விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
ஆஸியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேம் ஹிக் ஆஸி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான கிராம் ஹிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸி கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இவர் தென்னாபிரிக்கா போட்டியிலிருந்து தனது பணியை முன்னெடுத்தாலும், அடுத்த வருடம் இந்தியவுடன் இடம்பெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணி தோல்வி…
-
- 0 replies
- 412 views
-
-
சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகாஜனாவின் டிலக்க்ஷனுக்கு தங்கப் பதக்கம்; நேற்று மேலும் 3 புதிய சாதனைகள் 2016-09-15 10:13:53 (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் யாழ். மாவட்டப் பாடசாலைக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். டிலக் ஷன் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். …
-
- 0 replies
- 338 views
-
-
சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆடடக்காரரான குமார் சங்ககாரா, சர்ரே அணிக்காக கழக மட்டப் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றார். 2015 இல் இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த சங்கா, இப்போது சர்ரே அணியிலும் சாதித்து வருகின்றார். இந்த பருவகாலத்தில் சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்துள்ளார்.டேர்ஹாம் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 30 ஓட்டங்கள் பெற்றபோதே சங்கா இந்த சாதனையைப் படைத்துள்ளார் http://vilaiyattu.com/சர்ரே-அணிக்காக-1000-ஓட்டங்கள/
-
- 0 replies
- 564 views
-
-
ரியோ பாராலிம்பிக்ஸ்: ஒலிம்பிக் வீரரை மிஞ்சிய பாராலிம்பிக் வீரர்கள்! ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த கையோடு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோவில் துவங்கின. இதில் நேற்று பார்வையற்றோர்கான டி13 1500மீ ஒட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் நிகழ்த்தப்பட்ட சாதனை உலகையே தரும்பி பார்க்க வைத்துள்ளது. அல்ஜீரியாவின் போவுட் பகா பந்தய தூரத்தை 3 நிமிடம் 49.84 நொடிகளில் கடந்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஓடிய நேரத்தை விட குறைவான நேரமாகும். ஒருவேளை இவர் ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் இவருக்கே தங்கம் கிடைத்திருக்கும். ஏனேனில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமேரிக்காவின் மத்தியு சென்ட்ரொவிட்ஸ்-ஏ 1500மீ தூரத்தை கடக்க 3 நிமிடம் 50 நொடிகள்…
-
- 1 reply
- 611 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்; 7-0 கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி கெல்டிக் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் பாஸை கோலாக மாற்றிய மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கெல்டிக் அணியை 7-0 என்று பார்சிலோனா வீழ்த்துவதற்கு மெஸ்ஸியின் அபாரமான ஹாட்ரிக் உதவி புரிந்தது. அலவேஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா கடந்த சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இதனையடுத்து பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் ஹென்றிக் எந்த வித சோதனைகளையும் செய்ய விரும்பாமல் வலுவான அணியைக் களமிறக்கினார். ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே நெய்மரிடம் இருந்து பாஸைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி நெருக்கடியான ஒரு கோணத்திலிருந்து முதல…
-
- 0 replies
- 282 views
-
-
மே.இ.தீவுகள் அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம் பில் சிம்மன்ஸ் நீக்கம். | படம்.பிடிஐ மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை அந்த அணி வென்ற 6 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் ஆட மே.இ.தீவுகள் துபாய் செல்லவுள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்காத மே.இ.தீவுகள் வாரியம், “சமீப காலங்களில் அவர் பொதுவெளியில்…
-
- 0 replies
- 412 views
-
-
சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே, கண்டிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த டி20 போட்டிகள் நினைவிற்கு வரும்.ஃபைனலில் கோப்பை வென்றது ஒருபுறம் என்றால், அந்த பவுல் அவுட் போட்டி வேற லெவல். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனக்குப் பிடித்த போட்டி என பவுல் அவுட் போட்டியைத்தான் குறிப்பிட்டு இருந்தார் முன்னாள் வீரர் சேவக், "இரு பெரும் அணிகள் மோதும் முதல் போட்டி, இப்படி ட்ராவாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.போட்டிக்கு முன்னராகவே பலமுறை ஸ்டம்ப்புகளை அடித்து பயிற்சி செய்துகொண்டு இருந்தோம். நான், உத்தப்பா, ஹர்பஜன் மூவரும் அதிகமுறை பவுல் அவுட்…
-
- 0 replies
- 609 views
-
-
அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது மருதங்கேணி பிரதேச செயலகம் யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்-2016 கால்பந்தாட்டப்போட்டியில் மருத ங்கேணி பிரதேச செயலக அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணியளவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நலன்புரிக் கழக தலைவர் செ.ரகுநாதனின் தலைமையில் இப்போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், கௌரவ விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச செயல…
-
- 0 replies
- 334 views
-
-
18 இன் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். அருணோதயாவின் ஜொய்சன் புதிய சாதனை 2016-09-14 09:44:22 (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 86ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி வீரர் நெப்தலி ஜொய்சன் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.56 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் கே. நெப்தலி ஜொய்சன் புதிய சாதனையை நிலைநாட்டினார். இவர் 4.65 மீற்றர் உயரத்தை தாவ முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது. …
-
- 0 replies
- 299 views
-
-
பராலிம்பிக் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம் இறுதிச் சுற்றில் இலங்கையின் அமரா இந்துமதி 2016-09-14 10:59:33 பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் ரியோ 2016 பராலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் அமரா இந்துமதி இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார். எஞ்சென்ஹாஓ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ரி 45/46/47 பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை அமரா இந்துமதி பெற்றார். போட்டியை அவர் 1 நிமிடம் 02.07 செக்கன்களி…
-
- 0 replies
- 307 views
-
-
பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை (காணொளி இணைப்பு) ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11300
-
- 0 replies
- 305 views
-
-
ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சாதனையை முறியடித்த லியாம் மாலோன் லியாம் மாலோன் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் மாற்றுத் திறனாளர் (பாராலிம்பிக்) ஒலிம்பிக் போட்டிகளில் நியூஸிலாந்து மாற்றுத் திறனாளி தடகள வீரரான லியாம் மாலோன், தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியஸின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். நியூஸிலாந்தில் உள்ள நெல்சன் நகரை சேர்ந்த 22 வயது இளைஞரான லியாம் மாலோன், மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் 200 மீட்டர் டி 44 போட்டி பிரிவில், பந்தய தூரத்தினை 21.06 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்த பிரிவில், பந்தய தூரத்தை ஆஸ்கார் பிஸ்டோரியஸ் 21.30 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிட…
-
- 0 replies
- 349 views
-
-
விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். அவர் 3 வடிவங்களிலும் சிறந்த வீரர் என நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முன்னதாக நியூஸிலாந்து அணி 16-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் டெல்லி பெரோ…
-
- 0 replies
- 283 views
-
-
வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தை சேர்ந்த மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை 15 வயது கபடி அணி தேசிய ரீதியில் முதல் இடம் பெற்று தங்கம் வென்றுள்ளது. மாத்தறை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு மாகாணத்தில் இருந்து மூன்று அணிகள் வீதம் ஒன்பது மாகாணத்தில் இருந்தும் 27 அணிகள் கலந்து கொண்டன. கடந்த வருடம் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் தோல்வியை சந்தித்த போதிலும் இம்முறை கடின உழைப்பின் மூலம் தங்கம் வென்றுள்ளது மளுவ…
-
- 1 reply
- 371 views
-
-
பரா ஒலிம்பிக் ; பதக்கத்தை நழுவவிட்ட இலங்கை பரா ஒலிம்பிக் போட்டியில் 4x100 அஞ்சல் ஓட்டப்போட்டியில் 3.06 செக்கன்களால் இலங்கை வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டுள்ளது. 47.12 விநாடிகளில் போட்டியை நிறைவுச்செய்து இலங்கை நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. இந்த போட்டியில் அமெரிக்கா முதலிம் பிடித்திருந்த நிலையில், விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக போட்டியிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் ஜேர்மனி முதலாவது இடத்தையும் , பிரேசில் இரண்டாவது இடத்தையும் பிடித்ததோடு ஜப்பான் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது. ஜப்பான் 44.06 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்திருந்த நிலையில் இலங்கை 47.12 செக்கன்களில் போட்டியை நிறைவு …
-
- 0 replies
- 367 views
-
-
பாராலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். http://www.dinamalar.com/news_detail.as…
-
- 1 reply
- 443 views
-
-
அப்ரிடி ஓய்வு? பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி. 36 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக அப்ரிடி செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக…
-
- 0 replies
- 427 views
-
-
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா சாதனை 2016-09-13 10:50:22 மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்களா தேஷ் சார்பாக முதலாவது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹமதுக்கு சொந்தமாகியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்களை சரித்ததன் மூலம் 10 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகள் மழையினால் தடைப்பட்டதால் பங்களாதேஷ் 1–0 என தொடரை வென்றது. பங்களாதே…
-
- 0 replies
- 529 views
-
-
ஓய்ந்தது டில்ஸ்கூப் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை சார்பாக கிரிக்கெட் விளையாடி, ஜாம்பவான்களாகக் கருதப்படுவோர் என்ற பட்டியலொன்று வாசிக்கப்படுமாயின், முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய என்ற பெயர்கள், நிச்சயமாகப் பேசப்படும் பெயர்களாகும். அதேபோல், சமிந்த வாஸ், லசித் மலிங்க, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம என, வேறு சில பெயர்களும் முன்வைக்கப்படும். ஆனால், திலகரட்ண டில்ஷான் என்ற பெயர், அடிக்கடி அடிபடும் ஒன்று கிடையாது. ஆனால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இலங்கை சார்பாகத் தோன்றிய, இரண்டாவது மிகப்பெரிய வீரராக, திலகர…
-
- 0 replies
- 520 views
-
-
யாழ். பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 12 ஆவது கால்பந்தாட்டத் தொடர் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக அணியை எதிர்த்தாடியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியில் …
-
- 0 replies
- 348 views
-
-
பராஒலிம்பிக் 2016: தங்கங்களைக் குவிக்கிறது சீனா இடம்பெற்றுவரும் பராஒலிம்பிக் போட்டிகளில், 5ஆவது நாளான திங்கட்கிழமைமுடிவில், பதக்கப் பட்டியலில், சீனாவே முதலிடத்தில் காணப்படுகிறது. 26 தங்கப் பதக்கங்களுடன் 5ஆவது நாளை ஆரம்பித்த சீனா, 13 தங்கங்களை மேலதிகமாகப் பெற்று, 39 தங்கங்கள், 30 வெள்ளிகள், 23 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. 8 தங்கங்களை வென்ற பெரிய பிரித்தானியா, மொத்தமாக 23 தங்கங்கள், 14 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் 18 தங்கங்கள், 13 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உக்ரைனும் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா (13), பிரேஸில் (6), உஸ்பெகிஸ்தான் (6), அவுஸ்திரேலியா (5)…
-
- 0 replies
- 474 views
-
-
மோர்கன் வெளியேறினார்: தலைவராக ஜொஸ் பட்லர் பங்களாதேஷுக்கான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக, இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் தலைவர் ஒய்ன் மோர்கனும், இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர். இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக, பங்களாதேஷுக்குச் செல்லவுள்ளது. இத்தொடர், ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. எனினும், பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இத்தொடரில் இணைவதிலிருந்து விலகுவதாக, மோர்கனும் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத…
-
- 0 replies
- 407 views
-
-
இந்திய அணியில் இந்த முறையும் இவருக்கு இடமில்லை! #INDvsNZ செப்டம்பர் 22ம் தேதி தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி விவரம் பின் வருமாறு! விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், புஜாரா, முரளி விஜய்ரோ, ஹித் ஷர்மா, அஸ்வின், சஹா(விக்கெட் கீப்பர்) , ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷவர் குமார், ஷிகர் தவான், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ். மும்பையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கும்…
-
- 1 reply
- 583 views
-
-
தேசிய மட்டத்தில் சம்பியனானது சென்.பற்றிக்ஸ் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கால்பந்தாட்டப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது. இந்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை இளவாலை சென் .ஹென்றிஸ் கல்லூரியும், வெண்கலப்பதக்கத்தை மன்னார் சென் . லூசியஸ் கல்லூரியும் தாமதாக்கிக்கொண்டன. அநுராதபுரத்தில் இடம்பெற்றுவரும் இத் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. இந்நிலையில், கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி ஆட்டம். இரண்டாம் பாதியின் 33 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸின் முதல் கோலைப் பதிவு செய்தார் …
-
- 0 replies
- 578 views
-
-
ஒற்றைக் காலுடன் உசேன் போல்டுக்கே சவால் கொடுத்த சாம்பியன்! உசேன் போல்ட் – மின்னல் மனிதன். மொத்த உலகையும் 10 விநாடிகள் தன்னை மட்டுமே பார்க்க வைத்த ஒரு தடகள் சகாப்தம். தொடர்ந்து 3 ஒலிம்பிக் தொடர்களில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஓடிய அதே களத்தில் இன்னுமொரு உசேன் போல்டை உலகம் கண்டுகளித்துள்ளது. ஆனால் போல்டைப் போல இரண்டு கால்களால் பறந்தவரல்ல இவர். உடலளவில் குறைகள் கொண்டிருந்தாலும் சோதனைகள் வென்று சாதனை படைத்த நாயகர்கள் பங்கேற்ற பாராலிம்பிக் தொடரில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சார்ந்த ஜானி பீகாக். பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்கான உச்சபட்சத் தொடர். வாழ்க்கையில் எத்தனையோ இழந்தாலும் …
-
- 0 replies
- 556 views
-