விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
நடுவர் அலிம்தாரின் மகன்மார் வேறு பெயர்களுடன் விளையாடியதால் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் கழகம் தரமிறக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் மத்தியஸ்தர் அலிம் தாரின் மகன்மார் இருவர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்து பிரஜைகள் எனப் பொய் கூறியுள்ளதை தான் அறிந்திருக்கவில்லை என அலிம் தார் தெரிவித்துள்ளார். அலிம் தாரின் மகன்மாரான 18 வயதுடைய அலி என்பவரும் 16 வயதுடைய ஹசன் என்பவரும் தாங்கள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர்கள் என பொய் கூறி கில்மானொக் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடியமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முதலாம் பிரிவிலிருந்து அக் கழகத்தை மேற்கு மாவட்ட கிரிக்…
-
- 0 replies
- 241 views
-
-
பார்முலா 1 கார் பந்தயம் ராஸ்பெர்க் சாம்பியன் சோச்சி: ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஸ்பெர்க் 1 மணி, 32 நிமிடம், 41.997 விநாடிகளில் முதலாவதாக வந்து கோப்பையை கைப்பற்றினார். 10வது இடத்தில் இருந்து தொடங்கினாலும் அபாரமாக செயல்பட்ட சக மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+25.022 விநாடி) 2வது இடம் பிடித்தார். செபாஸ்டியன் வெட்டல் (பெராரி) ஓட்டிய கார் மீது டானில் க்வியாட் ஓட்டிய கார் பின்புறம் இருந்து இடித்ததால், வெட்டல் பந்தயத்தில் இருந்து துரதிர்ஷ்டவசமாக விலக நேரிட்டது. போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹல்கன்பெர்க், வில்லியம்ஸ் வீரர் வா…
-
- 0 replies
- 285 views
-
-
லா லிகா தொடர்: மீண்டும் முதலிடத்தில் பார்சிலோனா ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளின்போது வெவ்வேறு நேரங்களில் மூன்று அணிகள் முன்னிலையில் இருந்தபோதும் இறுதியாக பார்சிலோனா அணி தனது முதலிடத்தைப் பெற்றுள்ளது. றியல் மட்ரிட், றியல் சொஸைடட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நேரங்களில் றியல் மட்ரிட்டின் கரித் பேல் பெற்ற கோலின் காரணமாக அவ்வணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 84 புள்ளிகளைப் பெற்று ஒரு கட்டத்தில் முன்னிலைக்கு வந்திருந்தது. இப்போட்டியில் காயம் காரணமாக, அவ்வணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் விளையாடவில்லை …
-
- 0 replies
- 294 views
-
-
அடங்காத மலிங்கா! மருத்துவர் காரசார குற்றச்சாட்டு! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்கா தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் எ…
-
- 0 replies
- 390 views
-
-
கெய்லின் சாதனை முறியடிப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்துகளில் அதிவேக சதம் அடித்து, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டிரினிடாட் டொபாகோவில் அந்நாட்டு கிரிக் கெட் நிறுவகம் சார்பில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான இ–20 போட்டி நடத்தப்படுகிறது. இதில்,நடந்த போட்டியில் ஸ்கார் போரோக் மேசன் ஹால் அணியும், ஸ்பைசைட் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பைசைட் அணி 152 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய ஸ்கார்போரோக் அணியின் 23 வயதான தோமஸ், தான் சந்தித்த அனைத்து பந்துகளையும் விளாசித் தள்ள…
-
- 0 replies
- 637 views
-
-
இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது. தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, விக்க…
-
- 1 reply
- 444 views
-
-
விம்பிள்டன் பணப்பரிசு அதிகரிப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் சம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பணப்பரிசு இவ் வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடத்தப்படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் தூய்மையின் அடையாளமாக விளங்குவது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளாகும். இப் போட்டிகளில் பங்குபற்றும் அனைவரும் வெள்ளை அங்கிகளையே அணிய வேண்டும் என்பது விம்பிள்டன் ஏற்பாட்டுக் குழுவின் நியதியாகும். இதன் மூலம் தூய்மையின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுகின்றது. இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் …
-
- 0 replies
- 634 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரே லிய கிரிக்கெட் விஜயத்தை முன் னிட்டு குறுகியகால அடிப்படையில் அலன் டொனல்டை பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்கப்படாதது எவ்வளவு தவறானது என்பதை அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக நிய மிக்கப்பட்ட பின்னர்…
-
- 1 reply
- 544 views
-
-
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளின் தலைவராக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்ஸன், இவ்வருட பிற்பகுதியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான 29ஆவது தலைவராக மாறவுள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-இல் நியூசிலாந்துக்கு தலைவராக இருந்த வில்லியம்ஸன், இதுவரையில், 36, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் பிரென்டன் மக்குலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வில்லியம்ஸனே நியூசிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படுவா…
-
- 0 replies
- 462 views
-
-
செய்தித் துளிகள்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு நியமிக்கப் பட்டுள்ளார். --------------------------------- ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் காயம் காரணமாக விலகிய மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். --------------------------------- ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு இம்முறை வைல்டுகார்டு கிடையாது என இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தங்களது தரவரிசை அடிப்படையில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. --------------------------------- …
-
- 0 replies
- 431 views
-
-
மலிங்கவிற்கு ஓய்வு இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மலிங்கவுக்கு 3 மாதகால ஓய்வு வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5676
-
- 0 replies
- 485 views
-
-
நானே முதல்வன் : சச்சின் மூன்றாவது நடுவர் முறை மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டமிழந்த முதல் வீரர் நானே என இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட்டில் தொழில்நுட்பமானது அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது நடுவர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் மூலம் ஆட்டமிழந்த முதல் நபர் நான்தான் என அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/5677
-
- 0 replies
- 514 views
-
-
‘‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால சபை அவசியமில்லை’’ – அமைச்சர் தயாசிறி ஜயசேகர (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபையைக் கலைத்து இடைக்கால நிருவாக சபையை நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபாலவை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டு அவரை நிருவாக சபைக்குள் அனுமதித்துள்ளதாகவும் அவர் கூறினார். சர்வதேச அரங்கில் பிரகாசித்த ஆடவர் ஹொக்கி அணியினரையும் .மகளிர் கூடைப்பந்தாட்ட அணியினரையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட …
-
- 0 replies
- 341 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்? ஒலிம்பிக் அல்லது பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பதா? இல்லையா? என்பது குறித்தான முகாமைத்துவக் குழுவின் பரிந்தரைகளை சர்வதேச கிரிக்கட் பேரவை திங்களன்று ஆராய்ந்தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச ஒலிம்பிக் குழுவினர், பொதுநலவாய விளையாட்டுத்துறை சமமேளன உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் பேரவையின் நிருவாக சபை தீர்மானித்தது. சீனாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறை வியாபித்து வருவது தொடர்பான அறிக்கை ஒன்று …
-
- 0 replies
- 395 views
-
-
சொந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்காவுக்கு அந்நாட்டு அரசு தடை! 2016-04-27 10:55:28 இன ஒடுக்கல் காரணமாக பல்லாண்டுகளுக்கு முன்னர் 21 வருடத் தடைக்கு உட்பட்டிருந்த தென் ஆபிரிக்காவுக்கு இப்போது மீண்டும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. கிரிக்கெட் நிருவாகத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளுக்கு அமைய மாற்றங்களை செய்யத் தவறியதால் கிரிக்கெட் தென் ஆபிரிக்காவுக்கு (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உயர்மட்டக் குழுவினரால் அமைச்சர் மட்ட சுயாதீனக் …
-
- 0 replies
- 436 views
-
-
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஐ.சீ.சீ எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர், வீரர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றின் பின்னர் அணியின் முக்கிய வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கள் , நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 633 views
-
-
கையில் 'பணமின்றி' வீடு திரும்ப தவித்த தருணம்: சச்சின் ருசிகரம் டிஜிபேங்க் அறிமுக நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர். | படம்: பிடிஐ. கையிலிருந்த காசையெல்லாம் செலவு செய்து விட்டு ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன் என்று சச்சின் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் ரயில் நிலையத்திலிருந்த வீட்டுக்கு வாகனத்தில் செல்ல காசில்லாமல் இருந்ததுண்டு என்று கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். அதாவது அன்று, இப்போது போல் செல்போன் வசதியிருந்திருந்தால் சவுகரியமாக இருந்திருக்கும் என்பதற்காக இதனைக் குறிப்பிட்டார் சச்சின் டெண்டுல்கர். மும்பையில் ‘டிஜிபேங்க…
-
- 0 replies
- 564 views
-
-
விவ் ரிச்சர்ட்சை ஒத்திருக்கிறது விராட் கோலியின் மனநிலை: ரவி சாஸ்திரி விராட் கோலி. | படம்: ஜி.பி.சம்பத் குமார். இந்திய அணியின் இயக்குநரான ரவிசாஸ்திரி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது விராட் கோலியின் மனநிலையை விவ் ரிச்சர்ட்ஸின் மனநிலைக்குச் சமமானது என்று புகழாரம் சூட்டினார். விஸ்டன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய ஆளுமை எப்படியெனில் எந்த ஒரு சவாலையும் நான் விட்டு விட மாட்டேன். நான் அனைத்துத் தடைகளையும் கடந்து நேராக பணிக்கு வருபவன். அதாவது தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கை என்ற புள்ளிக்கு நேராக வருவதுதான் என்னுடைய அணுகுமுறை. இதுதான் எனது முதல் பதிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்திய அணி …
-
- 0 replies
- 331 views
-
-
விராட் கோலி, டிவில்லியர்ஸை யார் என்று கேட்ட ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பா. | படம்: அகிலேஷ் குமார். விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை ‘யார் இவர்கள்’ என்று ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸம்பா கேட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு அணியும், புனே அணியும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது, இதனையடுத்து பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் புனே அணியின் தன் சக ஆஸி.வீரரான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பாவுக்கு ட்வீட் செய்யும் போது, விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் படத்தை வெளியிட்டு அதற்குக் கீழே, “ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் பேட் செய்வதைப் பார்…
-
- 0 replies
- 493 views
-
-
அபாரமாக வென்றது பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த லீக் போட்டியில் பார்சிலோனா - ஸ்போர்டிங் கிஜோன் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 12வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பார்சிலோனா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. அந்த அணியின் லூயிஸ் சுவாரஸ் (63, 74, 77, 88வது நிமிடம்) 4 கோல் அடித்து அசத்தினார். நெய்மர் தன் பங்கிற்கு (85வது நிமிடம்) ஒரு கோல் அட…
-
- 0 replies
- 421 views
-
-
குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக போட்டியில் சதம்: இலங்கை அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக மட்டப் போட்டியில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் சர்ரே கழகத்தின் சார்பில் குமார் சங்கக்கார விளையாடி வருகின்றார். ஓவல் மைதானத்தில் சமர்செட் கழகத்திற்கு எதிரான போட்டியில் சங்கக்கார 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதுவரை சங்கக்கார சரே அணிக்காக 22 இன்னிங்ஸ்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131438/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 562 views
-
-
சாதனையை சமன் செய்தார் நடால் நடால். | படம்: ஏ.எஃப்.பி. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரியை 6-4, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். வெற்றி குறித்து நடால் கூறும்போது, "இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக சர்வீஸ் செய்தேன். இது தான் முக்கியமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சர்வீஸ்கள் நல்ல முறையில் அமைந்தால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடிந்தது. இரண்டாவது செட்டில் அதிக வாய்ப்புகள் நழுவிய போதிலும் மனதளவில் போராடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். பார்சிலோனா போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் களிமண் தரையில் …
-
- 0 replies
- 333 views
-
-
கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியது! பள்ளேகலயிலிருந்து வான் வழியாக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் 2016-04-24 19:30:23 இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீரர்களில் ஒருவரான கௌஷால் சில்வாவின் தலையில் பந்தொன்று தாக்கியமையால் அவர் பள்ளேகலயிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். பள்ளேகலயில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லையென்பது ஆரம்ப சோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் ஸ்ரீலங்கா கி…
-
- 2 replies
- 336 views
-
-
ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது? உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய முறையில் ஏற்றப்பட…
-
- 2 replies
- 4.4k views
-
-
கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார 2016-04-25 08:30:33 இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விடயங்களில் எழும் பல கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளித்தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் முதல்தர பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் சரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். …
-
- 0 replies
- 266 views
-