விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம் நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும். இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்…
-
- 25 replies
- 2.1k views
-
-
கிரெக் சாப்பலை விட அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட முடியும்: இயன் சாப்பல் இயன் சாப்பல் சகோதரரர் கிரெக் சாப்பலுடன் அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். இந்திய வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் கிரெக் சாப்பலை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: ஒரு முன்னாள் சிறந்த வீரர் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளராக ஆவது வழக்கத்துக்கு மாறானது, அவ்வகையில் ஒரு அரிதான குழுவில் இணைந்துள்ளர் அனில் கும்ப்ளே. எப்போதும் நட்சத்திர வீரர்கள் தங்களது கடினமான விளையாட்டுக்காலத்திற்குப் பிறகு ஓய்வு காலங்களில்…
-
- 0 replies
- 307 views
-
-
பிறேசில் ஒலிம்பிக்கிற்கு 7 இலங்கையர்கள் பிறேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் இம்முறை நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் 7 பேர் தகுதி பெற்றுள்ளனர். குறித்த போட்டிகளில் தடகள விளையாட்டு வீர வீராங்கனைகள் 3 பேரும் நீச்சல் வீரர்கள் 2 பேரும் இலக்கிற்கு துப்பாக்கிச்சூடும் வீரர் ஒருவரும் பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்படி, அனுருத்த இந்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர தொலை தூர ஓட்டங்களுக்காகவும் சுமேத ரணசிங்க ஈட்டி எரிதல் போட்டிக்காகவும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, பூப்பந்து ஒற்றையர் பிரிவிற்காக நிலுக கருணாரத்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 361 views
-
-
சொந்த மைதானத்தில் பீற்றர்ஸை உதைத்த பற்றிக்ஸ் ; 6:1 என அசத்தல் வெற்றி கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரிக்கு எதிரான கால்பந்தாட்ட லீக் போட்டியொன்றில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல்களைப் பெற்று அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்டுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணிகள் மோதின. கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பமானது முதலே போட்டி விறுவிறு…
-
- 0 replies
- 355 views
-
-
விற்றோரியின் தடை நீக்கம் மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்கள…
-
- 0 replies
- 415 views
-
-
செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’ டி20 தொடர்: பிசிசிஐ அறிவிப்பு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம். ஆண்டின் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ‘மினி ஐபிஎல்’ அல்லது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும். இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும். அமெரிக்கா, அல்லது யு.ஏ.இ.யில் இந்த மினி ஐபிஎல் த…
-
- 0 replies
- 292 views
-
-
கேள்விக்குறியில் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம், மீண்டும் சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தோடு இத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, 2019ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டி லீக் அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடரோடு, சம்பியன்ஸ் கிண்ணம் நிறைவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டோடு சம்பியன்ஸ் கிண்ணத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தபோதும், அத்தொடருக்கு கிடைத்த பாரிய வர்த்தக வெற்றி காரணமாக சம்பியன்ஸ் கிண்ணம் தொடர்ந்திருந்தது. …
-
- 0 replies
- 404 views
-
-
பதவிக்கு அலைபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்! கடந்த உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததில் இருந்தே, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் இல்லாமல்தான் விளையாடி வருகிறது. ரவி சாஸ்திரி தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்திய அணிக்கு சரியான திறமையான பயிற்சியாளரைத் தேர்வு செய்ய, பிசிசிஐ முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின் , வி.வி.எஸ். லக்ஷ்மண் அடங்கிய குழுவை அறிவுரையாளர்களாக நியமித்திருந்தது. ஒரு ஆண்டு காலமாக காலியாகவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் அப்ளை செய்திருந்தனர். இதில் ஒரு கேலிக் கூத்தும் நடந்தது. இதுவரை இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்து வந்த சந்தீப் பாட்டீலின் பதவி காலம் …
-
- 0 replies
- 405 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இந்திய பயிற்சியாளராகத் தேர்வு. படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டுக்கானது. கும்ப்ளேயின் பயிற்சிக்காலம் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய தொடருடன் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு 57 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21 பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பிசிசிஐ-க்கு அனுப்பியது சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய குழு. பவுலிங், பேட்டிங் மற்றும் உதவிப்பயிற்சியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்ற…
-
- 2 replies
- 844 views
-
-
பெயில் தாக்கியதில் சிவந்து போன கண்ணுடன் தோனி! இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹராரேவில் நடந்த 3வது டி20 போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனியின் கண்களை பெயில்ஸ் பதம் பார்த்தது. ஜிம்பாப்வே வீரர் டொனால்ட் டிரிபானோவை அவுட்டாக்கும் முயற்சியின் போது தோனியின் வலது கண்ணை பெயில் தாக்கியது. அந்த வேதனையுடன்தான் தோனி தொடர்ந்து போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனியின் கண் சிவந்து போய்விட்டது. மருத்துவ பரிசோதனையில் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தோனி தனது சிவந்து போன கண்ணை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அத்துடன் தான் வலியுடன் மங்கிய பார்வையுடனே விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டதாகவும் தோனி த…
-
- 0 replies
- 468 views
-
-
விம்பிள்டன் தரவரிசைகள் வெளியிடப்பட்டன இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசைகள் (seeds) வெளியிடப்பட்டுள்ளன. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கான தரவரிசைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, உலகின் முதல் 3 வீரர்களான நொவக் ஜோக்கோவிச், அன்டி மரே, ரொஜர் பெடரர் ஆகியோர், முதல் 3 தரவரிசைகளையும் பெற்றுள்ளனர். 4ஆம் நிலை வீரரான ரபேல் நடால், இத்தொடரில் பங்குபெற மாட்டார் என்பதால், 5ஆம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்கா, 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். 5ஆவது இடத்தில் ஜப்பானின் கீ நிஷிகோரியும் 6ஆவது இடத்தில் கனடாவின் மிலோஸ் றாவோனிக்கும் 7ஆவது இடத்தில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டும் காணப்படுகின்றனர். ப…
-
- 0 replies
- 317 views
-
-
சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சரண்: இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில்…
-
- 12 replies
- 1.3k views
-
-
இலங்கையின் புதிய அதிரடி வீரர் சீகுகே பிரசன்னாவின் சாதனைத் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடிக்கும் சீகுகே பிரசன்னா. | படம்: ஏ.எஃப்.பி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பிளங்கெட்டின் கடைசி பந்து சிக்ஸருடன் ‘டை’ ஆக, இலங்கை வீரர் சீகுகே பிரசன்னாவின் அதிரடி அரைசதம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அன்று அயர்லாந்துக்கு எதிராக ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் நழுவ விட்டு 46 பந்துகளில் 95 விளாசிய இந்த புதிய அதிரடி வீரரான சீகுகே பிரசன்னா, நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம் கண்டார், அயர்லாந்துக்கு எதிராக 23 பந்துகளில் அரை சதம் கண்டவர் அடுத்த போட்டியிலேயே 24 பந்துகளில் அரைசதம் …
-
- 0 replies
- 348 views
-
-
'மெஸ்சி வித் ரசிகர்' நெகிழ வைக்கும் புகைப்படம் கால்பந்து போட்டிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை கட்டிபிடித்து கொள்வது உண்டு. பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு ரசிகர்களை மதிக்கும் குணம் உண்டு.முடிந்தவரை ரசிகர்களை அவமதிக்கும்விதத்தில் நடந்து கொள்வதில்லை. ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஒலிவர் கானிடம் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடி வந்து கை கொடுத்தார். பரபரப்புக்காக அந்த ரசிகர் இப்படி செய்தாலும் ஓலிவர் கான் கோபத்தை காட்டவில்லை. மரியாதைக்காக அந்த ரசிகருக்கு கை கொடுத்து விட்டு சென்றார். அதே போல் யூரோ கால்பந்து தொடரில், ஆஸ்திரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ரொனால்டோ பெனால்டியை மிஸ் செய்த நிலைய…
-
- 2 replies
- 613 views
-
-
பிரேசிலின் அடையாளங்களில் ஒன்றான, அமேசான் நதி ஓடும் அமேசான் மாகாணத்தில் உள்ள மென்னஸ் நகரில், ஒலிம்பிக் டார்ச் ஓட்டம் நடைபெற்றது. அமேசான் காட்டின் முக்கிய வன விலங்கு சிறுத்தை. எனவே இந்த நிகழ்வில் ஜாகுவார் ஒன்று பங்கேற்றால் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதினர். மென்னஸ் நகரில் உள்ள ராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நடந்தது. எனவே அந்த ராணுவ மையத்துக்கு வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஜுமா என்ற சிறுத்தை கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு நிகழ்ச்சி நடந்த இடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அதன் பராமரிப்பாளர் கையில் இருந்து தப்பிய ஜுமா, ராணுவ மையத்துக…
-
- 0 replies
- 391 views
-
-
சர்வதேச தடகள போட்டிகளுக்கு ரஷ்யாவிற்கு தடை: ரியோ ஒலிம்பிக்கிலும் பங்குகொள்ள முடியாது இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை நீடித்ததமையினால் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான தடகள போட்டிகளுக்கும் ரஷ்யா பங்கபற்றுவதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச ஆதரவுடனான வீரர்கள் தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைய சர்வதேச தடகள சம்மேளனம், கடந்த வருடம் ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்தது. எனினும் இந்த தடைக்கு பின்னர் சர்…
-
- 1 reply
- 358 views
-
-
தோனி ஓய்வு பெற்றால் அவரை நாம் மிகவும் இழந்ததாகவே உணர்வோம்: டீன் ஜோன்ஸ் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் தோனி. | படம்: பிடிஐ. தோனி ஓய்வு பெற்று விட்டார் எனும்போதுதான், அவர் இல்லாதது குறித்து நாம் அதிகம் உணர்வோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவன நேரகாணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: நாம் நமது பெரிய வீரர்களை விரைவில் வெளியேற்றவே விரும்புகிறோம். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி செய்த பங்களிப்பை வைத்து அவரது விருப்பத்தை அவரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். கேப்டனாக வேண்டும் என்று பெரிய அவசரம் காட்டுவதாக நான் கருதவில்லை. காலம் வரும். நான் கூறுவதை நம்புங்கள், தோனி ஓய்வு ப…
-
- 0 replies
- 516 views
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பகல் - இரவு டெஸ்ட்: பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் இணக்கம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு மத்தியில் பகல் –இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வரும் நிலையில் பாகிஸ்தானும் மேற்கிந்தியத் தீவுகளும் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட கொள்கை அளவில் இணங்கியுள்ளன. நடுநிலையான ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை இளஞ்சிவப்பு பந்தைக் கொண்டு நடத்த இரண்டு நாடுகளும் முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த யோசனைக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்ெகட் சபைஆ…
-
- 0 replies
- 358 views
-
-
NBA: அதிரடி மீள்வருகையால் சம்பியனானது கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க (NBA) தொடரின் வரலாற்றில், மிகச்சிறந்த மீள்வருகைகளில் ஒன்றை நிகழ்த்திய கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது. நடப்புச் சம்பியன்களான கோல்டன் ஸ்டேட் அணியை 93-89 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தே, தனது முதலாவது பட்டத்தை கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி பெற்றுக்கொண்டது. தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கத் தொடரின் மேற்குச் சம்பியன்களுக்கும் கிழக்குச் சம்பியன்களுக்குமிடையில் 7 போட்டிகள் கொண்ட தொடராக இடம்பெறும் இறுதிப் போட்டித் தொடரில், நான்கு வெற்றிகளைப் பெறும் அணி, சம்பியனாகத் தெரிவாகும். இந்த இறுதிப் போட்டித் தொடர…
-
- 0 replies
- 406 views
-
-
புதிய வடிவில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லீக்; ஐ.சி.சி. ஆலோசிக்கிறது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய லீக் முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆலோசித்து வருகின்றது. 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொருத்தமான புது வடிவம் கொடுக்கும் வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் 13 இடங்களை வகிக்கும் அணிகளைக் கொண்டு புதிய லீக் போட்டிகளை நடத்த பேரவை திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய லீக் போட்டியில் டெஸ்ட் விளையாடும் பத்து நாடுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணை உறுப்பு நாடுகளான ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகியவற்றுடன் மற்றுமொரு இணை உறுப்பு நாடு இந…
-
- 0 replies
- 355 views
-
-
பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க நீடிப்பு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை தக்கவைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க செயற்பட்டு வருவதோடு பங்களாதேஷ் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7783
-
- 0 replies
- 828 views
-
-
வேகப்பந்து வீச்சாளர் எரங்க இங்கிலாந்து வைத்தியசாலையில் வேகப்பந்து வீச்சாளரான ஷமிந்த எரங்க, இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175040/வ-கப-பந-த-வ-ச-ச-ளர-எரங-க-இங-க-ல-ந-த-வ-த-த-யச-ல-ய-ல-#sthash.BH1F6LD8.dpuf
-
- 1 reply
- 400 views
-
-
ஜெயசூரியாவின் அதிவேக சத சாதனையை முறியடிக்கத் தவறிய இலங்கை வீரர் செகுகே பிரசன்னா அயர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது. இதில் டப்ளினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணி வீரர் செகுகே பிரசன்னா 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார், இதன் மூலம் ஜெயசூரியாவின் 48 பந்துகளில் சதம் என்ற சாதனையை செகுகே முறியடிக்க முடியாமல் போனது. செகுகே பிரசன்னாவின் ஒருநாள் கிரிக்கெட் சராசரி இதுவரை 9.19 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று திடீரென அவர் 3-ம் நிலையில் களமிறக்கப்பட்டார். இறங்கியவுடன் முதல் பந்திலேயே தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். அயர்லாந்து ஆஃப் ஸ்பின்னர் ஆண்டி மெக்பி…
-
- 1 reply
- 495 views
-
-
இந்திய பேட்டிங் குறித்த ஹர்பஜனின் ஜோக்: பகிர்ந்து கொண்ட முரளி கார்த்திக் இர்பான் பத்தான், ஹர்பஜன், முரளி கார்த்திக். | கோப்புப் படம்: வி.கணேசன். இந்திய அணியிலேயே மிகவும் நகைச்சுவை உணர்வு வாய்ந்தவர் ஹர்பஜன் சிங் என்று கூறப்படுவதுண்டு. சக வீரர்கள் பற்றியும் சில வேளைகளில் அணி பற்றியுமே அவர் தனது நகைச்சுவைக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதேபோல் அவர் மற்ற வீரர்கள் போல் அப்படியே மிமிக்ரி செய்வதிலும் வல்லவர் என்று கூறப்படுவதுண்டு. 2005ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் கங்குலி தலைமை இந்திய அணி, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்து அணியை 21…
-
- 0 replies
- 556 views
-
-
இலங்கை அயர்லாந்து ஒருநாள் போட்டி: அணி விபரம் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நாளை டப்ளினில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த இலங்கை அணி பல மாற்றங்களுடன் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அணிகளின் விபரம் பின்வருமாறு இலங்கை அணி - அஞ்சலோ மெத்தியுஸ், (அணித்தலைவர்) தினேஸ் சந்திமால் (உப தலைவர்) குசல் பெரேரா, உபுள் தரங்க,தனஞ்சய டி சில்வா, சமிந்த எரங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், தசுன் சானக, பர்விஸ் மஹ{ருப், சுராஜ் ரந்திவ், சீக்குகே பிரசன்ன. அயர்லாந…
-
- 7 replies
- 947 views
-