விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஊதியப் பட்டியலில் கெய்ல் , பிராவோ இல்லை January 10, 2016 மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் இந்த சீசனுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் ஊதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், டி20 அணியின் தலைவர் டேரன் சமி, சகலதுறை வீரர் வெய்ன் பிராவோ, ஆண்ட்ரி ரஸல் ஆகியோர் இடம்பெறவில்லை. அதே போல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் இடம்பெறவில்லை. ஊதியப் பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் ,ஜாசன் ஹோல்டர், பிராத்வைட், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், ராம்தின், கீமர் ரோச், ஜெரோம் டெய்லர், பிளாக்வுட், லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச், ஷாய் ஹோப், ராஜேந்தி…
-
- 0 replies
- 528 views
-
-
சௌதி இல்லை: அக்மலுக்குத் தடை நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், இத்தொடரில் முதலாவது போட்டியில் பங்குபெறமாட்டார். டிம் சௌதியின் இடது காற்பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் அவரால் பங்குபெற முடியாது போயிருந்த நிலையில், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கெதிரான போட்டிகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்…
-
- 0 replies
- 433 views
-
-
இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்? நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், நாளை இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இழந்த இலங்கை அணி, தான் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இருபதுக்கு-20 போட்டிகளிலாவது வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது. நாளைய போட்டியில், நியூசிலாந்தின் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடரில் இலங்கைக்குத் தலையிடியாக அமைந்த மற் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். …
-
- 7 replies
- 601 views
-
-
'சூதுகவ்வும்' : 0 ரன் டிக்ளேரும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டர் வீழ்ந்த கதையும்! ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ம் தேதி முடிந்தது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட, இருநாள் போட்டிகள் அரையும் குறையுமாக நடந்தன. கூவி கூவி அழைத்தும் ரசிகர்கள் ஓட்டம் முதலில் பேட்டிங்கை மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்தது. இரண்டாம் நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் 248/7ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு களத்தில் விளையாடியது மழை. ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. எஞ்சியிருப்பது ஒரே ஒருநாள் மட்டும்தான். எப்படியும் ஆட்டம் சமன்தான் என்பது தெரியும். இதன…
-
- 0 replies
- 351 views
-
-
பிறிஸ்பேன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சானியா- ஹிங்கிஸ் ஜோடி January 09, 2016 பிறிஸ்பேன் இன்டர்நஷனல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சானியா- ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியுள்ளது. சர்வதேச டென்னிஸ் அரங்கில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் சானியா- ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டின் முதல் போட்டியாக பிறிஸ்பேன் இன்டர்நஷனல் தொடரில் பங்கேற்றது. இத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவாக்கிய மற்றும் ரஷ்ய ஜோடியான அன்ட்ரேஜா கிளேபாக் மற்றும் அல்லா குட்ரியாவ்ட்சேவா ஜோடியை எதிர்கொண்டு 6 க்கு 3 மற்றும் 7 க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சானியா- ஹிங்ஹிஸ் ஜோடியின் தொடர்ச்சியான 25 ஆவது இறுதிப் போட்டி இதுவெ…
-
- 1 reply
- 417 views
-
-
ஆமிருக்கு நியூசிலாந்து விசா கிடைத்தது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் , இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஆமிருக்கான நியூசிலாந்து விசா கிடைத்துள்ளது. அவருக்கான விசா கிடைக்குமா என்பது குறித்துச் சந்தேகங்கள் காணப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, குற்றவியல் குற்றத்துக்காக 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆமிர், அவரது புனர்வாழ்வு, தடைக்காலத்தைப் பூர்த்தி செய்த போதிலும், குற்றவாளிகளாகத் தீர்ப்பு வழங்கப்பட்டோருக்கு விசா வழங்கப்படுவதற்கு விசாக்களை நியூசிலாந்து வழங்குவதில்லை என்ற …
-
- 0 replies
- 493 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்: பெஷாவாரில் அப்ரிடி, லாகூரில் கெயில் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர் தெரிவு, இன்று இடம்பெற்றது. இதில், கராச்சி கிங்ஸ், லாகூர் கலான்டர்ஸ், பெஷாவார் ஸல்மி, இஸ்லாமாபாத் யுனைட்டட், குவேட்டா கிளாடியேற்றர்ஸ் ஆகிய 5 அணிகளும், தங்களுக்கான வீரர்களைத் தெரிவுசெய்தன. இதன்படி, பெஷாவார் அணி சார்பாக ஷகிட் அப்ரிடியும் லாகூர் அணி சார்பாக கிறிஸ் கெயிலும் குவேட்டா அணி சார்பாக கெவின் பீற்றர்சனும் இஸ்லாமாபாத் அணி சார்பாக ஷேன் வொற்சனும் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்ட ஏனைய வீரர்களின் விவரம்: கராச்சி கிங்ஸ்: ஷொய்ப் மலிக், ஷகிப் அல் ஹசன், சொஹைல் தன்வீர், இ…
-
- 4 replies
- 339 views
-
-
அடுத்த இலக்கு, ஒலிம்பிக்கில் தங்கம்: அசத்தும் அபூர்வி சண்டேலா இந்தியாவின் ஒலிம்பிக் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் போட்டிகள் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் அம்பு எய்தல். தற்போது தோன்றியிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்தான் அபூர்வி சண்டேலா, 10 மீட்டர் ஏர் ரைஃபல் என்ற போட்டியில் 2012 முதல் பங்கேற்று வருகிறார். தான் பங்கேற்ற முதல் தேசிய அளவிலான சீனியர் போட்டியிலேயே தங்கம் வென்றார். பின்னர் 2014-ல் ஹேக் இன்டெர்ஷூட் போட்டிகளில் தனி நபர், குழு என பல போட்டிகளில் பங்கேற்று 4 மெடல்கள் குவித்தார். அதே வருடம் கிளாஸ்கௌவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 206.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் புது ரெக்கார்டும் உருவாக்கினார். …
-
- 0 replies
- 610 views
-
-
கெய்லுக்கு உலகளாவிய தடை விதிக்க வேண்டும்: இயன் சேப்பல் காட்டம் இயன் சேப்பல். | கோப்புப் படம்: விவேக் பெந்த்ரே. கிறிஸ் கெய்லுக்கு உலகம் முழுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயன் சேப்பல் கூறியுள்ளார். பிக்பாஷ் டி 20 தொடரில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடந்த சிலதினங்களுக்கு முன்பு நெட்வோர்க் 10 சானலின் பெண் நிருபர் மெல் மெக்லாஃப்லினிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். 15 பந்தில் 41 ரன் எடுத்த கெய்லிடம் போட்டியின் இடையே மெக்லாஃப்ளின் பேட்டி எடுத்தார். அப்போது “உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். மிகவும் நன்றாக உள்ளது. ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்த…
-
- 0 replies
- 518 views
-
-
பார்ட்டி மேன் வாயை திறந்தால் 'டர்ட்டி மேன்'! 'சிக்சர் மன்னன்' கெயில் இன்று கிரிக்கெட் உலகின் சர்ச்சை நாயகன். பெண் செய்தியாளரிடம் வழிந்து இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். களத்தில் கூலாக இருக்கும் கெயிலுக்கு வெளியில் வேறு விதமான முகம் உண்டு. ஆனால் இதுவரை பார்ட்டி மேனாக மட்டுமே இருந்து வந்த அவர், ஓவர் வழிசலால் டர்ட்டி மேனாக மாறிவிட்டார். "தண்ணி அடிக்கலாமா பேபி" ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பேஷ் லீக்கில் மெல்பர்ன்ரெனகேட்ஸ் அணிக்காக ஆடி வரும் கெயிலை 'நெட்வொர்க் டென்' பத்திரிக்கையைச் சேர்ந்த மெக்லாலின் என்ற பெண் செய்தியாளர் பேட்டியெடுத்தார். அப்போது கெயிலோ , "நானே உங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் தண…
-
- 0 replies
- 618 views
-
-
பீபா தலைவருக்கான தேர்தலில் பிளட்டினி போட்டியிடமாட்டார் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பீபா தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இடைநிறுத்தப்பட்டுள்ள, ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்புத் சங்கத்தின் தலைவரான மைக்கல் பிளட்டினி தெரிவித்துள்ளார். கால்பந்தாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு பீபாவின் தலைவர் செப் பிளாட்டருக்கும் பிளட்டினிக்கும் உலக கால்பந்தாட்ட ஆளும் உடலினால் எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பந்தமாக இருவரும் குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டனர். தங்களது தடைகளுக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு மேற்கொண்டு…
-
- 0 replies
- 414 views
-
-
தோனிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்! வர்த்தக இதழ் ஒன்றில் , இந்து கடவுள் விஷ்ணு போல தோனி கையில் காலணி ஒன்றுடன் இருப்பது போன்ற அட்டைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. ‘God of Big Deals’ என்ற பெயரில் கட்டுரையையும் அந்த வர்த்தக இதழ் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போலவும் இந்து மக்களின் மதஉணர்வுகளை புண்படுத்துவது போலவும் இருப்பதாக கர்நாடகா, ஆந்திர மாநில நீதிமன்றங்களில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்த வகையில் இந்து அமைப்பை சேர்ந்த ஷ்யாம் சுந்தர் என்பவர் அனந்தப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து தோனிக்கு, ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தப்பூர் …
-
- 0 replies
- 531 views
-
-
ரசிகர்களுக்கு நிம்மதி : ஓவர்களுக்கிடையே விளம்பரமில்லாத கிரிக்கெட்! இந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட் விளையாட்டுதான் எல்லாம். கிரிக்கெட் நடந்தால் அனைத்தையும் மறந்து தொலைகாட்சி முன்னால் அமர்ந்து விடும் இந்த வழக்கம், பி.சி.சி.ஐ.க்கு பணத்தை கொட்டோ கொட்டெவென்று கொட்ட வைத்தது. ஸ்டார் முதல் நியோ வரை அனைத்து ஸ்போர்ட்ஸ் சேனல்களும் இந்தியா விளையாடும் கிரிக்கெட் தொடரென்றால், அதன் உரிமத்தை பெற குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமானது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட்டை சீரமைக்க உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, தனது பரிந்துரைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது.அதில் ஒன்று, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் போது ஓவருக்கு இடையே வரும் இடைவெளியின் ப…
-
- 1 reply
- 481 views
-
-
நாளை ஆரம்பிக்கிறது அவுஸ்திரேலியா - மே.தீவுகள் அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை ஆரம்பிக்கிறது. ஹோபார்டில் இடம்பெறும் முதலாவது போட்டியுடனே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. நாளைய போட்டி, இலங்கை நேரப்படி காலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் ஓரளவு இளமையான அணிகளாகக் காணப்படுகின்ற போதிலும், இரு அணிகளுக்குமிடையிலான வித்தியாசம், மிக அதிகமானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளை விடப் பலமான அணியான நியூசிலாந்து அணியை, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்த தன்னம்பிக்கையுடன், அவுஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. …
-
- 19 replies
- 1.2k views
-
-
ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பிரோட்டுக்கு அபராதம் January 07, 2016 தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவார்ட் பிரோட்டுக்கு போட்டிச் சம்பளத்தில் 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சக வீரர் பேஸ்ட்டோ, எதிரணி வீரர் பவுமாவின் பிடியெடுப்பை தவறவிட்டதால் பிரோட் ஆடுகளத்தை காலால் உதைத்து சேதப்படுத்தினார். இது குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அலாஸ்டர் குக்கிடம் போட்டி நடுவர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த பிரோட் ‘ …
-
- 0 replies
- 489 views
-
-
சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…
-
- 0 replies
- 330 views
-
-
ஹாசிம் ஆம்லா இந்த 3 காரணங்களுக்காகதான் பதவி விலகினாரா? டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய தென்னாப்பிரிக்க அணி, சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கேப்டனான ஆம்லா, திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலக 3 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. தொடர் தோல்விகள்! அசைக்க முடியாத அணியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி, ஒன்பது ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழக்காமல் கெத்தான அணியாக வலம் வந்தது. இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரை வென்று டெஸ்ட்டை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கி…
-
- 0 replies
- 666 views
-
-
நானும் ரவுடி தான்! - மிரட்டல் அடி அடித்த ஆப்கானிஸ்தான் சமீபகாலமாக இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸி , நியூசி என பெரிய நாடுகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் 'ஒன்சைடு கேம்' ஆக சுவாரஸ்யமின்றி முடிந்து விடுகிறது. ஆனால் இன்னும் 'கத்துக்குட்டி'யாகவே அறியப்படும் ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடிய ஒரு நாள் தொடரை, போராடி வென்று 'திரில்' வெற்றியை ருசித்திருக்கிறது. ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை நடந்த இத்தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி. ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் தொடர் - ஒரு பார்வை... ம…
-
- 0 replies
- 621 views
-
-
பெண் தொலைக்காட்சி நிருபரிடம் ‘மரியாதைக் குறைவாக’ நடந்து கொண்ட கிறிஸ் கெயில் படம்: ட்விட்டர். ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீகில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெயில் இன்று தனது இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேட்டி கண்ட சானல் 10 பெண் நிருபரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக பிக்பேஷ் லீக் கடுமையாக சாடியுள்ளது. இன்று முடிந்த ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெயில் ஆடும் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் கெயில் 15 பந்துகளில் கெயில் 41 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்த பிறகு சேனல் 10 தொலைக்காட்சி செய்தியாளர் மெல் மெக்லாஃப்லின் கெயிலை பேட்டி கண்டார், அப்போது கெயில், “நானே உங்களிடம் வந்து பேட்…
-
- 4 replies
- 738 views
-
-
செய்தித் துளிகள்: மஸ்கட்டால் சர்ச்சை மஸ்கட்டால் சர்ச்சை 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான சின்னம் (மஸ்கட்) கடந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தோனேஷியாவின் கிழக்கு பதிகளில் வாழும் அரிய வகை பறவையினமான சென்ட்ராவாஸியை குறிக்கும் வகையில் ‘டிராவா’, ஆசிய போட்டியின் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சின்னம் சர்சைக்குள்ளானது. இந்த சின்னம் பறவை போன்று இல்லாமல் கோழி போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து போட்டியின் சின்னத்தில் திருத்தங்கள் செய்ய இந்தோனேஷிய விளையாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 9 ஆண்டு தட…
-
- 0 replies
- 579 views
-
-
Breaking Now தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆம்லா திடீர் விலகல் டிவில்லியர்ஸ் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் தென் ஆப்பிரிக்க இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது Read more at: http://tamil.oneindia.com/
-
- 1 reply
- 536 views
-
-
நிருபருடன் தகராறு: அப்ரீடிக்கு எதிராக செய்தியாளர்கள் போர்க்கொடி ஷாகித் அப்ரீடி. | படம்: ஏ.எஃப்.பி. லாகூரில் இன்று செய்தியாளர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பாதியிலேயே புறக்கணித்து வெளியேறிய பாகிஸ்தான் டி20 கேப்டன் அஃப்ரீடிக்கு எதிராக பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது தொலைக்காட்சி சேனல் நிருபர் ஒருவர் அஃப்ரீடியிடம், “முந்தைய பாகிஸ்தான் டி20 கேப்டன்கள் போல் உங்கள் சாதனை கேப்டனாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே உங்கள் தலைமை வழிமுறையில் மாற்றம் தேவை என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டார். இதற்கு முதலில…
-
- 0 replies
- 350 views
-
-
மிரண்டது இங்கிலாந்து : வொன்டர் கிட் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்...! இந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த மெயில் ஆன்லைன் பதிப்பில், '' 1009 நாட் அவுட்... பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது" என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான…
-
- 3 replies
- 773 views
-
-
லார்ட்சில் கரீபியனுக்கு லாடம் கட்டியவர்: உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன்! ஒரு விஷயம் காலம் காலமாக கோலோச்சி நிற்கத் தேவையானது - ஒரு வெற்றி. அப்படி இன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மூளை முடுக்கிலும், ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கிரிக்கெட்டை விதைத்ததும் ஒரு வெற்றி தான். உலகம் வியந்த அவ்வெற்றியை இந்தியாவிற்குப் பெற்றுத்தந்த ‘ஹரியானா ஹரிகேன்’ கபில் தேவின் பிறந்த தினம் இன்று. உலகின் அனைத்து அணிகளையும் பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா வென்ற அந்த உலகக்கோப்பை தான், இந்திய அணியின் வெற்றிநடைக்கு இன்று அச்சாரம். அசத்தல் ஆல்ரவுண்டர் 1959ல் சண்டிகரில் பிறந்த கபில்தேவ் ரஞ…
-
- 0 replies
- 501 views
-
-
கிரிக்கெட்டும் பெண்களும் கிறிஸ் கெயிலும் அவதூறுகளும் Comments ஆரம்பகாலத்திலிருந்தே, ஆண்களின் விளையாட்டாகக் கருதப்பட்டுவந்த கிரிக்கெட் போட்டிகள், பெண்களைத் தம்பக்கம் இழுப்பதற்குத் தடுமாறியே வந்திருக்கிறது. கிரிக்கெட்டின் விவரிப்பே, 'கனவான்களின் விளையாட்டு" என, ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. எனினும், அண்மைக்காலத்தில் பெண்களின் கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்திருக்கின்றன. பெண் பார்வையாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவதோடு, பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடரொன்று ஆரம்பிக்குமளவுக்கு, முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. ஆனால்,…
-
- 0 replies
- 666 views
-