Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. செய்தித்துளிகள் 2013ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் குழு அறிக்கையில், ஐபிஎல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ராமன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரண்டாண்டுகளாக சுந்தர் ராமன் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையே பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் சுந்தர் ராமன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். ---------------------------- தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் …

  2. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்து விடாது: சானியா சர்ச்சை பேச்சு இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் 9 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். முன்னாள் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1996ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இப்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் ஆடுவதால் இன்னொரு பதக்கம் பிரகாசமாகியுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சானியா இததொடர்பான கேள்விக்கு பத…

  3. கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணமா? நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 1) மிஸ்டர் ரன் மிஷின்! கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார். 2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்! முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்த…

  4. பிளாக்மெயில் வழக்கில் ரியல்மாட்ரிட் வீரர் கரிம் பென்ஜமா கைது! பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில், வல்புனா தொடர்புடைய 'செக்ஸ் டேப் ' ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து வல்புனாவை, கரீம் பென்ஜமாவும் மார்செலி அணிக்காக விளையாடிய சிஸ்சேவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கேட்கும் தொகை தரப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட செக்ஸ் டேப்பை மீடியாக்களிடம் …

  5. கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் ஓய்வு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போதுநடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காகவும் ஓய்வு பெறுவதாக சோயப் மாலிக் கூறினார். சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்துள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1379059

  6. ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தெரிவுகாண் தொடர்-முதல் சுற்று ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தொடரின் தெரிவுகாண் போட்டிகளின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரின் முதற்கட்டப் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவுக்கு வந்தன. இதன் இரண்டாம் கட்டப்போட்டிகள் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இறுதித் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய அணிகள் மிகப்பெரிய சர்வதேசத்தொடராக ஐரோப்பிய கிண்ண தொடரையே கருதுகின்றனர். உலகக்கிண்ண தொடருக்கும் இந்த தொடர் நல்லதொரு முன்னோடி தொடராக ஐரோப்பிய அணிகளுக்கு அமைந்துவிடுவதும் வழமை. …

  7. விராட் கோலி செய்கையால் நெகிழ்ந்து போன மொகாலி பிட்ச் பராமரிப்பாளர்! இந்தியா தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 5ஆம் தேதி மொகாலி நகரில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் தற்போது மொகாலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நேற்று மொகாலி பிட்சை பார்வையிட்டார். மொகாலி மைதானத்திற்குள் வந்த விராட் கோலி, முதல் வேலையாக அந்த மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் 73 வயது தல்ஜித் சிங்கின் பாதங்களை தொட்டு வணங்கினார். கடந்த 20 வருடங்களாக தல்ஜித் சிங் இந்த பிட்ச்சின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது காலை தொட்டு வணங்கியது. தல்ஜித் சிங்கை மிகுந்த உணர்ச்சிவசப்பட வைத்தது. வி…

    • 1 reply
    • 198 views
  8. டாடா மோட்டார்ஸ்க்கு லயனல் மெஸ்சி விளம்பர தூதர்! இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ்க்கு பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே கால்பந்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களில் 2வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா கேப்டனும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்சி, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கானது. இது குறித்து லயனல் மெஸ்சி கூறுகையில், '' இந்தியா குறித்து பல்வேறு வியக்கத்தகு விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். பெருமை வாய்ந்த அந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பது கவுரவமிக்கது'' என்று குறிப்பிட்டுள்ளார். ht…

  9. ஓய்வு பெற்றோம் என்பதற்காக மீண்டும் மட்டையை எடுக்கக் கூடாதா?- இயன் சாப்பலுக்கு சச்சின் பதில் சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்ன். | கோப்புப் படம். அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்தை மறுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். நியூயார்க்கில் நடைபெறும் டி20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். அது பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ட போது, “அனைவரும் எப்போதும் ஏதாவது கருத்துடனேயே இருப்பார்கள், ஆனால் அந்தக் கருத்து சரியானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் ஒரு உயர்ந்த மட்டத்தில் சவாலாக இனி திகழ முடியாது என்ற நிலை…

  10. இது ஓர் அணி, இதில் தனி நபர்கள் இல்லை: ரவி சாஸ்திரி இந்த இந்திய அணி உலகத் தரமானது, சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய திறமை பெற்றது என்கிறார் ரவி சாஸ்திரி. | படம்: பிடிஐ. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய அணிச் சேர்க்கை, ஸ்பின் பந்து வீச்சு, அணியின் மனோநிலை ஆகியவை பற்றி ரவிசாஸ்திரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி பற்றி கருத்து கூறிய இயக்குநர் ரவி சாஸ்திரி, 'இது ஓர் அணி, இதில் தனிநபர்கள் இல்லை' என்றார். மேலும், 'இந்த அணி நேர்மையான வீர்ர்களைக் கொண்டது. வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள், தோல்வியை கவுரவத்துடன் எதிர்கொள்கின்றனர்' என்றார் அவர். …

  11. தந்தை தந்தைதான்... மகன் மகன்தான்: தோனி, கோலியை ஒப்பிட்டு கபில் ருசிகரம் ஜெய்பூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் தேவ். | படம்: ரோஹித் ஜெயின் பராஸ். கேப்டனாக தோனியின் சாதனைகளை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் ஒண்டர் சிமெண்ட் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் கூறியதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தந்தை தந்தைதான்... மகன் மகன் தான். தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். இதைக்கூறும்போது இன்னொன்றையும் தெரிவிக்கிறேன், கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்புறுவார் என்று நான் வலிமையாக நம்புகிறேன். இந்திய…

  12. தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்! தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர் வீரர் சிறந்து விளையாடுவது என்பது பெரிதல்ல. ஆனால், ஆட்டம் அழுத்தமான தருணத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதும் கூட திறமையான ஆட்டத்தை ஆடக் கூடியது தான் பெரிது. யாராக இருந்தாலும் கடைசி ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது மிகவும் கடினமானது, தோனியை தவிர. இதை யாராலும் மறுக்க முடியாது. எவ்வளவு கடினமான ஆட்டமாக இருந்தாலும் கூலாக அதை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் மட்டுமே இருக்கிறது. இனி…

  13. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜெர்மனியின் ரோஸ்பெர்க். படம்:ஏஎஃப்பி. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஹேமில்டன் 2 வது இடத்தை பிடித்தார். இந்த சீசனில் ரோஸ் பெர்க் பெற்ற 4வது வெற்றி இது வாகும். ஏற்கெனவே அவர் ஸ்பெயின், மொனாக்கோ, ஆஸ்தி ரியா போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 போட்டியில் ரோஸ் பெர்க் வெற்றி பெற்றுள்ளார். அவர் 272 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கார் பந்தயம் மொத்தம்…

  14. குட் பை சாம்பியன்ஸ்! தௌசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டால் என்ன ஆகும்? படபடவென்று அதுவாக வெடித்து முடிக்கும் வரை யாராலும் தடுக்க முடியாது. ஷேவாக்கின் பேட்டிங்கும் அப்படித்தான். என் வழி தனி வழி! ‘‘விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால், ஷேவாக்கின் அதிரடியைப் பார்த்துள்ளேன்’’ என்று தோனி பெருமையாகக் குறிப்பிட்ட ஷேவாக், தனது 37-வது பிறந்தநாளான அக்டோபர் 20-ல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். டெல்லியில் படிக்கும்போது, ஷேவாக் விளையாடிய அரோரா வித்யா மந்திர் பள்ளி மைதானத்தை, கிரிக்கெட்டின் கோயிலாக நினைத்து பல சிறுவர்கள் அங்கே விளையாட விரும்புகிறார்கள்.சச்சினைப் போல பள்ளிக் காலத்திலேயே ஷேவாக் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரா…

    • 1 reply
    • 509 views
  15. தரக்குறைவான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் விரட்டியது: தோனி தோனி. | படம்: ஏ.பி. கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதுகாக்கப் படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை விரட்டியடித்தது என்று கூறினார். புதுடெல்லியில் ‘யாரி’ டிஜிட்டல் நிகழ்ச்சியின் போது கிறிஸ் கெய்லுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட தோனி கூறும்போது, “நாம் ஜெண்டில்மேன் ஆட்டத்தை ஆடுகிறோம். நாம் வெற்றி பெற விரும்புகிறோம், ஆனால் அதனை சரியான வழியில் அடைய வேண்டும். தரக்குறைவான, அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் கிரிக்கெட் விரட்டியுள்ளது. நட்பு ரீதியான ஒரு கேலி நல்லதுதான், இதைத்தான் டுவெண்டி 20 லீகுகள் செய்தன. ஸ்லெட்ஜிங் என்று அறியப்படும் ஒன்றுக்கு எதிராக வீரர்களை ஒன்ற…

  16. என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி! சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர். டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான எ…

  17. சானியா - மார்ட்டினா சாதித்த கதை! சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி, புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர் 'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும் 'அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா' என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். திருமணம், அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால் ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும் தாண்டி 2-வது இன்னிங்ஸில், இரண்டு பெண்கள் கைகோத்து உச்சம் தொட்டிருக்கின்றனர். ஒருவர் சானியா மிர்சா, இன்னொருவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற சுவிஸ் மங்கை. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒன்பது மாத காலத்தில் ஒன்பது பட்டங்களை வென்று, டென்னிஸ் உலகையே இப்போது திரும்பிப்பார்க்க வை…

  18. ஓல் ஸ்டார் கிரிக்கெட் : லாரா, மஹேல, வோர்ன் பங்கேற்பு ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்­கேற்கும் ஓல் ஸ்டார் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட்டின் முதல் போட்டி எதிர்­வரும் 7ஆம் திகதி அமெ­ரிக்கா நியூ­யோர்க்கில் நடக்­கி­றது. இந்தப் போட்டியில் விளையாடப்போகும் வீரர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, இந்தியாவின் சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகர்கர், இங்கிலாந்தின் மைக்கேல் வோகன், ஸ்வான், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன், ரிக்கி பொண்டிங், மெக்ராத், ஹேடன், சைமன்ஸ், நியூஸிலாந்தின் வெட்டோரி, பாகிஸ்தானின் வசீம் அக்ரம், அக்தர், மொய்ன் கான், சல்மான் முஷ்டக், தென்னாபிரிக்காவின் கலிஸ், க்ளூசனர், ஜொன்டி ரோட்ஸ், பொல்லாக்,…

  19. வெற்றியில் மிளிர்ந்த வில்லியம்ஸ் றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைப் போன்று, நியூசிலாந்து அணியின் சொனி பில் வில்லியம்ஸின் உயர்ந்த நடத்தையும், இறுதிப் போட்டியில் அதிகம் கவனிக்கப்படும், பாராட்டப்படும் ஒன்றாக மாறிப் போனது. நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து வீரர்கள், மைதானத்தைச் சுற்றிவர முயன்ற போது, 14 வயதான நியூசிலாந்து இரசிகனான சார்லி லைன்ஸ், தனது கதாநாயகனான பில் வில்லிம்ஸை நோக்கிச் செல்ல முயன்றான். எனினும், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதன் காரணமாக அவனைப் பின்தொடர்ந்த பாதுகாப்பு அதிகாரி, அவனைத் தடக்கிக் கீழே வீழ்த்தினார். இதனைக் கண்ட பில் வில்லியம்ஸ், அந்தப் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து லைன்ஸைப் பிரித்து, அவன் பார்வை…

  20. பீலேவை தொடர்ந்து ரொனால்டோ இந்தியா வருகை! உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 15 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ள பிரேசில் வீரர் ரொனால்டோ இந்தியா வருகிறார். ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி - மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டத்தை அவர் நேரில் ரசிக்கிறார். ஆனால் ரொனால்டோ டெல்லியில் நகரில் ஒரே ஒருநாள் மட்டும்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அப்போது பிரேசில் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளின் முன்னாள் விங்கரும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளருமான ராபர்ட்டோ கார்லசை ரொனால்டோ சந்திக்கிறார். பிரேசில் அணிக்காக 1998, 2002, 2006ஆம் ஆண்டு என 3 உலகக் கோப்பை போட்டிகளில் ரொனால்டோ விளையாடியுள்ளார். 1998 உலகக் கோப்பை போட்டியில்அதிக கோல் அடித்த …

  21. இந்தியா - பாகிஸ்தான் அணிகளி டையே மீண்டும் கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் அணிகளி டையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கிரிக்கெட் போட்டி இரு நாட்டு ரசிகர்களையும் ஒருங்கிணைக்கும் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரராக இந்த கருத்தை கூறுகிறேன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆட முடியாததாலும், தங்கள் ஊரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத தாலும் பாகிஸ்தானில் உள்ள இளம் வ…

  22. சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறிமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் மன்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றி அணியைத் தோற்கடித்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இப்போட்டியில் நிக்கொலஸ் ஓட்டமென்டி 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினைப் பெற்று சிற்றி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 83வது நிமிடத்தில் நோர்விச் சிற்றி அணியின் கமரூன் ஜெரோம் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் யாயா தோரே, கிடைத்த பெனால்டியை கோலாக்க சிற்றி வெற்றி பெற்றது. அடுத்து ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியை …

  23. ஹமில்டனை முந்திய ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் தொடங்கும் வாய்ப்பை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி சாரதியான நிக்கோ ரோஸ்பேர்க் பெற்றுள்ளார். தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை 0.188 செக்கனால் தோற்கடித்தே ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் ஆரம்பிக்கவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் ஹமில்டனை தோற்கடித்து முதலிடத்தில் பந்தயத்தை தொடங்கியிருந்தாலும் கடந்த மூன்று இறுதிச் சுற்றுக்களிலும் ஹமில்டனே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த நான்காவது முறையாவது ரோஸ்பேர்க் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளார். ஆரம்ப இடங்களுக்கான இந்தப் பந்தயத்தில் பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் விட்டல் மூன்றாவது இடத்தைப்…

  24. கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு …

  25. புதிய அணிகளுக்கு10 வீரர்கள் நேரடி தெரிவு November 01, 2015 பிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் உருவாக்கப்படுகிறது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2016, 2017ம் ஆண்டு சீசனில் இந்த இரு அணிகள் பங்கேற்க முடியாது. இந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த புதிய அணிகள் விரைவில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த அணிகள் கிட்டத்தட்ட ராஜஸ்தான், சென்னை அணிகள் போன்றே இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் 2 புதிய அணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.