில் சாதித்து பதக்கம் வென்ற இலங்கை கராத்தே வீரர்கள் கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேரந்த சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2016 சிங்கப்பூர் பெடோக் (Bedok ) உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்களான எஸ்.அமித்தேஷா குமித்தேவில் வெண்கலம், காட்டாவில் வெள்ளிப் பதக்கங்களையும் எஸ்.ஆதேஷா குமித்தேயில் வெள்ளிப் பதக்கத்தையும் காட…

  8. அமெ. பயிற்சியாளர் நீக்கப்பட்டார் அமெ­ரிக்க கால்­பந்து அணி யின் பயிற்­சி­யா­ள­ரான ஜெர்­ம­னி யை சேர்ந்த முன் னாள் கால்பந்து வீர­ரான கிளின்ஸ்மென் பயிற்­சி­யாளர் பத­வியில் இருந்து அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டுள்ளார். 2018ஆ-ம் ஆண்­டுக்­கான உலகக் கிண்ணக் கால்­பந்து தகுதி சுற்றில் அமெ­ரிக்க அணி இரு ஆட்டங்களில் தோற்­றது. 15 ஆண்­டு­க­ளு­க்குப் பிறகு சொந்த மண்ணில் அமெ­ரிக்கா தகு­திச்­சுற்றில் தோல்­வியைத் தழு­வி­யதால் அணி நிர்­வாகம் கடும் அதி­ருப்தி அடைந்­தது. இந்த தோல்வி குறித்து விசா­ரணை நடத்­திய அமெ­ரிக்க கால்­பந்து சம்­மே­ளனம், களின்ஸ்­மெனை பயிற்­சி­யாளர் பத­வியில் இருந்து நீக்கியுள்ளது. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/m…

  9. நெய்மர் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்: ஸ்பெயின் கோர்ட் பார்சிலோனா அணியின் முன்னணி வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் கோர்ட் அறிவித்துள்ளது. 24 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக வ…

  10. நடப்பு சாம்பியன் சென்னை மீண்டும் ஏமாற்றம்! #ISLupdate மும்பைக்கு எதிரான ஐ.எஸ்.எல். போட்டியில், நடப்பு சாம்பியனுக்கு உரிய எந்த அறிகுறியும் இல்லாது விளையாடிய சென்னை அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. சொந்த மண்ணில் மும்பை 2-0 என வெற்றி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது. மும்பையில் இன்று நடந்த ஐ.எஸ்.எல். லீக் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் புள்ளிகள் பட்டியலில் மும்பை 19 புள்ளிகளுடன் ஜம்மென முதலிடத்திலும், சென்னை 14 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருப்பதால், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இறங்கியது செ…

  11. சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல் தர போட்டிகளில் ஆடிய போது, மைதானத்துக்குள் இருந்தவர்களும் சரி, எதிரணி வீரர்களும் சரி, ஏளனமாக பார்த்தார்கள், சிரித்தார்கள். மிகவும் குட்டையாக இருந்த சச்சின், அதன் பின்னர் ஆறரை அடி உயர பவுலர்களை, அவர்களின் யார்க்கர்களை கலங்கடித்தது தனி வரலாறு. 2002 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்…

  12. கெளதம் கம்பீர் கதை முடிந்ததா? #EndOfGambhir? தோல்வியை நினைத்து வெற்றியாளர்கள் பயப்பட மாட்டார்கள். தோல்வி என்பது வெற்றிக்கான முயற்சிகளின் ஒரு அங்கேம. தோல்வியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெற்றியையும் தவிர்க்கிறார்கள். - ஒரு வாரத்துக்கு முன்பு, ட்விட்டரில் இதை ரீவிட் செய்திருந்தார் கவுதம் கம்பீர். நேத்து என்னடான்னா... அவரை இந்திய அணியில் இருந்தே நீக்கி விட்டது தேர்வுக்குழு. இது கங்குலிக்கு முன்பே புரிந்திருக்கிறது. அதனால்தான் விசாகப்பட்டினம் டெஸ்டில் கம்பீரை உட்கார வைத்து விட்டு, ராகுலை தேர்வு செய்தபோது கங்குலி இப்படிச் சொன்னார்... ''கெளதம் கம்பீர் விஷயத்தில் இந்திய அணி முடிவெடுத்தாக வேண்டும். உண்மையிலேயே அவர் விளையாட வேண்டும் என நினை…

  13. இலங்கை அணியின் வெற்றி சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரை 2-0 என்ற ரீதியில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. ஆனால் இந்த வெற்றி, இலங்கை அணிக்கு புதிய பலத்தை தந்துள்ளதா/ புதிய வீரர்கள் சரியாக இடங்களை பிடித்துள்ளார்களா? இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்ததும் இலங்கை டெஸ்ட் அணி முழுமை பெறுமா? இப்படியான முக்கிய விடயங்களே இங்கே கவனிக்க வேண்டியவை. இந்தத் தொடர் இலங்கை அணிக்கான இலகுவான தொடர் எனக் கூற முடியாது. வெற்றி பெற்றாலும் கூட போராடிப் பெற்ற வெற்றிகள் என்றே கூற வேண்டும். சிம்பாப்வே அணியும் முழுமையான அணி இல்லை. சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே அவர்களும் விளையாடியுள்ளனர். சிலர் இலங்க…

  14. பந்தின் தன்மையை மாற்றினாரா? - சர்ச்சையில் விராட் கோலி கோலி. | கோப்புப் படம்.| ஏ.எஃப்.பி. பந்தின் தன்மையை செயற்கையான முறையில் மாற்றியதாக பிரிட்டன் சிறுபக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஹோபர்ட் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக கூறிய ஐசிசி அவருக்கு 100 சதவீத அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் இதே போன்ற விவகாரத்தில் விராட் கோலியும் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது கோலி தனது சுவிங்கத்தை பயன்படுத்தி பந்தை பளபளக்க செய்வது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐசிசி-யின…

  15. கப்பற்படையினருடன் ஒரு காஃபி... போர்க்கப்பலுக்கு சென்ற அஷ்வின்... விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த வெற்றியை அஷ்வின், கப்பற்படையினருடன் கொண்டாடினார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு இன்னிங்சிலும் சேர்த்து அஷ்வின் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டி முடிந்த திங்கள்கிழமை இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்குச் செல்ல, அஷ்வின் மட்டும் வேறொரு இடத்துக்குச் சென்றிருந்தார். அந்த இடம் விசாகப்பட்டினத்தில் உள்ள, ஐ.என்.எஸ். ஜலஷ்வா என்னும் போர்க்கப்பல். போர்க்கப்பலுக்கு செ…

  16. 'கிங் பேர்' ஆண்டர்சன்..! சேவாக் கிண்டல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து மற்ற விளையாட்டு வீரர்களை கிண்டல் செய்வது வழக்கம். இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிக்கிக் கொண்டார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 'கிங் பேர்' எடுத்து அவுட்டானர். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும், தான் விளையாடும் முதல் பந்துகளில் அவுட் ஆனால் அது கிங் பேர் எனப்படும். 2011ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது ஒரு டெஸ்ட் போட்டியில் கிங் பேர…

  17. புரட்டி எடுத்த கோல்டுபர்க்... இரண்டே நிமிடங்களில் முடிந்த மல்யுத்தம் - வீடியோ இணைப்பு #Survivorseries மல்யுத்த வீரர் கோல்டுபர்க் கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு நேற்று சண்டையிட்டார். கடந்த சில மாதங்களாக எதிரில் உள்ள வீரர்களைப் போட்டு புரட்டி எடுத்து, டபிள்யு.டபிள்யு.இ அரங்கையே கதிகலங்க வைத்த பிராக் லெஸ்னர்தான் கோல்டுபர்க்கை எதிர்த்து நின்றது. உண்மையில் அவர் எதிர்த்து நிற்க மட்டுமே செய்தார், அடித்தது எல்லாம் கோல்டுபர்க்தான். இந்தப் போட்டி அறிவிக்கபட்டபோதே இரு பெரும் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டி, மிகவும் கடுமையானதாக, சுவாரஸ்யமானதாக இருக்கும் என உலகம் முழுவதும் உள்ள ரெஸ்லிங் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கோல்டுபர்க்கோ …

  18. 2016-ல் அதிக விக்கெட்டுகள்: ஹெராத்தைக் கடந்து அஸ்வின் சாதனை அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ். விசாகப்பட்டண டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து தோல்வியை முடுக்கி விட்ட அஸ்வின் 2016-ம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை அவர் இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 22.23. மேலும் 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹெராத் 8 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 13 டெஸ்ட்களில் 46 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் இந்த ஆண்டில் கைப்பற்றியுள்ளனர். …

  19. முதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே! லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி டென்னிஸ் இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரிட்டனின் ஆண்டி முர்ரே. இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இறுதிப் போட்டியில் 6-3, 6-4, என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல் முறையாக ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார் முர்ரே . இது பற்றி முர்ரே கூறுகையில், 'இன்று வெற்றி பெற்று, உலக அளவில் முதலிடத்தில் நீடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான்' என்று கூறியுள்ளார். போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி ஜோகோவிச் கூறுகையில், 'ஆட்டத்த…

  20. கொஸ்டாவின் கோலினால் வென்று முதலிடத்துக்குச் சென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற போட்டியில், மிடில்ஸ்பேர்க் அணியைத் தோற்கடித்த செல்சி, தாம் பிறீமியர் லீக் சம்பியன்களான 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் முதற்தடவையாக, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்தது. சாதாரணமாக போட்டியை ஆரம்பித்த செல்சி, நேரம் செல்லச் செல்ல தமது ஆட்டத்தை வேகப்படுத்தியதுடன், போட்டியின் 41ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா பெற்ற கோலின் மூலம் இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து கோல் பெறும் வாய்ப்…

  21. செல்லாத நோட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை! இந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறினார். இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் தினசரி செலவுகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இது பெரிய சிரமத்தை உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், இந்தியாவில் சுற்றுப் பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இதே கதி தான். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு தர வேண்டிய தினசரி செலவு தொகையான ஐம்பது பவு…

  22. இந்­திய மகளிர் அணி­யு­ட­னான இரு­பது20 தொடரில் மேற்­கிந்­திய மகளிர் அணி வெற்றி 2016-11-21 11:28:56 இந்­திய மகளிர் அணி­யு­ட­னான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் மேற்­கிந்­திய மகளிர் அணி 31 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யது. இந்­தி­யாவின் ஆந்­திர மாநி­லத்­தி­லுள்ள விஜ­ய­வாடா நகரில் நேற்று இப்­போட்டி நடை­பெற்­றது. நாணயச் சுழற்­சியில் இந்­திய மகளிர் அணி வெற்றி பெற்­றது. அதை­ய­டுத்து மேற்­கிந்­திய மகளிர் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு பணிக்­கப்­பட்­டது. அவ்­வ­ணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீராங்­க­னை­க­ளான ஹெய்லி மெத்திவ்ஸ் 27 ஓட்­டங்­க­ளையும் அணித்­…

  23. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிலிருந்து 5 பேர் அதிரடி நீக்கம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணியிலிருந்து 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாட நான்கு புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய …

  24. இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …? இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். வீதிகளிலும், வீ…

  25. நன்றி, நன்றி, நன்றி... கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பேச்சு! (வீடியோ) கிறிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து உலகின் காந்த சக்தி. கோல் அடித்தாலும் சரி, மிஸ் செய்தாலும் சரி... அவர் என்ன செய்தாலும் அது வைரல். யூரோ கோப்பை சாம்பியன் ஆனதும், டிரஸ்ஸிங் ரூமில் அவர் எமோஷனலாக பேசிய வீடியோ, கால்பந்து உலகின் தற்போதைய ஹாட் டாபிக். பாரிஸில் நடந்த 2016 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் ஃபைனலில் ஃபிரான்ஸை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல். வெற்றிக்கான கோல் அடித்த போர்ச்சுகல் வீரரை (எடெர்) நாம் மறந்திருப்போம். ஆனால், அன்று ரொனால்டோ செய்த அழிச்சாட்டியங்கள் அவ்வளவு எளிதில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.