விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஆண்டின் சிறந்த இலங்கையராக குமார் சங்ககார தெரிவு தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறந்த இலங்கையர்களை கௌரவிக்கும் “Ada Derana Sri Lankan of the Year - 2016” மா பெரும் விருதுவழங்கும் நிகழ்வு நேற்று (23) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பல்வேறு துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இலங்கையர்கள் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ரசிகர்களின் அதிக விருப்புக்களை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககார ஆண்டின் சிறந்த பிரபலமான இலங்கையராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்ட ஆண்டின் சிறந்த இலங்கையர்கள் விபரம் வருமாறு, Sports – Mathew Abeysinghe Global Entertainer - Jacqueline Fern…
-
- 1 reply
- 422 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் இருப்பிடம் கொண்ட டோனி, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார் . டோனியின் வாழ்க்கை வரலாறை சித்தரித்து புனையப்பட்டுள்ள ‘MS Dhoni – The Untold Story’ என்ற திரைப்படம் அடுத்தவாரம் 30 ம் திகதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் விரிவாக்கல் நடவடிக்கைக்காக சென்னை சென்ற டோனி,சென்னை சத்யம் திரையரங்கில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பின்னர் மேடையில் “என் வழி தனி வழி” என்ற ரஜினியின் வசனத்தைப் ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
சரே அணியுடனான சங்கக்காரவின் ஒப்பந்தம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பு இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார மேலும் ஒருவருடத்திற்கு சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சரே கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் நேற்று (23) அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் சரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார 2017 ஆம் ஆண்டுக்கும் சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ஓட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இவரின் டெஸ்ட் ஓட்டங்களின் சராசரி 57.40 என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், உள…
-
- 0 replies
- 421 views
-
-
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி டுபாய் DSC மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் மிக சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்பிராஸ் அஹமெட் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்க…
-
- 1 reply
- 331 views
-
-
பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமெட் ,மற்றும் சூழல் பந்து வீச்சாளர் அரபாத் சன்னி ஆகியோருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியது. T20 உலக கிண்ணப் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்திருந்த இவ்விருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை, முறையற்ற பந்து வீச்சு என்பதை காரணம் காட்டி தடை விதித்தது. நெதர்லாந்துக்ககெதிராக தரம்சாலாவில் இடம்பெற்ற உலக T20 கிண்ண போட்டியில் இருவரும் விளையாடிய போது இவர்களது பந்து வீ…
-
- 0 replies
- 431 views
-
-
கம்பீருடன் சண்டை...அனுஷ்காவுக்காக ட்விட்...விராட் கோலியின் "டிரிவன்” புத்தக ரகசியங்கள்! சமீபத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கையால் பள்ளி கிரிக்கெட்டில் விருது வாங்கும் பால் வடியும் முகம் கொண்ட சிறுவன் 10 வருடத்தில் ஆஷிஷ் நெஹ்ராவை ஆன் சைடில் நிற்காதீர்கள், கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?. அந்த சிறுவன் தான் இந்திய அணிக்கான அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன். இந்திய அணிக்கு என்ட்ரி கொடுத்த சிறுவனுக்கு 6 வருடங்களில் அடுத்த சச்சின் என்ற பெயர். இந்தியாவின் அக்ரஸிவ் டெஸ்ட் கேப்டனின் இதுவரையிலான பயணம் ''ட்ரிவன் - தி விராட் கோலி ஸ்டோரி'' என்ற பெயரில் புத்தகமா…
-
- 0 replies
- 326 views
-
-
வீதி விபத்தில் கிரிக்கெட் வீரர் பலி வாகன விபத்தொன்றில் பீ.ஆர்.சி கிரிக்கெட் கழக வீரரான பூர்ண பிரபஷ்வர அளுத்கே உயிரிழந்துள்ளார். பொரஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற இடம்பெற்ற விபத்திலேயே குறித்த கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த கிரிக்கெட் வீரர், கெப் வாகனமொன்றுடன் மோதுண்டதிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப் வாகனத்தை ஓட்டிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1994 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்த பூர்ண, வலதுகை துடுப்பா…
-
- 0 replies
- 460 views
-
-
பாகிஸ்தானில் உருவாகும் இரண்டு கைகளிலும் வீசக்கூடிய அரிய வேகப்பந்து வீச்சாளர் இரண்டு கைகளிலும் நல்ல வேகத்துடன் வீசும் பாக். வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான்.! வலது கையிலும் இடது கையிலும் நல்ல வேகத்துடன் வீசும் இருகை வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான் என்பவர் பாகிஸ்தானில் உருவாகி வருகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் திறன் வேட்டையில் யாசிர் ஜான் என்ற இந்த இருகை வேகப்பந்து வீச்சாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் தலைமையாளருமான ஆகிப் ஜாவேத் லாகூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, யாசிர் ஜான் வலது கையில் வீசும் போது மணிக்கு 145 கிமீ வேகத்திலும்…
-
- 2 replies
- 456 views
-
-
தோனியின் கேப்டன் பொறுப்பை பறிக்க பலமுறை விவாதித்தோம்: மனம் திறக்கும் சந்தீப் பாட்டீல் தோனி, பாட்டீல். | கோப்புப் படம். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி திடீரென ஓய்வு அறிவித்ததால் அவரது ஒருநாள் கிரிக்கட் வாழ்வு பற்றியும் கேப்டன்சி பற்றியும் விவாதித்து அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கவும் சில வேளைகளில் ஆலோசனை நடத்தியுள்ளதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலியா தொடரின் நடுவில் தோனி திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இது பெரிய ‘அதிர்ச்சி’ அலைகளை ஏற்படுத்தியதாகக் கூறிய சந்தீப் பாட்டீல், “உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு அறிவித்ததால் தோனியின் ஒருநாள் அணி கேப்டன் பொ…
-
- 0 replies
- 324 views
-
-
யாழில் முதல் தடவையாக தேசிய விளையாட்டு விழா 2016-09-22 09:38:32 49 வருட வரலாற்றைக்கொண்ட தேசிய விளையாட்டு விழா முதல் தடவையாக இவ்வருடம் வடக்கு மாகாணத்தின் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அரங்கேற்றப் படவுள்ளது. தேசிய விளையாட்டு விழா 1967இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 41 அத்தியாயங்கள் நிறைவு பெற்றுள்ளன. இம்முறை 42 ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டு விழா இம் மாதம் 29ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் ஜ…
-
- 0 replies
- 414 views
-
-
சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய ,இந்தாண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இலங்கை இளையோர் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்கா பெற்றுக் கொண்டார். நேற்று கொழும்பு, காலதாரி விருந்தகத்தில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியான 2 வது வருடமாகவும் சரித் அசலாங்க தனதாக்கினார். இவருக்கான விருதை ,இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன வழங்கி வைத்தார். காலி ரிச்மன்ட் கல்லூரியின் வீரராகவும், இலங்கை 19 வயத…
-
- 0 replies
- 338 views
-
-
2020 ஐரோப்பிய கிண்ணத்துக்கான சின்னம் உத்தியோகபூர்வமாக அறிமுகம். 2020 ஐரோப்பிய கிண்ணத்துக்கான சின்னம் உத்தியோகபூர்வமாக அறிமுகம். ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் 4 ஆண்டுகளுக்கொருமுறை இடம்பெறும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளுக்கான சின்னம் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்ததாக கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டமான இந்த போட்டிகளின் இறுதி போட்டி 2020 இல் லண்டனில் இடம்பெறவுள்ளது. அரை இறுதி, இறுதி போட்டி ஆகியன லண்டன் மாநகரில் இடம்பெறவுள்ள அதேவேளை, ஐரோப்பாவின் 13 நகரங்களில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய கிண்ண தொடரின் 60 ஆண்டு பூர்த்தியைக் …
-
- 0 replies
- 455 views
-
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது அவுஸ்திரேலியா 2016-09-19 10:12:23 அவுஸ்திரேலிய, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது. பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டி 40.3 ஓவர்களில் நிறைவுபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி சிரமத்திற்கு மத்…
-
- 1 reply
- 606 views
-
-
பாகிஸ்தானுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியனுக்கான தண்டாயுதம்: ஐசிசி வழங்கியது ஐசிசி தண்டாயுதத்துடன் மிஸ்பா. | படம்: ஏ.பி. முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய மைதானமான லாகூரில் இது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்கிறார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தண்டாயுதத்தை மிஸ்பாவிடம் வழங்கினார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவில்லாமல் முழுக்கவும் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பிடிப்படு சாதாரண விஷயமல்ல. ஸ்டீவ் வா…
-
- 1 reply
- 633 views
-
-
டி வில்லியர்ஸையே மிரட்டிய பவுலர்! தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால் எதிரணிக்கு அடி வயிறு கலங்கும். ‘டிரைவ்’ ஆடுவார் என ஃபீல்ட் செட் செய்தால் ஸ்கூப் ஆடி, ஃபீல்டர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழப்புவார். என்ன ரகம் என வரையறுக்க இயலாத 360 டிகிரி பேட்ஸ்மேன். எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் ஒரு பவுலர் சிம்ம சொப்பனமாக இருப்பார் அல்லவா? அந்த வரிசையில் டி வில்லியர்ஸை அச்சுறுத்திய பவுலர் யார் என அவரது சுயசரிதை புத்தகமான, ‘ஏபி: தி ஆட்டோபயாகிரபி’யை ஆச்சரியத்துடன் புரட்டினால், இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு பவுலரின் பெயரைச் சொல்லி பிரம்மிப்பூட்டுகிறார். தவிர, இணையத்தில் உலவுவது போல, ‘நான் மல்டி ஸ்போர்ட்ஸ் கில்லி அல்ல’ என, ட்வி…
-
- 0 replies
- 528 views
-
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி. 1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்தது இந்தியா. 84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? படங்கள், தகவலுடன் ஒரு பிளாஷ்பேக் இங்கே ... 1. முதல் டெஸ்ட் :- 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது. இந…
-
- 3 replies
- 1.3k views
-
-
செய்தித்துளிகள்: கேப்டன் பதவியில் அசார் அலி நீடிப்பு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் அசார் அலிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு டி 20 அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பொறுப்பு வகிக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அசார் அலியை மீண்டும் கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி 25 ஆட்டத்தில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 9-வது இடத…
-
- 0 replies
- 361 views
-
-
களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய ஆக்ரோஷம் ஆஸி. அணிக்கு தேவை: வீரர்களைத் தூண்டும் ஸ்மித் படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சமீப காலமாக களத்தில் அமைதியாக இருக்கின்றனர், இது சரிபட்டு வராது, பழைய பாணி ஆக்ரோஷம் தேவை என்று கேட்பன் ஸ்மித் வலியுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் பிறகு ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவை வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறையில் நெஞ்சை நிமிர்த்தி எதிரணியினரை சீண்டும் பழைய பாணி கிரிக்கெட்டுக்குச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் டேவிட் வார்ன…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்தார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (20) இன்று இடம்பெற்றுள்ளது. ஆஸி அணியுடனான டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா, தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் விரர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். http://www.virakesari.lk/article/11557
-
- 0 replies
- 374 views
-
-
நுவான் குலசேகர கைது (UPDATE) இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, கடுவலையில் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் செலுத்திய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார். கண்டி -கொழும்பு பிரதான வீதியில் கடுவலை ரன்முத்துகல பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த 28 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளதுடன் நுவான் குலசேகரவும் கொழும்பு நோக்கி பயணித்தபோதே அந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். …
-
- 2 replies
- 606 views
-
-
பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…
-
- 0 replies
- 403 views
-
-
வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனை நோக்கி காத்திருக்கிறார். எதிர்வரும் 22 ம் திகதி கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் 500 வது டெஸ்ட் என்பதோடு மாத்திரமல்லாமல் , ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைக்காகவும் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான த…
-
- 0 replies
- 339 views
-
-
யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல் ‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனி…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஹமில்டனை முந்தினார் றொஸ்பேர்க் சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸை அபாரமாக வென்ற மெர்சிடிஸ் அணியின் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க், சம்பியன்ஷிப் புள்ளிகளில், சக மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனை முந்தினார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் றிக்கார்டோவிடமிருந்து, இறுதி நேரங்களில் பலத்த போட்டியை எதிர்கொண்டே, றொஸ்பேர்க் வெற்றி பெற்று, ஹமில்டனை விட எட்டு சம்பியன்ஷிப் புள்ளிகளை பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை றிக்கார்டோ பெற்றார். பந்தயத்தினை மூன்றாவதாக ஆரம்பித்த ஹமில்டன், பந்தயத்தின் நடுவினிலே, பெராரி அணியின் பின்லாந்துச் சாரதியான கிமி றைக்கோனனிடம் போட்டியை எதிர்கொண்டு, ஒரு இடம் பின்தங்கி …
-
- 0 replies
- 477 views
-
-
மர்லன் சாமுவேல்ஸ் மரியாதை தெரியாதவர்: பென் ஸ்டோக்ஸ் சாடல் AP படம். | தி கார்டியன். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது சுயசரிதை நூலில் மே.இ.தீவுகள் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் குறித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மர்லன் சாமுவேல்ஸ் தகராறுக்கு புகழ்பெற்றவர், பிக் பாஷ் லீகில் ஷேன் வார்னுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது, பிறகு 2015-ல் கிரெனடா டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அவுட் ஆன பிறகு அவரை கேலி செய்யும் விதமாக சல்யூட் அடித்து சர்ச்சையில் சிக்கினார் சாமுவேல்ஸ். அதன் பிறகு உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ், மர்லன் சாமுவேல்ஸ் மீண்டும் நேருக்கு நேர் தகராறில் ஈடுபட்டனர். சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்து …
-
- 0 replies
- 435 views
-