விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது. இந்தாண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் நாள் போட்டிகள் மழையால் கழுவப்பட்டது. இன்று ஆரம்பமான இந்தப் போட்டிகளில் இலங்கையின் சங்ககார, மஹேல உள்ளிட்ட 11 பேர்பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%af%8…
-
- 0 replies
- 298 views
-
-
சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ரோஹித் சர்மா: ஆஸி.க்கு எதிரான தொடருக்கும் சந்தேகம் ரோஹித் சர்மா. | படம்: அகிலேஷ் குமார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள லண்டன் செல்லும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான வைசாக் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில் லண்டனுக்குச் சிகிச்சைக்குச் செல்வதால் பிப்ரவரி 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் திரும்புவது கடினம் என்று தெரிகிறது. இது குறித்து பிசிசிஐ செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரோஹித் சர்மா அடுத்த வாரம் லண்டன் செல்கிறார், அங்…
-
- 0 replies
- 391 views
-
-
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 வதும் இறுதியான போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியின் இன்றைய 4 ம் நாள் நிறைவில் மிக திறமையாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியின் விளிம்பில் காத்திருக்கின்றது. தங்களது 2 வது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான், இன்றைய நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களையும், மே…
-
- 3 replies
- 389 views
-
-
பொப்பிக்கு தடை ; கோபத்தில் பிரிட்டன் முதலாம் உலகப்போரின் நிறுத்த நாளான ஆர்மிஸ்டஸ் தினம் அடுத்த வாரம் நெருங்கும் நிலையில் இங்கிலாந்து, மற்றும் ஸ்காட்லாந்து கால்பந்து அணிகள் பொப்பி சின்னத்தை அணிவதற்கு தடை விதித்ததை அடுத்து, உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவை பிரிட்டிஷ் பிரதமர் மிகுந்த கோபத்துடன் தாக்கிப் பேசியுள்ளார். இந்த முடிவு முற்றிலும் அநியாயமானது என்று பிரதமர் தெரேஸா மே பேசியுள்ளார். கால்பந்து அணிகளின் ஆடைகளில் அரசியல் சின்னங்களை அனுமதிக்க முடியாது என்று ஃபிஃபா கூறுகின்றது. ஆனால், இந்த தடையை தாம் எதிர்ப்போம் என்று இங்கிலாந்து கால்பந்து அமைப்பு கூறுகின்றது. http://www.bbc.com/tamil/global-37864187
-
- 0 replies
- 458 views
-
-
ஆட்டமிழக்காத உறுதி: புதிய சாதனை ஒன்றை உருவாக்கிய கிரெய்க் பிராத்வெய்ட் ஷார்ஜா டெஸ்ட் நாயகன் கிரெய்க் பிராத்வெய்ட் பரிசு பெறும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றியில் 142 மற்றும் 60 நாட் அவுட் என்று 2 நாட் அவுட்கள் மூலம் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட் புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது ஒரு தொடக்க வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் இருக்கும் சாதனை ஒன்றை முதன் முதலாக உருவாக்கியுள்ளார் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கிரெய்க் பிராத்வெய்ட். ஷார்ஜா வெற்றியில் முதல் இன்னிங்சில் 142 ரன்கள் என்று தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆன போதும் ஒரு முனையில் நாட் …
-
- 0 replies
- 349 views
-
-
சகோதரனை நினைத்து கண்ணீர் சிந்திய மஹேல (காணொளி இணைப்பு) இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேடையில் அமர்ந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் குறித்த நிதி சேகரிப்பு அறக்கட்டளை அமைப்பின் தூதுவருமான மஹேல ஜெ…
-
- 1 reply
- 490 views
-
-
திரிமான்னவுக்கு ஓய்வு வழங்க வேண்டும் ; அவிஷ்க குணவர்தன இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு சில வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டுமென இல்ஙகை ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார். திரிமான்ன சிறந்த துடுப்பாட்ட வீரர். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில நாட்களாக சற்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் அவருக்கு சில வாரங்களுக்கு ஓய்வளித்தால் மீண்டும் அவர் எழுச்சியடைய வாய்ப்புள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிராக விளையாடிய நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடிய திரிமான்னவின் 9.83 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான மோசமான துடு…
-
- 0 replies
- 333 views
-
-
தோற்ற பிறகு மான்செஸ்டர் சிட்டி அணி வீரரிடம் நிதானம் இழந்த ‘லயன்’ மெஸ்ஸி தோல்வி அதிர்ச்சியில் பார்சிலோனாவின் ஜேவியர் மஸ்சரானோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர். | படம்: ஏ.எஃப்.பி. மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டி வீரர் ஒருவருடன் மோதல் மேற்கொண்டதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஆகியோர் இருந்தும் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் பார்சிலோனா தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது. ஸ்பானிய செய்தித் தாள்களான ‘முண்டோ டிபோர்டிவோ’ மற்றும் மார்கா ஆகியவை தனது செய்தியில் பார்சிலோனா அணிக்…
-
- 1 reply
- 342 views
-
-
இலங்கை முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இந்தப் போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெறுகிறது. குறித்த போட்டியில் இலங்கை அணியின் புதிய தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றார். http://tamil.adaderana.lk/news.php?nid=84871
-
- 11 replies
- 1.2k views
-
-
'தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் ஆபத்து!' - கேரி கிறிஸ்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் -1 அணியாக மாற்றி விட்டார் விராட் கோஹ்லி. அவரிடேமே ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும் என அரசல் புரசலாக கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால், அது ஆபத்தில் முடியும் என, 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றபோது, பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த விழாவில் கிறிஸ்டனிடம், விராட் கோஹ்லியை அனைத்து ஃபார்மட்டுக்கும் கேப்டனாக்க இதுதான் சரியான நேரமா? என கேள்வி எழுப்பினர் நிருபர்கள். ‛‛இதற்கு நீங்கள் என்னிடம் இருந்து பதில் பெற முடியாது. ஒன…
-
- 0 replies
- 451 views
-
-
கால்பந்து போட்டிகளுக்கு ஓய்வை அறிவித்தார் ஜெர்மனியின் குலோஸ். கால்பந்து போட்டிகளுக்கு ஓய்வை அறிவித்தார் ஜெர்மனியின் குலோஸ். சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார் ஜெர்மனியின் பிரபல கால்பந்து வீரர் மிரோசொல்வ் குலோஸ். கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளில்,கிண்ணம் வென்ற ஜெர்மனி அணியின் முக்கிய வீரராக 38 வயதான குலோஸ் விளையாடியிருந்தார். உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக கோல்கள் பெற்றவர் எனும் பிரேசிலின் ரொனால்டோவின் உலக சாதனையை, இவர் அண்மையில் 16 கோல்கள் பெற்று முறியடித்திருதார். 137 சர்வதேச போட்டிகளில் ஜெர்மன் அணி சார்பில் பங்கேற்ற குலொஸ்,71 கோல்கள் பெற்றுள்ளார். 2018 ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந…
-
- 0 replies
- 348 views
-
-
11 சொதப்பல் வீரர்கள்... பட்டியலில் யார் யார்? #INDvsNZ இந்தியா - நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் யார் என கேட்டால், சட்டென விராட் கோலி, ரவிச்சந்திர அஷ்வின் என பொட்டில் அடித்தார் போல பதில் வரும். ஆனால் சொதப்பல் மன்னர்கள் யார் எனக்கேட்டால் கொஞ்சம் ரசிகர்கள் தடுமாறுவார்கள். இந்திய அணியிலும் சரி, நியூசிலாந்து அணியிலும் சரி இந்தத் தொடரில் எக்கச்சக்க சொதப்பல் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து சொதப்பல் வீரர்கள் பதினோரு பேரைத் தேர்வு செய்திருக்கிறோம். இரண்டு தொடக்க வீரர்கள், இரண்டு நடு வரிசை பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலர்கள் என பக்கா பேக்கேஜாக அணி…
-
- 0 replies
- 453 views
-
-
மைதானத்தில் துடுப்பாட்ட மட்டையுடன் நடனம் ; இங்கிலாந்து வீரர் அசத்தல் (கணொளி இணைப்பு) விசேட திறமையுடையவர்களுக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து அணி வீரரின் துடுப்பாட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. துடுப்பாட்ட மட்டையை சுழற்றி சுழற்றி நடனமாடியவாறு துடுப்பாட்டத்தை மேற்கொண்ட இவர் நான்கு ஓட்டங்களை பெற்றமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதேவேளை இவரது இந்த துடுப்பாட்டத்தை பார்த்த சக வீரர்களும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். காணொளி இதோ... http://www.virakesari.lk/article/13032
-
- 0 replies
- 293 views
-
-
யாழில் மைலோ கிண்ண கால்பந்தாட்டம் ஆறு லீக்குகளிலிருந்து 160 கழகங்கள் யாழ். மாவட்டத்தில் கால்பந்தாட்டக் கழகங்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். மாவட்ட செயலகமும் நெஸ்ட்லே லங்கா (பி எல் சி) நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘மைலோ கிண்ணம் யாழ்ப்பாணம்’ என்ற பெயரிலான கால்பந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. 40 கழகங்களுடன் 2013இல் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டியில் தொடர்ந்த வருடங்களில் முறைஙே 60 கழகங்களும் 100 கழகங்களும் பங்குபற்றின. இவ் வருடப் போட்டிகளில் தீவகம் (31 கழகங்கள்), யாழ்ப்பாணம் (28), வலிகாமம் (38), வடமராட்சி (17), பருத்தித்துறை (28),, மருதங்கேணி (18) ஆகிய லீக்குகளைச் சேர்ந்த 160 கழகங…
-
- 3 replies
- 437 views
-
-
நட்சத்திரங்களின் உதைபந்தாட்டம் மானிப்பாய் இந்து ஹற்றிக் வெற்றி சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடாத்திவரும் அழைக்கப்பட்ட பாடசாலைக ளுக்கிடையிலான நட்சத்திரங்களின் உதைபந்தாட்டத் தொடரில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சம்பியனானது. குறித்த போட்டியின் இறுதியாட்டமானது நேற்றைய தினம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் கல்லூரியின் அதிபர் மு. செல்வஸ்தான் தலைமையில் ஆரம்பமானது. மானிப்பாய் இந்துக்கல்லுரி எதிர் மகாஜன கல்லுரி அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. இப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 3:0 என்ற கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது. குறித்த பாடசாலையானது தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாக வெற்றி பெ…
-
- 2 replies
- 343 views
-
-
கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். கிரிஸ் கெயில் சாதனையை தகர்த்தார் யூனுஸ் கான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சரித்திரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான யூனுஸ் கான் ஓர் அரிய சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலேயே யூனுஸ் கான் இந்த சாதனையை படைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிஸ் கெயிலை பின்தள்ளியுள்ளார். சர்வதேச ஆட்டங்களில் குறைந்தது 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்தவர்களில் அதிகமான பூச்சியத்துடன்( டக் அவுட் ) ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் இப்போது யூனுஸ் கான், கெயிலை பின்தள்ளியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வது …
-
- 0 replies
- 343 views
-
-
இங்கிலாந்து அணியின் திறனை இந்தியாவில் தீர்மானிக்க முடியும்: இயன் போத்தம் கருத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேச மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. முதல் டெஸ்டில் தட்டுத்தடுமாறியே இங்கிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 2-வது டெஸ்ட்டில் 100 ரன்கள் வரை விக்கெட்களை இழக்காமல் இருந்த நிலையில் அடுத்த 64 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத் தது. இதனால் 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததுடன் போட்டியை 3 நாட்களில் முடிவுக்கும் கொண்டு வந்தது இங்கிலாந்து அணி. ஒரே ஷெசனில் இங்கிலாந்து அணியை சுருட்டிய வங்கதேச அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. சுழ…
-
- 0 replies
- 307 views
-
-
'உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை' பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து, தொடரை 1-1 என சமப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், இங்கிலாந்து அணியில், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என ஏற்றுக் கொண்டுள்ளார். 273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதலாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், "240 என்பது, சிறப்பான இலக்காக இருக்குமென எண்ணினேன். அவர்கள், 30 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றார்கள். எங…
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்! அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 2ம் திகதி இந்தியாவுக்கு செல்கிறது. அந்த அணி டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தாரை நடுவராக ஐசிசி நியமித்திருந்தது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த இடத்திற்கு இலங்கை நடுவர் குமார் தர்மசே…
-
- 0 replies
- 408 views
-
-
களமிறங்கிய ஜூனியார் மெஸ்ஸி..! ரொனால்டோ அணிக்கு நெருக்கடி? 0 7 உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் மகன் தியாகோ மெஸ்ஸி தனது முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது. நான்கு வயதான தியாகோ மெஸ்ஸி எதிர்காலத்தில் தந்தையை போலவே மிக சிறந்த ஆட்டக்காரராக திகழ்வார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலைியல், பார்சிலோனா கிளப்பின் இளைஞர் அகாடமியான La Masiaயாவில் தனது முதல் பயிற்சி வகுப்பில் களமிறங்கியுள்ளார் தியாகோ மெஸ்ஸி. பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் பார்சிலோனாவ…
-
- 0 replies
- 340 views
-
-
வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது பங்களாதேஷ் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல் முறையாக வெற்றி கொண்டுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியினை வெற்றிக் கொண்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். தனது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் அணி 63.5 ஓவர்களுக்கு சகல விக்…
-
- 4 replies
- 520 views
-
-
சம்பியன் வாய்ப்பைத் தக்கவைத்தார் ஹமில்டன் மெக்ஸிக்கன் கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துள்ளார், பந்தயத்தின் ஆரம்பத்தில், ஹமில்டனின் காரின் முன் சக்கரம் இறுகியதால், முதலாவது வளைவில் வெளியே சென்று, அதிர்ச்சியொன்றை எதிர்நோக்கியிருந்தாலும், அதன்பின்னர், எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்நோக்காது, தனது வாழ்நாளில், 51ஆவது வெற்றியைப் பெற்றார். பிரேஸில், அபு தாபியில் இடம்பெறவுள்ள பந்தங்களில் மொத்தமாக 50 புள்ளிகளைப் பெறமுடியும் என்ற நிலையில், தனது சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்கை விட 19…
-
- 0 replies
- 289 views
-
-
'பாம்பின் தலைக்கு இலக்கு வைப்பு' அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தை இலக்கு வைத்துள்ளதாக, தென்னாபிரிக்க அணியின் தலைமை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளார். "பாம்பின் தலையை நீங்கள் வெட்டினால், உடம்பின் ஏனைய பகுதிகளும் வீழ்ந்துவிடும். கடந்த காலங்களில், அதை நாங்கள் செய்திருக்கிறோம். அணித்தலைவரை இலக்கு வைக்க நாங்கள் முயன்றிருக்கிறோம், ஏனெனில், அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினால், ஏனையோரையும் அது பாதிக்கும்" என்று, டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்டெய்ன், "அ…
-
- 0 replies
- 433 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுத்து சரித்திரம் படைத்தார் மொஹமட் அமீர் டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுத்து சரித்திரம் படைத்தார் மொஹமட் அமீர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது பிடியை அபாரமாக எடுத்து சரித்திர சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் பாகிஸ்தானின் மொஹமட் அமீர். கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சாதாரண பிடியெடுப்பதற்கு ஏன் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் ஜோசிக்கலாம். ஆம், இந்தப் பிடியை எடுப்பதற்காக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் 7 ஆண்டுகள் காத்திருந்தார் என்பது ஆச்சரியமே. 2009 ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அமீர், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான…
-
- 0 replies
- 311 views
-
-
ஒரு காலை இழந்தும் ஃபீல்டிங் செய்த கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் தாமஸ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரது செயற்கை கால் தனியாக விழுந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ச்சியாக பந்தை தடுத்து கீப்பரிடம் த்ரோ செய்தார். செயற்கை கால் இழந்தாலும், விளையாட்டில் முழு ஈடுபாடு காண்பித்த அவரது செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் பால் காலிங்வுட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில், பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். http://www.vikatan…
-
- 0 replies
- 436 views
-