விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஆடிப் பார்ப்போமா ஆடு புலி ஆட்டம்.... பழகிப் பார்ப்போமா பல்லாங்குழி ஆட்டம்! பல்லாங்குழி தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் இவ்விளையாட்டு, முப்பது - நாற்பது வருடங்களுக்கு முன்பு வரையிலும், நம் தமிழ்ப்பெண்களின் இன்டோர் கேமாகவும் விளங்கியது. தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கேண்டி கிரஷ் (candy crush ) என்று நவீன யுகதிகளாக மாறிவிட்ட இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு, பல்லாங்குழி பற்றிய அறிமுகமாவது உண்டா என்றால், சந்தேகம்தான். அவர்களுக்காக... பல்லாங்குழி எப்படி ஆடுறதுன்னு பார்க்கலாமா....? பல்லாங்குழி - மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். ஏழேழு குழிகளாக இரண்டு வரிசைகள், இ…
-
- 3 replies
- 2.6k views
-
-
குலசேகர ஓய்வு இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குலசேகர, உடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவே சரியான நேரம். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால் ஒருநாள் மற்றும் இருபது-20 தொடர்களில் பிரகாசமாக விளையாட முடியும் என நினைக்கின்றேன். 33 வயதுடை நுவான் குலசேகர இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார். http://www.virakesari.lk/article/7024
-
- 0 replies
- 414 views
-
-
'கபடி...கபடி' ன்னா தெரியும்... 'சர்ஜீவ்னி' ன்னா என்னான்னு தெரியுமா...? 1 . சர்ஜீவ்னி : தென்னிந்தியாவில் , குறிப்பாக தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுபிரபலமாவதற்கு முன்பிருந்தே விளையாடும் விளையாட்டு இது கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும். இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை. பாடிச்செல்லும்போது 'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில் தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே.…
-
- 0 replies
- 4.1k views
-
-
ஐவரிகோஸ்ட் கால்பந்தாட்ட வீரர் கைது பரிஸில் இடம்பெற்ற சம்பவமொன்றில் பங்கெடுத்தமையையடுத்து ஐவரிகோஸ்ட் சர்வதேச அணியின் வீரரான சேரிஜ் ஓரியே திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்ப் எலைய்ஸஸ் பகுதியிலிலுள்ள இரவு விடுதியொன்றிலிருந்து திங்கட்கிழமை (30) அதிகாலை வெளியேறியபோதே மேற்கூறப்பட்ட சம்பவம் இடம்பெற்றதாகவும், பொலிஸாருடன் ஒரியே வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 23 வயதான மேற்படி நபர் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்காகவும் விளையாடுகின்ற நிலையில், எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கு முதல் மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாக பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் கழ…
-
- 0 replies
- 351 views
-
-
நினைவுப் பொருட்களை ஏலமிடுகிறார் பீலே பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவனான பீலே, தனது விளையாட்டுக் காலத்தில் கிடைக்கப்பெற்ற நினைவுப் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு முடிவுசெய்துள்ளார். இந்த ஏலம், இலண்டனில் இம்மாதம் இடம்பெறவுள்ளதோடு, மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. 15 வயதில் சான்டோஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவருக்குக் கிடைத்த பொருட்களையே அவர் ஏலமிடவுள்ளார். இதன்படி, 6 தசாப்தங்களாக அவரிடம் சேர்ந்த பொருட்களே, ஏலமிடப்படவுள்ளன. மூன்று தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற ஒரேயொரு வீரரான பீலே, தனக்குக் கிடைத்தவற்றைப் பேணிப் பாதுகாப்பது கடினமானது எனவும், அதை விட அவற்றை உலகத்துடன் பகிர்வதுடன், தன…
-
- 1 reply
- 432 views
-
-
கோலி தலைவராக செயற்பட டோணி சாதாரண வீரராக ஆட்டத்தை ரசித்து ஆடலாம் : ரவி சாஸ்திரி அனைத்து வகை போட்டிகளுக்கும் விராட் கோலி செயற்பட, சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு கொடுக்கலாமென இந்திய அணியின் முன்னாள் இயக்குநரும் சகலதுறை ஆட்டக்காரருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய போட்டியிலேயே ரவி சாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. தலைமைப் பொறுப்பை கோலியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது. நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இருபதுக்கு - 20, டெஸ்…
-
- 0 replies
- 380 views
-
-
ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டேன் : டில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்சான் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என தெரிவித்துள்ளார். அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின், முதலாவது போட்டி ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7007
-
- 0 replies
- 376 views
-
-
இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தானின் சக்லெய்ன் முஷ்தாக் நியமனம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரின்போது இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக சக்லெய் முஷ்தாக் நியமிக்கப்படவுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து பயணமாகின்றது. பாகிஸ்தானுக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்டில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரை குறுகிய காலத்திற்கு இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக சக்லெய்ன் பணியாற்றவுள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்துடன் 2017வரை சிறப…
-
- 0 replies
- 211 views
-
-
மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் குக் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார். அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 31ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆன குக், இதுவரை சச்சின் டெண்டூல்கரின் பெயரில் இருந்த சாதனையை முறியடித்துள்ளார். டெண்டூல்கர் 31 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள் எனும் வயதில் இருந்த ந…
-
- 5 replies
- 715 views
-
-
ஜேர்மனியில் அகதிகளுக்கெதிரான கட்சியின் உப தலைவரின் கறுப்பின வீரருக்கெதிரான கருத்தால் சர்ச்சை ஜேர்மனி தேசிய அணியினதும் பயேர்ண் மியூனிச் அணியினதும் வீரரான ஜெரோம் போடெங் தொடர்பாக, ஜேர்மனியின் அகதிகளுக்கெதிரான கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் உப தலைவர் தெரிவித்த கருத்தால், கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கானாவைச் சேர்ந்த அப்பாவுக்கும் ஜேர்மனியைச் சேர்ந்த அம்மாவுக்கும் ஜேர்மனியின் பேர்ளினில் பிறந்த போடெங், ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் முக்கிய வீரராக உள்ளதோடு, அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரில், ஜேர்மனுக்காக விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஜேர்மனிக்கான மாற்றீடு க…
-
- 5 replies
- 343 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. 10 முறை சாம்பியன்ஸ் அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகி…
-
- 3 replies
- 1.2k views
-
-
கோலியிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றி மனம் திறந்தார் சச்சின் விராட் கோலி, மனதளவில் மிகவும் பலமானவர் என்பதுடன் நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடக் கூடியவரென இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவரிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார் . கோலி குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சச்சின் டெண்டுல்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கோலியின் ஆட்டத்திறமை குறித்து சச்சின் மேலும் தெரிவிக்கையில், கோலி ஸ்ட்ரெயிட் பேட் முற…
-
- 0 replies
- 364 views
-
-
ஆஸ்திரேலியாவில் கோலி அடித்த 4 டெஸ்ட் சதங்களுக்கு ஈடு இணை இல்லை: ரவி சாஸ்திரி ரவிசாஸ்திரியிடம் பேட்டிங் ஆலோசனை பெறும் முரளி விஜய், விராட் கோலி. | கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ். இந்திய அணியுடன் தனது 18 மாத கால அனுபவம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறிய ரவிசாஸ்திரி கோலியின் வளர்ச்சி குறித்து பாராட்டியுள்ளார். செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், “இந்திய கிரிகெட்டுடன் ஒரு வீரராக பிறகு ஒரு இயக்குநராக இணைந்து பணியாற்றியதில் இந்த 18 மாத கால அனுபவம் என்னால் மறக்க முடியாத தருணங்களாகும். நாங்கள் ஒரு அணியாகச் சாதித்ததை நினைத்துப் பார்க்கும் போது இந்த 18 மாத கால அனுபவம் மறக்க முடியாதது. நான் ஒரு வீரராக …
-
- 0 replies
- 328 views
-
-
ஆங்கிலேய கிரிக்கெட் லீக் அனுபவத்திற்கு நன்றி கூறுகின்றார் குசல் மெண்டிஸ் "டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய அனுபவமோ, ஏ அணியுடனான வெளிநாட்டு விஜயமோ, உள்ளூர் கழகத் தலைமைத்துவமோ குசல் மெண்டிஸுக்கு இதற்கு முன்னர் கிடைத்ததில்லை. ஆனாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் பற்றிப் பிடித்துக்கொள்ளத் தவறியதில்லை. அதுதான் அவரது திறமை வெளிப்படுவதற்கு காரணமாகும். இங்கிலாந்தில் தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் குவித்த அரைச்சதம் டெஸ்ட் அரங்கில் அவ ரது கன்னி அரைச் சதமாகப் பதிவானது. …
-
- 0 replies
- 406 views
-
-
விளையாட்டு மைதானத்தில் வீரர் பலி.! (Video) ஆர்ஜன்டினாவில் நிகழ்ந்த காற்பந்தாட்ட போட்டியொன்றின் போது 23 வயதான மைக்கல் பெவ்ரே என்னும் வீரர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீரர் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிரணி வீரரொருவரின் கால் முட்டியானது முகத்தில் பலமாக மோதியுள்ளது. இதனால் காயமடைந்து கீழே விழுந்த குறித்த வீரனை எதிரணியின் வீரரொருவர் மீண்டும் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் குறித்த வீரனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த…
-
- 0 replies
- 420 views
-
-
தன் நடத்தையை விமர்சித்தவர்களுக்கு கிறிஸ் கெயில் பதிலடி கிறிஸ் கெய்ல். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய சேனல் ஒன்றின் பெண் நிருபரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக கெய்ல் மீது கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். கடந்த பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேனல் 10 பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசியதற்காக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிறிஸ் கெயில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சானல் 10 பெண் நிருபரான மெல் மெக்லாஃப்லின் கெயிலை அன்றைய தினம் பேட்டிக்காக அணுகிய போது, don't blush baby என்று கூறியது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சைக்குள்ளானது, கெயிலுக்கு அவர் ஆடிய கிளப்…
-
- 0 replies
- 616 views
-
-
இலங்கையுடன் மோதப் போகும் ஆஸி அணி இதுதான் ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள அவுஸ்திரேலிய 15 வீரர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிட்செல் ஸ்டார்க், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. மேலும் ஜேக்சன் பேர்ட், நேதன் கூல்டர்-நைல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னுக்கு நேதன் லயன், ஸ்டீஃபன் ஒகீஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் ஜூலை 26-ம் திகதி தொடங்குகிறது. இதன்படி இலங்கையை எதிர்கொள்ளவுள்ள அவிஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் சைமன் வில்லிஸ் கிரிக்கெட் வீரர், (விக்கெட் காப்பாளர்) சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைந்து கொண்டுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=80057
-
- 0 replies
- 285 views
-
-
விலக்கப்பட்டார் வான் கால் மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தின் முகாமையாளர் லூயிஸ் வான் கால், அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கழகம், உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தது. அவர் நீக்கப்படும் செய்தி, கடந்த சனிக்கிழமையிலிருந்து வெளிவந்த நிலையிலேயே, தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது இடத்துக்கு, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ, நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்.ஏ கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியைச் சம்பியன் ஆக்கிய பின்னரே, வான் கால் பதவி விலக்கப்பட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தெரிவாகாமை உட்பட, கழகத்தின் அண்மைக்காலப் பெறுபேறுகளில் திருப்தியடை…
-
- 1 reply
- 482 views
-
-
சிகிச்சையின் பின்னர் 100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் ஓடிய போல்ட் செக். குடியரசின் ஒஸ்ட்ராவாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுநர் போட்டியில் ஆறு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான யூசெய்ன் போல்ட் 100 மீற்றரை 9.98 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்றார். தொடை தசையில் ஏற்பட்ட உபாதைக்கு ஜேர்மனியில் சிகிச்சை பெற்ற பின்னர் பங்குபற்றிய போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றார். இவ் வருடம் அவர் பதிவு செய்த அதி சிறந்த நேரப் பெறுதி இதுவாகும். ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற கேமன் அழைப்பு மெய்வல்லுநர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 29 வயதான போல்ட் 10.05 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்…
-
- 0 replies
- 277 views
-
-
மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணி அறிவிப்பு படம்: ஏ.எஃப்.பி. ஜூலை-ஆகஸ்ட்டில் மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள், டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல், புஜாரா, அஜிங்கிய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் (மும்பை வேகப்பந்து வீச்சாளர்), ஸ்டூவர்ட் பின்னி. ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகள்: தோனி (கேப்டன்), ராகுல், ஃபைஸ் ஃ…
-
- 0 replies
- 382 views
-
-
இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில், இலங்கை அணியில் தாராளமாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சகலதுறை ஆட்டக்காரர்களும…
-
- 0 replies
- 489 views
-
-
ஆங்கிலேய எவ். ஏ. கிண்ணத்தை 12ஆவது தடவையாக மென்செஸ்டட் யுனைட்டட் கழகம் சுவீகரித்தது வெம்ப்ளி விளையாட்டரங்கில் க்றிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் 10 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்செஸ்டட் யுனைட்டட் கழகம் 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று ஆங்கிலேய எவ். ஏ. கிண்ணத்தை சுவீகரித்தது. அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்துவழிய இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் லிங்கார்ட் போட்ட கோலின் உதவியுடன் வெற்றி பெற்ற மென்செஸ்டர் யுனைட்டட் 12ஆவது தடவையாக எவ். ஏ. கிண்ணத்தை வென்றெடுத்தது. ஆரம்பம் முதல் இறுதிவரை…
-
- 0 replies
- 248 views
-
-
யுனைட்டெட்டின் முகாமையாளராக இவ்வாரம் நியமிக்கப்படுகிறார் மொரின்ஹோ மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ நியமிக்கப்படவுள்ளதாக, பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இவ்வாரத்தில் அவர் நியமிக்கப்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்பதாகவே, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்கும் மொரின்ஹோவுக்குமிடையிலான இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லூயிஸ் வான் காலின் முகாமைத்துவத்தின் கீழ், சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் அணி தகுதிபெறாமை காரணமாக, மாற்றமொன்றை மேற்கொள்ள, அக்கழக நிர்வாகிகள் முடிவெட…
-
- 0 replies
- 349 views
-
-
பரிஸ் செய்ண்ட் ஜெர்மைனிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் இப்ராஹிமோவிக் மர்சேய் அணியைத் தோற்கடித்து கூப்பே டீ பிரான்ஸ் கிண்ணத்தை பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி கைப்பற்ற, பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்கான தனது இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்று வெற்றியுடன் ஸல்டான் இப்ராஹிமோவிக் விடைபெற்றார். மேற்படி கிண்ணத்தினை வென்றமையையடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக உள்ளூர் கிண்ணங்கள் அனைத்தையும் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வென்றுள்ளது. மேற்படி போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி சார்பாக இப்ராஹிமோவிக் 2 கோல்களையும் எடின்சன் கவானி, பிளை…
-
- 0 replies
- 270 views
-