விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
சாம்பியன்ஸ் லீக் ஒரே பிரிவில் பேயர்ன்மியூனிச், ஆர்சனல்! இந்த ஆண்டுக்கான (2015-16) சாம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 'எப்' பிரிவில் ஜெர்மனி ஜாம்பவான் பேயர்மியூனிச் அணியுடன் ஆர்சனல், ஒலிம்பிகாஸ் மற்றும் டைனமோ சக்ரப் அணிகள் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ள சான்சிரோ மைதானம் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி' ஈ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பேயர் வெவர்கியூசன், ரோமா, பாடே போரிசவ் அணிகள் இருக்கின்றன.' ஏ 'பிரிவில் சக்தர் டொனாஸ்க், ரியல்மாட்ரிட், மால்மோ,பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணிகளும் 'பி ' பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட், பி.எஸ்.வி என்டோவன், சி.எஸ்.கே. மாஸ்கோவா, வுல்ஸ்பர்க் ஆகிய அ…
-
- 0 replies
- 277 views
-
-
துயரம் தரும் கணங்கள்: உலகக் கோப்பை தோல்வியை அசைபோடும் டிவில்லியர்ஸ் ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம். 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் கடைசி தருணத்தில் தோல்வியடைய நேரிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் மனநிலை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். ஐசிசி இணையதளத்தில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. சில துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள் சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிடைத்த வாய்…
-
- 0 replies
- 643 views
-
-
”அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறும் இலங்கை அணி” சங்கக்காரா December 20, 2015 இலங்கை அணித் தெரிவாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சங்கக்காரா தெரிவித்துள்ளார். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில் ஹாமில்டனில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது. இது பற்றி சங்கக்காரா கூறுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக திரிமன்னே போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை டெஸ்ட்…
-
- 0 replies
- 848 views
-
-
2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட…
-
- 0 replies
- 426 views
-
-
இந்தியாவிலும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி கோரல் கொல்கத்தாவில் கழக அணிகள் பங்கேற்கும் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதி தர வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவரும்இ முன்னாள் இந்திய அணித்தலைவருமான சௌரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மண்ணில் முதன் முறையாக பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) ஏற்பாடு செய்கிறது. இதில் நியூசிலாந்து அணி பங்கேற்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் வரும் துலீப் சுற்றுத் தொடரை பகல் – இரவு போட்டிகளாக நடத்தவுள்ளனர். இதுகுறித்து கங்குலி கருத்து வெளியிடும்…
-
- 0 replies
- 264 views
-
-
லீமனின் ஒப்பந்தம் நீடிப்பு அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமனின் பயிற்றுநர் பதவிக்கான ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம், ஆஷஸ் தொடர் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே, இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட டெரன் லீமன், 2019ஆம் ஆண்டுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருக்குச் சில நாட்கள் முன்பாக, அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக அறிவிக்கப்பட்ட டெரன் லீமன், அடுத்ததாக இடம்பெற்ற ஆஷஸ் தொடரை வென்றதோடு, தென்னாபிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிர…
-
- 0 replies
- 355 views
-
-
நெய்மர் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்: ஸ்பெயின் கோர்ட் பார்சிலோனா அணியின் முன்னணி வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் கோர்ட் அறிவித்துள்ளது. 24 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக வ…
-
- 0 replies
- 346 views
-
-
இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என பலரும் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது இனி தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் பெஸ்ட் கிரிக்கெட் தான், அதை கொண்டாடவும், வரவேற்கவும், ஆராதிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள் என்பதை இந்தாண்டு நிரூபித்தது. உலகம் முழுவதும் சுமார் 45 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல தொடர்களில் பல்வேறு ஆச்சர்ய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன. அப்படி, இந்த ஆண்டு நடந்த தி…
-
- 0 replies
- 526 views
-
-
வடக்கு, கிழக்கில் கராத்தே வெற்றியாளர்கள் மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவந்த பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் திறந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கராத்தே வீரர்களினால் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே சங்க பாடசாலையில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி வகுப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த பயிற்சி வகுப்புகளை சர்தேச கராத்தே சாம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்…
-
- 0 replies
- 518 views
-
-
மோசடியால் வாய்ப்புப் பெற்றதா கட்டார்? 2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை, மோசடி செய்து கட்டார் பெற்றது என்று கூறப்படுவது தொடர்பான அறிக்கையை, ஜேர்மனியப் பத்திரிகையான பில்ட் பிரசுரித்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நன்னெறிக் கோவை மீறல் முன்னாள் விசாரணையாளரான மைக்கல் கர்சியாவின் 2014ஆம் ஆண்டு அறிக்கையையே தாம் பெற்றதாக, பில்ட் தெரிவித்துள்ளது. பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அதிகாரி ஒருவரின் 10 வயது மகளுக்கு, இரண்டு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டன என்று கூறப்பட்ட விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டாருக்…
-
- 0 replies
- 272 views
-
-
ஸ்மிருதி மந்தனா: 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஐ.சி.சி. தேர்வு செய்த இவர் யார்? 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவர் ரேச்சல் ஹேகோ ஃபிளின்ட் கோப்பையையும் பெறுகிறார் என்று அறிவித்துள்ளது ஐ.சி.சி. இது தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டிலும் 2021ம் ஆண்டில் சிறப்ப…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak மார்ச் 3, 2009. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ், லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கி பயணிக்கிறது. சுற்றிலும் பாதுகாப்பு. பஸ் லிபர்டி செளக் பகுதியில் சென்றபோது அங்கு ஊடுருவியது, துப்பாக்கி ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல். பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது தாக்குதல். இலங்கை வீரர்கள் ஆறு பேர் காயம். ஆறு போலீஸார், பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி. அஷன் ரஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த அம்பயர். லாகூர் டெஸ்ட் போட்டியின் ரிசர்வ…
-
- 0 replies
- 558 views
-
-
மஹேலவின் ஒய்வு - மனம் திறக்கிறார் சங்கா டெஸ்ட் உலகில் மஹேலவுடன் இணைந்து அசைக்க முடியாத பல இணைப்பாட்டங்களை வழங்கி, சாதனைகளைப் படைத்து, இலங்கையின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றியவரும், தனிப்பட்ட வாழ்விலும் மஹேலவின் நெருங்கிய நண்பரான இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார சங்க்கார மஹேலவின் ஓய்வு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மஹேலவின் ஓய்வு இலங்கைக்கு எப்படியானதாக இருக்கும்? ”மஹேல டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவது இலங்கைக்கு பாரிய நட்டமாகும். சரியான முறையில் சித்தித்து இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கின்றேன். இந்த இடைவெளியை நிரப்ப அதிக காலம் எடுக்கும். இந்த இடைவெளி என்பது இன்னொருவருக்குக் கிடைத்த பெரும்…
-
- 0 replies
- 408 views
-
-
கபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா ? Share மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி எதிர்வரும்வரும் 21 ஆம் திகதி கவுகாத்தியில் ஆரம்பமாகின்றது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள ரவீந்திர ஜடேஜா, ஆசியக் கிண்ணத்…
-
- 0 replies
- 340 views
-
-
இந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்! மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால் போராடி தோற்றுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் ஆரம்பமான இறுதி T-20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியை வெளிக்காட்ட, அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் கோலின் முன்ரோ 72 ஓட்டங்களையும், டிம் சீஃபெர்ட் 43 ஓட்டங…
-
- 0 replies
- 721 views
-
-
யூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ்க்கையில் அழுகிறார்! பாகிஸ்தான் அணியின் தற்போதைய மூத்த வீரர் யூனிஸ் கான், அண்மையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனால் யூனிஸ் கானின் சொந்த வாழ்க்கை, சோகம் ததும்பியது. தந்தை, இரு சகோதரர்கள், சகோதரி என அடுத்தடுத்து அவர் வீட்டில் நிகழ்ந்த மரணங்கள் யூனிஸ் கானை உலுக்கி எடுத்தன. தற்போது 37 வயதான யூனிஸ்கானின் தந்தை இறந்த போது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். தந்தை இறந்ததை தொடர்ந்து தாய்நாடு திரும்பினார். தொடர்ந்து உக்ரேனில் நடந்த கார் விபத்தில் யூனிஸ் கானின் மூ…
-
- 0 replies
- 311 views
-
-
குமார் சங்ககாரா மீண்டும் சதம் இங்கிலாந்து surrey கவுன்டி அணிக்காக ஆடிவரும் குமார் சங்ககாரா County Championship போட்டியில் Lancashire அணிக்கு எதிராக 118 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். Surrey 480 & 283/7d Lancashire 272 & 22/0 (7.0 ov) Lancashire require another 470 runs with 10 wickets http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804433.html
-
- 0 replies
- 414 views
-
-
2026 ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார். இதில் 19, 84, 86 ஆகிய நிமிடங்களில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். சக அணி வீரர்கள் 2 கோல்கள் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து அவர் உதவினார். அதன் மூலம் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதில் மெஸ்ஸி பதிவு செய்த…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
எதிர்காலம் குறித்து அச்சம்: வான் கால் மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், யுனைட்டட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தமையைடுத்து, தனது எதிர்காலம் குறித்து அச்சத்தைக் கொண்டுள்ளதை, அவ்வணியின் முகாமையாளரான லூயிஸ் வான் கால் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது பதவி குறித்து அச்சப்படுகிறாரா எனக் கேட்கப்பட்டபோது, 'ஆம், நிச்சயமாக, ஏனென்றால், முகாமையாளர் பதவியில் நம்பிக்கையென்பது முக்கியமானது" எனத் தெரிவித்தார். அவருக்கான மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, 'வழங்கப்படுமென நினைக்கிறேன், ஆனால் சொல்ல முடியாது. இந்த உலகத்தில், சொல்ல முடியாது. அந்த முடிவு, என்னிடம் இல்லை, பொறுத்திருந்து பார்ப்போ…
-
- 0 replies
- 584 views
-
-
நட்சத்திர வீரர்களுக்கான ரி-20 தொடர்: ஆசிய- உலக பதினொருவர் அணிகள் விபரம் அறிவிப்பு! by : Anojkiyan ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரொன்றை நடத்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாடவுள்ள இரு அணிகளின் விபரங்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதற்கான ஆசிய பதினொருவர் நட்சத்திர அணியில், ஆறு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசியா பதினொருவர் அணியில் பெயரிடப்பட்ட ஆறு இந்திய வீரர்…
-
- 0 replies
- 466 views
-
-
புதிய வகை தலைக் கவசத்தை அணிய மறுக்கும் இங்கிலாந்து அணி தலைவர் புதிய வகை தலைக் கவசத்தை அணிவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர் அலிஸ்டயர் குக் மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து கிரிக்கட் அணி நிர்வாகம் புதிய வகை தலைக் கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. எனினும் பழைய வகை தலைக் கவசம் தமக்கு சௌகரியமாக காணப்படுவதாகவும் புதிய வகை தலைக் கவசத்தை அணியப் போவதில்லை எனவும் குக் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குக் போன்ற முன்னணி வீரர்கள் இவ்வாறு பழைய வகை தலைக் கவசத்தை அணிவது பிழையான முன்னுதாரணத…
-
- 0 replies
- 474 views
-
-
வடக்கின் நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கையில் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சமரின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது நேற்று முன்தினம் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கியது இரண்டு நாட்களைக் கொண்டு நடத்தப்பட்ட டெஸ்ட் கடினப்பந்து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 35.வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்து …
-
- 0 replies
- 272 views
-
-
தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங் இலக்கணங்களை மாற்றி எழுதும் 'கேரி' - இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "அலெக்ஸ் கேரி அபூர்வமானவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்புகளுக்கு நெருக்கமாக நின்று சிறப்பாக செயல்பட்டார். பந்து அவர் கையில் எப்படியோ ஒட்டிக்கொள்கிறது. கொஞ்சம் கூட பயமேயில்லை" பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பின் போது அந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்படிக் கூறியிருந்தார். காரணம், நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், தன்னுடைய பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் கேரி. அதனால், ஸ்மித்…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
ஹமில்டனை முந்தினார் றொஸ்பேர்க் சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸை அபாரமாக வென்ற மெர்சிடிஸ் அணியின் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க், சம்பியன்ஷிப் புள்ளிகளில், சக மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனை முந்தினார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் றிக்கார்டோவிடமிருந்து, இறுதி நேரங்களில் பலத்த போட்டியை எதிர்கொண்டே, றொஸ்பேர்க் வெற்றி பெற்று, ஹமில்டனை விட எட்டு சம்பியன்ஷிப் புள்ளிகளை பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை றிக்கார்டோ பெற்றார். பந்தயத்தினை மூன்றாவதாக ஆரம்பித்த ஹமில்டன், பந்தயத்தின் நடுவினிலே, பெராரி அணியின் பின்லாந்துச் சாரதியான கிமி றைக்கோனனிடம் போட்டியை எதிர்கொண்டு, ஒரு இடம் பின்தங்கி …
-
- 0 replies
- 477 views
-
-
தன் மீது மோசமான வசைமொழியை பிரயோகித்ததாக ஆர்தர் மீது உமர் அக்மல் ஆவேசம் உமர் அக்மல். - படம். | ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ‘வேண்டா மருமகள்’ ஆகிவிட்ட உமர் அக்மல், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோசமான மொழியில் வசைமாரி பொழிந்ததாகவும், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக உமர் அக்மலின் எழுச்சியைக் கண்டித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய உயர் ஆட்டத்திறன் முகாமில் உமர் அக்மல் பெயர் சேர்க்கப்பட்டிர…
-
- 0 replies
- 324 views
-