விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
டி20 உலகக் கோப்பையில் இந்த 4 சவால்களை இந்தியா முறியடிக்குமா? ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை ஜூரம் களைகட்ட தொடங்கியிருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில், அத்தொடரை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற சென்டிமென்ட்டை உடைத்து, தோனி தலைமையில் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தவரையிலும், இதுவரை உலகக்கோப்பையை நடத்திய நாடு, சொந்த மண்ணில் சாம்பியன் ஆனது கிடையாது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் உலகக் கோப்பை நடந்திருக்கிறது, இதில் இலங்கை தவிர மற்ற அணிகள், சொந்த மண்ணில் அரைய…
-
- 0 replies
- 556 views
-
-
பார்சிலோனா 3வது முறையாகவும் சம்பியன் December 21, 2015 ஜப்பானில் நடைப்பெற்ற 12வது உலக கழக அணிகளுக்கான கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற இறுதி போட்டியில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், அர்ஜென்டினாவின் ரிவர்ட் பிளாட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலத்திய பார்சிலோனா அணி, லயோனல் மெஸ்சியின் ஒரு கோலுடனும், லூயிஸ் சுவாரஸின் 2 கோல்களுடனும் 3-0 என்ற கோல் கணக்கில் ரிவர்ட் பிளாட்டை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது பார்சிலோனா அணி 3வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடதக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6343
-
- 0 replies
- 889 views
-
-
பிஃபா உலகக் கோப்பை வசப்படுமா? 11 ஜோடி கால்களை உருவாக்குமா ஐ.எஸ்.எல்.? இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாம் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. பரபரப்பான ஃபைனலில், கோவாவை வீழ்த்தி மகுடம் சூடியிருக்கிறது சென்னையின் எஃப்.சி அணி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்பட்ட சோகத்தை மறைத்துள்ளது இந்த வெற்றி. கால்பந்து இந்தியாவில் பிரபலமடைவது சாத்தியமில்லை என பலரும் ஆருடம் சொல்ல, உலகின் ஐந்தாவது புகழ்பெற்ற கால்பந்து தொடர் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஐ.எஸ்.எல். சென்ற ஆண்டை விட இவ்வருடம் வரவேற்பு அதிகம், எதிர்பார்ப்பும் அதிகம், ரசிகர்களின் ஆதரவும் அதிகம். இத்தொடரைப் பற்றிய கண்ணோட்டம் இங்கே… கேப்…
-
- 0 replies
- 832 views
-
-
இந்திய அணியில் விவசாயின் மகன் December 21, 2015 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரன் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை நேற்று தெரிவுக் குழு அறிவித்தது. இதில் பஞ்சாபை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீரர் பிரைந்தர் ஸ்ரன் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்தார். அதே போல் ரிஷிதவானும் அறிமுக வீரராக ஒருநாள் அணியில் தெரிவாகி உள்ளனர். 23 வயதான பிரைந்தர் ஸ்ரன் 11 முதல் தர போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 7 முதல் தர ஒருநாள் போட்டிகளில் வ…
-
- 0 replies
- 687 views
-
-
’அவுட்’ கொடுத்ததால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை December 21, 2015 இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு 189 ஓட்டங்களை இலக்காக கொடுத்துள்ளது இலங்கை அணி. இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற 47 ஓட்டங்கள் தேவை. முன்னதாக 2வது இன்னிங்சில் இலங்கை வீரர் ஜெயசுந்தேராவின் டி.ஆர்.எஸ் முறையிலான ஆட்டமிழப்பு சலசலப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 23வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஜெயசுந்தேராவிற்கு லெக் திசையில் வீசினார். பந்து அவரது கையுறையை உரசிச் சென்றது போல் சென்…
-
- 0 replies
- 716 views
-
-
’’மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சொந்த நாட்டுக்கு விளையாடாதது கவலை’’ கிளார்க் December 21, 2015 அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இல்லாமல் திணறி வரும் நிலையில், அந் நாட்டு சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுவது ஏமாற்றம் அளிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணி தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். தற்போது, மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.இந் நிலையில், ஹோபர்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்னிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. …
-
- 0 replies
- 566 views
-
-
T 20 ல் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் கிறிஸ் கெய்ல் December 20, 2015 இருபத்திற்கு இருபது போட்டிகளில் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை கிறிஸ் கெய்ல் நேற்று (சனிக்கிழமை) நிகழ்த்தியுள்ளார். அண்மையில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் பேட்டியில் பரிசால் புல்ஸ் அணிக்காக விளையாடிய கெய்ல், 47 பந்தில் 9 சிக்சர்கள் உள்ளடங்களாக 92 ஓட்டங்களை பெற்றார். அதன்போது அவர் மொத்தம் 598 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக களமிறங்கிய கெய்ல் 16 பந்தில் இரண்டு சிக்சர்கள் அடங்களலாக 23 ஓட்டங்களை பெற்றார். நேற்றை அவரது இரண்டு சிக்சர்களுட…
-
- 1 reply
- 684 views
-
-
கிளப் உலகக் கோப்பை பார்சிலோனா சாம்பியன்; பேயர்னில் இருந்து பெப் விலகல் ! கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 3- 0 என்ற கோல் கணக்கில் ரிவர் பிளேட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஜெர்மனி ஜாம்பவான் பேயர்ன் மியூனிச் அணியின் பயிற்சியாளராக இருந்த பெப் கார்டியாலா விலகுகிறார். அவருக்கு பதிலாக ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பார்சிலோனாவுடன் தென்அமெரிக்க சாம்பியன் ரிவர் பிளேட் அணி மோதியது. இந்த போட்டியில் காயம் காரணமாக களம் இறங்கமாட்டார் என்று கூறப்பட்ட, லயனல் மெஸ்சியும் விளையாடினார். முத…
-
- 0 replies
- 593 views
-
-
எதிர்காலம் குறித்து அச்சம்: வான் கால் மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், யுனைட்டட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தமையைடுத்து, தனது எதிர்காலம் குறித்து அச்சத்தைக் கொண்டுள்ளதை, அவ்வணியின் முகாமையாளரான லூயிஸ் வான் கால் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது பதவி குறித்து அச்சப்படுகிறாரா எனக் கேட்கப்பட்டபோது, 'ஆம், நிச்சயமாக, ஏனென்றால், முகாமையாளர் பதவியில் நம்பிக்கையென்பது முக்கியமானது" எனத் தெரிவித்தார். அவருக்கான மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, 'வழங்கப்படுமென நினைக்கிறேன், ஆனால் சொல்ல முடியாது. இந்த உலகத்தில், சொல்ல முடியாது. அந்த முடிவு, என்னிடம் இல்லை, பொறுத்திருந்து பார்ப்போ…
-
- 0 replies
- 585 views
-
-
”அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறும் இலங்கை அணி” சங்கக்காரா December 20, 2015 இலங்கை அணித் தெரிவாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சங்கக்காரா தெரிவித்துள்ளார். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில் ஹாமில்டனில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது. இது பற்றி சங்கக்காரா கூறுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக திரிமன்னே போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை டெஸ்ட்…
-
- 0 replies
- 848 views
-
-
உலகை நெகிழ வைத்த ஒரு சந்திப்பு: ஹைதரும் ரொனால்டோவும்! பெய்ருட் நகரில் அண்மையில் ஐ.எஸ். இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஹைதர் அலி என்ற 4 வயது சிறுவன், பெற்றோரை இழந்து அனாதையானான். கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹைதருக்கு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் ஹீரோ. ஹைதர் குறித்து சர்வதேச பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணி, ஹைதரை இரு நாட்களுக்கு முன், மாட்ரிட் நகருக்கு அழைத்து வந்தது. தற்போது ரியல்மாட்ரிட் அணியின் கவுரவ விருந்தினராக தங்கியுள்ள ஹைதர், நேற்று தனது ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோவை, சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் சந்தித்தான். அப்போது ஹைதரும், ரியல்மாட்ரிட் அணிக…
-
- 1 reply
- 783 views
-
-
இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் சென்னை, கோவா அணி பலப்பரீட்சை ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா, சென்னை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ஃபடோர்டா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக விருந்து படைத்த ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2-வது சீசனின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்களுக்கு கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. 8 அணிகள் பங்கேற்று, இந்தியாவின் 8 நகரங்களில் களைகட்டிய இந்த தொடர் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. இதில் கோவா, சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. முன்னதாக, அரையிறுதி ஆட்டங்களில் டெல…
-
- 0 replies
- 575 views
-
-
ஓமான் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான ஓமான் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஓமான் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டுலீப் மென்டிஸூடன் இணைந்து சுனில் ஜோஷி செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சுனில் ஜோஷி, பெரிய போட்டி ஒன்றுக்காக சர்வதேச அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஓமான் அணியின் தமைமைப் பயிற்சியாளர் மென்டிஸூடன் இணைந்து அணியின் வீ…
-
- 0 replies
- 507 views
-
-
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ் மீண்டும் சேர்ப்பு! சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ல் தொடங்கி 31-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில், அந்நாட்டுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டியிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்காக இந்திய ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 ஒருநாள் போட்டி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரஹானே, அஷ்வின், ஜடேஜா, மு…
-
- 1 reply
- 644 views
-
-
ரஹானே நொறுக்க... சங்கக்கரா குவிக்க.. மியாஸகி அசத்த... பிளாஷ்பேக் 2015! டெல்லி: வழக்கம் போல 2015ம் ஆண்டிலும் விளையாட்டு உலகம் பல சாதனைகளை, மறக்க முடியாத நிகழ்வுகளைக் கண்டது. பல புதிய சாதனைகள் படைக்கப்ட்டன. பல பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டன. கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து என சகல விளையாட்டிலும் சாதனைகள் படைக்கப்பட்டன. அவற்றிலிருந்து ஒரு சில. கோஹ்லியின் கேப்டன் சாதனை டெஸ்ட் கேப்டனாக இந்தியாவின் விராத் கோஹ்லி சாதனை படைத்த ஆண்டு இது. ஒரு கேப்டனாக அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு சதங்கள் போட்டு சாதனை படைத்தார் கோஹ்லி. இப்படி அடுத்தடுத்து நான்கு சதங்களை அடித்த முதல் டெஸ்ட் கேப்டன் என்ற சாதனை கோஹ்லிக்குச் சொந்தமானது. பீல்டிங…
-
- 0 replies
- 876 views
-
-
தொடர் டெஸ்ட் போட்டிகள்: டிவில்லியர்ஸை கடந்த மெக்கல்லம் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.எஃப்.பி. தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தென் ஆப்பிரிக்க நவீன அதிரடி பேட்ஸ்மெனான டிவில்லியர்சைக் கடந்தார் நியூஸிலாந்தின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். இவர் தற்போது தொடர்ச்சியாக தனது 99-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தொடர்ச்சியாக 96 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியின் முன்னாள் ‘சுவர்’ ராகுல் திராவிட் தொடர்ச்சியாக 93 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். டிவில்லியர்ஸ் போலவே மெக்கல்லமும் அனாயாச மட்டைச் சுழற்றல் அதிரடியில் ஈடுபடுபவர் என்றாலும், டிவில்லியர்ஸ் போலவே இவர…
-
- 0 replies
- 574 views
-
-
லிவர்பூல் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய வம்சாவளி வீரர் சாதனை! லிவர்பூல்... இந்த பெயரை சொன்னாலே கால்பந்து உலகம் அதிரும். ஏனென்றால் உலகின் அபாயகரமான கால்பந்து ரசிகர்கள் கொண்ட அணி எதுவென்றால், தாராளமாக லிவர்பூல் அணியை நோக்கி கை காட்டலாம். கடந்த 1985-ம் ஆண்டு, பிரஸ்சல்ஸ் நகரில் உள்ள ஹேசல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில், லிவர்பூல் அணியுடன் இத்தாலியின் யுவான்டஸ் மோதிக் கொண்டிருந்தது. இந்த போட்டியில் யுவான்டஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்த போது, லிவர்பூல் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் 39 யுவான்டஸ் ரசிகர்கள் கொல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக லிவர்பூல் அணிக…
-
- 0 replies
- 704 views
-
-
புனேயின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் December 18, 2015 ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த போட்டியில் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் தெரிவு செய்யப்பட்டன, இதில் புனே அணியில் டோனியுடம், ராஜ்கோட் அணியில் ரெய்னாவும் விளையாடவுள்ளனர். இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து…
-
- 0 replies
- 557 views
-
-
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் இந்திய வீரர் December 18, 2015 ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டவர் மனோஜ் பிரபாகர். வேகப்பந்துவீச்சாளரான இவர், ஒருநாள் ஆட்டத்தில் 96 விக்கெட்டுகளும் டெஸ்டில் 157 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார், மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 385 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ள இவரை தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டின் கிரிக…
-
- 0 replies
- 603 views
-
-
FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் December 18, 2015 சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் பணம் நகர்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் இதன் காரணமாக குறித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச காற்பந்து சபையில் கடந்த இருதசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தற்போது முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ஒளிபரப்பு உரிமம…
-
- 0 replies
- 722 views
-
-
ரங்கண ஹேரத், ஜனித் பெரேராவிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி..! காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காகவே குறித்த சூதாட்ட தரகர்கள் மேற்படி வீரர்களை அணுகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியு…
-
- 1 reply
- 494 views
-
-
இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அப்ரிடி டி20 சபதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி சபதம் எடுத்துள்ளார். 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 7 நகரங்களில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் (குரூப்2) இடம் பெற்றுள்ளன. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் மார்ச் 19-ம் தேதி நடக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் அப்ரிடி அளித்துள்ள…
-
- 0 replies
- 528 views
-
-
'ஸ்பெஷல் ஒன் ' அதிரடி நீக்கம் : செல்சியில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் மொரின்ஹோ! பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான செல்சி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து, நேற்று ஜோஸ் மொரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியான தோல்விகள் மோரின்ஹோ நீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. நடப்பு சாம்பியனான செல்சி, தற்போது புள்ளிகள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. யார் இந்த மொரின்ஹோ ? உலகின் முன்னணி கால்பந்து பயிற்சியாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் தன்னைத் தானே ‘ஸ்பெஷல் ஒன்’ என்று கூறிக்கொள்வார். போர்ச்சுகலைச் சேர்ந்த இந்த மொரின்ஹோ கால்பந்தை நேசிக்கும் அளவிற்கு வேறு யாரும் நேசித்திருப்பார்களா? என்றால் அது சந்தேகம்தான். அம்பியாய் இருக்கும் அணிகளை அந்நியனாக…
-
- 0 replies
- 537 views
-
-
’’டோனியை எதிர்கொள்வது கஸ்டம்’’ ஜடேஜா December 17, 2015 டோனிக்கு பந்து வீசுவது சவாலான விடயம் என்று ராஜ்கோட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜடேஜா தெரிவித்துள்ளார். ஐபிஎல் புதிய அணிகளான புனேவுக்கு டோனியும், ராஜ்கோட்டுக்கு டோனியும் ஒப்பந்தமாகியுள்ளனர். இதனால் டோனியும், ஜடேஜாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஜடேஜா கூறுகையில், “குறுகிய நேர கிரிக்கெட்டில் டோனியை கட்டுப்படுத்துவது மிக கடினம். அவருக்கு பந்துவீசுவது என்பது மிகப் பெரிய சவால். அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை படைத்தவர் என்பதை அடிக்கடி நிரூபித்துள்ளார். இருப்பினும் அவரது சவால்களை முழுத் திறமையுடன் எதிர்கொள்ள முயற்சிப்பேன்” என்று தெரிவித்…
-
- 0 replies
- 737 views
-
-
தொடர் ஊழலின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் தலைவர் கைது December 17, 2015 சர்வதேச கால்பந்து சபையின் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் முன்னாள் தலைவர் ரெய்னால்டோ வாஸ்க்வெஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் ரெய்னால்டோ நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3.20 மணியளவில் கொஸ்டா டெல் சொல் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பப் பகுதியில் ரெய்னால்டோ சரணடைவதற்கு எல் சல்வடோர் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. சட்டவிரோத செயற்பாடுகளுக்காக ரெய்னால்டோ கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் கு…
-
- 0 replies
- 435 views
-