Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தியை நோக்காக கொண்டு திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் கடந்த 9 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நோமன்ட்ஸ் மற்றும் ஜோஸ் விளையாட்டு கழகம் ஆகியன பங்கெடுத்தன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோமன்ட்ஸ் கழகம் முதலில் துடுப்பாட முடிவு செய்தது. …

  2. படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பயணித்த உடைப்பை சேர்ந்த 25 வயதான ஒரு வீரர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். இவரது குடும்பம் இப்போதும் உடம்பில் வசித்துவரும் நிலையில், இவர் மிகவும் அபாயகரமானதாக எச்சரிக்கப்படும் படக்குப் பயணம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்திரேலிய மண்ணை அடைந்தார். அகதி அந்தஸ்துக்க்கோரி விண்ணப்பித்திருக்கும் யுகேந்திரன் சின்னவைரன் என்ற இந்த வீரன், கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ‘D’ பிரிவு ஆட்டத்தில் டார்வின் அணிக்கெதிரா…

  3. போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ! “ சச்சின், 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சுமந்து கொண்டிருக்கிறார். இன்று அவரை நாங்கள் சுமக்கப் போகிறோம்” என்று உலகக் கோப்பை வென்றதும் மகிழ்ச்சியோடு கூறினார் விராத் கோலி. அதே மகிழ்ச்சியோடு இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து கொண்டிருக்கிறது. ஆம்...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் இன்னும் சில வாரங்கள் அவர்கள் சுவாசிக்கப் போகிறார்கள். இனி மூன்று வேலை உணவும் இனி அவர்களுக்கு அந்தப் பெயர்தான். கால்பந்து வெறியர்களின் வாட்ஸ் அப் டி.பி முதல் அவர்கள் அணியும் டீ-ஷர்ட் வரை இன்னும் சில மாதங்கள் எங்கும் ரொனால்டோ.. எதிலும் ரொனால்டோ தான்! கால்பந்தைத் தவிர்த்து வேறு …

  4. ரோயல் லண்டன் ஒருநாள் தொடரில் மஹேல லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார். சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார். http://www.virakesari.lk/article/8892

  5. தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பில் பங்குபற்ற திருமலை பெண்கள், அம்பாறை ஆண்கள் அணிகள் தகுதி 42 ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் கிரிக்கெட் போட்­டி­களில் கிழக்கு மாகாணம் சார்­பாக பெண்கள் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் அம்­பாறை மாவட்ட அணியும் பங்­கு­பற்­ற­வுள்­ளன. 42 ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்கு கிழக்கு மாகாண அணியைத் தெரிவு செய்­வ­தற்­கான கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று பொது விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­றது. இதில் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளை…

  6. ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (11) அறிவித்துள்ளார். எனினும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளைாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் இதுவரையில் 130 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெய்லர் தனது 18 ஆவது வயதில் இலங்கை அணிக்கெதிராக தனது முதலாவது போட்டியில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இவருடைய டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றின் சிறப்பான பந்துவீச்சுப் பதிவு என்றால் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 ஆம் ஆண்டு 47 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டினை கைப்பற்றியமையை கூறமுட…

  7. கோலூன்றிப் பாய்தலில் யாழ். மகாஜனாவின் அனிதா ஜெகதீஸ்வரனுக்கு தங்கப்பதக்கம் திய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 94 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் யாழ். தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மாணவி அனிதா ஜெக­தீஸ்­வரன் கோலூன்றிப் பாய்­தலில் தங்கப் பதக்கம் வென்றார். இப் போட்­டியில் தன்­னை­விட வசதி வாய்ப்­புகள் நிறைந்த, சிறந்த நுட்­பத்­தி­ற­னு­டான பயிற்­சிகள் பெற்­று­வரும் படைத்­த­ரப்பு வீராங்க­னை­க­ளுடன் போட்­டி­யிட்ட அனிதா 3.30 மீற்றர் உய­ரத்தைத் தாவி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இவர் யாழ். மாவட்ட மெய்­வல்­லுநர் சங்கம் சார்­பி­லேயே இப் போட்­டியில் பங்­கு­பற்­றினார். 3.30 மீற்றர் உய­ரத்தை முதல் முயற்­சி­யி…

  8.  சம்பியனானது அரசடித்தீவு விக்னேஸ்வரா வி.க -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெனால்டி மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தொடரில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன. இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ…

  9. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிராக லோட்ஸில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ரோபி ரெனால்ட் ஜோன்ஸ் என்ற வீரர் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். இவ்வணியில் இவருக்கும் இலங்கைக்கு எதிராக அழைக்கப்பட்ட ஜக் போல்லுக்கும் இடையே யார் உபாதையடைந்துள்ள ஜேம்ஸ் அண்டர்சனுக்கு பதிலாக அறிமுகம் பெறுவது என்ற போட்டி உள்ளது. இதில் காயம் காரணமாக இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இடம்பெறவி…

  10. பீலே மூன்றாவது திருமணம் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தற்போது 75 வயதாகிறது. ஏற்கெனவே பீலே செய்த இரண்டு திருமணமும் முறிந்து போனது. ரோஸ்மேரி ஜோல்பி என்ற முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உண்டு. இரண்டாவதாக அஸ்ரியா என்பவரை திருமணம் செய்தார். அந்த வகையில் இரு குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பீலே தந்தை. இந்த நிலையில் 42 வயது மார்சியா சிப்லே அயோகி என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கடந்த 1980ம் ஆண்டு பீலேவும் மார்சியாவும் நியூயார்க்கில் சந்தித்துள்ளனர். அந்த பழக்கம் நட்பாக மாறி தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதலே இருவரும் சாபோலோ நகரில் தனியாக சந்திக்கத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமையன்று…

  11. இலங்கை எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

  12. பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். தம்புள்ள கிரிக்கட் மைதானம் பகலிரவு போட்டிகளை நடாத்தும் மைதானமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் , அவுஸ்திரேலிய அணியோடு அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் போட்டிகளை மையமாகக் கொண்டு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை மேம்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் இறுதியாக 2010ஆம் ஆண்டு பகலிரவு ஒருநாள் போட்டி இடம்பெற்றிருந்தது.அதன் பின் மின் விளக்குகளில் பற்றாக் குறை காரணமாக அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. இதைவிடவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி பகல…

  13. ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும். கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர். ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு பேரியோவை குத்தித் தூக்கி வீசி,பின்னர் அவரது வலப்புற நெஞ்சில் மூர்க்கமாகக் குத்தித் தூக்கி எறிந்ததை தொலைக்காட்சிக் காட்சிகள் காட்டின. சனிக்கிழமை இந்த சம்பவம…

  14. கடற்கரை கைபந்து விளையாடிய இந்திய அணி (வீடியோ இணைப்பு) மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றுள்ள இந்தியா அணி ஓய்வு வேளையில் கடற்கரை ஓரத்தில் கடற்கரை கைபந்து (Beach volleyBall ) விளையாடினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலியே தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த தொடர் வருகிற 21 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. ht…

  15. சிறைத்தண்டனை காரணமாக பார்சிலோனாவை விட்டு வெளியேற மெஸ்சி திட்டம்? மெஸ்சி குற்றமற்றவர் தொடர்ந்து பார்சிலோனா அவர் அணிக்கு விளையாட வேண்டும் ஸ்பானீஷ் லீக்கை விட்டு வெளியேறி விட கூடாது என லா லீகாத் தலைவர் ஜேவியர் டெபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக நீண்டகாலம் விளையாடி வருகிறார். அண்மையில் சுமார் 60 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பார்சிலோனா நீதிமன்றம் மெஸ்சிக்கும் அவரின் தந்தைக்கும் 21 மாத சிறைத்தண்டனையும் தலா ரூ15 கோடி அபராதமும் விதித்தது. எனினும் ஸ்பெயின் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு குறைவாக சிறைத்தண்டனைக்குள்ளானால், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. அபராதத்தை செலுத்…

  16. ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள் அபினவ் பிந்திரா: தங்கத்தை சுட்ட விரல்கள்! கண்களில் குறைபாடு உள்ள ஒரு குழந்தை, தன் தந்தையிடம், “நான் துப்பாக்கி சுடும் வீரனாக விரும்புகிறேன்” என்று கூறினால் என்ன பதில் கிடைக்கும்? “மகனே துப்பாக்கியில் குறி பார்த்து சுடுவதற்கு நல்ல கண் பார்வை அவசியம். அதனால் அது உனக்கு சரிப்பட்டு வராது. வேறு ஏதாவது துறையை தேர்ந்தெ டுத்துக் கொள்!” என்று ஆலோ சனை கூறி, அவனுக்கு ஏற்ற வேறு ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுக்கச் சொல்வார். ஆனால் அபினவ் பிந்திராவின் அப்பாவான அபிஜித் பிந்திரா, அப்படி செய்யவில்லை. ‘மைனஸ் 4’ பார்வை குறைபாடு கொண்ட தன் மகன், அந்த விளையாட்டில்…

  17. பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியுற்றது - அஞ்சலோ மெத்யூஸ் இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியை தழுவியதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணி,இங்கிலாந்து தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது இலங்கை அணியின் சில வீரர்கள் தங்களின் திறன்களை மேலும் வலுவூட்டிக் கொண்டனர். அதில் தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் அடங்குவதாக தெரிவித…

  18. தோனி ஏன் ’தல’ தெரியுமா? - ஒரு ரசிக வெறியனின் டைரி * ஏப்ரல் 2005. எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று, ஸ்கூலுக்கு திரும்புவது வழக்கம். அன்று இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் வேறு. வேகமாக வீட்டிற்கு ஓடினால் கரன்ட் இல்லை. சோகமாக சாப்பிட்டுவிட்டு வரும்போது எதிரில் வந்தார் ஆனந்த் அண்ணன். ஸ்கூல் சீனியர். 'ஸ்கோர் எவ்ளோண்ணே?' என்றேன். 'வெளுத்துட்டானுகடா... 356' என்றார். அந்தக் காலகட்டத்தில் 300-ஐ தொட்டாலே புருவங்கள் உயரும். 'எப்படிண்ணே?' என்றேன். 'புதுசா ஒரு சடையன் வந்துருக்கான்ல..... காட்டான் மாதிரி அடிக்கிறான்' என ஊர் மணத்தோடு ஒரு 'வார்த்தையைச்' சேர்த்துப் பெருமையாகச் சொன்னார். தோனி எனக்கு அறிமுகமானது சடையனாகவும், காட்டானாகவும்தான். …

  19. அளவில் பெரிய துடுப்புகளை தடை செய்யவும்’-ரிக்கி பொன்டிங் டேவிட் வோர்னர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்­ப­டுத்தும் அள­வுக்கு அதிகம் பெரி­தான துடுப்­புகள் (பட்கள்) தடை­செய்­யப்­ப­ட ­வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் தெரிவித்தார். உயிர்­பா­து­காப்பு மற்றும் துடுப்­புக்கும் பந்­துக்கும் இடையில் நிலவும் சமச்­சீ­ரற்ற தன்மை ஆகி­யன தொடர்பில் வெளி­யாகும் கருத்­துக்­களை அடுத்தே ரிக்கி பொன்டிங் இதனைத் தெரி­வித்­துள்ளார். குறை­பாரம் கொண்ட ஆனால் அளவில் பெரி­தான துடுப்­புகள் டெஸ்ட் போட்­டியில் சீர­மைக்­கப்­ப­ட­ வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ள அவர், அளவில் பெரி­தான துடுப்­புகள் மட்­…

  20. மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டது இந்திய அணி காம்போ போட்டோ. | பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 21-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் 9-ம் தேதி நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்த…

  21. மெஸ்ஸிக்கு 21 மாத சிறை ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லியனல் மெஸ்ஸிக்கு, வரி மோசடிக் குற்றத்தில் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் 4.1 மில்லியன் யூரோவை மோசடி செய்தமைக்காக மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனைக் காலத்தை தவிர்ப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு வருடத்துக்கு குறைவான சிறைத்தண்டனையை பெறுவோர், அதை நன்னடத்தைக் காலத்தில் கழிக்கலாம் என்பது குற…

  22. கேட்ச் பிடிப்பதில் நாசர் ஹூசைன் கின்னஸ் சாதனை ( வீடியோ ) கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக உயரத்தில் இருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் . ........ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ட்ரோனில் இருந்து 160 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை நாசன் ஹூசேன் கேட்ச் பிடித்து அசத்தினார். இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாம். ஆனால் 400 அடியில் இருந்து வீசப்பட்ட பந்தை பிடிக்க ஹூசேனால் முடியவில்லை. நாசர் ஹூசேன் சென்னையில் பிறந்தவர் .இங்கிலாந்து அணிக்காக 88 ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். http://www.vikatan.com/new…

  23. சுவாரஸ்யம் - அனுபவியுங்கள் - டோனியின் பதிய அறிவுரை இந்திய அணியின் வருங்கால வளர்ச்சி குறித்து விவாதிக்க டோனி, விராட் கோலி, டிராவிட், அனில் கும்ப்ளே, தேர்வாளர் பட்டோடி போன்றோர் நேற்று பெங்களூரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் மூத்த மற்றும் இளம் வீரர்கள் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தனர். பின்னர் விராட் கோலி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கிடையில் டோனி உரையாற்றினார். அப்போது டோனி கூறுகையில் ‘‘நாம் 45 நிமிடங்கள் டிரம் வாசிப்பு பயிற்சியில் ஈடுபட்டோம். பின்னர் இதுபோன்று மியூசிக் கருவிகளை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை என்று ஒத்துக்கொண்டார்கள். ஆகவே, இதுபோன்று சம்பவ…

  24. இலங்கை அணியில் அதிரடி மாற்றம் : இலங்கை டி20 குழாமில் ரமித் ரம்புக்வெல்ல இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியான டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணி பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்த இறுதிப் போட்டிக்காக இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் ரமித் ரம்புக்வெல்ல இங்கிலாந்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரம்புக்வெல்ல இலங்கை ஏ அணிக்காக 2013 ஆம் அண்டு ஒரு டி20 போட்டியில் நியுஸிலாந்து அணிக்கெதிராக விளையாடியுள்ளார். இந்த போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை கைப்பற்றியுள்ளார். இதேவேளை ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட உபுள் தரங்கவையும…

  25. 'அது ஒரு மெலிசான கோடு' – கோலி குறித்து கோச் கும்ப்ளே இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கும்ப்ளே, லோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் விரும்புவதாகவும், அதையே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிக்காட்டும் என்றும் கூறினார். கர்நாடகாவைச் சார்ந்த 45 வயதான அணில் கும்ப்ளே, இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 956 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட கும்ப்ளே, இந்திய அணியுடன் தனது முதற்கட்ட பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இம்மாதம் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே, பயிற்சியாளராக கும்ப்ளேவிற்கு முதல் டெஸ்ட். இந்நிலையில் நேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.