விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
செய்தித்துளிகள்.. மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பாதிக்கு மேலானோர் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் டி 20 லீக் போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்கள் ஒரே அணியாக இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் டி 20 உலகக்கோப்பையை வெல்வோம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு ஆலோசகர் அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். -------------------------------------- கோலாலம்பூரில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 0-3 என்ற கணக்கில் நைஜிரியாவிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய 4வது சுற்றுக்கு முன்னேறியது. --…
-
- 0 replies
- 360 views
-
-
பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியாது: அப்ரிடியை விமர்சித்த நடிகை! கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷில் நடந்து வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியை டிவியில் பார்த்து, ஆத்திரமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை அடித்து உடைத்தனர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு, பல்வேறு இடங்களில் கொடும்பாவிகளையும் எரித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அப…
-
- 0 replies
- 555 views
-
-
பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்க 2 மில்லியன் டாலர்கள் என்றால்... : ஸ்டெய்ன் கவலை டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.பி. கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு அழியும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் ரக கிரிக்கெட்டில் பேட்டிங் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வளர்க்கப்படுவது பற்றி அச்சம் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் மன்த்லி பத்திரிகைக்கு அவர் அளித்து நாளை முழுதாக வெளியாகும் பேட்டியில் அவர் இது பற்றி கூறியதாவது: “160கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் தேவை. 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் பிட்சில் 150கிமீ வேகம் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற…
-
- 0 replies
- 384 views
-
-
ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம் ராகுல் திராவிட். | வி.ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கை – ஜேர்மனி நட்புறவு கால்பந்தாட்டம் 2016-03-01 10:21:01 (நெவில் அன்தனி) இலங்கைக்கு வருகைதந்த ஜேர்மனியின் ப்ரோமெட்லின்க் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரிகளும் இணைந்து இலங்கையின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அணியினருடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடினர். தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப் போட்டியில் ஜேர்மன் தூதரகத்தின் பிரதி தூதுவர் மைக்கல் டோர்மனும் பங்குபற்றி சிறப்பித்தார்.…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையின் தோல்வி: சங்கா, மஹேல ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 5ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்து. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கு…
-
- 0 replies
- 501 views
-
-
உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் தடவையாக பெண் மத்தியஸ்தர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு பெண் மத்தியஸ்தர்களும் கடமையாற்றவுள்ளனர். இப் போட்டிகளை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 31 மத்தியஸ்தர்களில் இருவர் பெண்கள் ஆவர். இதன் மூலம் உலக இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக பெண்கள் மத்தியஸ்தம் வகிக்கவுள்ளனர். நியூஸிலாந்தின் கெத்தி குரொஸ் அவர்களில் ஒருவராவார். இவர் 2000, 2009, 2013 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் மத்தியஸ்தராக பணிய…
-
- 0 replies
- 321 views
-
-
லிவர்பூலை வீழ்த்தி கப்பிரல் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி! கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி டைபிரேக்கரில் லிவர்பூல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் ஆனது. பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆர்சனல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை மான்செஸ்டர் சிட்டி சந்தித்தது. பிற்பாதியில் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபெர்னான்டின்ஹோ முதல் கோல் அடிக்க, அதற்கு 83வது நிமிடத்தில் லிவர்பூலின் ஹட்டின்ஹோ பதிலடி கொடுத்தார். 90 நிமிட ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோ…
-
- 0 replies
- 525 views
-
-
பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார். இந்தநிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவர…
-
- 0 replies
- 393 views
-
-
நியூஸிலாந்து ரசிகர்கள் எல்லை மீறுகின்றனர்: டேவிட் வார்னர் பாய்ச்சல் ஸ்மித், வார்னர். | படம்: ஏ.எஃப்.பி. நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக வசைமழை பொழிந்ததாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கொதித்தெழுந்துள்ளார். எல்லைக்கோட்டருகே பீல்ட் செய்த ஜோஷ் ஹேசில்வுட் உட்பட மற்றொரு பவுலர் ஆகியோரை கிறைஸ்ட்சர்ச் டெஸ்டின் போது ரசிகர்கள் ஆபாசமான வசைமொழியினால் திட்டினார்கள் என்று டேவிட் வார்னர் ஆவேசமடைந்துள்ளார். இது குறித்து ஏபிசி-க்கு டேவிட் வார்னர் கூறியதாவது: உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, வீரர்களுக்கு சில வசைகள் வந்து விழும் என்பது தெரிந்ததே. ஆனால் நாள் முழுதும், …
-
- 0 replies
- 360 views
-
-
தோனியை கரூரிலும் கோலியை தஞ்சாவூரிலும் ஏன் தேடுகிறார்கள்? - இது என்னடா புது டிஸைன்! சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் விஷயங்களை கணிப்பது கடினம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு அந்த பிரச்னை இல்லை. அது ஆல்டைம் ட்ரெண்டில் இடம் பெறும் விஷயம்தான். ஆனால் நேற்று முதல் இந்தப் போட்டி பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல பரவிவருகிறது. இதுவரை ஐசிசி ஆட்டங்களில் பாகிஸ்தான், இந்தியாவை வென்றதில்லை என்ற புள்ளிவிவரம் துவங்கி, தோனிக்கு அடிபட்டுள்ளது வரை டாப் ட்ரெண்டில் உள்ளது இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை ஆட்டம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கூகுள் ட்ரெண்டில் உள்ள இந்திய வீரர்களில் தோனிக்குதான் முதலிடம், அடுத்து கோலி, யுவராஜ், ரோஹித், அஸ்வின் உள்ளனர்.…
-
- 0 replies
- 467 views
-
-
'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை வாங்கிய சன்னி லியோன் ஐ.பி.எல், சி.சி.எல். போன்று சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் பி.சி.எல். எனப்படும் பாக்ஸ் கிரிக்கெட் 'லீக்' போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாங்கியுள்ளார். சன்னி லியோன் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திப் படங்களில் நடித்துள்ளார். 'வடகறி' என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தோனியை போல இவரும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளம்பரங்களிலும் தோன்ற இருக்கிறார். http://www.vikatan.com/news/sports/59713-sun…
-
- 0 replies
- 395 views
-
-
'போர்ப்ஸ்' மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி, சானியா மிர்ஷா! ஆசியாவின் மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். சானியா மிர்ஷா, சாய்னா நேவால் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். வணிக பத்திரிக்கையான 'போர்ப்ஸ்' ஆசிய கண்டத்தில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், ஹாங்காங் ஆய்வு நடத்தி நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என 300 பேர் பட்டியலை தயாரித்தது. இந்த பட்டியலில் 56 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள் பிரிவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்…
-
- 0 replies
- 380 views
-
-
மஹேல தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் : திலங்க குற்றசாட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹே ஜயவர்தன இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறப்பான ஒரு விடயம் அல்ல என இலங்கை கிரிக்கைட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட மஹேல ஜெயவர்தன கிரிக்கெட்டிருந்து ஓய்வுபெற்று ஒரு சில மாதங்களே ஆகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயற்படும் அவர் சொந்த நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார். இந்தச் செயல் எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார் கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெர…
-
- 4 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக சங்ககார? February 26, 2016 பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவை நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கட் தொடரில் பங்கேற்ற சங்ககார அங்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ரி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சங்ககாரவை ஆலோசகராக நியமிப்பது குறித்து ஷகார்யார் கான் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும்; இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகி…
-
- 1 reply
- 469 views
-
-
ஃபீஃபா தலைவர் பதவி தேர்தல்: முதல் சுற்றில் இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகள், ஷேய்க் சல்மானுக்கு 85 வாக்குகள் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) புதிய தலைவர் பதவிக்கான தேர்தலின் முதல் சுற்றில் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரான சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபன்டீனோ, ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் தலைவரான பஹ்யெ;னின் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது சூரிச்சில் தற்போது நடைபெறும் தேர்தலின் முதல் சுற்றில் ஜியானி இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகளும் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுக்கு 85 வாக்…
-
- 2 replies
- 366 views
-
-
ஆரோனின் பந்துவீச்சில் சந்தேகம் February 26, 2016 தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்தவர் ஆரோன் பாங்கிசோ. இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 20 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் உள்ளூர் ஆட்டம் ஒன்றில் கலந்து விளையாடிய பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்தது. அவரது பந்துவீச்சு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சோதனை நடந்த ஐ.சி.சி. உத்தரவுட்டுள்ளது. மார்ச் 8ம் திகதிக்குள் அவர் பந்துவீச்சை முறையை நிரூபிக்…
-
- 0 replies
- 415 views
-
-
’’ஒய்வு பெற வாய்ப்பு உள்ளது’’ மலிங்கா February 26, 2016 டி20 உலக கிண்ணம் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் பந்துவீச்சாளர் மலிங்கா சூசகமாக தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா உலகளவில் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகள், 191 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 470 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சமீப நாட்களாக காயத்தில் அவதிப்பட்டு வரும் அவர், யு.ஏ.இ. அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகவே பந்துவீசினார். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, கடந்த 12 ஆண்டுகளாக இலங்கை அணிக…
-
- 0 replies
- 353 views
-
-
மகாஜனாக் கல்லூரி வெற்றி -குணசேகரன் சுரேன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை பாடசாலைகளில் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியொன்றில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அலவ ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியும் ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணி, 21 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவ…
-
- 0 replies
- 452 views
-
-
ஆப்கன் சிறுவனுக்கு கையெழுத்திட்ட சட்டைகளை அனுப்பினார் மெஸ்ஸி மெஸ்ஸி அனுப்பிய கையெழுத்திட்ட சட்டையுடன் அகமதி | படம்: ஏ.பி. பிளாஸ்டிக் பையினால் ஆன உடையில் அகமதி | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் ஆப்கானிஸ்தான் சிறுவன் அகமதிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட சட்டைகளையும், கால்பந்தையும் அனுப்பியுள்ளார். கால்பந்து விளையாட்டில் சிறுவன் அகமதிக்கு அதிக ஆர்வம். ஆர்வ மிகுதியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையில் உள்ள வடிவத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பையை ஆப்கன் சிறுவன் முர்தசா அகமதி அணிந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் இணையவ…
-
- 0 replies
- 515 views
-
-
விளையாட்டுச் செய்தித்துளிகள்: இந்திய டி20-ல் பாக். அணி # மெக்ஸிகோ ஓபன் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மராக், பேப்ரைஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வியடைந்தது. # இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு மனுமதி வழங்கியுள்ளது. # மார்ச் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கும் டி 20 உலகக்கோப்பைக்கான 31 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் சவுத்ரி, வினீத் குல்கர்னி, சிகே நந்தன், ஷம்ஸூதின், ரவி சுந்தரம் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நியூஸிலாந்தை சேர்ந்த கேத்லின் …
-
- 0 replies
- 435 views
-
-
டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர் February 25, 2016 கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டிகளில் 246 போட்டிகளில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக டென்னிஸ் நேர்மை அலகின் தலைவர் நைஜல் வெல்லேர்டன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று கிறான்ஸிலாம் போட்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’ வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கடந்த வருடத்தில் ஊழல் தொடர்பான 246 எச்சரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றது. இந்த எண்ணிக்கையானது வருடம் ஒன்றுக்கு நடைபெறும் டென்னிஸ் போட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கை. இது மிகப் பெரு…
-
- 1 reply
- 494 views
-
-
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் -ச.விமல் ஆசியக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இன்று ஆரம்பிக்கவுள்ளது. முதற் தடவையாக 5 அணிகள் பங்குபற்றும் தொடராக அமையவுள்ள அதேவேளை முதற் தடவையாக இருபதுக்கு-20 தொடராக நடைபெறவுள்ளது. 1986ஆம் ஆண்டு ஆசியக் கிரிக்கெட் சம்மேளனத்தினால் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் சாஜாவில் நடாத்தப்பட்டது. இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை இந்த தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. 2014ஆம் ஆண்டு இறுதியாக பங்களாதேஷில் இந்த தொடர் நடைபெற்றது. நான்கு நாடுகள் பங்குபற்றிய இந்த தொடரில் இந்த வருடம் ஆசியக் கண்ட நான்கு துணை அங்கத்துவ நாடுகளில் இருந்து ஒரு நாடு தெரிவுகாண் போட்டிகள் மூலம் தெரிவாகி ஐந்தாவது நாடாக இணைந்துள்ளது. …
-
- 0 replies
- 424 views
-
-
பிளட்டர், பிளட்டினியின் குற்றம் உறுதியானது சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் வெளிச்செல்லும் தலைவர் செப் பிளட்டர், அதன் உப தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத்தின் தலைவருமான மைக்கல் பிளட்டினி ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தடைக்கெதிராக மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டில், அவர்களது குற்றம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை, குறைக்கப்பட்டுள்ளது. மைக்கல் பிளட்டினிக்கு செப் பிளட்டர் வழங்கிய 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் கொடுப்பனவில், அவர்களிருவருமே குற்றம் இழைத்தார்கள் என, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மேன்முறையீட்டுக் குழு அறிவித்தது. எனினும், அவர்களு…
-
- 0 replies
- 457 views
-
-
நாளை பீபா தலைவருக்கான தேர்தல் பீபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை (26), சுவிற்ஸர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது. கடந்த 18 வருடங்களாக, கால்பந்தாட்ட உலகை ஆளும் கூட்டமைப்பின் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், எந்தவொரு பீபா நடவடிக்கையிலும் ஈடுபட எட்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதியீடு செய்யவுள்ளார். மேற்படி பீபா தலைவருக்கான வாக்கெடுப்பில், பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 209 அங்கத்துவ நாடுகளும் தலா ஒவ்வொரு வாக்குகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இரகசிய வாக்களிப்பு நிலையத்தில் அவை தமது வாக்குகளை அள…
-
- 0 replies
- 431 views
-