Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பிறேசில் ஒலிம்பிக்கிற்கு 7 இலங்கையர்கள் பிறேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் இம்முறை நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் 7 பேர் தகுதி பெற்றுள்ளனர். குறித்த போட்டிகளில் தடகள விளையாட்டு வீர வீராங்கனைகள் 3 பேரும் நீச்சல் வீரர்கள் 2 பேரும் இலக்கிற்கு துப்பாக்கிச்சூடும் வீரர் ஒருவரும் பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்படி, அனுருத்த இந்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர தொலை தூர ஓட்டங்களுக்காகவும் சுமேத ரணசிங்க ஈட்டி எரிதல் போட்டிக்காகவும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, பூப்பந்து ஒற்றையர் பிரிவிற்காக நிலுக கருணாரத்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். …

  2. சொந்த மைதானத்தில் பீற்றர்ஸை உதைத்த பற்றிக்ஸ் ; 6:1 என அசத்தல் வெற்றி கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரிக்கு எதிரான கால்பந்தாட்ட லீக் போட்டியொன்றில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல்களைப் பெற்று அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்டுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணிகள் மோதின. கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பமானது முதலே போட்டி விறுவிறு…

  3. 'கங்குலி என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை!'- குமுறும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால், தான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியிருப்பதாக ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கங்குலி, நேர்காணலின்போது ஸ்கைப்பில் வந்து கூட தன்னிடம் கேள்வி கேட்வில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோருடன், பிசிசிஐ ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜக்தாலேவும் இடம் பெற்றிருதார் பயிற்சியாளருக்கான நேர்காணல், கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹோட்டலில் நடந்துள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடந்த பயிற்சியாளருக்கான நேர்காணலில், ரவி சாஸ்திரி பங்கேற்றார். ஆனால…

  4. யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும் ஆரோக்கியமானவர்களையும் சமூகத்தில் சிறந்து விளங்கவும் என்ற உன்னத நோக்கத்துடன் 1960 இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம். கிறாஸ்கொப்பரஸ் பழைய, புதிய வீரர்களையும் மகாஜனன்களையும் ஒன்றிணைத்து சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டி யொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் பதிவு செய்த 19 விளையாட்டு கழகங்களிலிடமிருந்து 2 சகல துறை வீரர்களை தெரிவு செய்து அத்துடன் எமது கிறாஸ்கொப்பர்ஸ் கழகத்தில் இருந்து போகும் 4 பேரை உள்ளடக்கி 42…

  5. விற்றோரியின் தடை நீக்கம் மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்கள…

  6. செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’ டி20 தொடர்: பிசிசிஐ அறிவிப்பு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம். ஆண்டின் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ‘மினி ஐபிஎல்’ அல்லது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும். இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும். அமெரிக்கா, அல்லது யு.ஏ.இ.யில் இந்த மினி ஐபிஎல் த…

  7. கேள்விக்குறியில் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம், மீண்டும் சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தோடு இத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, 2019ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டி லீக் அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடரோடு, சம்பியன்ஸ் கிண்ணம் நிறைவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டோடு சம்பியன்ஸ் கிண்ணத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தபோதும், அத்தொடருக்கு கிடைத்த பாரிய வர்த்தக வெற்றி காரணமாக சம்பியன்ஸ் கிண்ணம் தொடர்ந்திருந்தது. …

  8. பதவிக்கு அலைபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்! கடந்த உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததில் இருந்தே, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் இல்லாமல்தான் விளையாடி வருகிறது. ரவி சாஸ்திரி தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்திய அணிக்கு சரியான திறமையான பயிற்சியாளரைத் தேர்வு செய்ய, பிசிசிஐ முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின் , வி.வி.எஸ். லக்ஷ்மண் அடங்கிய குழுவை அறிவுரையாளர்களாக நியமித்திருந்தது. ஒரு ஆண்டு காலமாக காலியாகவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் அப்ளை செய்திருந்தனர். இதில் ஒரு கேலிக் கூத்தும் நடந்தது. இதுவரை இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்து வந்த சந்தீப் பாட்டீலின் பதவி காலம் …

  9. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இந்திய பயிற்சியாளராகத் தேர்வு. படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டுக்கானது. கும்ப்ளேயின் பயிற்சிக்காலம் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய தொடருடன் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு 57 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21 பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பிசிசிஐ-க்கு அனுப்பியது சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய குழு. பவுலிங், பேட்டிங் மற்றும் உதவிப்பயிற்சியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்ற…

  10. பெயில் தாக்கியதில் சிவந்து போன கண்ணுடன் தோனி! இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹராரேவில் நடந்த 3வது டி20 போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனியின் கண்களை பெயில்ஸ் பதம் பார்த்தது. ஜிம்பாப்வே வீரர் டொனால்ட் டிரிபானோவை அவுட்டாக்கும் முயற்சியின் போது தோனியின் வலது கண்ணை பெயில் தாக்கியது. அந்த வேதனையுடன்தான் தோனி தொடர்ந்து போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனியின் கண் சிவந்து போய்விட்டது. மருத்துவ பரிசோதனையில் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தோனி தனது சிவந்து போன கண்ணை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அத்துடன் தான் வலியுடன் மங்கிய பார்வையுடனே விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டதாகவும் தோனி த…

  11. விம்பிள்டன் தரவரிசைகள் வெளியிடப்பட்டன இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசைகள் (seeds) வெளியிடப்பட்டுள்ளன. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கான தரவரிசைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, உலகின் முதல் 3 வீரர்களான நொவக் ஜோக்கோவிச், அன்டி மரே, ரொஜர் பெடரர் ஆகியோர், முதல் 3 தரவரிசைகளையும் பெற்றுள்ளனர். 4ஆம் நிலை வீரரான ரபேல் நடால், இத்தொடரில் பங்குபெற மாட்டார் என்பதால், 5ஆம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்கா, 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். 5ஆவது இடத்தில் ஜப்பானின் கீ நிஷிகோரியும் 6ஆவது இடத்தில் கனடாவின் மிலோஸ் றாவோனிக்கும் 7ஆவது இடத்தில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டும் காணப்படுகின்றனர். ப…

  12. இலங்கையின் புதிய அதிரடி வீரர் சீகுகே பிரசன்னாவின் சாதனைத் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடிக்கும் சீகுகே பிரசன்னா. | படம்: ஏ.எஃப்.பி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பிளங்கெட்டின் கடைசி பந்து சிக்ஸருடன் ‘டை’ ஆக, இலங்கை வீரர் சீகுகே பிரசன்னாவின் அதிரடி அரைசதம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அன்று அயர்லாந்துக்கு எதிராக ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் நழுவ விட்டு 46 பந்துகளில் 95 விளாசிய இந்த புதிய அதிரடி வீரரான சீகுகே பிரசன்னா, நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம் கண்டார், அயர்லாந்துக்கு எதிராக 23 பந்துகளில் அரை சதம் கண்டவர் அடுத்த போட்டியிலேயே 24 பந்துகளில் அரைசதம் …

  13. 'மெஸ்சி வித் ரசிகர்' நெகிழ வைக்கும் புகைப்படம் கால்பந்து போட்டிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை கட்டிபிடித்து கொள்வது உண்டு. பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு ரசிகர்களை மதிக்கும் குணம் உண்டு.முடிந்தவரை ரசிகர்களை அவமதிக்கும்விதத்தில் நடந்து கொள்வதில்லை. ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஒலிவர் கானிடம் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடி வந்து கை கொடுத்தார். பரபரப்புக்காக அந்த ரசிகர் இப்படி செய்தாலும் ஓலிவர் கான் கோபத்தை காட்டவில்லை. மரியாதைக்காக அந்த ரசிகருக்கு கை கொடுத்து விட்டு சென்றார். அதே போல் யூரோ கால்பந்து தொடரில், ஆஸ்திரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ரொனால்டோ பெனால்டியை மிஸ் செய்த நிலைய…

  14. பிரேசிலின் அடையாளங்களில் ஒன்றான, அமேசான் நதி ஓடும் அமேசான் மாகாணத்தில் உள்ள மென்னஸ் நகரில், ஒலிம்பிக் டார்ச் ஓட்டம் நடைபெற்றது. அமேசான் காட்டின் முக்கிய வன விலங்கு சிறுத்தை. எனவே இந்த நிகழ்வில் ஜாகுவார் ஒன்று பங்கேற்றால் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதினர். மென்னஸ் நகரில் உள்ள ராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நடந்தது. எனவே அந்த ராணுவ மையத்துக்கு வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஜுமா என்ற சிறுத்தை கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு நிகழ்ச்சி நடந்த இடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அதன் பராமரிப்பாளர் கையில் இருந்து தப்பிய ஜுமா, ராணுவ மையத்துக…

  15. இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்பாராத விதமாக சமனிலையில் முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் தலா 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி வீரர் ப்லான்கெட் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டம் பெற்று போட்டியை சமநிலை செய்தார். நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. …

  16. தோனி ஓய்வு பெற்றால் அவரை நாம் மிகவும் இழந்ததாகவே உணர்வோம்: டீன் ஜோன்ஸ் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் தோனி. | படம்: பிடிஐ. தோனி ஓய்வு பெற்று விட்டார் எனும்போதுதான், அவர் இல்லாதது குறித்து நாம் அதிகம் உணர்வோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவன நேரகாணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: நாம் நமது பெரிய வீரர்களை விரைவில் வெளியேற்றவே விரும்புகிறோம். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி செய்த பங்களிப்பை வைத்து அவரது விருப்பத்தை அவரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். கேப்டனாக வேண்டும் என்று பெரிய அவசரம் காட்டுவதாக நான் கருதவில்லை. காலம் வரும். நான் கூறுவதை நம்புங்கள், தோனி ஓய்வு ப…

  17. ஐக்கிய அரபு இராச்சியத்தில் பகல் - இரவு டெஸ்ட்: பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் இணக்கம் டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாடும் நாடு­க­ளுக்கு மத்­தியில் பகல் –இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான முஸ்­தீ­புகள் இடம்­பெற்று வரும் நிலையில் பாகிஸ்­தானும் மேற்­கிந்­தியத் தீவு­களும் பகல் – இரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யாட கொள்கை அளவில் இணங்­கி­யுள்­ளன. நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பகல் - இரவு டெஸ்ட் போட்­டியை இளஞ்­சி­வப்பு பந்­தைக் ­கொண்டு நடத்த இரண்டு நாடு­களும் முன்­வந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இந்த யோச­னைக்கு மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்ெகட் சபைஆ…

  18. NBA: அதிரடி மீள்வருகையால் சம்பியனானது கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க (NBA) தொடரின் வரலாற்றில், மிகச்சிறந்த மீள்வருகைகளில் ஒன்றை நிகழ்த்திய கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது. நடப்புச் சம்பியன்களான கோல்டன் ஸ்டேட் அணியை 93-89 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தே, தனது முதலாவது பட்டத்தை கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி பெற்றுக்கொண்டது. தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கத் தொடரின் மேற்குச் சம்பியன்களுக்கும் கிழக்குச் சம்பியன்களுக்குமிடையில் 7 போட்டிகள் கொண்ட தொடராக இடம்பெறும் இறுதிப் போட்டித் தொடரில், நான்கு வெற்றிகளைப் பெறும் அணி, சம்பியனாகத் தெரிவாகும். இந்த இறுதிப் போட்டித் தொடர…

  19. புதிய வடிவில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லீக்; ஐ.சி.சி. ஆலோசிக்கிறது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய லீக் முறையை அறி­மு­கப்­ப­டுத்த சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஆலோ­சித்து வரு­கின்­றது. 50 ஓவர் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு பொருத்­த­மான புது வடிவம் கொடுக்கும் வகையில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் 13 இடங்­களை வகிக்கும் அணி­களைக் கொண்டு புதிய லீக் போட்­டி­களை நடத்த பேரவை திட்­ட­மிட்­டுள்­ளது. இந்தப் புதிய லீக் போட்­டியில் டெஸ்ட் விளை­யாடும் பத்து நாடுகள், சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் இணை உறுப்பு நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்தான், அயர்­லாந்து ஆகி­ய­வற்­றுடன் மற்­று­மொரு இணை உறுப்பு நாடு இந…

  20. பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க நீடிப்பு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை தக்கவைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க செயற்பட்டு வருவதோடு பங்களாதேஷ் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7783

  21. இந்திய பேட்டிங் குறித்த ஹர்பஜனின் ஜோக்: பகிர்ந்து கொண்ட முரளி கார்த்திக் இர்பான் பத்தான், ஹர்பஜன், முரளி கார்த்திக். | கோப்புப் படம்: வி.கணேசன். இந்திய அணியிலேயே மிகவும் நகைச்சுவை உணர்வு வாய்ந்தவர் ஹர்பஜன் சிங் என்று கூறப்படுவதுண்டு. சக வீரர்கள் பற்றியும் சில வேளைகளில் அணி பற்றியுமே அவர் தனது நகைச்சுவைக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதேபோல் அவர் மற்ற வீரர்கள் போல் அப்படியே மிமிக்ரி செய்வதிலும் வல்லவர் என்று கூறப்படுவதுண்டு. 2005ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் கங்குலி தலைமை இந்திய அணி, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்து அணியை 21…

  22. ஜெயசூரியாவின் அதிவேக சத சாதனையை முறியடிக்கத் தவறிய இலங்கை வீரர் செகுகே பிரசன்னா அயர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது. இதில் டப்ளினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணி வீரர் செகுகே பிரசன்னா 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார், இதன் மூலம் ஜெயசூரியாவின் 48 பந்துகளில் சதம் என்ற சாதனையை செகுகே முறியடிக்க முடியாமல் போனது. செகுகே பிரசன்னாவின் ஒருநாள் கிரிக்கெட் சராசரி இதுவரை 9.19 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று திடீரென அவர் 3-ம் நிலையில் களமிறக்கப்பட்டார். இறங்கியவுடன் முதல் பந்திலேயே தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். அயர்லாந்து ஆஃப் ஸ்பின்னர் ஆண்டி மெக்பி…

  23. வேகப்பந்து வீச்சாளர் எரங்க இங்கிலாந்து வைத்தியசாலையில் வேகப்பந்து வீச்சாளரான ஷமிந்த எரங்க, இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175040/வ-கப-பந-த-வ-ச-ச-ளர-எரங-க-இங-க-ல-ந-த-வ-த-த-யச-ல-ய-ல-#sthash.BH1F6LD8.dpuf

  24. சர்வதேச தடகள போட்டிகளுக்கு ரஷ்யாவிற்கு தடை: ரியோ ஒலிம்பிக்கிலும் பங்குகொள்ள முடியாது இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை நீடித்ததமையினால் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான தடகள போட்டிகளுக்கும் ரஷ்யா பங்கபற்றுவதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச ஆதரவுடனான வீரர்கள் தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைய சர்வதேச தடகள சம்மேளனம், கடந்த வருடம் ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்தது. எனினும் இந்த தடைக்கு பின்னர் சர்…

  25. வெளியாகியது இங்கிலாந்து பிறிமீயர் லீக் போட்டி அட்டவணை 2016-17 பருவகாலத்துக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 13ஆம் திகதி, இப்பருவகாலத்துக்கான முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. முதல் வாரத்தில், நடப்புச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணி, ஹள் சிற்றி அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆர்சனல் - லிவர்பூல், போர்ண்மெத் - மன்செஸ்டர் யுனைட்டட், பேர்ண்லி - சுவன்சி சிற்றி, செல்சி - வெஸ்ட் ஹாம் யுனைட்டட், கிறிஸ்டல் பலஸ் - வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், எவேர்ட்டன் - டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் சிற்றி - சண்டர்லான்ட், மிடில்ஸ்புரோ - ஸ்டோக் சிற்றி, சௌதாம்டன் - வட்போர்ட் ஆகிய போட்டிகள், முதல் வாரத்தின் ஏனைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.