Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஐந்து பேர் இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு ஐந்து பேர் விண்ணப்பித்துள்ளதாக இடைக்கால இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டீ சில்வா தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஆறாம் திகதிக்கு முதல் விண்ணப்பங்களை அனுப்பிய ஐந்து பேரும் வெளிநாட்டினரே என்று தெரிவித்துள்ள அவர், எனினும் தங்களது பெயர்கள் வெளியிடப்பட்டாது என்ற நம்பிக்கையின் பெயரிலேயே அவர்கள் விண்ணப்பித்திருப்பதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இடைக்கால நிர்வாக சபைக் கூட்டத்தின்போது, விண்ணபித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நடவடிக்கை என ஆராயப்படும் …

  2. 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து வீரர்கள், பாலிவுட் நடிகர் இணைந்து 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் விளையாடினர். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, 30. சமீபத்தில் இந்தியா, நியூசிலாந்தின் சுற்றுலா துாதராக இவர் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து சென்ற இவர், ஒருநாள் காலையில் முன்னாள் கேப்டன் பிளமிங், வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், சைமன் டவுலை அழைத்துக் கொண்டு, அங்குள்ள ‘இசோபெல் கிளேசியர்’ என்ற மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார். கடல் மட்டத்தில் இருந்து 7,600 அடி உயரத்தில் உள்ள இது ஒரு பனிப் பிரதேசம். எப்போதும் பனிப்பொழிவு காணப்படும். இங்கு சென்ற இவர்கள் கிரிக்கெட் ‘மேட்டை’ விரித்து ஆடுகளத்தை தயார் செய்தனர். இருபுறமும்…

  3. யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் சுற்றுப்போட்டி யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், அணிகளை தரம் பிரிப்பதற்கான சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 24 அணிகளுக்கிடையில் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளது. சுற்றுப்போட்டி 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் உள்ளதுடன், அவ்வணிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்படும். இரண்டு போட்டிகளிலும் தோல்வியுறும் அணிகள் சி பிரிவில் உள்வாங்கப்படும். அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி தட்டுப்படும் அணிகள் பி பிரிவாகவும் காலிறுதி வரையில் முன்னேறும் அணிகள் சி பிரிவாகவும் தரப்படுத்தப்படும். இனிவருங்காலங்களில் ய…

  4. இன்றைய மோதல்கள் 2015.10.17 October 17, 2015 பாடசாலைகளுக்கு இடையிலான ரி-20 தொடர் யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ரி-20 துடுப்பாட்டத் தொடரின் அரையிறுதியாட்டங்கள் இன்று சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளன. காலை 8.30மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். மத்திய கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 2மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் யாழ். இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது. வவுனியா உதைபந்தாட்டத் தொடர் வவுனியா உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுக்…

  5. இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிறிஸ்டன் மறுப்பு! இந்திய அணிக்கு மீண்டும் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. அவரை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக தென்ஆப்ரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ்தான் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. தொடர்ந்து அப்போதே கேரி கிறிஸ்டன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்றுக் கொண்டார். அதற்கு பின், கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் பயிற்சியாளராக இருந்தார். உலகக் கோப்பை முடிந்தவுடன் அவரது ஒப்பந்தம் நிற…

  6. தப்புமா சென்னை அணி புதுடில்லி: பிரிமியர் தொடரிலிருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த 2013ல் நடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முத்கல் குழு விசாரித்தது. இக்குழு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது. பிரிமியர் லீக் தொடரிலிருந்து இந்த இரு அணிகளும் நீக்கப்படும் என கூறப்பட்டது. இந்தச் சூழலில் மும்பையில் நாளை பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்படலாம். இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. அடுத்த தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்த்…

  7. வரலாற்றில் முதல் முறையாக ஆண்களுக்கான கிரிக்கட் போட்டியில் பெண் வீராங்கனை கிரிக்கட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த பெண் கிரிக்கட் வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் விளைடுகிறார். இந்த கிரிகட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அடிலெய்டு அணியும் மோதுகின்றது. இந்த கிரிக்கெட் போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீராங்கனையான இந்த பெண், அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்களுக்கான கிளப் அணி சார்பாக இந்த தொடரில் விளையாடுகிறார். கிரிக்கெட் வரலாற்றியில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் ஒருவர் விளையாடுவது இ…

  8. 836 நிமிடங்கள் பேட் செய்து அலிஸ்டர் குக் புதிய சாதனை: 263 ரன்கள் குவித்து பாக். பந்துவீச்சைக் காய்ச்சி எடுத்தார் அபுதாபி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை காய்ச்சிய அலிஸ்டர் குக் 263 ரன்கள் குவிப்பு. | படம்: ஏ.பி. அபுதாபி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் 263 ரன்கள் என்ற மாரத்தான் இன்னிங்ஸை ஆட, இங்கிலாந்து 8 விக். இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானைக் காட்டிலும் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. முழுதும் பேட்டிங்குக்குச் சாதகமான மண் ஆட்டக்களத்தில் அலிஸ்டர் குக் பாகிஸ்தான…

  9. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜாகீர் கான் ஓய்வு ஜாகீர் கான் | கோப்புப் படம்: ஏபி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெறுகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் இன்று பிற்பகல் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாகீர் கானின் ஓய்வு தொடர்பான தகவலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ராஜீவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வசப்படுத்தியவர் ஜாகீர் கான். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், 17 டிவென்டி 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். 2000-ல் டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள…

  10. சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…

  11. மொரின்ஹோவுக்கு தடை, அபராதம் செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவுக்கு, 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையும், கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் விதிக்கப்பட்டுள்ளது. சௌதம்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மொரின்ஹோ, செல்சி அணிக்கான தீர்ப்புகளை வழங்குவதற்கு, போட்டி மத்தியஸ்தர்கள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். போட்டி அதிகாரியொருவர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்ற கருத்துப்படி வெளியிடப்படும் கருத்தெனத் தெரிவித்து, மொரின்ஹோவின் கருத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே, 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவருக்கு ஒரு போட்டித்தடை விதிக்க…

  12. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்க மறுத்த நடுவர் வினீத் குல்கர்னி மேல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி) புகார் செய்துள்ளது. இந்திய தென்ஆபிரிக்க அணிகள் மோதிய ‘ருவென்ரி 20’ போட்டியில் இந்தியா 02 என தொடரை இழந்தது. இதற்கு நடுவர் வினீத் குல்கர்னியின் மோசமான முடிவுதான் காரணமாக அமைந்துவிட்டது. தர்மசாலாவில் நடந்த முதல் ருவென்ரி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதலில் விளையாடி 199 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு டுமினியின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப்போட்டியில் அவர் அக்சார் பட்டேல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால், நடுவர்…

  13. தொடரும் தவறான முடிவுகள் – சிக்கலில் இந்திய நடுவர்! இந்தூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பரிக்க அணியின் தோல்விக்கு, நேற்றைய போட்டியின் நடுவர்களில் ஒருவரான வினீத் குல்கர்னியின் தவறான முடிவுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், அந்த அணியின் பெஹர்டியன் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்று கொண்டிருந்தார். 40 - வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். பந்து மட்டையில் உரசியாதாக நினைத்து நடுவர் குல்கர்னி அவுட் கொடுத்தார். ஆனால் டி.வி. ரீப்ளேவில் பந்து மட்டையில் படாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது. நடுவரின் இந்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஏ…

  14. காதலுக்காக தென்ஆப்ரிக்கா அணியில் விளையாடும் இம்ரான் தாகீர்! தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்று சுழற்பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாகீர், பாகிஸ்தானை சேர்ந்தவர். இந்திய வம்சாவளி பெண்ணை காதலித்து மணந்து கொண்ட இம்ரான் தாகீர், பின்னர் தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றார். கடந்த 1979-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாகீருக்கு தற்போது 36 வயதாகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான்' ஏ 'அணியில் இடம் பெற்றிருந்த தாகீர், தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது சுமையா தில்தர் என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இம்ரான் தாகீர் சுமையாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தென்…

  15. கடைசி 10 இன்னிங்ஸ்களில் பஞ்சராகி கிடக்கும் விராட் கோலி! இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நேற்று நடந்த தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் கோலி ஜொலிக்கவில்லை. நேற்றைய ஆட்டத்திலும் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசியாக அவர் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்து மொத்த ரன்களின் எண்ணிக்கை 191.இதில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்கள் 44 ஆகும். இதற்கு முன் விராட் கோலி 7 இன்னிங்ஸ்கள் வரை அரைசதம் அடிக்காமல் இருந்துள்ளார். இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர…

  16. மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹமில்டன் அண்மிக்கின்றார் 2015-10-15 11:02:54 வார இறு­தியில் நடை­பெற்ற ரஷ்ய குரோன் ப்றீ காரோட்டப் பந்­த­யத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மேர்­சிடெஸ் அணி சாரதி லூயிஸ் ஹமில்டன், மூன்­றா­வது உலக சம்­பியன் பட்­டத்தை நெருங்­கி­யுள்ளார். தனது அணியைச் சேர்ந்த ஜேர்மன் சாரதி நிக்கோ ரொஸ்­பேர்­குக்கு அடுத்­த­தாக இரண்டாம் இடத்­தி­லேயே ஹமில்டன் காரை செலுத்­திக்­கொண்­டி­ருந்தார். ஆனால் காரில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக ரொஸ்பேர்க் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்க நேரிட ஹமில்டன் இல­கு­வாக வெற்­றி­பெற்றார். இப் போட்­டியை ஒரு மணித்­தி­யாலம் 37 நிமி­டங்கள் 11.024 செக்­கன்­களில் ஹமில்டன் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார். முன்னாள் உலக சம்­…

  17. 2016 ஐரோப்பிய கிண்ண தகுதிகாண் சுற்று நிறைவு 100 வீத வெற்றியுடன் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து 2015-10-15 10:54:18 பிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு இப்போதைக்கு 19 நாடுகள் தகுதிபெற்றுள்ளன. போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடென்ற வகையில் பிரான்ஸ் நேரடித் தகுதியைக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற தகுதிகாண் போட்டிகளின் அடிப்படையில் குழு ஏயிலிருந்து ஐஸ்லாந்து, செக் குடியரசு, துருக்கி, குழு பியிலிருந்து பெல்ஜியம், வேல்ஸ், குழு சியிலிருந்து ஸ்பெய்ன், ஸ்லோவாக்கியா, குழு டியிலிருந்து ஜேர்மனி, போலந்து, குழு ஈ யிலிருந்து இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து, குழு எவ்விலிருந்து வட அயர்லாந்து, ருமேனியா, …

  18. யாரென்று தெரிகிறதா இவர் ‘தீ’ என்று புரிகிறதா...! இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பை வென்று தந்த தோனி சமீப காலமாக தடுமாறினார். உடனே ‘டுவென்டி–20’, ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து இவரை துாக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதை கேட்டு ‘கூலா’க இருந்த தோனி, நேற்று ‘பேட்’ மூலம் பதிலடி தந்தார். 126 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை, தனது அசத்தலான பேட்டிங்கினால் மீட்டு எடுத்தார். எதிரணிக்கு ‘நெருப்பாக’ மாறிய இவர், 86 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி சேர்த்து 92 ரன்கள் குவித்தார். அதிகமான விமர்சனங்கள் காரணமாக வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தனது ‘கேட்ச்’ மூலம் தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட்டான போதெல்லாம் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த…

  19. பிக்ஸ் செய்ய கெய்ன்ஸ் பணித்தார்: வின்சென்ட் தனது அணித்தலைவராக இருந்த கிறிஸ் கெய்ன்ஸின் நேரடி உத்தரவின் கீழேயே, போட்டிகளை நிர்ணயம் செய்ததாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லூ வின்சென்ட் வாக்குமூலமளித்துள்ளார். இலண்டனில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தின் போது கிறிஸ் கெய்ன்ஸ் சேர்க்கப்படாமைக்கு, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) தொடரில் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டமையே காரணமென, அப்போதைய ஐ.பி.எல் பணிப்பாளரான லலித் மோடி பதிவிட்ட டுவீட், தனது நற்பெயரைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்து, கிறிஸ் கெய்ன்ஸ் 2012ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்து, நட்டஈடு பெற்றிருந்தார். எனினும், கிறிஸ்…

  20. யூரோ 2016 : பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி அதிர்ச்சியுடன் வெளியேற்றம்! பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை. நேற்று செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, நெதர்லாந்தின் யூரோ கனவு முடிவுக்கு வந்தது. தகுதி சுற்றில் ' ஏ ' பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி செக்குடியரசு அணியை எதிர்கொண்டது. இதே பிரிவில் இடம் பெற்றிருந்த துருக்கி அணி மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளையும் துருக்கி அணி 15 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10வது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வெற்றி பெற்று துருக்கி அணி தோல்வியடைந்தால் நெதர்லாந்…

  21. 400 மீற்றர் தடை தாண்டல் மத்திக்கு வெற்றி October 14, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட தடகளத்தொடரில் தடைதாண்டலில் யாழ். மத்திய கல்லூரிக்கு வர்ணச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 400மீற்றர் தடைதாண்டலில்; யாழ். மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்ததே. செந்தூர்ஜன் 56.95 செக்கன்களில் தடைகளைத்தாண்டி வர்ணச் சான்றிதழைப் பெற்றார். http://www.onlineuthayan.com/sports/?p=2051

  22. தோனி–கோஹ்லி சண்டை சரியா இந்துார்: கேப்டன் தோனி, கோஹ்லி இடையிலான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கான்பூர் போட்டிக்கான ‘பேட்டிங் ஆர்டர்’ தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதில் இருந்து வீரர்கள் மத்தியில் மோதல் போக்கு உருவானது. கேப்டன் தோனிக்கு எதிராக கோஹ்லியை கொம்பு சீவி விட்டார். டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்ட பின், இது இன்னும் அதிகமானது. தோனியின் பேச்சுக்கு வீரர்கள், நிர்வாகத்திடம் மதிப்பில்லாமல் போனது. இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் தோனியை ரகானே பகைத்துக் கொண்டார். ‘இவருக்கு பேட்டிங்கே வரவில்லை’ என, வெளிப்படையாக சாடினார் தோனி. சமீபத்திய தென் ஆப்ரிக்க அண…

  23. பிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப்பு முத்து' பீலே! ' கருப்பு முத்து 'என்ற செல்லப்பெயரும் எடிசன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர் கொண்ட பீலே 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி பிரேசிலில் உள்ள ட்ரஸ் கராகஸ் என்ற சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தை டோன்டின்ஹோ ஒரு தொழில் முறை கால்பந்தாட்டக்காரர். இதனால் பீலேவின் ரத்தத்திலேயே கால்பந்தும் கலந்திருந்தது. கடந்த 1934ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய பிரிட்டோவின் கண்களில் இளம் வயது பீலே தென்பட, அவரை பிரேசில் நாட்டின் தொழில் நகரமான சான்டோசுக்கு அழைத்து வந்தார். சான்டோஸ் எப்.சி என்ற புகழ் பெற்ற கால்பந்து அணி இங்குதான் இயங்கி வந்தது. அந்த அணியின் இயக்குனர்களை சந்தித்த பிரிட்…

  24. புதிய இலங்கைக்கான புதிய சவால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜாம்பவான்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தனவின் பின்னரான புதிய அணியாக, இக்குழாமிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள அணி அமையவுள்ளது. அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், உப தலைவராக லஹிரு திரிமான்ன தொடர்ந்தும் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியொன்றில் அவர் சதத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆகியுள்ள போதிலும், அவரது இறுதி 26 இனிங்ஸ்களில் (13 டெஸ்ட்கள்) இரண்டே இரண்டு அரைச்சதங்களுடன் 19.13 என்ற சராசரியைக் கொண்டிருக்கின்ற போதிலும், அவர் மீதான நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. லஹிரு திர…

  25. சுனில் கவாஸ்கரை ஒப்பிட்டு என்னை இம்ரான் கடிந்து கொண்டார்: ரமீஸ் ராஜாவின் அனுபவப் பகிர்வு டிசம்பர் 13, 1981. பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிராக 172 ரன்களை குவித்த சுனில் கவாஸ்கர் இயன் போத்தம் பந்தை விளாசும் காட்சி. | கோப்புப் படம். இம்ரான் கான் எப்போதும் சுனில் கவாஸ்கர் ஆட்டத்தை பெரிதும் மதிப்பவர் என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, சுவையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 1981 என்று நினைக்கிறேன், விவ் ரிச்சர்ட்ஸ் தனது உச்சகட்ட பேட்டிங் நிலையில் இருந்த காலம். உலகில் அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது பெரிய சிக்சர்களால் மைதானம் நெடுக சிதற அடித்துக் கொண்டிருந்தார் வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.