விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க, மற்றும் இலங்கை இளையோர் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கையின் 19 வயத்துக்குட்படந்தோர் அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்க இளையோர் அணி, அதன் பின்னர் மீதமான இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது. தீர்மானம் மிக்க ‘காமினி திஸாநாயக்க’ தொடரின் இறுதி போட்டி கொழும்பு,பி, சரவணமுத்து மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் ப…
-
- 0 replies
- 337 views
-
-
ரகசியங்களை வெளியிடுவேன்..! பாக். கிரிக்கெட் வாரியத்தை மிரட்டும் அப்ரிடி பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அப்ரிடி அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்களை விட சிறந்த முறையில் விளையாடினேன் என உணர்ந்தேன். அதனால் ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறவில்லை. அணியில் இருந்து விலகும்பொழுது அது தகுதியுடைய ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன். நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நில…
-
- 0 replies
- 283 views
-
-
ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியது. இன்றை ஆரம்ப நிகழ்வு வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் கலந்துகொண்டார். இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட…
-
- 4 replies
- 1.7k views
-
-
யூரோவின் ‘தல’! எம்.பிரதீப் கிருஷ்ணா `கிளப்புக்கு ஹீரோ... நாட்டுக்கு ஸீரோ’ என்ற விமர்சனத்தை அதிரடியாக உடைத் திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. முதன்முறையாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கெளரவமான யூரோ கோப்பையை ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்திப்பெறாத நாடு போர்ச்சுக்கல். ஆனால், அது கால்பந்திலும் இதுவரை எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை. `நம் அணி ஒருமுறையாவது உலக அளவில் ஒரு கோப்பையை வெல்லாதா?’ என ஏங்கிக் கிடந்தது போர்ச்சுக்கல். மொத்த தேசத்தின் ஏக்கத்தையும் அணித் தலைவனாக நின்று, கோப்பையை வென்று கொண்டாட் டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் ரொனால்டோ. யூ…
-
- 0 replies
- 632 views
-
-
மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ; முதலைக்குடா விநாயகர் அணி சம்பியனாகியது (சதீஷ்) மட்டக்களப்பு மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலைக்குடா விநாயகர் அணி சம்பியனாகியுள்ளது. 1987 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் இப்பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்தமாக இந்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. 20 இற்கும் அதிகமான கழகங்கள் இப்போட்டிகளில் பங்…
-
- 0 replies
- 237 views
-
-
பிபா கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் யூரோ கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் 10 இடங்களும், வேல்ஸ் 15 இடங்களும் முன்னேறியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் முதன்முறையாக கோப்பையை வென்றது. போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கத்துக்குட்டி அணியான வேல்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முன்னேறியதால் பிபா தரவரிசையில் வேல்ஸ் அணி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்குமுன் வேல்ஸ் அணி 26-வது இடத்தில் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட ப…
-
- 0 replies
- 346 views
-
-
லார்ட்ஸ்...இங்கிலாந்து...6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முகமது ஆமிர்! #ThrowbackThursday ஆகஸ்ட் 2010, சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் படுதோல்வி அடைந்து திரும்பியது. தொடர் நாயகன் முகமது ஆமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வேன்டுமென்றே நோபால் வீசியது தெரிய வந்து 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் திரும்ப களம்கண்ட ஆமீர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு கில்லியாகியுள்ளார். அணிக்கு திரும்பியதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். உலகின் அதி பயங்கர வீரர்களான கோலி, டிவில்லியர்ஸையே டி20 போட்டிகளில் நிலை குலைய வைத்தார். ஆசியக் கோப்பையில் இந்தியாவை அலறவிட்ட ஆமீருக்கு ஒரு பேட்டை பரிசளிப்பதாக கோலி கூறி உலகக் கோப்பையில் அதன…
-
- 0 replies
- 185 views
-
-
அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அயர்லாந்தில் இடம்பெற்றுவரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரில், 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து, முதலில் ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாட பணித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, மொஹம்மட் ஷஷாட் 66, நஜிபுல்லா ஸட்றான் 59 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிறைன், பரி மக்கிராத்தி ஆகியோர் தலா ந…
-
- 0 replies
- 252 views
-
-
மொரின்ஹோ யுகத்தை எதிர்பார்க்கும் றூணி மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் நட்சத்திர வீரரான வெய்ன் றூணி, தனது அணியின் புதிய முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோவின் கீழ் விளையாடுவதற்கு, அதிக ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, இடம்பெறவுள்ள பிறீமியர் லீக் பருவகாலம் தொடர்பாக எதிர்பார்ப்புடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றிய லூயிஸ் வான் காலின் காலத்தில், மத்தியகள வீரராக விளையாடிய வெய்ன் றூணி, கடந்த பருவகாலத்தில் கோல்களைப் பெறுவதற்குத் தடுமாறியிருந்தார். ஆனால், இம்முறை அவரை முன்கள வீரராகக் களமிறக்கும் சமிக்ஞைகளை, மொரின்ஹோ வெளியிட்டுள்ளார். அத்தோடு, புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஸல்ட்டான் இப்ராஹிமோவிக்குடன் இணைந்து,…
-
- 0 replies
- 243 views
-
-
தடிப்பான துடுப்புகளுக்கு வருகிறது ஆப்பு கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்புகளின் அளவை மட்டுப்படுத்துவதற்கான விதிகளை, கிரிக்கெட்டின் விதிகளில் ஏற்படுத்த வேண்டுமென, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலக கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சை அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தெரிவித்துள்ள அக்குழு, துடுப்புகளின் தடிப்பம் குறித்தும் அவற்றின் எடை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது. அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், எம்.சி.சி-இன் விதிகள் தொடர்பான இறுதி முடிவில் அதிகளவில் மதிக்கப்படும் சுயாதீனமான இந்தக் குழுவில், சர்வ…
-
- 0 replies
- 450 views
-
-
தாமதமாக வந்தால் 50 டாலர் அபராதம் - கும்ப்ளே அதிரடி! அணியின் பேருந்தை தவறவிட்டால், வீரர்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி காட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜுலை 14ம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. தொடர்ச்சியான போட்டிகளுக்கு…
-
- 0 replies
- 294 views
-
-
திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தியை நோக்காக கொண்டு திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் கடந்த 9 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நோமன்ட்ஸ் மற்றும் ஜோஸ் விளையாட்டு கழகம் ஆகியன பங்கெடுத்தன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோமன்ட்ஸ் கழகம் முதலில் துடுப்பாட முடிவு செய்தது. …
-
- 0 replies
- 243 views
-
-
படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பயணித்த உடைப்பை சேர்ந்த 25 வயதான ஒரு வீரர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். இவரது குடும்பம் இப்போதும் உடம்பில் வசித்துவரும் நிலையில், இவர் மிகவும் அபாயகரமானதாக எச்சரிக்கப்படும் படக்குப் பயணம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்திரேலிய மண்ணை அடைந்தார். அகதி அந்தஸ்துக்க்கோரி விண்ணப்பித்திருக்கும் யுகேந்திரன் சின்னவைரன் என்ற இந்த வீரன், கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ‘D’ பிரிவு ஆட்டத்தில் டார்வின் அணிக்கெதிரா…
-
- 0 replies
- 333 views
-
-
போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ! “ சச்சின், 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சுமந்து கொண்டிருக்கிறார். இன்று அவரை நாங்கள் சுமக்கப் போகிறோம்” என்று உலகக் கோப்பை வென்றதும் மகிழ்ச்சியோடு கூறினார் விராத் கோலி. அதே மகிழ்ச்சியோடு இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து கொண்டிருக்கிறது. ஆம்...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் இன்னும் சில வாரங்கள் அவர்கள் சுவாசிக்கப் போகிறார்கள். இனி மூன்று வேலை உணவும் இனி அவர்களுக்கு அந்தப் பெயர்தான். கால்பந்து வெறியர்களின் வாட்ஸ் அப் டி.பி முதல் அவர்கள் அணியும் டீ-ஷர்ட் வரை இன்னும் சில மாதங்கள் எங்கும் ரொனால்டோ.. எதிலும் ரொனால்டோ தான்! கால்பந்தைத் தவிர்த்து வேறு …
-
- 0 replies
- 385 views
-
-
ரோயல் லண்டன் ஒருநாள் தொடரில் மஹேல லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார். சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார். http://www.virakesari.lk/article/8892
-
- 0 replies
- 275 views
-
-
தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பில் பங்குபற்ற திருமலை பெண்கள், அம்பாறை ஆண்கள் அணிகள் தகுதி 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக பெண்கள் பிரிவில் திருகோணமலை மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும் பங்குபற்றவுள்ளன. 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண அணியைத் தெரிவு செய்வதற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை…
-
- 1 reply
- 193 views
-
-
ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (11) அறிவித்துள்ளார். எனினும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளைாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் இதுவரையில் 130 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெய்லர் தனது 18 ஆவது வயதில் இலங்கை அணிக்கெதிராக தனது முதலாவது போட்டியில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இவருடைய டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றின் சிறப்பான பந்துவீச்சுப் பதிவு என்றால் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 ஆம் ஆண்டு 47 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டினை கைப்பற்றியமையை கூறமுட…
-
- 0 replies
- 260 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் யாழ். மகாஜனாவின் அனிதா ஜெகதீஸ்வரனுக்கு தங்கப்பதக்கம் தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 94 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனிதா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றார். இப் போட்டியில் தன்னைவிட வசதி வாய்ப்புகள் நிறைந்த, சிறந்த நுட்பத்திறனுடான பயிற்சிகள் பெற்றுவரும் படைத்தரப்பு வீராங்கனைகளுடன் போட்டியிட்ட அனிதா 3.30 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பிலேயே இப் போட்டியில் பங்குபற்றினார். 3.30 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியி…
-
- 0 replies
- 553 views
-
-
சம்பியனானது அரசடித்தீவு விக்னேஸ்வரா வி.க -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெனால்டி மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தொடரில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன. இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ…
-
- 0 replies
- 254 views
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிராக லோட்ஸில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ரோபி ரெனால்ட் ஜோன்ஸ் என்ற வீரர் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். இவ்வணியில் இவருக்கும் இலங்கைக்கு எதிராக அழைக்கப்பட்ட ஜக் போல்லுக்கும் இடையே யார் உபாதையடைந்துள்ள ஜேம்ஸ் அண்டர்சனுக்கு பதிலாக அறிமுகம் பெறுவது என்ற போட்டி உள்ளது. இதில் காயம் காரணமாக இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இடம்பெறவி…
-
- 23 replies
- 2.5k views
-
-
பீலே மூன்றாவது திருமணம் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தற்போது 75 வயதாகிறது. ஏற்கெனவே பீலே செய்த இரண்டு திருமணமும் முறிந்து போனது. ரோஸ்மேரி ஜோல்பி என்ற முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உண்டு. இரண்டாவதாக அஸ்ரியா என்பவரை திருமணம் செய்தார். அந்த வகையில் இரு குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பீலே தந்தை. இந்த நிலையில் 42 வயது மார்சியா சிப்லே அயோகி என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கடந்த 1980ம் ஆண்டு பீலேவும் மார்சியாவும் நியூயார்க்கில் சந்தித்துள்ளனர். அந்த பழக்கம் நட்பாக மாறி தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதலே இருவரும் சாபோலோ நகரில் தனியாக சந்திக்கத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமையன்று…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். தம்புள்ள கிரிக்கட் மைதானம் பகலிரவு போட்டிகளை நடாத்தும் மைதானமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் , அவுஸ்திரேலிய அணியோடு அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் போட்டிகளை மையமாகக் கொண்டு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை மேம்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் இறுதியாக 2010ஆம் ஆண்டு பகலிரவு ஒருநாள் போட்டி இடம்பெற்றிருந்தது.அதன் பின் மின் விளக்குகளில் பற்றாக் குறை காரணமாக அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. இதைவிடவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி பகல…
-
- 0 replies
- 241 views
-
-
ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும். கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர். ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு பேரியோவை குத்தித் தூக்கி வீசி,பின்னர் அவரது வலப்புற நெஞ்சில் மூர்க்கமாகக் குத்தித் தூக்கி எறிந்ததை தொலைக்காட்சிக் காட்சிகள் காட்டின. சனிக்கிழமை இந்த சம்பவம…
-
- 1 reply
- 532 views
-
-
கடற்கரை கைபந்து விளையாடிய இந்திய அணி (வீடியோ இணைப்பு) மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றுள்ள இந்தியா அணி ஓய்வு வேளையில் கடற்கரை ஓரத்தில் கடற்கரை கைபந்து (Beach volleyBall ) விளையாடினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலியே தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த தொடர் வருகிற 21 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. ht…
-
- 36 replies
- 2.3k views
-