விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை …
-
- 0 replies
- 547 views
- 1 follower
-
-
புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க பார்சிலோனா தாகத்துடன் உள்ளது – மெஸி பிறந்துள்ள புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பார்சிலோனா கழகம் இருப்பதாக அக் கழகத்தின் முன்கள வீரரும் நான்கு தடவைகள் உலகின் அதிசிறந்த வீரருமாகத் தெரிவான லயனல் மெஸி தெரிவித்துள்ளார். 2015இல் போன்றே புதிய ஆண்டிலும் ஐந்து வெற்றிக் கிண்ணங்களை வென்றெடுக்க பார்சிலோனா கழகம் உறுதிபூண்டுள்ளதை எதிரணிகளுக்கு கூற விரும்புவதாக லயனல் மெஸி குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரியல் பேட்டிஸ் அணிக்கு எதிரான போட்டி மூலம் தனது 500ஆவது கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய …
-
- 0 replies
- 499 views
-
-
முதலிடத்தில் இந்தியா: ஐந்தாமிடத்தில் இலங்கை இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தரவரிசையின் முதலிடத்தையும், அவ்வணி உறுதிசெய்தது. இத்தொடரின் முதலாவது போட்டியை வென்று, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஐந்தாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. 2ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து எனக் காணப்படும் இவ்வரிசையில், 6ஆவது இடத்திலிருந்து தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, …
-
- 0 replies
- 480 views
-
-
ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட் ப்ரூனோ பெர்னாண்டோ தனது புதிய கழகத்திற்காக முதல் கோலை பெற்ற நிலையில் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. இதன்மூலம் முதல் நான்கு இடங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மன்செஸ்டர் …
-
- 0 replies
- 357 views
-
-
கிரிக்கெட்டுக்கு ஏன் இன்னும் இவ்வளவு ரசிகர்கள்? ஆதாரத்தை காட்டும் வோர்னர், இம்ரான் தாஹிர் ; இரசிக்க வைக்கும் காணொளி தென்னாபிரிக்கா மற்றும் ஆஸி அணிகளுக்கான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வோர்னர் மற்றும் தாஹீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதமானது போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கொண்டே இருந்தது. இவர்களின் தொடர் வாக்குவாதத்தினை நடுவர்கள் இணைந்து சமாதானப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் வோர்னர் 173 ஓட்டங்களை விளாசிய நிலையில், தாஹீர் ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்நிலையில் போட்டியின் போது பல வாக்குவாதங்க…
-
- 0 replies
- 175 views
-
-
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி! இலங்கை மற்றும் சுற்றலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக 135 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில 359 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 421 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் வெற்றிப் இலக்காக இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்திருந்தது. இதற்கமைய தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது டெஸ…
-
- 0 replies
- 471 views
-
-
ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி. மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது”…
-
- 0 replies
- 379 views
-
-
சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன் லண்டன்: இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முறியடிப்பார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின், இதுவரை 198 டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837 ரன்கள் குவித்திருக்கிறார். 28 வயது நிரம்பிய இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்க, குக் 31வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனையை அலஸ்டயர் குக்கால் முறியடிக்…
-
- 0 replies
- 453 views
-
-
என்னை ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க...வீட்டுக்கு போய் தூங்குங்க: கதறிய டோனி டோனியை விடாமல் பத்திரிக்கையாளர்கள் விரட்டியதால், வீட்டுக்கு போய் தூங்குங்க என்று டோனி பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார். இந்திய அணியின் மூன்று வித போட்டிகளிலும் தலைவராக இருந்த டோனி, சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லின் புனே அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் உள்ளூரில் நடக்கும் விஜய் ஹசாரே தொடருக்காக ஜார்கண்ட் அணிக்கு தலைவராக பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இவர் தலைமையிலான ஜார்கண்ட் அணி நேற்று அபார வெற்றி பெற்றது. இந…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி: விஸ்டன் இதழ் புகழாரம் கடந்த 2016-ம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோலியை விஸ்டன் அறிவித்து அவருக்கு புதிய மகுடத்தை சூட்டியுள்ளது. இந்திய அணியில் தற்போது சூப்பர் மேனாக திகழ்ந்து வருபவர் கேப்டன் விராட் கோலி. ரன் எடுக்கும் எந்திரம் என்று தற்போது எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் மேலும் இவரது ரன் குவிக்கும் வேக சூடுபிடித்தது. நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து மற்ற…
-
- 0 replies
- 496 views
-
-
பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை பிரதீப் குமார் பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2021, 03:42 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIPIN KUMAR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES) இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சில …
-
- 0 replies
- 611 views
- 1 follower
-
-
பார்சிலோனாவை விமர்சிக்கிறார் நேமர் பரிஸ் செய்ன்ட் ஜேர்மா அணியின் புதிய ஒப்பந்தமான நேமர், தனது முன்னைய கழகமான பார்சிலோனாவின் பணிப்பாளர்கள் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "பார்சிலோனாவுக்கு, இதைவிடச் சிறப்பான விடயங்கள் கிடைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவின் நட்சத்திர வீரராகக் காணப்பட்ட நேமர், உலக சாதனைத் தொகையான 222 மில்லியன் யூரோக்களுக்கு, பரிஸ் கழகமான பரிஸ் செய்ன்ட் ஜேர்மாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது புதிய கழகத்துக்கான அறிமுகப்போட்டியில், 2 கோல்களைப் பெற்ற நேமர், 6-2 என்ற கோல் கணக்கில், தௌலோஸ் அணியை வீழ்த்துவதற்கு உதவியிருந்தார். …
-
- 0 replies
- 204 views
-
-
இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம் இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம் சிட்னியில் நடைபெற்ற 2015 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குப் பின்னர் அணியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் அணியின் தூண்களாக இருந்த குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன இருவருமே சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்கள். சங்கக்கார இதற்கு பின்னரும் ஒருசில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தபோதும் அது அணிக்கு பலம் சேர்க்கவே தவிர அவரது இடம் நிரந்தரமானதாக இருக்கவில்லை. எனவே உலகக் கிண்ண போட்டிக்கு பின்னரான இலங்கை அணியில் …
-
- 0 replies
- 549 views
-
-
ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் ஆஸ்திரேயாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார். கான்பெரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெ…
-
- 0 replies
- 471 views
-
-
விக்ராந்த், விஷ்ணு இல்லாத சென்னை சிசிஎல் அணி முதல் போட்டியில் தோல்வி! திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சி.சி.எல் போட்டி நேற்று முதல் தொடங்கியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய சென்னை ரைனோஸ் அணியை பெங்கால் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பெங்கால் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஷாம் சென்னை சென்னை அணியின் கேப்டனாகவும் ஜாய் பெங்கால் அணி கேப்டனாகவும் செயல்பட்டார்கள். நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் பெங்கால் அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன…
-
- 0 replies
- 361 views
-
-
சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை 21 வயதான யுவதி அன்ச்சல் தக்கூர் தனதாக்கிக்கொண்டார். துருக்கியில் நடைபெற்ற அல்பைன் எஸ்டர் 3200 கிண்ண பனிச்சறுக்கல் போட்டியில் அன்ச்சல் தக்கூர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டி சர்வதேச பனிச்சறுக்கல் (ஸ்கி) சம்மேளனத்தினால் நடத்தப்பட்டது. இந்தியாவில் பனிப்பொலிவு இடம்பெறுவது அரிது என்பதால் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. வெண்கலப் பதக்கம் வென்ற அன்ச்சலை முதலாவதாக பாராட்டியவர்களில் இந்தியப் பிரதமர…
-
- 0 replies
- 328 views
-
-
ரிவர்ஸ் ஸ்விங்கின் அறிவியலும் ஆஸ்திரேலியா வைத்துக்கொண்ட ஆப்பும்! #SAvAUS ஆஸ்திரேலியா மொத்தமும் அப்சட்டாக இருக்கிறது. அனுபவமற்ற வீரர் ஒருவர் ஒழுக்கமற்ற செயலில் இறங்க, அது 'எங்கள் திட்டம்' என்று கேப்டன் அப்ரூவர் ஆகிவிட, ஆஸ்திரேலிய பிரதமரே அதைப் பற்றி நேரடியாக பேட்டி கொடுத்தார். கேப்டன், துணைக் கேப்டன் ராஜினாமா... இருவர் சஸ்பென்ஷன்... லீடர்ஷிப் குழு மீது விசாரணை என இரண்டு நாளில் ஏகப்பட்ட களேபரங்கள். மற்ற நாட்டு வீரர்களெல்லாம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆஸி அணி மீதான தங்களின் வன்மத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் நிர்வாகம் முதல் ராஜஸ்தான் ராயலஸ் போர்டு வரை அடுத்து என்ன செய்வது எனக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு சம்பவம் சாம்பியன்…
-
- 0 replies
- 509 views
-
-
நியூசிலாந்து பிரபலம் வாய்ந்த ஆக்லாந்து ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தை கைவிடுகிறது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகழ்பெற்ற மைதானமாக ஈடன் பார்க்கை கைவிட்டு புதிய கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்கிறது. #nz கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று நியூசிலாந்து. இதுவரை உலகக்கோப்பை தொடரை வென்றது இல்லை என்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நியூசிலாந்தில் உள்ள முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆக்லாந்து ஈடன் பார்க். 1930-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் கிரிக்கெ…
-
- 0 replies
- 379 views
-
-
`எப்படி இருக்கீங்க?!’ - கொஞ்சும் தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி பதில் தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்திருந்தார். யுவராஜுக்கு முன்னதாகத் தாம் களமிறங்கியது ஏன் என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார். ஓய்வு நாள்களில் தனது மகள் ஸிவாவுடன் இருப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட…
-
- 0 replies
- 884 views
-
-
என் அணிக்கு இவர் கட்டாயம் வேண்டும்… அடம் பிடிக்கும் விராட் கோஹ்லி..! இந்திய அணியில் தற்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்திற்கும் தலைமையேற்றுள்ளார் விராட் கோஹ்லி. இவர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. டி 20 தொடரில் முதல் முறையாக தலைவர் பதவியை வகித்து முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார் கோஹ்லி. இந்திய அணிக்கு தலைவராக உள்ள கோஹ்லி, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் தலைவராக உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு நடத்தப்படும் ஐபி…
-
- 0 replies
- 570 views
-
-
டிவில்லியர்ஸ் விரைவில் ஆட்டமிழக்க வேண்டிக்கொள்வதுதான் ஒரே வழி: வங்கதேச பயிற்சியாளர் ஏ.பி. டிவில்லியர்ஸை கண்டு நடுங்கும் வங்கதேச அணி. | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பலம் குறித்து வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுரசிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார். வங்கதேச அணியின் மிகப்பெரிய பலமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்தான், தன் நாட்டு பேட்ஸ்மென்கள் ஒரு ரன் எடுத்தால் காட்டுக்கூச்சல் போடுவதும், எதிரணி வீரர் புரட்டி எடுத்தால் கூட வாயைத் திறக்காமல் மைதானமே மவுனத்திலும் நிச்சலனத்திலும் மூழ்கிவிடுவதை அனைவரும் பார்த்திருக்கலாம். இந்நிலையில், அந்த உற்சாகமான ரசிகர்களின் வாயை தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அ…
-
- 0 replies
- 298 views
-
-
முரளிதரன், ரிச்சர்ட் ஹேட்லிக்குப் பிறகு விரைவு 400 விக்கெட்டுகள்: டேல் ஸ்டெய்ன் சாதனை தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 400வது விக்கெட்டைக் கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.எஃப்.பி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். முத்தையா முரளிதரன் 72 டெஸ்ட்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் வகிக்க, நியூஸிலாந்தின் வேகப்பந்து முன்னாள் மேதை ரிச்சர்ட் ஹேட்லி 80 போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தற்போது டேல் ஸ்டெய்ன் 80-வது டெஸ்ட் போட்டியில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஹேட்லியுடன் 2-…
-
- 0 replies
- 239 views
-
-
குசல் மன உறுதியுடன் ஆற்றலை வெளிப்படுத்தினார்.-ஏஞ்சலோ மெத்யூஸ் 2015-09-04 12:00:05 குசல் ஜனித் பெரேரா மன உறதியுடன் துடுப்பெடுத்தாடி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பற்றிப்பிடித்துக்கொண்டார் எனக் கருதுவதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டார். ''அவர் ஓர் ஆற்றல்மிக்க வீரர். எந்தவகையான சூழ்நிலையிலும் அவர் மன உறுதியுடன் விளையாடக்கூடியவர். எமது துடுப்பாட்ட வரிசையைப் பற்றி நாங்கள் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். மத்திய வரிசையில் விரைவாக ஓட்டங்களைப் பெறக்கூடிய ஒருவர் எமக்குத் தேவைப்பட்டது. அதனால்தான் குசலை 7ஆம் இலக்க வீரராக கொண்டுவந்தோம்'' என இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது …
-
- 0 replies
- 326 views
-
-
நெய்மர், சுவாரஸின் ஆட்டத்தால் வில்லாரியலை வீழ்த்தியது பார்சிலோனா பார்சிலோனா அணியில் கடந்த சில வாரங்களாக லயனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். ஆனால், அவர் இல்லாத குறையை நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் சிறப்பான முறையில் சரிசெய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-ஆவது பாதி நேரத்தில் 60-ஆவது நிமிடத்தில் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 10ஆ-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 85ஆ-வது நிமிடத்தில் நெய்மர் மேலும் ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா …
-
- 0 replies
- 197 views
-
-
யுஏஇ-யில் ஆடுவதில் என்ன பிரச்சினை?: பிசிசிஐ-க்கு பாக். கிரிக்கெட் வாரியம் கேள்வி கோப்புப் படம்: ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் வந்து விளையாட பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. “இந்தியாவில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷஹார்யார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “ஏன் யுஏஇ-யில் ஆட முடியாது என்ற காரணத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது. இது எங்கள் தொடர் எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அதாவது யுஏஇ-யில் தான் விளையாடுவோம். …
-
- 0 replies
- 356 views
-