விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
’’புகைப்படம் எடுக்கும் போது வோட்சனின் வயிற்றில் ஓங்கி குத்த நினைத்தேன்’’ கெய்ல் February 12, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்லும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும் ஐபிஎல் பற்றி டுவிட்டரில் ஜாலியாக பேசிக் கொண்டனர். கடந்த 2009ம் ஆண்டு பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெய்லின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஷேன் வார்டன் ஆக்ரோஷமாக அதை கொண்டாடினார். இது கிறிஸ் கெய்லுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் மோசமான நடத்தைக்காக வாட்சனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் வாட்சன், கிறிஸ் கெய்ல் இடம்பெற்றுள்ள பெங்க…
-
- 0 replies
- 473 views
-
-
இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக யாழ் பல்கலைக்கழக மாணவன் February 12, 2016 இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக யாழ் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பல்கலைக்கழங்களிலுள்ள சிறந்த விளையாட்டு வீரரை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற இணைய வாக்கெடுப்பிலேயே சிறந்த வீரராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக http://sports.moraspirit.com என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு ஆரம்பமான நாளிலிருந்து முதலிடம்…
-
- 0 replies
- 440 views
-
-
இரட்டைக்குழந்தைகளுடன் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் போட்டிக்குத் தயாரகிக் கொண்டிருக…
-
- 1 reply
- 554 views
-
-
இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு புறப்பட்டது இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள சஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில், சஷிகலா சிறிவர்தன (அணித் தலைவர்), சமரி அத்தப்பத்து (உப தலைவர்), யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரணசிங்க, டிலானி மனோதரா, பிரசாதனி வீரக்கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்குசூரிய, உதேஷிகா பிரபோதனி, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, நிபுணி ஹன்சிகா, ஹர்ஷிதா மாதவி ஆகியோர் இடம்பெறுகின்றனர். http://www.virakesari.lk/article/3069
-
- 0 replies
- 348 views
-
-
உலகக் கிண்ண மகளிர் இறுதி ஆட்டம் 2017 லோர்ட் விளையாட்டரங்கில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 2017 இறுதி ஆட்டம் லோர்ட் விளையாட்டரங்கில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் டார்பிஷயர், க்ளொஸ்டர்ஷயர், லெஸ்டர்ஷயர், சமர்செட் ஆகிய விளையாட்டரங்குகளிலும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் உலகக் கிண்ண கிரிக்ெகட் போட்டிகள் இங்கிலாந்தில் அடுத்த வருடம் ஜூன் 26 முதல் ஜூலை 23 வரை நடைபெறவுள்ளன. எட்டு நாடுகளின் அணிகள் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்…
-
- 0 replies
- 365 views
-
-
தொடர்ச்சியான 100 ஆவது டெஸ்ட் போட்டி சாதனையை நோக்கி பிறெண்டன் மெக்கலம் 2016-02-12 11:14:45 அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணித் தலைவர் ப்றெண்டன் மெக்கலமின் நூறாவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. ஒரு நூற்றாண் டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலா ற்றில் பிறெண் டன் மெக்கலம் அரும் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். நியூஸிலாந்தின் வெலிங்டன் விளையாட்டரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் நாணயச் சுழற்சிக்காக அரங்கினுள் செல்லும்போது பிறெண்டன் மெக்…
-
- 1 reply
- 369 views
-
-
சிவப்பு அட்டைக்கு பிள்ளையார் சுழி போட்ட இங்கிலாந்து கிரிக்கட் கழகம் February 11, 2016 இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் ஒன்று மைதானத்தில் ரகளை செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கு ’சிவப்பு அட்டை’ கொடுக்கும் முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கால் பந்தாட்ட போட்டியின் போது தகராறு செய்யும் வீரர்களுக்கு, நடுவர்கள் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காட்டுவது வழக்கம். மஞ்சள் அட்டை வீரரை எச்சரிக்கை செய்யும் படியும், சிவப்பு அட்டை அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் குறியையும் குறிக்கும். தற்போது அதே பாணியில் கிரிக்கெட்டிலும் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கும் முறையை புகுத்த முடிவு செய்துள்ளது இங்கிலாந்தின் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப். இந்த கிளப்பின் நட…
-
- 1 reply
- 406 views
-
-
0 ரன்னில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து உள்ளூர் அணி பிரதி இங்கிலாந்தில் 6 ஓவர் கொண்ட இண்டோர் சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கிறிஸ்ட் சர்ச் யுனிவர்சிட்டி- பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையான ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆனார்கள். குறைந்த ஓவர் போட்டி என்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட நினைத்தார்கள். ஆனால், ஒரு சிங்கில் ரன் கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் ரன்ஏதும் எடுக்காமல் 2…
-
- 2 replies
- 485 views
-
-
விளையாட்டுத் துளிகள்: சென்னையில் ஏசியன் ரக்பி போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை அணி 15-0 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியையும், கிருஷ்ணகிரி 5-0 என்ற கணக்கில் திருவண்ணாமலையையும், திருவள்ளுர் 3-1 என்ற கணக்கில் கடலூர் அணியையும் தோற்கடித்தன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் சார்பில் ஏசியன் ரக்பி செவன்ஸ் இரண்டாவது சீசன் போட்டிகள் சென்னையில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகள் நடைபெறுகிறது. இதில் ஆசிய நாடுகளை சேர்ந்த இந்தியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, கஜகஸ்தான், சவுதி அரேபியா, சிரியா, குவாம், வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அரபு …
-
- 0 replies
- 500 views
-
-
பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஜொன்சன் February 11, 2016 இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் பிரெட்போர்ட் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த வழக்கு மீதான விசாரணைகளின் போது 15 வயது சிறுமி ஒருவருடன் தான் பாலியல்; ரீதியான உறவினை பேணி வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 538 views
-
-
வீரர்கள் தவறுகள் செய்யவும் வாய்ப்பு வழங்க வேண்டும்: அண்டர் 19 அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பேட்டி இந்திய அண்டர் 19 கேப்டன் இஷான் கிஷன் (இடது), பயிற்சியாளர் ராகுல் திராவிட். | படம்: விவேக் பெந்த்ரே. பயிற்சியாளர் ராகுல் திராவிடின் வழிகாட்டுதலுடன் இந்திய அண்டர் 19 அணி வங்கதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிக்குள் பிரவேசித்துள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட் வீரர்களுடனான தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். ஐசிசி கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் கூறியிருப்பதாவது: நான் இளம் வீர்ர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன், இளம் வீரர்களுடன் உரையாடி வருகிறேன். எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்…
-
- 0 replies
- 241 views
-
-
U19 சிங்கம் ரிசாப் பண்ட் தான் அடுத்த விராத் கோலியா? 2008ம் ஆண்டு ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பலரும் ஜொலித்திருந்தனர். அந்தப் பல நட்சத்திரங்களுள் இன்று துருவ நட்சத்திரமாய் ஜொலிப்பது என்னவோ விராத் கோலி மட்டும் தான். அதற்கடுத்தது இந்திய அணிக்குள் வந்தவர்களெல்லாம் ஐ.பி.எல் செயல்பாட்டால் ஜொலித்தவர்களே ஒழிய, ஜூனியர் உலகக்கோப்பை யாருக்கும் பெரிய அளவில் அங்கீகாராம் பெற்றுத் தரவில்லை. ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்துவரும் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிசாப் பன்ட். கோலியைப் போலவே இந்திய அணியின் வருங்காலமாய் இவர் உருவெடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஒரே ஒரு ஊருக்குள்…
-
- 0 replies
- 508 views
-
-
தேசிய கீதத்தின் போது அநாகரீகமாக நடந்த அவுஸ்திரேலிய வீரர் February 11, 2016 அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்நாட்டு வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது தேசிய கீதம் பாட அவுஸ்திரேலிய வீரர்கள் வட்டமிட்டு நின்றனர். அப்போது சக வீரர் ஆடம் சம்பாவின் இடுப்பில் கை வைத்திருந்த அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டார். இது அங்கிருந்த கமெராவில் பதிவானது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்த காவாஜா, ”ஹா..ஹா.. எனது பின் பக்கம் க…
-
- 0 replies
- 320 views
-
-
மெத்யூ 7 தங்கங்களை வென்று சாதனை (குவாஹாட்டியிலிருந்து எஸ். ஜே. பிரசாத்) தெற்காசிய விளையாட்டு விழா அத்தியாயமொன்றில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் மெத்யு அபேசிங்க இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும் மேகாலயா மாநிலத்தின் ஷில்லொங்கில் நடைபெற்று வரும் 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆறாம் நாளான நேற்று துப்பாக்கிசுடுதல், ஸ்கொஷ், மேசைப்பந்தாட்டம், டென்னிஸ், பூப்பந்தாட்டம் (பட்மின்டன்) ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. நீச்சல் போட்டி சருசாஜாய், டாக்டர் ஸக்கிர் ஹுசெய்ன் ந…
-
- 1 reply
- 430 views
-
-
நியூஸி. கிரிக்கெட் நேரலையை 'மறந்த' இந்திய டிவி சேனல்கள்! நியூஸிலாந்தில் நடைபெறும் சர்வதேச இருதரப்பு ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இந்தியத் தொலைக்காட்சியில் எதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதில்லை. ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. உலகக்கோப்பை ஒரு ஐசிசி நிகழ்வு, அதனால் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச போட்டிகள் நேரடி ஒளிபரப்புக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலவரம். கடைசியாக நியூஸிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன, ஆனால் அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வத…
-
- 0 replies
- 565 views
-
-
ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐ.பி.எல். என்ட்ரி குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே... ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடந்தது? பிப்ரவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கே டி.வி. முன்னாள் உட்கார்ந்துட்டேன். லஞ்சுக்கு மட்டும்தான் எழுந்துருச்சேன். மாலை 4 மணிக்குதான் எனது பெயர் ஸ்கிரீன்ல தெரிஞ்சது. ரொம்ப நெர்வசா இருந்தது. எனக்கு ஐ.பி.எல்.ல விளையாடனும்னுதான் ஆசை…
-
- 0 replies
- 643 views
-
-
ரூ.1600 கோடியை இழப்பை சந்திக்கும்: பி.சி.சி.ஐ பல்லை பிடுங்கியது லோதா கமிட்டி! லோதா கமிட்டி பரிந்துரை அமல் செய்யப்பட்டால், இந்த ஆண்டு பி.சி.சி.ஐ ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பபான பி.சி.சி.ஐ. யின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் பெரும் பகுதி தொலைகாட்சி உரிமத்ததால் கிடைப்பது. த கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சீர்கேடுகளை களைய உச்சநீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, கிரிக்கெட் அமைப்புகளை சீரமைக்க, பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் முக்கியமானது, ஒவ்வொரு ஓவர் இடைவேளை, விக்கெட் அவுட் ஆகும் சமயங்களில் தொலைகாட்சி விளம்பரங்கள் ஒளிபரப்ப அனுமதிக்க கூடா…
-
- 0 replies
- 524 views
-
-
மேட்ச் பிக்சிங் : ரூ. 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட சன் ஸ்டார் ஹிந்தி பத்திரிகை மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக , இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஹிந்தி பத்திரிகையான 'சன் ஸ்டார்' அண்மையில், இந்திய அணியின் முன்னாள் மேலாளரும் டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் , கடந்த 2014-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து தோனி அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '' இந்த செய்தியில் துளியளவும்…
-
- 0 replies
- 398 views
-
-
”பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியாது” மோர்கன் February 10, 2016 இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான பீட்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்ப போராடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார். ஆனால் பீட்டர்சனை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பீட்டர்சன் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.…
-
- 0 replies
- 365 views
-
-
இந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி புனேயில் இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்தே தமது வெற்றியை கொண்டாடுமுகமாக இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். …
-
- 1 reply
- 334 views
-
-
6 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தி சிறுவன் சாதனை February 10, 2016 நியூசிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் லூக் மார்ஷ் என்ற 8 வயது சிறுவன் ஒரு ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தி அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்தில் Montecillo என்ற இடத்தில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இதில் கைகோரை மற்றும் டையேரி அணிகள் மோதின. இதில் கைகோரை அணிக்காக விளையாடிய லூக் மார்ஷ் என்ற 8 வயது பொடியன் 6 பந்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அனைத்துமே பவுல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. Dunedinல் வசித்து வரும் இந்த சிறுவன் தனது 5 வயதில் இருந்தே தீவிரமாக பந்துவீச்சு பயிற்சி பெற்று வருகிறார். துல்லியமாக பந்து வீசிவதில் மட்டுமே…
-
- 0 replies
- 447 views
-
-
இந்தியாவை பின் தள்ளியது இலங்கை புனேயில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து இருபது20 போட்டித் தொடர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் 118 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. http://www.virakesari.lk/article/2992
-
- 1 reply
- 505 views
-
-
தெற்காசியாவின் வேகமானோர் இலங்கையர்கள் தெற்காசியாவின் வேகமான நபர்களாக, இலங்கையைச் சேர்ந்த ஹிமாஷ இஷான், றுமேஷிகா புத்திக்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றே, இவர்களிருவரும் இப்பெருமையைப் பெற்றுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர், 10.28 செக்கன்களில் ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார். இது, கடந்த ஏழு தசாப்தங்களில், இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட சிறந்த பெறுபேறாகும். இறுதிப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் சுற்றில், 10.26 செக்கன்களில் அவர் ஓடி முடித்த போதிலும், தொழில்நுட்பத் தவறு காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. …
-
- 0 replies
- 345 views
-
-
தென்னாபிரிக்காவுக்குச் சிறப்பான வெற்றி தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. செஞ்சூரியனில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 125 (113), அலெக்ஸ் ஹேல்ஸ் 65 (73), பென் ஸ்டோக்ஸ் 53 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், கஜிஸ்கோ றபடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். …
-
- 0 replies
- 271 views
-
-
பாகிஸ்தானின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள்,இலங்கை அல்லது ஐ.அ.இராச்சியத்தில் நடைபெறும் வாய்ப்பு? தமது அணி பங்குபற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ சி. சி.) உலக இருபது கிரிக்கெட் போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கான் முன்வைத்துள்ளார். தமது அணி இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு பாகிஸ் தான் அரசாங்கம் அனுமதிக்காத பட்சத்தில் தமது நாட்டு அணி சம்பந்தப்பட்ட போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக ஷஹாரியார் கூறினார். ‘‘இந்தி…
-
- 0 replies
- 319 views
-