Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பீபா தலைவருக்கான தேர்தலில் பிளட்டினி போட்டியிடமாட்டார் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பீபா தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இடைநிறுத்தப்பட்டுள்ள, ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்புத் சங்கத்தின் தலைவரான மைக்கல் பிளட்டினி தெரிவித்துள்ளார். கால்பந்தாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு பீபாவின் தலைவர் செப் பிளாட்டருக்கும் பிளட்டினிக்கும் உலக கால்பந்தாட்ட ஆளும் உடலினால் எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பந்தமாக இருவரும் குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டனர். தங்களது தடைகளுக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு மேற்கொண்டு…

  2. தோனிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்! வர்த்தக இதழ் ஒன்றில் , இந்து கடவுள் விஷ்ணு போல தோனி கையில் காலணி ஒன்றுடன் இருப்பது போன்ற அட்டைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. ‘God of Big Deals’ என்ற பெயரில் கட்டுரையையும் அந்த வர்த்தக இதழ் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போலவும் இந்து மக்களின் மதஉணர்வுகளை புண்படுத்துவது போலவும் இருப்பதாக கர்நாடகா, ஆந்திர மாநில நீதிமன்றங்களில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்த வகையில் இந்து அமைப்பை சேர்ந்த ஷ்யாம் சுந்தர் என்பவர் அனந்தப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து தோனிக்கு, ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தப்பூர் …

  3. ரசிகர்களுக்கு நிம்மதி : ஓவர்களுக்கிடையே விளம்பரமில்லாத கிரிக்கெட்! இந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட் விளையாட்டுதான் எல்லாம். கிரிக்கெட் நடந்தால் அனைத்தையும் மறந்து தொலைகாட்சி முன்னால் அமர்ந்து விடும் இந்த வழக்கம், பி.சி.சி.ஐ.க்கு பணத்தை கொட்டோ கொட்டெவென்று கொட்ட வைத்தது. ஸ்டார் முதல் நியோ வரை அனைத்து ஸ்போர்ட்ஸ் சேனல்களும் இந்தியா விளையாடும் கிரிக்கெட் தொடரென்றால், அதன் உரிமத்தை பெற குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமானது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட்டை சீரமைக்க உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, தனது பரிந்துரைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது.அதில் ஒன்று, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் போது ஓவருக்கு இடையே வரும் இடைவெளியின் ப…

  4. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பிரோட்டுக்கு அபராதம் January 07, 2016 தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவார்ட் பிரோட்டுக்கு போட்டிச் சம்பளத்தில் 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சக வீரர் பேஸ்ட்டோ, எதிரணி வீரர் பவுமாவின் பிடியெடுப்பை தவறவிட்டதால் பிரோட் ஆடுகளத்தை காலால் உதைத்து சேதப்படுத்தினார். இது குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அலாஸ்டர் குக்கிடம் போட்டி நடுவர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த பிரோட் ‘ …

  5. சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…

  6. ஹாசிம் ஆம்லா இந்த 3 காரணங்களுக்காகதான் பதவி விலகினாரா? டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய தென்னாப்பிரிக்க அணி, சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கேப்டனான ஆம்லா, திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலக 3 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. தொடர் தோல்விகள்! அசைக்க முடியாத அணியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி, ஒன்பது ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழக்காமல் கெத்தான அணியாக வலம் வந்தது. இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரை வென்று டெஸ்ட்டை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கி…

  7. நானும் ரவுடி தான்! - மிரட்டல் அடி அடித்த ஆப்கானிஸ்தான் சமீபகாலமாக இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸி , நியூசி என பெரிய நாடுகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் 'ஒன்சைடு கேம்' ஆக சுவாரஸ்யமின்றி முடிந்து விடுகிறது. ஆனால் இன்னும் 'கத்துக்குட்டி'யாகவே அறியப்படும் ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடிய ஒரு நாள் தொடரை, போராடி வென்று 'திரில்' வெற்றியை ருசித்திருக்கிறது. ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை நடந்த இத்தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி. ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் தொடர் - ஒரு பார்வை... ம…

  8. செய்தித் துளிகள்: மஸ்கட்டால் சர்ச்சை மஸ்கட்டால் சர்ச்சை 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான சின்னம் (மஸ்கட்) கடந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தோனேஷியாவின் கிழக்கு பதிகளில் வாழும் அரிய வகை பறவையினமான சென்ட்ராவாஸியை குறிக்கும் வகையில் ‘டிராவா’, ஆசிய போட்டியின் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சின்னம் சர்சைக்குள்ளானது. இந்த சின்னம் பறவை போன்று இல்லாமல் கோழி போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து போட்டியின் சின்னத்தில் திருத்தங்கள் செய்ய இந்தோனேஷிய விளையாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 9 ஆண்டு தட…

  9. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ…

  10. Breaking Now தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆம்லா திடீர் விலகல் டிவில்லியர்ஸ் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் தென் ஆப்பிரிக்க இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது Read more at: http://tamil.oneindia.com/

  11. இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்? நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், நாளை இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இழந்த இலங்கை அணி, தான் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இருபதுக்கு-20 போட்டிகளிலாவது வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது. நாளைய போட்டியில், நியூசிலாந்தின் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடரில் இலங்கைக்குத் தலையிடியாக அமைந்த மற் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். …

    • 7 replies
    • 601 views
  12. நிருபருடன் தகராறு: அப்ரீடிக்கு எதிராக செய்தியாளர்கள் போர்க்கொடி ஷாகித் அப்ரீடி. | படம்: ஏ.எஃப்.பி. லாகூரில் இன்று செய்தியாளர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பாதியிலேயே புறக்கணித்து வெளியேறிய பாகிஸ்தான் டி20 கேப்டன் அஃப்ரீடிக்கு எதிராக பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது தொலைக்காட்சி சேனல் நிருபர் ஒருவர் அஃப்ரீடியிடம், “முந்தைய பாகிஸ்தான் டி20 கேப்டன்கள் போல் உங்கள் சாதனை கேப்டனாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே உங்கள் தலைமை வழிமுறையில் மாற்றம் தேவை என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டார். இதற்கு முதலில…

  13. லார்ட்சில் கரீபியனுக்கு லாடம் கட்டியவர்: உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன்! ஒரு விஷயம் காலம் காலமாக கோலோச்சி நிற்கத் தேவையானது - ஒரு வெற்றி. அப்படி இன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மூளை முடுக்கிலும், ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கிரிக்கெட்டை விதைத்ததும் ஒரு வெற்றி தான். உலகம் வியந்த அவ்வெற்றியை இந்தியாவிற்குப் பெற்றுத்தந்த ‘ஹரியானா ஹரிகேன்’ கபில் தேவின் பிறந்த தினம் இன்று. உலகின் அனைத்து அணிகளையும் பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா வென்ற அந்த உலகக்கோப்பை தான், இந்திய அணியின் வெற்றிநடைக்கு இன்று அச்சாரம். அசத்தல் ஆல்ரவுண்டர் 1959ல் சண்டிகரில் பிறந்த கபில்தேவ் ரஞ…

  14. மிரண்டது இங்கிலாந்து : வொன்டர் கிட் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்...! இந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த மெயில் ஆன்லைன் பதிப்பில், '' 1009 நாட் அவுட்... பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது" என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான…

  15. கிரிக்கெட்டும் பெண்களும் கிறிஸ் கெயிலும் அவதூறுகளும் Comments ஆரம்பகாலத்திலிருந்தே, ஆண்களின் விளையாட்டாகக் கருதப்பட்டுவந்த கிரிக்கெட் போட்டிகள், பெண்களைத் தம்பக்கம் இழுப்பதற்குத் தடுமாறியே வந்திருக்கிறது. கிரிக்கெட்டின் விவரிப்பே, 'கனவான்களின் விளையாட்டு" என, ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. எனினும், அண்மைக்காலத்தில் பெண்களின் கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்திருக்கின்றன. பெண் பார்வையாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவதோடு, பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடரொன்று ஆரம்பிக்குமளவுக்கு, முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. ஆனால்,…

  16. திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்! கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஆயிரம் ரன்களை அடித்து மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர் பிரணவ் தாணவாடே சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் சாதாரண கிரிக்கெட் ரசிகர் வரை இன்று பிரணவ் பற்றிதான் பேச்சு. பிரணவ் படைத்த இந்த சாதனை பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே... கிரிக்கெட் உலகில் ஒரே இன்னிங்சில் 4 இலக்க ரன்களை எட்டிய முதல் வீரர் பிரணவ். ஆயிரம் ரன்களை அடித்த தகவல் மும்பையில் பரவியதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டி நடந்த மைதானத்திற்கு சென்றுள்ளனர். பல அரசியல்வாதிகள் கையில் பூங்கொத்துடன் மைதானத்தில் திரண்டனர். பொதுமக்களும் பரிசுளை வழங்க…

  17. என்ன செய்தார் கேப்டன் விராட் கோலி! ஒரு வருட கேப்டன்ஸி ரிப்போர்ட் கார்டு! விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சென்ற வருடம் இதே தேதியில் தான். தோனி போன்ற லெஜெண்ட் இடத்தை கோலி நிரப்புவது கடினம், அனுஷ்கா சர்மாவுடன் சுற்றும் இவர் இந்தியாவை இன்னும் கீழே கொண்டு செல்வார் என்ற வார்த்தைகள் தான் கோலியின் கேப்டன் பதவிக்கு அளிக்கப்பட்ட இன்ஸ்டெண்ட் பரிசுகள். இந்த ஒரு வருடத்தில் கோலி தன் மீதான விமர்சனங்களை சிக்சர் விளாசினாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கேப்டனாக என்ன செய்தார்? கேப்டன் தோனி மெல்பேர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்தார். அந்த தொடரில் முதல் போட்டியில் கேப்ட…

  18. செய்தித் துளிகள் பிரிமியர் பாட்மிண்டன் லீக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ், டெல்லி ஏஸர்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ----------------------------------------------------- டி 20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறக்கூடும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், ஓய்வு முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன். ஆஸி. தொடரில் 6 அல்லது 7வது இடத்தில் புதுமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தோனி தெரிவித்துள்ளார். ----------------------------------------------------- பாதுகாப்பு காரணம் கருதி வரும் 27ம் தேதி வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்டோருக்கான உலககோப்பையை ஆஸி. அணி புறக்கணித்துள்ளது. …

  19. உலகின் பணக்கார கால்பந்து அணிகளுக்கு இப்போது இவர்கள்தான் குருநாதர்கள்! கிளப் கால்பந்து வரலாற்றில் பார்சிலோனா ரியல்மாட்ரிட் அணிகளுக்கிடையேயான 'எல்கிளோசிகோ 'மோதல் பிரசித்தி பெற்றது. ஸ்பெயினில் கட்டலான் மாகாணத்தை பிரித்து தனிநாடாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலு பெற இந்த 'எல்கிளாசிகோ' மோதலும் ஒரு காரணமாக நிச்சயமாக இருக்கும். எல்கிளாசிகோவில் பார்சிலோனா வெற்றி பெற்று விட்டால் அன்று அந்த நகரமே அல்லலோப்படும். உடனடியாக நகரில் குவியும் லட்சக்கணக்கான மக்கள், கட்டாலானை பிரித்து தர வேண்டுமென்று கோஷம் எழுப்புவார்கள். மொத்தத்தில் ஸ்பெயின் அரசியலே எல்கிளாசிகோ மோதலால் அலறும். அதேவேளையில் ரியல் வெற்றி பெற்று விட்டால், ஹாலா மாட்ரிட் என்ற கோஷம் எழும்பும். எனினும் சமீ…

  20. ஓய்வு குறித்து சரியான நேரத்தில் சிந்திப்பேன்: தோனி திட்டவட்டம் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தோனி. | படம்: விவேக் பெந்த்ரே. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக வெற்றிகளை கொண்டு வந்து கொண்டிருப்பதினால் தோனியிடம் மீண்டும் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர் தனக்கேயுரிய புன்னகையுடன் நிதானமாக அக்கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி புறப்படும் தருணத்தில் தோனியிடத்தில் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, “இந்தக் கணத்தில் வாழும் நபர் நான். இப்போது எனது கவனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர…

  21. ஏழே மாதத்தில் பெனிட்சின் பதவி பறிப்பு : ரியல்மாட்ரிட் பயிற்சியாளராக சிடேன்! ரியல்மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக சினடேன் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசன் தொடக்கத்தில் அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரஃபேல் பெனிட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் எந்த கோப்பையையும் வெல்ல முடியாத நிலையில் ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த கார்லோ அன்சாலெட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் பெனிட்ஸ், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த ஜுன் மாதம் 3 ஆண்டுகளுக்கு அவர், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பெனிட்சின் பதவி வெறும் ஏழே மாதத்த…

    • 3 replies
    • 452 views
  22. "நச்"சுன்னு அடிச்சு ஆடி 652 ரன்களைக் குவித்த ஆட்டோ டிரைவர் மகன்... 15 வயதில் உலக சாதனை! மும்பை: மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடி அடித்து நொறுக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் 15 வயதேயான இளம் கிரிக்கெட் வீரர். 199 பந்துகளில் 652 ரன்களை இந்த குட்டிப் பையன் குவித்து அத்தனை பேரையும் வியக்க வைத்துள்ளார். இந்தப் பையனின் பெயர் பிரணவ் தனவாடே. மும்பையைச் சேர்ந்த தனவாடே, மும்பையில் நேற்று நடந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பேய்த்தனமாக ஆடி விட்டார். பள்ளிகள் அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரராக புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார் தனவாடே. இதற்கு முன்பு 1899ம் ஆண்டு ஏஇஜே காலின்ஸ் என்ப…

  23. வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதற்கு நவீன பயிற்சியாளர்களே காரணம்: ஆன்டி ராபர்ட்ஸ் சாடல் ஆன்டி ராபர்ட்ஸ். | படம்: விஜய் பேட். வலைப்பயிற்சியில் 30 பந்துகளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர்களை வீச அனுமதிக்காத நவீன பயிற்சியாளர்களே பவுலர்கள் காயமடைவதற்குக் காரணம் என்று மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராபர்ட்ஸ் சாடியுள்ளார். மும்பையில் சச்சின் பஜாஜின் குளோபல் கிரிக்கெட் ஸ்கூல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராபர்ட்ஸ் அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் உட்பட பல்வேறு கிரிக்கெட் தொடர்பான ருசிகரங்களை பகிர்ந்து கொண்டார். "நவீன கிரிக்கெட் பயிற்சியாளர்கள் முதலில் கிரிக்கெட் ஆடியுள்ளனரா? அல்லது இவர்கள் வேகமாகத்தான் பந்து வீசியதுண்டா? ஏன…

  24. 'சட்டபூர்வ' சூதாட்டம், அரசியல்வாதிகள் இல்லாத அமைப்புகள்: பிசிசிஐ சீரமைப்புக்கு லோதா குழு பரிந்துரைகள் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் தலைமை நீதிபதி லோதா.| படம்: ஆர்.வி.மூர்த்தி. பிசிசிஐ மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் கிரிக்கெட் போட்டிகளின் மீது பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம் என்றும், ஆனால் சூதாட்டத்தில் வீர்ர்கள் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் அதைச் சார்ந்த மாநில கிரிக்கெட் அமைப்புகளிலும் அரசியல்வாதிகள் இடம்பெறக்கூடாத…

  25. பிக் பாஷ் போட்டியில் ரசிகர்களால் புதிய சாதனை January 04, 2016 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பிக் பாஷ் போட்டியை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை படைத்தனர். அவுஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த், மெல்போர்ன் போன்ற உலக பிரபலம் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. எனினும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் தொடங்கும் ‘பாக்சிங் டே’ கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மெல்போர்னில்தான் நடத்தப்படும். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பதே இதற்கு காரணம். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெல்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.