விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஆமிருக்கு நியூசிலாந்து விசா கிடைத்தது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் , இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஆமிருக்கான நியூசிலாந்து விசா கிடைத்துள்ளது. அவருக்கான விசா கிடைக்குமா என்பது குறித்துச் சந்தேகங்கள் காணப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, குற்றவியல் குற்றத்துக்காக 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆமிர், அவரது புனர்வாழ்வு, தடைக்காலத்தைப் பூர்த்தி செய்த போதிலும், குற்றவாளிகளாகத் தீர்ப்பு வழங்கப்பட்டோருக்கு விசா வழங்கப்படுவதற்கு விசாக்களை நியூசிலாந்து வழங்குவதில்லை என்ற …
-
- 0 replies
- 493 views
-
-
தெற்காசியாவின் வேகமானோர் இலங்கையர்கள் தெற்காசியாவின் வேகமான நபர்களாக, இலங்கையைச் சேர்ந்த ஹிமாஷ இஷான், றுமேஷிகா புத்திக்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றே, இவர்களிருவரும் இப்பெருமையைப் பெற்றுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர், 10.28 செக்கன்களில் ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார். இது, கடந்த ஏழு தசாப்தங்களில், இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட சிறந்த பெறுபேறாகும். இறுதிப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் சுற்றில், 10.26 செக்கன்களில் அவர் ஓடி முடித்த போதிலும், தொழில்நுட்பத் தவறு காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. …
-
- 0 replies
- 346 views
-
-
ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரிக்கோ சிக்சருக்கோ விரட்ட விரும்பினேன்: பிரெண்டன் மெக்கல்லம் உலகசாதனை அதிரடி சதம். பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.பி. விவ் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் அதிவேக டெஸ்ட் சத சாதனையை முறியடித்த மெக்கல்லம், நேற்று ஒவ்வொரு பந்தையுமே 4 ரன்களுக்கோ அல்லது சிக்சருக்கோ அடித்து விரட்டும் ‘மூடில்’ இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பசுந்தரை ஆடுகளத்தில் மெக்கல்லம் நேற்று விளாசித்தள்ளினார். ஜோஷ் ஹேசில்வுட் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் விளாசி சதம் அடித்த மெக்கல்லத்திற்கு சாதனை பற்றி தெரியவில்லை. மைதான ஒலிபெருக்கியில் அறிவித்த பிறகுதான் அவருக்கே தெரிந்துள்ளது. “சாதனை பற்றி …
-
- 0 replies
- 282 views
-
-
10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ் இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எஞ்சலோ மெத்தியூஸ் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். போட்டியின் நான்காவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரையில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்தியூஸ் 117 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனத…
-
- 0 replies
- 369 views
-
-
கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கிய மல்லையா April 14, 2016 இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டதலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் றொயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் இந்த புதிய அணிக்கு பங்குதாரர் ஆகியிருப்பதாக மல்லையா கூறியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளதாக தெரிவித்த மல்லையா, அந்த அணியின் மதிப்பு சுமார் ரூ.130 கோடியாக உள்ள நிலையிலும், மற்ற உரிமையாளர்கள் தன்னையும் பங்குதாரராக இணை…
-
- 0 replies
- 521 views
-
-
நான் இந்து சமயத்தவன் என்பதால் பாக். கிரிக்கெட் சபை புறக்கணிக்கின்றதா? - கனேரியா கேட்கின்றார் ஐந்து வருட தடைக்குட்பட்ட மொஹமத் அமிர் விடயத்தில் தனது எல்லைக்கும் அப்பால் சென்று கரிசனை காட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தனக்கு என்ன செய்துள்ளது என தனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். “பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினர் என்னுடன் பேசுவதற்குக்கூட விரும்பவில்லை. நான் ஒரு இந்து என்பதால் புறக்கணிக்கப்படுகின்றேனா? என என்னையே நான் கேட்டுக்கொள்வேன்” என இந்திய ஊடகமொன்றுக்கு தனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானினால் வாழ்நாள் தடைக்குட்பட்டுள்ள தனேஷ் கனேரியா, டெஸ்ட் அரங்…
-
- 0 replies
- 323 views
-
-
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’ மழையால் கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. டுனிடின்: நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகள் டுனிடினில் மோதிய முதல் டெஸ்ட் ‘டிரா ஆனது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னும் குவித்தன. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது. இன்றைய 5-வது மற்…
-
- 0 replies
- 273 views
-
-
கிழக்கு மாகாண உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனாகத் தெரிவு கிழக்கு மாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அம்பாரை மாவட்ட அணியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தே மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அணி கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கு மாகாணம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங…
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கை - இங்கிலாந்து தொடர் எதிர்வரும் ஒக்டோபரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வகையான கிரிக்கெட் போட்டிகளைக்கொண்ட தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்து அணி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளும் 3 டெஸ்ட் போட்டிகளும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியும் இடம்பெறவுள்ளது. போட்ட…
-
- 0 replies
- 273 views
-
-
திராவிட் பாணியில் ஆஸி. வீரர்களுக்கு டீன் ஜோன்ஸ் அறிவுரை பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலியா மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சனுக்கு அளித்த அறிவுரையை எதிரொலித்து டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது முதலில் வலைப்பயிற்சியில் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ளும் போது கால்காப்பு அணியாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் டீன் ஜோன்ஸ். இதே அறிவுரையைத்தான் ராகுல் திராவிட் தனது மின்னஞ்சலில் கெவின் பீட்டர்சனிடம் தெரிவித்தார்: “கால்காப்பு அணியாமல் விளையாடும் போது, காலுக்கு முன்னால் பேட்டைக் கொண்டு வந்து ஆட அதிகம் முயற்சி செய்வோம். மேலும் பந்தை …
-
- 0 replies
- 467 views
-
-
டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி. "இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்…
-
- 0 replies
- 624 views
-
-
11 ஆவது உலகக் கிண்ணம் : 11 கிலோ எடை வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது. குறித்த 11 ஆவது உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தப் போகும் அணி எது என்பது மார்ச் மாதம் 29 ஆம் திகதி தெரிய வரும். ஆரம்பத்தில் ஒவ்வொரு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போதும், வெவ்வேறு வடிவங்களில் கிண்ணம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் போது தான் நிரந்தர வடிவமைப்பை பெற்றது. அந்த உலகக் கிண்ணத்தை லண்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது. இதற்காக 2 மாத காலம் எடுத்துக் கொண்டது. உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரமும், 11 கிலோ எடையும் கொண்டது. வெள்ளியால் செய்…
-
- 0 replies
- 505 views
-
-
4000 ஓட்டங்களைப் பெற்றார் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டில்ஷான், இருபது ஓவர்கள் போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இங்கிலாந்தில் நாட் வெஸ்ட் இருபது ஓவர் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் டெர்பைஷயர்- துர்ஹாம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய துர்ஹாம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்ட எண்ணிக்கையை எடுத்தது. மஸ்டார்ட் (20), ஸ்டோன் மென் (28), கோலிங்வுட் (41) சிறப்பாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெர்பைஷயர் அணிக்கு டில்ஷான், டுர்ஸ்டன் ஆகி யோர் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர். டுர்ஸ்டன் 21 ஓட்டங்கள…
-
- 0 replies
- 299 views
-
-
தோனி இடித்த வங்கதேச பந்துவீச்சாளரை உருவாக்கியதே இந்தியர்தான்...! இந்திய கேப்டன் தோனியால் இடித்து தள்ளப்பட்ட வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இந்தியர் ஒருவர்தான் உருவாக்கியுள்ளார். மிர்பூரில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில், வங்கதேசத்தின் 19 வயது பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான், முதன் முதலாக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அதே வேளையில் ரோகித் சர்மா, தோனி ஆகியோர் ரன் எடுக்க ஓடும் போது பிட்சின் குறுக்கே அடிக்கடி ஓடினார். ஒரு கட்டத்தில் இந்திய கேப்டன் தோனியால் இடித்தும் தள்ளப்பட்டார். இந்த சம்பவத்தில் ரக்மானுக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீ…
-
- 0 replies
- 225 views
-
-
தோனிக்கு அப்ரிடி ஆதரவு: 'தோற்றால் சாடுவது துணைக்கண்ட போக்கு' 2011 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன் தோனியும், அப்ரிடியும் மொஹாலியில் பேசிக்கொள்ளும் காட்சி. | கோப்புப் படம்: பிடிஐ. ஒரு தொடரை இழந்தால் உடனே தாறுமாறாக விமர்சிப்பது என்பது ‘துணைக் கண்டங்களின் போக்கு’ என்று தோனிக்கு தனது ஆதரவை பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மனதார தெரிவித்துள்ளார். "வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பிறகு தோனியை இலக்காக்கும் விதம் குறித்து நான் மிக மோசமாக உணர்கிறேன். இது துணைக்கண்ட மனோநிலை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன், இங்குதான் ஒரு தொடரைத் தோற்றால் உடனே ஹீரோக்களை கடுமையாக விமர்சனம் செய்யும் போக்கு இருந்து வருகிறது. உண்மையான நிலவரத்தை சித்தரிக்காமல் இருப்பதில் ஊ…
-
- 0 replies
- 318 views
-
-
மூன்று முரை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சைக்கிள் பந்தய வீராங்கனை மரணம் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அடைந்தார். அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அமெரிக்காவைச் சேர்ந்த அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் வயது 23 , இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர். இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார். சைக்கிள் பந்தயத்தில…
-
- 0 replies
- 532 views
-
-
டோனியின் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும்இ இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவின் விளம்பரம் தொடர்பான அனைத்தையும் இந்த நிறுவனம் தான் கவனித்து வந்தது. இந்த நிலையில் ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நிறுவனம் ரெய்னாவை 3 ஆண்டுக்கு ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத…
-
- 0 replies
- 238 views
-
-
புள்ளிப்பட்டியலில் அனைத்து அணிகளும் எட்டு போட்டிகள் விளையாடி முடித்துவிட்டன. அதன் அடிப்படையில் தற்போது : 14 புள்ளிகளோடு ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 13 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 11 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து 10 புள்ளிகளோடு நான்காவது இடத்திலும் பாகிஸ்தான் 9 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திலும் உள்ளன. அரை இறுதிக்குத் யார் தகுதி பெறவுள்ளனர் என்பதை இரு முக்கியமான போட்டிகள் நிர்ணயிக்கவுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். ஆனால் தோல்வி பெறும் அணி பாகிஸ்தான் - வங்கதேசம் …
-
- 0 replies
- 487 views
-
-
தொடரை வென்றது இங்கிலாந்து நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என தெரிவித்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படதா போதும், பாகிஸ்தான் அணியில், காயத்திலிருந்து மீண்ட யசீர் ஷா, ஸபார் க…
-
- 0 replies
- 485 views
-
-
Tour de France 2017 ஜேர்மன் டியூசல்டோர்வ் நகரில் December 23, 2015 கடந்த 1987 ஆம் ஆண்டு ஜேர்மனின் பேர்லின் நகரில் ஆரம்பமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டியானது அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டே முதற்தடவையாக ஜேர்மனில் ஆரம்பமாகவுள்ளது. எனினும் டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டிகள் ஜேர்மனில் ஆரம்பமாவது 2017 ஆம் ஆண்டு நான்காவது தடவை என்பதுடன் பிரான்ஸை விட்டு வெளியில் 22 ஆவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2016 ஆம் ஆண்டு பிராஸ்ஸில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6564&cat=2
-
- 0 replies
- 679 views
-
-
இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு By Akeel Shihab - இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (11) இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் எட். ஸ்மித்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்சமயம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில…
-
- 0 replies
- 731 views
-
-
Laureus விருது சச்சின் டென்டுல்கருக்கு 26 Views விளையாட்டு உலகின் உயரிய விருதான Laureus விருது இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த விருது விழா இடம்பெற்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது, சக வீரர்கள் சச்சின் டென்டுல்கரை தோளில் சுமந்து மரியாதை செலுத்திய நிகழ்வினை விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக கருதி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அத…
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கை மகளிர் அணியின் சிறிபாலி வீரகொடி விளம்ரத் தூதுவரானார் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சிறிபாலி வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ் கெய்ல், இயன் மோர்கன், மிச்சல் ஜோன்சன், மைக்கல் கிளார்க், அன்று ரசல், மகேந்திரசிங் டோனி மற்றும் நில் வோக்னர் ஆகியோர் வரிசையில் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சிறிபாலி வீரக்கொடி இணைந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சிறிப…
-
- 0 replies
- 332 views
-
-
T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 3 வதும் இறுதியான T20 போட்டி அபுதாபியில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்து தொடரை வென்றது பாகிஸ்தான் அணி. இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற…
-
- 0 replies
- 295 views
-
-
ஜாதவ் விக்கெட் எடுத்ததால் வர்ணனை அறையிலிருந்து வெளியேறிய ஸ்காட் ஸ்டைரிஸ்: மொஹாலியில் ருசிகரம் விக்கெட் வீழ்த்திய கேதர் ஜாதவ்வை பாராட்டும் இந்திய வீரர்கள். | படம்: அகிலேஷ் குமார். மொஹாலி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங் பற்றி எதிர்மறையாகக் குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ் தனது பந்தயத்தில் தோற்றார். ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்ட போது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோருடன் நியூஸிலாந்து வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் வர்ணனை அறையில் அமர்ந்திருந்தார். ஜாதவ்வின் பந்து வீச்சு குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்த ஸ்காட் ஸ்டைரிஸ், “ஜாதவ் இன்று விக்கெட் எடுத்தால் இந்த வர்ணனை அறையிலிருந்து வெளியேறுகிறேன், முதல் விமானத்தை பிடித்து நியூஸில…
-
- 0 replies
- 441 views
-