Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஹியூக்ஸின் மறைவு எமது அணிகளை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: மெத்யூஸ், குக் கூட்டாக தெரிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹியூஸின் மறைவு தங்ளது அணிகளைப் பெருந்துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர்அலஸ்டெயார் குக்கும் தெரிவித்தனர். இலங்கை ­ இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தொடர்பான ஆயத்தங்கள் குறித்து செய்தியாளர்ளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் இன்று பகல் நடைபெற்றபோது இரண்டு அணிகளிதும் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறினர். ஏஞ்சலோ மெத்யூஸ் 'பிலிப் ஹியூஸின் மறைவு குறித்த செய்தியை நேற்று காலை அறிந்தபோது பயிற்சியில் ஈட…

  2. ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/06/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%…

  3. இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் …

  4. இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…

  5. 'எனது கட்டுப்பாட்டில் இருக்காத விடயங்களுக்காக பழியை ஏற்று களைப்படைந்துள்ளேன்': பிளாட்டர் ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார். போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி-உம் ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வூல்ஃப்-உம் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாக ஜெர்மனிய நாளிதழ் ஒன்றுக்கு பிளாட்டர் கூறியுள்ளார். அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர் ஊழல்குற்றச்சாட்டில் விசாரித்துவரும் செப் பிளாட்…

    • 0 replies
    • 271 views
  6. ஐபிஎல் சூதாட்டம்: 14-ல் தண்டனை அறிவிப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை அறிவிக்கிறது. குருநாத், குந்த்ராவுக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தண்டனை விவரமும் 14-ம் தேதி வெளியாகிறது. இது பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ர…

  7. ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை…

  8. சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…

  9. பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு பெர்த் மைதானம். | படம்: கெட்டி உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்தின் பிட்…

  10. நடந்து முடிந்த 1000 ஐ.சி.சி. 20:20 போட்டிகளில் மறக்க முடியாத 20 முக்கிய பதிவுகள் Published by J Anojan on 2019-11-04 16:10:55 ( ஜெ.அனோஜன் ) சர்வதேச ஆண்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியானது கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் 1000 ஆவது ஆண்களுக்கான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இந் நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்ற 1000 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு : 20 போட்டிகளில் மறக்க முட…

    • 0 replies
    • 426 views
  11. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் கன்டுபிடிப்பாக கருதப்படும் 20 வயதான குஷால் மெண்டிஸ், அண்மைய நாட்களில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அறிமுகமான போட்டி முதல்கொண்டு அனைத்திலும் தனது திறமைகளை சிறப்பாக நிரூபித்துவரும் குஷால் மெண்டிஸ், தனது துல்லியமான துடுப்பாட்டம் மூலமாக அணியின் வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்கிறார். நேற்று இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 வது ஒருநாள் போட்டியின் போதும் ஆரம்பத்திலேயே இலங்கை அணி இரு விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், அசராமல் நின்று அடித்தாடி அரைச்சதம்…

  12. 'அணித் தலைவருக்கு நண்பர்களை விட விரோதிகளே அதிகம்' – ஏஞ்சலோ மெத்யூஸ் 2016-10-25 11:24:24 இலங்கை அணியில் தலைவர் பத­வியை வகிக்­கும்­போது நண்­பர்­களை விட விரோ­தி­க­ளையே அதிகம் சம்­பா­திக்க வேண்­டி­யுள்­ளமை துர­திர்ஷ்­ட­மா­னது என இலங்கை கிரிக்கெட் அணியின் வழை­மை­யான தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார். தான் அணியில் சேர்த்­துக்­கொள்­­வ­தற்கு அணித் தலை வர் ஏஞ்­சலோ மெத்­யூஸ்தான் தடையாக இருந்­த­தாக வீரர் ஒருவர் குற்­றஞ்­சாட்­டி­ய­தாக செய்­தி­யாளர் ஒருவர் சுட்­டிக்­காட்­டி­ய­போதே ஏஞ்­சலோ மெத்யூஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில், ‘‘அணித் தலைவர் என்ற வகையில் நண்­பர்­களை விட விரோ­தி­க­ளைத்தான்…

  13. ஒருநாள் தரவரிசை: முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வ…

  14. 2016-ன் நம்பர் ஒன் டி20 பவுலர் எத்தனை மெய்டன் ஓவர் வீசியிருக்கிறார்? #2016Rewind டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பங்கு அளப்பரியது; கடினமானதும் கூட . சிக்ஸர் விளாச வேண்டும் என வெறியோடு கிரீஸை விட்டு இறங்கி ஒருவரை ஏமாற்ற வேண்டும், இக்கட்டான சூழ்நிலையில் சிங்கிள் அடிக்கத் துணிபவருக்கு, ஆசை காட்டி அவுட்டாக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு பந்தையும் பலவாறாக யோசித்துச் சிறப்பாக பந்துவீச வேண்டும். அப்படி இந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசியவர்கள் பட்டியல் தான் இது. 10. ஃபால்க்னர் :- அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கிறார் என இவர் மீது எப்போதும் ஒரு வருத்தம் ஆஸி ரசிகர்ளுக்கு இருக்கும். அதே சமயம் விக்கெட்டுக…

  15. 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடி முதல் அணியாக தகுதி பெற்றது சாவ்பாலோ: 32 அணிகள் இடையிலான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை…

  16. இலங்கைக்கு படையெடுக்கவுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு இம் மாத இறுதியில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு, ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச க…

  17. விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் ; இளைஞர் கைது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை பொலிஸார் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த குறித்த நபர் டுவிட்டர் மூலம் விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்திய வீரர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், விராட் கோலியின் 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு டுவிட்டர் மூலம் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

  18. டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிராவிட் மற்றும் ஜாகீர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஆலோசனை கமிட்டியில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஜுலை 11-ஆம் தேதியன்று இந்த கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், அணியின் பந்துவீச்…

  19. அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. …

  20. பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய தொடரான 2017/18ஆம் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் தொடக்கம் முதலே சூடு பிடித்துள்ளதை இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் முடிவுகள் தெரியப்படுத்துகின்றன. புதுமுக வீரர்களுடன் களமிறங்கியுள்ள கழகங்கள் தொடக்கம் முதல் சவால் விடுப்பதை புள்ளிப் பட்டியல் காட்டுகின்றது. மொத்தம் 20 அணிகள் பங்கு கொள்ளும் இந்த சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதி மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியுடன் ஆரம்பமானது. ஆதரவாளர்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே இப்பருவகாலத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இத்தாலி நாட்டின் ஒய்வு பெற்ற…

  21. போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள ரியல் மெட்ரிடின் மூன்று தலைவர்கள் புதிய பருவகாலத்திற்கான அனைத்து கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தின் முதல் மூன்று தலைவர்களும் கடந்த ஒருமாத காலத்திற்குள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, பல போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுமுள்ளன. இந்நிகழ்வால் அவ்வணியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டி முதல் பிரீமியர் லீக் வரையிலான அனைத்து சுற்றுப்போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்றுவருகின்றது. போட்டி முடிவுகள் தமது அணிக்கு சாதகமாக அமையாத நிலையில் வீரர்கள் முதற்கொண்டு, ஆதரவ…

  22. ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் ஜப்பானில் நடந்த பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். சுஜுகா : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மூன்று முறை சாம்பியனான இங்கில…

  23. ரத்த கையெழுத்துடன் டெண்டுல்கர் சுயசரிதை புத்தகம்: விலை ரூ.35 லட்சம் லண்டன், ஜுலை. 21 (டிஎன்எஸ்) இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் அவரது சுய சரிதை புத்தகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவருகிறது. ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் மொத்தம் 10 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட உள்ளன. ஒரு பிரதியின் விலை ரூ. 35 லட்சம். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். டெஸ்ட் போட்டியில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 21 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் கிரிக்கெட்டின் சகாப்தமாக திகழ்கிறார். தெண்டுல்கரை பாராட்டும் விதமாக, பல்வேறு…

    • 0 replies
    • 747 views
  24. கோல் கீப்பர் கோலை தடுத்துப் பார்த்திருப்பீங்க... கோல் அடிச்சுப் பார்த்திருக்கீங்களா!? கால்பந்து நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விளையாட்டுதான். இரண்டு அணிகள் போட்டியிடும் இந்த விளையாட்டில், ஓர் அணிக்கு 11பேர். அதில், பதினோராவது வீரர்தான் இந்த கோல் கீப்பர். இரண்டு அணிகளுக்கும் நேர் எதிரில் தனித்தனி வலைகள் இருக்கும். அந்த 10 வீரர்களும் எதிர் அணியின் வலைக்குள் பந்தை அடிக்க வேண்டும். அப்போது, கோல் கீப்பர் வலை அருகில் இருந்து, எதிரணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியைத் தடுப்பார். சாதாரணமாக, இந்த இரண்டு அணிகளின் வலைகளுக்கிடையில் உள்ள தூரம், 90ல் இருந்து 120 மீட்டர் வரை இருக்கும். அப்படி இருக்கையில், இந்த கோல் கீப்பர் தன்னுடைய வலை அருகில் இரு…

  25. 12 வருடங்களின் பின் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 11:57 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட இ‍ளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்படி, 12 வருடங்களுக்கு பின்னர் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரொன்றை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இலங்கை கடைசியாக 4 ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டித் தொடரை 2012 ஆம் ஆண்டில் நடத்தியிருந்தது. அதற்கு முன்னதாக 2011 இல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் இணைந்து உலகக் கிண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.