Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிறிஸ் கெய்லை கண்டு பயந்த லாரா..! மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், ‘சிக்ஸ் மெசின்: நான் கிரிக்கெட்டை விரும்புவதில்லை... அதை நேசிக்கிறேன்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்மான ஒரு நிகழ்வில், "சில வீரர்கள் தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். அதற்கு பிரையன் லாராவும் உதாரணம். 2005ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பிறகு வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த லாரா, அடிக்கடி பால்கனிக்கு வந்து ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்தபடி உள்ளே சென்றார். அச்சமயம் களத்…

  2.  இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் பதவியில் ஜெரோம் ஜயரத்ன இலங்கை உள்ளூர் தொடர்களில் பங்குபற்றிய முன்னாள் சகலதுறை வீரரான ஜெரோம் ஜயரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நடவடிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம், உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் சபையில் பல்வேறு பதவிகளை வகித்த ஜெரோம் ஜயரத்ன, இறுதியாக செப்டெம்பர் 2015இல், அப்போதைய பயிற்றுநரான மார்வன் அத்தப்பத்து, தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, தற்காலியப் பயிற்றுநராகச் செயற்பட்டு, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இலங்கையில் இடம்பெற்ற தொடருக்கும் நியூசிலாந்துக்கெதிராக நியூசிலாந்தில் வைத்து இடம்பெற்ற தொ…

  3. கால்பந்தாட்டம், கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் பாகிஸ்தான் யுவதி டயனா பெய்க் விளை­யாட்­டுத்­து­றையில் பெண்கள் சளைத்­த­வர்­க­ளல்லர் என்­பதை அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு நாடு­களில் பலர் நிரூ­பித்து வரு­கின்­றனர். எனினும் அவர்­களில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்­களே இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட தேசிய அணி­களில் இடம்­பெ­று­வதைக் கண்­டுள்ளோம். பாகிஸ்­தானைச் சேர்ந்த டயனா பெய்க் எனும் யுவதி, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி­யிலும் தேசிய கால்­பந்­தாட்ட அணி­யிலும் இடம்­பெற்­றுள்ளார். அண்­மையில் கழக மட்ட கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் தனது அணியை சம்­பி­ய­னாக வழி­ந­டத்­திய டயனா பெய்க், பரி­ச­…

  4. மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழா இன்று வட பகுதி மாணவர்கள் ஐவருக்கு விருதுகள் (நெவில் அன்தனி) கல்வி அமைச்சு, இலங்கை பாடசாலைகள், விளையாட்டுத்துறைப் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 24ஆவது இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் நடைபெறவுள்ளது. நெஸ்ட்லே லங்கா லிமிட்டட் 24ஆவது வருடமாக பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழாவுக்கு அனுசரணை வழங்குகின்றது. இலங்கை சார்பாக சர்வதேச அரங்கில் கடந்த வருடம் பங்குபற்றியவர்கள், பதக்கங்கள் வென்ற பாடசாலை மாணவர்களுக்கு மைலோ வர்ண விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. …

  5. சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சரண்: இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில்…

  6. யாழ் மத்திய கல்லூரி வெற்றி யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கம் நடாத்திய 19 வயது பிரிவினருக்கான 20 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் யாழ் மத்திய கல்லூரியும் _ மானிப்பாய் இந்துக்கல்லுரியும் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் மோதிக்கொண்டது. இதில் * யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி * அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது ...... MHC 138 JCC 139/8 நன்றி. யாழ் மத்திய கல்லூரி முகநூல்

  7. வரலாற்றில் இன்று (2007 ஜூன் 10): மஹேலவும் தோனியும் இணைப்பாட்டமாக 218 ஓட்டங்களைக் குவித்தனர் 2016-06-10 16:46:29 ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கை அணியின் முன்ளாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனியும் இணைந்து இணைப்பாட்டமாக 218 ஓட்டங்களைப் பெற்றமை 9 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஜூன் 10 ஆம் திகதி பதிவாகியது. 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆபிக்க XI, ஆசிய XI அணிகளுக்கிடையிலான அவ்ரோ- ஏசியா கிண்ணத் தொடரின் 3 ஆவது போட்டியில் மஹேலவும் தோனியும் இந்த இணைப்பாட்டத்தைப் பெற்றனர். ஆசிய அணியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் வீரர்களும் ஆபிரிக்க அணியில் தென்…

  8.  நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் தொடர்களுக்காகச் செல்லும் நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 16 பேர் கொண்ட குழாமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட குழாமில், முதற்தடவையாக நியூசிலாந்துக் குழாமொன்றில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜீட் ராவல் இடம்பிடித்ததோடு, புறச் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதியும் மீண்டும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்திருக்கும் நிலையில், சகலதுறை வீரர் கொரே அன்டர்சன் குழாமில் இடம்பிடித்திருக்கவில்லை. எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பிக்கவுள்ள போட்டியுடன் இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. குழாம்: கேன் வில்லிய…

  9. ஜிம்பாப்வே தொடர்: தோனிக்குக் காத்திருக்கும் சோதனைகள் தோனி இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.| படம்: ஏ.பி. ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடும் தொடரில் நாளை (சனிக்கிழமை) முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் தொடங்குகிறது. இந்திய அணியில் தோனி, மணிஷ் பாண்டே, அம்பாத்தி ராயுடு தவிர மற்றோர் அனுபவமில்லாதவர்கள். அன்னிய மண்ணில் அனுபவமற்ற வீரர்களை நம்பி தோனி ஜிம்பாப்வே பிட்சில் களமிறங்குகிறார். அதுவும் தோனி ஜிம்பாப்வேவுக்கு கடைசியாக சென்று விளையாடியது 2005-ம் ஆண்டு, அவரது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலமாகும் அது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் சமீபத்திய ஆட்டங்கள் அந்த அணியை பெரிய அச்சுறுத்தலாகக் காட்…

  10.  இந்தியாவின் பாரிய உள்நாட்டு பருவகாலம்: 13 டெஸ்ட்கள்; 6 புதிய மைதானங்கள் நியூசிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷுக்கெதிரான தொடர்கள் உள்ளடங்குகின்ற இந்தியாவின் 2016-17 உள்நாட்டு பருவகாலத்தில், ராஜ்கோட், விசாகப்பட்டினம், பூனே, தரம்சாலா, ராஞ்சி, இந்தூர் ஆகியன டெஸ்ட் மைதானங்களான அறிமுகமாகும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இப்பருவகாலத்தில் ஒரு டெஸ்ட் போட்டிக்காக இந்தியாவுக்கு பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ள நிலையில், பங்களாதேஷுக்கு 2000ஆம் ஆண்டு முழுமையான அங்கத்துவம் கிடைத்த பின்னர், அவ்வணி இந்தியாவில் விளையாடும் முதலாவது டெஸ்ட் இதுவாகும். பங்களாதேஷுக்கு முழுமையான…

  11.  தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில் நடுவரின் தீர்ப்பின் ஆதிக்கம் குறைக்கப்படவுள்ளது தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவர் வழங்கும் தீர்ப்பு செலுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவிலுள்ளவருமான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த குழுவின் இறுதிச் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஜயவர்தனவே, தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவரின் தீர்ப்பு செலுத்துகின்ற தாக்கமானது அரைவாசியாக குறைக்கப்…

  12. மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. முடிவில் 2016–17–ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த கால கட்டத்தில் மொத்தம் 13 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே அளித்த பேட்டியில் கூறியதாவது:– நியூசிலாந்து அணி செப்டம்பர் 23–ந் தேதி முதல் அக்டோபர் 30–ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணி நவம்பர் கடைசி முதல் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் வரை இந்தியாவில் பயணித்து 5 டெஸ்ட், 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில்…

  13. நடுவரின் தீர்ப்புக்கு எதிராக ஆதங்கத்தை வெளிப்படுத்திய சங்கா கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மீள்பரிசீலனை முறைக்கெதிராகவும் நடுவர்களின் முறையற்ற தீர்ப்புகளுக்கெதிராகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தனது ஆதங்கத்தை உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லோட்ஸில் இடம்பெற்று வருகின்றது. நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடிவருகின்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் எல்.பி.டபிள்யு. முறையில்…

  14. வடமாகான பாடசாலைகளுக்கு இடையிலான 19வயதின் கீழ் கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மத்திய கல்லூரி சம்பியனானது யாழ்இந்துக்கல்லூரியை இறுதி போட்டியில் சந்தித்த யாழ்மத்தி 51-60 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. முகநூல் யாழ் மத்திய கல்லூரி

  15. 5 நிமிடங்கள் மணியடித்தார் சங்கா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி இன்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும் போட்டியை முக்கியஸ்தர் ஒருவர் 5 நிமிடம் அங்குள்ள மணியை அடித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார். அந்தவகையில் இன்றைய போட்டியை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் ஜாம்பவானுமாகிய குமார் சங்க குறித்த மணியை ஒலிக்கவிட்டு…

  16. பாகிஸ்தானுக்கு ஆடுவதை விட இங்கிலாந்துக்கு ஆடலாம்: வெறுப்பில் ஜுனைத் கான் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆட பரிசீலித்து வருகிறார். தொடர்ந்து தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு நிர்வாகம் ஒதுக்கி வருவதால் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக ஜுனைத் கான் தெரிவித்தார். 71 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வரிசையில் இவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இருந்தாலும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற…

  17. பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு பிஸ்மாஹ் மாறூவ், சானா மிர் தலைவிகளாக நியமனம் மகளிருக்கான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக் கெட் போட்டிகளுக்கான அணித் தலைமை களைப் பிரித்து வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் பாகிஸ்தான் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவியாக தொடர்ந்தும் சானா மிர் செயற்படவுள்ளார். மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு மிர்ருக்குப் பதிலாக புதிய அணித் தலைவியாக பிஸ்மாஹ் மாறூவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இவ் வருடம் நடைபெற்ற மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் நிறைவில் இருபது 2…

  18. மரியா ஷரபோவாவுக்கு 2 வருடத் தடை உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான மரியா ஷரபோவா போட்டிகளில் பங்குபற்ற 2 வருட கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் இன்று இத்தடையை விதித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த 29 வயதான மரியா ஷரபோவா, இவ்வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றியபோது அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் மூலம், அவர் மெல்டோனியம் எனும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=spo…

  19. பகலிரவு டெஸ்ட் போட்டிக்குச் சம்மதித்தது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்குச் சம்மதித்துள்ளது. நீண்ட இழுபறியின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பித்து, இந்தப் போட்டி அடிலெய்டில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தப் பருவகாலத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது. அதிலொன்று பாகிஸ்தானுக்கெதிராகவும் மற்றையது தென்னாபிரிக்காவுக்கெதிராகவும் அமையவிருந்தது. எனினும், போதிய பயிற்சிகளின்றி, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு, தென்னாபிரிக்க வீரர்கள் பலர் தயக்கத்தை …

  20. பயிற்சியாளர் நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்: தோனி தோனி. | படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணிகான பயிற்சியாளர் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ள நிலையில் பல பயிற்சியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தோனி தன் கருத்தை இது குறித்து கூறியுள்ளார். லால்சந்த் ராஜ்புத், கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன், டன்கன் பிளெட்சர், ஸ்டீபன் பிளெமிங், ரவிசாஸ்திரி என்று ஏகப்பட்ட பயிற்சியாளர்களுடன் சுமுகமாக பணியாற்றியுள்ள இந்திய கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே தொடருக்கு முந்தைய சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “…

  21. போட்டி நிர்ணயங்கள், ஸ்பொட் ஃபிக்சிங்குகள்: ஐ.சி.சி மீது மக்கலம் விமர்சனம் போட்டி நிர்ணயம், ஸ்பொட் பிக்சிங் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில், காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) மீது, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, தனது விமர்சனத்தை அவர் வெளியிட்டார். நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரரான கிறிஸ் கெயின்ஸ், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு இடம்பெற்றபோது, கெயின்ஸூக்கெதிராக தான…

  22. முரளியிடமும் சங்காவிடமும் மன்னிப்புக் கோரினார் மக்கலம் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், முத்தையா முரளிதரனைச் சர்ச்சைக்குரிய விதத்தில் ரண் அவுட் செய்தமைக்காக, அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்காரவிடமும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட முரளிதரனிடமும் மன்னிப்புக் கோருவதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியிருந்தார். கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற…

    • 2 replies
    • 626 views
  23. திராவிட்-கங்குலி சாதனை ரன் குவிப்பை முறியடித்த லம்ப், வெசல்ஸ் மைக்கேல் லம்ப் பேட்டிங். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. நாட்டிங்கம் அணிக்கும் நார்த்தாம்ப்டன் அணிக்கும் இடையே நடைபெற்ற ராயல் லண்டன் கோப்பை 50 ஓவர் முதல் தர லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மைக்கேல் லம்ப், ஹென்ரிக் வெசஸ்ல் ஆகியோர் அதிக ரன்கள் கூட்டணி சாதனையை நிகழ்த்தியுள்ளனர். டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது. அதாவது இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டுகளில், 1999 உலகக்கோப்பை போட்டியின் போது இலங்கைக்கு எதிராக திராவிட்-கங்குலி கூட்டணி 318 ரன்களைக் குவித்து சாதனை செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது முதல் விக்கெட்டுக்காக 342 ரன்கள் குவித்…

  24. ‘‘இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் முறையாக கவனிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டால் சிறந்த குழு கிடைத்துவிடும்’’ - கிறஹம் ஃபோர்ட் 2016-06-07 11:10:17 இலங்­கையில் வேகப்­பந்­து­வீச்சில் பிர­கா­சிக்­கக்­கூ­டிய இளம் வீரர்கள் இருப்­ப­தா­கவும் அவர்கள் உரி­ய­மு­றையில் கவ­னிக்­கப்­பட்டால் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­களைக் கொண்ட ஒரு குழாம் உரு­வாகும் எனவும் கிரிக்கெட் தலைமைப் பயிற்­றுநர் கிறஹம் ஃபோர்ட் தெரி­வித்­துள்ளார். இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜ­யத்­தின்­போது இரண்டு வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் உபா­தைக்­குள்­ளாகி நாடு திரும்­பிய நிலையில் மேலும் ஒரு பந்­து­வீச்­சா­ள­ரது பந்­து­வீச்சுப் பாணி குறித்து எழுப்­பப்­பட்­டுள்ள சந்­தேகம் ஆகி­ய­வற…

  25. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடையலாம்: ஜோக்கோவிச் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ள உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், கலெண்டர் கிரான்ட் ஸ்லாமைக் கைப்பற்ற முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயை எதிர்கொண்டிருந்த ஜோக்கோவிச், 3-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, தனது முதலாவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றிருந்தார். இதன்மூலம், நான்கு வகையான கிரான்ட் ஸ்லாம்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜோக்கோவிச் பெற்றுக் கொண்டதோடு, தனது 12ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.