விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ரஷ்யாவின் உலகக்கிண்ண வாய்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டது 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடாக, வாக்கெடுப்புக்கு முன்னரே ரஷ்யா தெரிவுசெய்யப்பட்டதாக, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இடைநிறுத்தப்பட்டுள்ள தலைவரான செப் பிளட்டர் தெரிவித்துள்ளார். 2018, 2022ஆம் ஆண்டுகளின் உலகக் கிண்ணங்களை முறையே ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் வழங்குவதற்கு எடுத்த முடிவு, பலத்த சந்தேகங்களை முன்னர் எழுப்பியிருந்த நிலையில், பிளட்டரின் இக்கருத்துக்கள், அவற்றின் மீது மேலும் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. '2010ஆம் ஆண்டில் நாமொரு கலந்துரையாடலை நடாத்தினோம். அதில், இரண்டு முடிவுகளை எடுத்தோம். அதன்படி, உலகக் கிண்ணத்துக்காக ரஷ்யாவைத் தெரிவுசெய்வதென முடிவெடுத்தோம், ஏனெனில்…
-
- 0 replies
- 191 views
-
-
2016 உலக இருபது 20 போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம் என்கிறார் மியண்டாட் 2016 உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை முன்னாள் வீரர் ஜாவேட் மியண்டாட் கோரியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறாவிட்டால் அடுத்த வருட உலக இருபது 20 போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கூறுகின்றது. அத…
-
- 0 replies
- 264 views
-
-
தோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்! ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி, தற்போது தனது கேப்டன் கேரியரில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கிறார். இந்த ஆண்டில் தோனியின் தலைமையில் இதுவரை இந்தியா ஒரு தொடரைக் கூட வெல்ல முடியவில்லை. "தோனியை ஓரங்கட்டுங்கள், இளம் பாய்ச்சலை புகுத்துங்கள்...!" என ஆளாளுக்கு தோனியின் மீது சொற்கற்களை வீச ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக தன் மீதான விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுக்கும் தோனியால், இந்த முறை சமாளிக்கவே முடியவில்லை. தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் சரித்திரத்தில், முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற…
-
- 3 replies
- 413 views
-
-
தலைமை மாற வேண்டிய தருணம் சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசம் அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா தோற்றபோது மகேந்திர சிங் தோனி தன் இயல்புக்கு மாறாக எதிர்வினை ஆற்றினார். “அணிக்கு நல்லது என்றால் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகி, சாதாரண ஆட்டக்காரராக ஆடத் தயார்” என்றார். முன்னாள் ஆட்டக்காரர்கள் பலர் இதை ஏற்கவில்லை. அணித் தலைவர் என்னும் முறையில் தோனியின் சாதனைகளை அவர்கள் நினைவு கூர்ந்தார். இந்தச் சாதனைகளுக்கு ‘மதிப்பு' அளிக்க வேண்டும் என்று சவுரவ் கங்கூலியும் சுனில் கவாஸ்கரும் சொன்னார்கள். ஆனால், இருவரின் பார்வையிலும் நுட்பமான வேறுபாடு இருந்தது. கேப்டனாக இருப்பதா வேண்டாமா என்பதை தோனியே முடிவெடுக்க வேண்டும் என்றார் கவாஸ்கர். கேப்டன் விஷயம் தனிநபரின் முடிவாக இருக்க…
-
- 2 replies
- 386 views
-
-
தொடர்ச்சியாக ஆசியக்கிண்ணம் பங்களாதேஷில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத்தை நடாத்துவது என சிங்கப்பூரில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளைக் கொண்ட இந்தப் பிராந்திய கிரிக்கெட் தொடரில் போட்டியை நடாத்தும் நாடான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஒரு துணைக் கண்ட நாடு பங்கேற்கவுள்ளது. இம்முறை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இத்தொடர் முடிந்து ஐந்து நாட்களில் உலக இருபது-20 தொடர் ஆரம்பிக்கவுள்ளமையால், எதிர்வரும் ஆசியக் கிண்ணத்தில் முதற்தடவையாக இருபது-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. அடுத்த வருடம்,…
-
- 0 replies
- 231 views
-
-
அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம் தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி. அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் வரை கேப்டன் பொறுப்பில் தோனியே நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். தோனி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த சேவாக் கூறியதாவது: "தோனி அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நல்ல உலகக்கோப்பை அணியை அவர் ஏற்படுத்துவார். அவர் ஓய்வு பெற்றால் 5,6 அல்லத் 7-வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றாகிவிடும், தோனி இருக்கும் போதே அந்த நிலைகளுக்கு யாரை இறக்குவத…
-
- 0 replies
- 291 views
-
-
ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..! அக்தர் அசுர வேகத்தில் பந்துவீச, அதை சச்சின், கங்குலி பார்ட்னர்ஷிப் சிக்சருக்கு அடித்து விளாசிய அந்த காட்சிகளை எல்லாம் இனி ஐ.பி.எல்.லில் கூட காண முடியாது. இருவருமே ஒய்வு பெற்றுவிட்டனர். ஆனால், நவம்பர் மாதம் நடக்கும் ஆல் ஸ்டார் T20 தொடரில் இப்படி ரீவைண்டு ஆக்ஷன்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது என்ன ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்.? கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் ஷேன் வார்னே இருவரும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் முயற்சிதான் இந்த தொடர். கிரிக்கெட் உலகில் அனைவராலும் விளையாடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான ஐ.சி.சி.யின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 37 தான். அ…
-
- 0 replies
- 358 views
-
-
கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து மேஜிக் செய்த கால்பந்து வீரர் ( வீடியோ) கோல் அடித்ததும் பந்தை அந்தரத்தில் மிதக்க வைத்து கால்பந்து வீரர் ஒருவர் வெற்றியை கொண்டாடியது ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. வெனிசூலா பிரிமீயல் லீக்கில் கரகாஸ் அணிக்கு எதிராக கோல் அடித்த சமோரா அணி வீரர் சீசர் மார்ட்டினஸ் கோல் அடித்த உற்சாகத்தில் பந்தை சில வினாடிகள் அந்தரத்தில் மிதக்க வைத்தார். அப்போது அவரது அணியை சேர்ந்த சக வீரர்கள் அவரை சுற்றி நின்றனர். இந்த சமயத்தில் சீசர் மார்ட்டினஸ் ஏதோ ஒரு வித்தியாசமான டெக்னிக்கை கையாண்டு பந்தை அந்தரத்தில் மிதப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தினார். ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவரது டெக்னிக் தென்படவில்லை. http://www.vikat…
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியா படுதோல்வி: மும்பை பிட்ச் பராமரிப்பாளரை திட்டி தீர்த்த ரவிசாஸ்திரி! மும்பை: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த ரவிசாஸ்திரி, மும்பை பிட்ச் பராமரிப்பாளரை கடுமையாக திட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 438 ரன்களை குவித்தது. அந்த அணியில் 3 பேர் சதம் விளாசினர். இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் 10 ஓவர்கள் வீசி, 106 ரன்களை வாரி இறைத்தார்.…
-
- 1 reply
- 248 views
-
-
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்து சென்றது நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் கிரிக்கெட் தரப்படுத்தலுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சர்வதேச மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் நேற்றைய தினம் நியூஸிலாந்து சென்றடைந்தனர். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஷஷிகலா சிறிவர்தன தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சமரி அத்தப்பத்து உதவி அணித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்ற உதேஷிகா பிரபோதினி சுகவீனமுற்றதன் காரணமாக அவருக்குப் பதிலாக அச்சினி குலசூரிய குழாமில் இணைத்துக்கொ…
-
- 0 replies
- 223 views
-
-
இரத்ததானம்... இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் 38ஆவது பிறந்த தினம், நேற்று செவ்வாய்க்கிழமை (27) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற இரத்ததான முகாமை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/157676/இரத-தத-னம-#sthash.X2eb1v1O.dpuf
-
- 1 reply
- 282 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்கக்கார பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் , இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இணைந்துள்ளார். கிறிஸ் கெயில், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ, கெவின் பீற்றர்சன், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள், 5 அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவர். சங்கக்காரவின் ஒப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் தலைவர் நஜம் சேதி, 'சங்கக்கார, உலகத்தரம் மிக்க ஒர வீரர். அவரை இணைத்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏராளமான அனுபவத்தை அவர் இந்தத் தொடருக்குக் கொண்டு வருகின்றார். அவரது இணைப்பானது, தொடரின் வீரர் தெ…
-
- 0 replies
- 199 views
-
-
தோல்விக்கு ஆடுகளம் மீது பழிபோடுவதா? - கவாஸ்கர் கேள்வி மும்பை ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்ததற்கு ஆடுகளம் மீது பழி போடுதல் கூடாது என்று ரவிசாஸ்திரி மீது கவாஸ்கர் சூசக விமர்சனம் வைத்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி மும்பை வான்கடே மைதான பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுதிர் நாயக், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளை நடைபெறும் மும்பை கிரிக்கெட் சங்க…
-
- 1 reply
- 235 views
-
-
இந்திய அணி தோனி தலைமையில் 2015ல் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை தோனி தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் ஒருநாள் போட்டி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு உச்சங்களுக்கு கொண்டு சென்ற தோனிக்கு இந்த ஆண்டு கடும் சோதனையாகவே அமைந்துள்ளது. 2007ல் டி20 உலககோப்பை, 2011ல் 50 ஓவர் உலககோப்பை ஆகியவற்றை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அதன் பின்னர் இந்திய அணிக்கு பல்வேறு ஏற்றங்கள் காணப்பட்டது. வெளிநாட்டு தொடர் களிலும் தோனி தலைமையில் இந் திய அணி பிரகாசிக்கத் தொடங் கியது. தோனி களத்தில் வகுக்கும் வியூகங்களுக்கு கைமேல் பலனும் கிடைத்து வந்தது. தோனியை அனைவரும் தலை யில் தூக்கி வைத்து கொண்டாடி னர். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எல்லாம் தலைகீழா…
-
- 1 reply
- 223 views
-
-
நைரோபி மாரத்தான் ஓட்டத்தில் கடைசி நேரத்தில் நுழைந்து ஏமாற்றிய வீரர் கைது கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நைரோபி மாராத்தான் ஓட்டம். | படம்: ராய்ட்டர்ஸ். கென்யாவில் நடைபெற்ற நைரோபி சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான வழக்குகள் தொடரப்படலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28-வயது ஜூலியஸ் நஜோகு என்ற வீரர் 42 கிமீ தூரம் ஓடாமல், கடைசி நேரத்தில் ஓட்டத்தின் இடையே புகுந்து 2-வதாக வந்தார். இந்த இடத்துக்கான பரிசுத் தொகை 7,000 டாலர்கள் ஆகும். ஆனால் அவர் செய்த மோசடி அம்பலமாக, கைது செய்யப்பட்டார். 42 கிமீ ஓடியதற்கான…
-
- 0 replies
- 173 views
-
-
சிறிவர்தன சிறந்ததொரு தெரிவு : மெத்தியூஸ் இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறிவர்தன சிறந்ததொரு தெரிவென்று பாராட்டியுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ். மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றுமுடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்திருந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பது விசேட அம்சமாகும். இந்தத் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி கொழும்பு பி.சரா கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப்போ…
-
- 1 reply
- 369 views
-
-
சிம்பாப்வேயை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான் October 23, 2015 சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரின் நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் 3 இலக்குகளால் ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடர் 2:2 என்று சமநிலையாகியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிம்பாப்வேயின் முன்னணி வீரர்கள் எவருமே பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சிப்கபா மட்டும் சிறிது நிதானித்து 26 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில் சிம்பாப்வே 82-6 என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அணியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் ரசா. பின்வரிசை வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போக 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சிம்பாப்வே 1…
-
- 4 replies
- 742 views
-
-
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வேண்டும்; சச்சின்&வோர்ண் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இருபது-20 கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வோர்ணும் கோரிக்கை விடுத்துள்ளனர். 1900ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட்டானது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம்பெற்றிருக்காத போதும் அடுத்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையும் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவும் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளன. கிரிக்கெட்டை ஒலிம்பிக் விளையாட்டாக பார்க்க விரும்புவதாகவும், யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாக வரலாம் என ஷேன் வோர்ண் தெரிவித்துள்ளார். கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாவது சிறந்த யோச…
-
- 0 replies
- 394 views
-
-
சோபர்ஸ் இல்லையென்றால் ..... : மனம் திறந்த அர்ஜுன ரணதுங்க சேர் கார்பீல்ட் சோபர்ஸ் மட்டும் இல்லையென்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்று, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கை வந்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளராகப் பங்குபற்றிய சேர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சில், அமைச்சர் அர்ஜுன ரண…
-
- 0 replies
- 290 views
-
-
இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய இலட்சினை வெளியீடு October 28, 2015 புதிய டைட்டில் அனுசரணையாளர் விவோவுடனான ஐ.பி.எல் புதிய இலட்சினை நேற்று முன்தினம் திங்கட் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி ஒன்பதாவது ஐ.பி.எல் போட்டிகள் விவோ ஐ.பி.எல் என அழைக்கப்படவுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளின் டைட்டில் அனுசரணையாளராக இருந்த பெப்சி நிறுவனம் அண்மையில் வெளியேறியது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சூதாட்டத்தினால் கிரிக்கட் மதிப்பிழந்துள்ளதாகத் தெரிவித்து தனது அனுசரணையிலிருந்து விலகியது. இதனையடுத்து சீனாவின் ஸ்மார்ட் போன் நிறுவனமான விவோ எதிர்வரும் இரு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வங்கி உத்தரவாதம் கடந்தவாரம் வழங்கப்பட்டது. இந்நிலையி…
-
- 0 replies
- 400 views
-
-
200 மில்லியன் யூரோ செலவில் லோட்ஸ் மைதானம் அபிவிருத்தி October 28, 2015 இங்கிலாந்து லோட்ஸ் கிரிக்கட் மைதானம் 200 மில்லியன் யூரோ செலவில் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய பரிமாணம் பெறவுள்ளது. உலகின் மிகப்பிரபலமான கிரிக்கட் மைதானமான இந்த லோட்ஸ் மைதானம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆஸ் தொடரின் போது புதிய தோற்றத் துடன் தயாராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலன் அரங்கு, 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டேவன் அரங்கு இரண்டும் இடிக்கப்படவுள்ளது. மேலும் புதிய திட்டத்தில் இரு உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கைகள் ஆகியன அதிகரிக்கப்படவுள்ளன. சுமார் 30 ஆயிரத்து 530 பார்வையாளர்கள் உள்ளடக்கக் கூடியதாக இது அமையவு…
-
- 0 replies
- 278 views
-
-
-
- 1 reply
- 418 views
-
-
அகதிகளாக இருக்கும் தடகள வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட அனுமதி AFP அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளில் அகதிநிலையில் உள்ள தடகள வீரர்களும் ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்து கொள்ளலாம் அகதி நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அகதி நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள். இது வரை இது போல அகதி நிலையில் இருக்…
-
- 0 replies
- 243 views
-
-
மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை உள்ளது - நெருங்கிய நண்பரான ரொஸ் பிரவுண் கூறுகிறார் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது படுகாயமடைந்த போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது என அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரொஸ் பிரவுண் தெரிவித்துள்ளார். 2013 டிசெம்பர் மாதம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது, மைக்கல் ஷூமாக்கர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். அதையடுத்து, பிரான்ஸிலுள்ள வைத்தியசாலையில் 159 நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர், தற்போது சுவிட்ஸர்லாந்திலுள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். …
-
- 0 replies
- 216 views
-
-
ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை மூன்றாவது தடவையாக ஹமில்டன் வென்றார் ஐக்கிய அமெரிக்க குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் வெற்றியீட்டிய மேர்சிடெஸ் அணி சாரதியான லூயிஸ் ஹமில்டன், மூன்றாவது தடவையாக ஃபோர்மியூலா வன் உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். டெக்சாஸ், ஒஸ்டின் ஓடுபாதையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ்வருடத்திற்கான 16ஆம் கட்ட குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை ஹமில்டன் உறுதி செய்துகொண்டார். சேர் ஜெக்கி ஸ்டுவர்ட்டுக்குப் பின்னர் ஃபோர்மியூலா –1 உலக சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றெடுத்த இரண்டாவது பிரித்தானியர் என்ற பெருமையை ஹமில்டன் ப…
-
- 0 replies
- 282 views
-