விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்! கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஆயிரம் ரன்களை அடித்து மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர் பிரணவ் தாணவாடே சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் சாதாரண கிரிக்கெட் ரசிகர் வரை இன்று பிரணவ் பற்றிதான் பேச்சு. பிரணவ் படைத்த இந்த சாதனை பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே... கிரிக்கெட் உலகில் ஒரே இன்னிங்சில் 4 இலக்க ரன்களை எட்டிய முதல் வீரர் பிரணவ். ஆயிரம் ரன்களை அடித்த தகவல் மும்பையில் பரவியதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டி நடந்த மைதானத்திற்கு சென்றுள்ளனர். பல அரசியல்வாதிகள் கையில் பூங்கொத்துடன் மைதானத்தில் திரண்டனர். பொதுமக்களும் பரிசுளை வழங்க…
-
- 0 replies
- 635 views
-
-
என்ன செய்தார் கேப்டன் விராட் கோலி! ஒரு வருட கேப்டன்ஸி ரிப்போர்ட் கார்டு! விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சென்ற வருடம் இதே தேதியில் தான். தோனி போன்ற லெஜெண்ட் இடத்தை கோலி நிரப்புவது கடினம், அனுஷ்கா சர்மாவுடன் சுற்றும் இவர் இந்தியாவை இன்னும் கீழே கொண்டு செல்வார் என்ற வார்த்தைகள் தான் கோலியின் கேப்டன் பதவிக்கு அளிக்கப்பட்ட இன்ஸ்டெண்ட் பரிசுகள். இந்த ஒரு வருடத்தில் கோலி தன் மீதான விமர்சனங்களை சிக்சர் விளாசினாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கேப்டனாக என்ன செய்தார்? கேப்டன் தோனி மெல்பேர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்தார். அந்த தொடரில் முதல் போட்டியில் கேப்ட…
-
- 0 replies
- 612 views
-
-
செய்தித் துளிகள் பிரிமியர் பாட்மிண்டன் லீக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ், டெல்லி ஏஸர்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ----------------------------------------------------- டி 20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறக்கூடும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், ஓய்வு முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன். ஆஸி. தொடரில் 6 அல்லது 7வது இடத்தில் புதுமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தோனி தெரிவித்துள்ளார். ----------------------------------------------------- பாதுகாப்பு காரணம் கருதி வரும் 27ம் தேதி வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்டோருக்கான உலககோப்பையை ஆஸி. அணி புறக்கணித்துள்ளது. …
-
- 0 replies
- 597 views
-
-
உலகின் பணக்கார கால்பந்து அணிகளுக்கு இப்போது இவர்கள்தான் குருநாதர்கள்! கிளப் கால்பந்து வரலாற்றில் பார்சிலோனா ரியல்மாட்ரிட் அணிகளுக்கிடையேயான 'எல்கிளோசிகோ 'மோதல் பிரசித்தி பெற்றது. ஸ்பெயினில் கட்டலான் மாகாணத்தை பிரித்து தனிநாடாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலு பெற இந்த 'எல்கிளாசிகோ' மோதலும் ஒரு காரணமாக நிச்சயமாக இருக்கும். எல்கிளாசிகோவில் பார்சிலோனா வெற்றி பெற்று விட்டால் அன்று அந்த நகரமே அல்லலோப்படும். உடனடியாக நகரில் குவியும் லட்சக்கணக்கான மக்கள், கட்டாலானை பிரித்து தர வேண்டுமென்று கோஷம் எழுப்புவார்கள். மொத்தத்தில் ஸ்பெயின் அரசியலே எல்கிளாசிகோ மோதலால் அலறும். அதேவேளையில் ரியல் வெற்றி பெற்று விட்டால், ஹாலா மாட்ரிட் என்ற கோஷம் எழும்பும். எனினும் சமீ…
-
- 0 replies
- 532 views
-
-
"நச்"சுன்னு அடிச்சு ஆடி 652 ரன்களைக் குவித்த ஆட்டோ டிரைவர் மகன்... 15 வயதில் உலக சாதனை! மும்பை: மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடி அடித்து நொறுக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் 15 வயதேயான இளம் கிரிக்கெட் வீரர். 199 பந்துகளில் 652 ரன்களை இந்த குட்டிப் பையன் குவித்து அத்தனை பேரையும் வியக்க வைத்துள்ளார். இந்தப் பையனின் பெயர் பிரணவ் தனவாடே. மும்பையைச் சேர்ந்த தனவாடே, மும்பையில் நேற்று நடந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பேய்த்தனமாக ஆடி விட்டார். பள்ளிகள் அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரராக புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார் தனவாடே. இதற்கு முன்பு 1899ம் ஆண்டு ஏஇஜே காலின்ஸ் என்ப…
-
- 6 replies
- 544 views
-
-
ஓய்வு குறித்து சரியான நேரத்தில் சிந்திப்பேன்: தோனி திட்டவட்டம் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தோனி. | படம்: விவேக் பெந்த்ரே. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக வெற்றிகளை கொண்டு வந்து கொண்டிருப்பதினால் தோனியிடம் மீண்டும் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர் தனக்கேயுரிய புன்னகையுடன் நிதானமாக அக்கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி புறப்படும் தருணத்தில் தோனியிடத்தில் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, “இந்தக் கணத்தில் வாழும் நபர் நான். இப்போது எனது கவனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர…
-
- 0 replies
- 405 views
-
-
ஏழே மாதத்தில் பெனிட்சின் பதவி பறிப்பு : ரியல்மாட்ரிட் பயிற்சியாளராக சிடேன்! ரியல்மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக சினடேன் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசன் தொடக்கத்தில் அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரஃபேல் பெனிட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் எந்த கோப்பையையும் வெல்ல முடியாத நிலையில் ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த கார்லோ அன்சாலெட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் பெனிட்ஸ், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த ஜுன் மாதம் 3 ஆண்டுகளுக்கு அவர், ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பெனிட்சின் பதவி வெறும் ஏழே மாதத்த…
-
- 3 replies
- 452 views
-
-
நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட குழாமில், பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் டிம் சௌத்தி, மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குழாமுக்கு திரும்பவுள்ளார். இவருக்குப் பதிலாக முதலிரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இன்னுமோர் வேகப்பந்துவீச…
-
- 20 replies
- 1.9k views
-
-
வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதற்கு நவீன பயிற்சியாளர்களே காரணம்: ஆன்டி ராபர்ட்ஸ் சாடல் ஆன்டி ராபர்ட்ஸ். | படம்: விஜய் பேட். வலைப்பயிற்சியில் 30 பந்துகளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர்களை வீச அனுமதிக்காத நவீன பயிற்சியாளர்களே பவுலர்கள் காயமடைவதற்குக் காரணம் என்று மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராபர்ட்ஸ் சாடியுள்ளார். மும்பையில் சச்சின் பஜாஜின் குளோபல் கிரிக்கெட் ஸ்கூல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராபர்ட்ஸ் அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் உட்பட பல்வேறு கிரிக்கெட் தொடர்பான ருசிகரங்களை பகிர்ந்து கொண்டார். "நவீன கிரிக்கெட் பயிற்சியாளர்கள் முதலில் கிரிக்கெட் ஆடியுள்ளனரா? அல்லது இவர்கள் வேகமாகத்தான் பந்து வீசியதுண்டா? ஏன…
-
- 0 replies
- 547 views
-
-
'சட்டபூர்வ' சூதாட்டம், அரசியல்வாதிகள் இல்லாத அமைப்புகள்: பிசிசிஐ சீரமைப்புக்கு லோதா குழு பரிந்துரைகள் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் தலைமை நீதிபதி லோதா.| படம்: ஆர்.வி.மூர்த்தி. பிசிசிஐ மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் கிரிக்கெட் போட்டிகளின் மீது பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம் என்றும், ஆனால் சூதாட்டத்தில் வீர்ர்கள் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் அதைச் சார்ந்த மாநில கிரிக்கெட் அமைப்புகளிலும் அரசியல்வாதிகள் இடம்பெறக்கூடாத…
-
- 0 replies
- 597 views
-
-
பிக் பாஷ் போட்டியில் ரசிகர்களால் புதிய சாதனை January 04, 2016 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பிக் பாஷ் போட்டியை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை படைத்தனர். அவுஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த், மெல்போர்ன் போன்ற உலக பிரபலம் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. எனினும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் தொடங்கும் ‘பாக்சிங் டே’ கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மெல்போர்னில்தான் நடத்தப்படும். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பதே இதற்கு காரணம். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெல்ப…
-
- 0 replies
- 432 views
-
-
ஜிம்பாப்வேயிடம் சுருண்டது ஆப்கானிஸ்தான் January 04, 2016 ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் பீட்டர் மூர் (0), சமு சிபாபா (0) மோசமான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்பவே, 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஹாமில்டன், கிரீமர் ஜோடி ஓரளவு அணியின் ஓட்டங்களை உயர்த்தவே, 117 ஓட்டங்களை எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சொ…
-
- 0 replies
- 450 views
-
-
’’கடுமையாக திட்டுவார் ரணதுங்கா அதனால் நான் அழுவேன்’’ சமிந்த வாஸ் January 04, 2016 இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா தலைமையில் உலகக்கிண்ணம் வென்று வரலாறு படைத்தது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தான் ரணதுங்காவின் துருப்பு சீட்டாக இருந்தார். வாஸ் கூறுகையில், “1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிவிரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதும், ஓட்டங்களை கட்டுப்படுத்துவதும் தான் எனது முக்கிய பணியாக கொடுக்கப்பட்டது” என்றார். அவர் மேலும் கூறுகையில், ”நான் ரணதுங்கா…
-
- 0 replies
- 569 views
-
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ…
-
- 0 replies
- 497 views
-
-
இப்படி இனி விளையாட மாட்டேன்: ஸ்டோக்ஸ் தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடி இரட்டைச் சதத்தைப் பெற்ற இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், தனது வாழ்நாளில், இப்படி இனிமேல் அனேகமாகத் துடுப்பெடுத்தாட முடியாது எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான பென் ஸ்டோக்ஸ், 30 நான்கு ஓட்டங்களையும் 11 ஆறு ஓட்டங்களையும் விளாசி, 258 ஓட்டங்களைப் பெற்றார். இவ்வோட்டங்களைப் பெற, வெறுமனே 198 பந்துகளை மாத்திரமே அவர் எடுத்துக் கொண்டார். தனது இரட்டைச் சதத்தை 163 பந்துகளில் அடைந்த ஸ்டோக்ஸ், டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது வேகமான இரட்டைச் சதம் என்ற சாதனையும் இங்கிலாந்து சார்பாகப் பெறப்ப…
-
- 0 replies
- 474 views
-
-
50 ஆண்டுகளின் மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியல்: லஷ்மணின் 281 ரன்களுக்கு முதலிடம் 50 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் லஷ்மணின் 281-க்கு முதலிடம்.| கோப்புப் படம். கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லஷ்மண் எடுத்த 281 ரன்கள் முதலிடம் வகித்துள்ளது. 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் ஃபாலோ ஆன் ஆடிய இந்திய அணிக்காக 281 ரன்கள் எடுத்த லஷ்மணின் இந்த இன்னிங்ஸ் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போவின் கிரிக்கெட் மன்த்லி இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. கிரிக்கெட் மன்த்லி இதழுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் எழுத்தாளர்க…
-
- 0 replies
- 359 views
-
-
சல்யூட் சார்... பதான்கோட் மோதலில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீர மரணம் ! பதான்கோட் விமானப்படைத் தளத்தில் ஜெய்ஸ்- இ - முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடியில் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் , 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அதில் காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பதேக் சிங்கும் ஒருவர். கடந்த 1995ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர். அந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் மூத்த வீ…
-
- 0 replies
- 613 views
-
-
தெற்காசிய கால்பந்து : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! தெற்காசிய கால்பந்து போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பிற்பாதியில் 70வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சுபையர் அமிரி முதல் கோல் அடித்தார். இந்த கோலுக்கு அடுத்த 2வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. ஜெஜே லால்பெகுலா இந்த கோலை அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இ…
-
- 0 replies
- 518 views
-
-
அதிகாரப் போட்டியால் அவதியுறுகிறது கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகாரப் போட்டியின் காரணமாக,, இலங்கையின் கிரிக்கெட், அவதியுறுவதாக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் சமிந்த வாஸ், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டில், நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கான வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகச் செயற்பட்டார். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த, 2013ஆம் ஆண்டில், இலங்கையின் வேகப்…
-
- 0 replies
- 452 views
-
-
ஆஸியின் சார்பாக 1000 சதங்கள் December 27, 2015 ஆஸ்திரேலியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நேற்று மெல்பேர்ணில் ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிவரும் ஆஸ்திரேலியா சார்பாக பேர்ண்ஸ், கவாயா இருவரும் சதம் அடித்தனர். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை இவர்கள் படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முதல் மூன்று வீரர்கள் இந்த ஆண்டில் மட்டும் 14 சதங்களை விளாசியுள்ளனர். இதற்கு முன் 2003ஆம் ஆண்டு இதேபோல் 14 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வருடம் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 4020 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். கவாஜா கடைசி நான்கு இன்னிங்சில் 448 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 149.33 ஆகும். அதற்கு முன்னர் 17 இன்னிங்சில் 377 ஓட்டங்கள…
-
- 1 reply
- 717 views
-
-
இங்கிலாந்து ஹவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ திடீர் மரணம்! இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூவின் திடீர் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சகெக்ஸ் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்தர போட்டியில் அறிமுகமான மேத்யூ ஹாப்டன், அந்த அணிக்காக நடைபெற்ற 3 வகை போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக திலங்க தெரிவு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக, நாடாளுன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திலங்க சுமதிபால 88 வாக்குகளை பெற்றுள்ளதுடன் நிஷாந்த ரணதுங்க 56 வாக்குகளைப் பெற்றுள்ளார். உதவித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில், 102 வாக்குகளைப் பெற்ற ஜயந்த தர்மதாசவும் 90 வாக்குகளைப் பெற்ற கே. மதிவாணனும் வெற்றிபெற்றனர். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும், 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான அர்ஜுன ரணதுங்க, 80 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். செயலாளராக மொ…
-
- 1 reply
- 619 views
-
-
தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா! தமிழகத்தின் சங்கருக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனைக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா லைசென்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கால்பந்து விளையாட்டில் திண்டுக்கல் வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ருபாதேவி தற்போது பிஃபா நடுவராக தேர்வாகியுள்ளார். தற்போது 25 வயதான ரூபாதேவி , பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியருக்கான படிப்புகளை படித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். தமிழக மற்றும் இ…
-
- 0 replies
- 483 views
-
-
சனத்தின் சாதனையை முறியடித்தார் டில்ஷான் January 02, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்ஷான் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நெல்சனில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதில் டில்ஷான் 91 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டு சனத் ஜெயசூரியா எடுத்த 1202 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. இவர் 33 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்தார். ஆனால் டில்ஷான் 24 இன்னிங்சிலே 1207 ஓட்டங்கள் எடுத்து அவ…
-
- 0 replies
- 540 views
-
-
கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்! இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது. மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில், ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது. டாக்காவில், அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில், முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் …
-
- 0 replies
- 605 views
-