விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…
-
- 0 replies
- 204 views
-
-
மொரின்ஹோவுக்கு தடை, அபராதம் செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவுக்கு, 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையும், கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் விதிக்கப்பட்டுள்ளது. சௌதம்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மொரின்ஹோ, செல்சி அணிக்கான தீர்ப்புகளை வழங்குவதற்கு, போட்டி மத்தியஸ்தர்கள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். போட்டி அதிகாரியொருவர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்ற கருத்துப்படி வெளியிடப்படும் கருத்தெனத் தெரிவித்து, மொரின்ஹோவின் கருத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே, 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவருக்கு ஒரு போட்டித்தடை விதிக்க…
-
- 0 replies
- 234 views
-
-
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்க மறுத்த நடுவர் வினீத் குல்கர்னி மேல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி) புகார் செய்துள்ளது. இந்திய தென்ஆபிரிக்க அணிகள் மோதிய ‘ருவென்ரி 20’ போட்டியில் இந்தியா 02 என தொடரை இழந்தது. இதற்கு நடுவர் வினீத் குல்கர்னியின் மோசமான முடிவுதான் காரணமாக அமைந்துவிட்டது. தர்மசாலாவில் நடந்த முதல் ருவென்ரி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதலில் விளையாடி 199 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு டுமினியின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப்போட்டியில் அவர் அக்சார் பட்டேல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால், நடுவர்…
-
- 2 replies
- 290 views
-
-
தொடரும் தவறான முடிவுகள் – சிக்கலில் இந்திய நடுவர்! இந்தூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பரிக்க அணியின் தோல்விக்கு, நேற்றைய போட்டியின் நடுவர்களில் ஒருவரான வினீத் குல்கர்னியின் தவறான முடிவுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், அந்த அணியின் பெஹர்டியன் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்று கொண்டிருந்தார். 40 - வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். பந்து மட்டையில் உரசியாதாக நினைத்து நடுவர் குல்கர்னி அவுட் கொடுத்தார். ஆனால் டி.வி. ரீப்ளேவில் பந்து மட்டையில் படாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது. நடுவரின் இந்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஏ…
-
- 0 replies
- 220 views
-
-
காதலுக்காக தென்ஆப்ரிக்கா அணியில் விளையாடும் இம்ரான் தாகீர்! தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்று சுழற்பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாகீர், பாகிஸ்தானை சேர்ந்தவர். இந்திய வம்சாவளி பெண்ணை காதலித்து மணந்து கொண்ட இம்ரான் தாகீர், பின்னர் தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றார். கடந்த 1979-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாகீருக்கு தற்போது 36 வயதாகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான்' ஏ 'அணியில் இடம் பெற்றிருந்த தாகீர், தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது சுமையா தில்தர் என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இம்ரான் தாகீர் சுமையாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தென்…
-
- 0 replies
- 248 views
-
-
கடைசி 10 இன்னிங்ஸ்களில் பஞ்சராகி கிடக்கும் விராட் கோலி! இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நேற்று நடந்த தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் கோலி ஜொலிக்கவில்லை. நேற்றைய ஆட்டத்திலும் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசியாக அவர் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்து மொத்த ரன்களின் எண்ணிக்கை 191.இதில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்கள் 44 ஆகும். இதற்கு முன் விராட் கோலி 7 இன்னிங்ஸ்கள் வரை அரைசதம் அடிக்காமல் இருந்துள்ளார். இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர…
-
- 0 replies
- 267 views
-
-
மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹமில்டன் அண்மிக்கின்றார் 2015-10-15 11:02:54 வார இறுதியில் நடைபெற்ற ரஷ்ய குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மேர்சிடெஸ் அணி சாரதி லூயிஸ் ஹமில்டன், மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ளார். தனது அணியைச் சேர்ந்த ஜேர்மன் சாரதி நிக்கோ ரொஸ்பேர்குக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்திலேயே ஹமில்டன் காரை செலுத்திக்கொண்டிருந்தார். ஆனால் காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரொஸ்பேர்க் போட்டியிலிருந்து ஒதுங்க நேரிட ஹமில்டன் இலகுவாக வெற்றிபெற்றார். இப் போட்டியை ஒரு மணித்தியாலம் 37 நிமிடங்கள் 11.024 செக்கன்களில் ஹமில்டன் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார். முன்னாள் உலக சம்…
-
- 0 replies
- 340 views
-
-
2016 ஐரோப்பிய கிண்ண தகுதிகாண் சுற்று நிறைவு 100 வீத வெற்றியுடன் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து 2015-10-15 10:54:18 பிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு இப்போதைக்கு 19 நாடுகள் தகுதிபெற்றுள்ளன. போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடென்ற வகையில் பிரான்ஸ் நேரடித் தகுதியைக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற தகுதிகாண் போட்டிகளின் அடிப்படையில் குழு ஏயிலிருந்து ஐஸ்லாந்து, செக் குடியரசு, துருக்கி, குழு பியிலிருந்து பெல்ஜியம், வேல்ஸ், குழு சியிலிருந்து ஸ்பெய்ன், ஸ்லோவாக்கியா, குழு டியிலிருந்து ஜேர்மனி, போலந்து, குழு ஈ யிலிருந்து இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து, குழு எவ்விலிருந்து வட அயர்லாந்து, ருமேனியா, …
-
- 0 replies
- 242 views
-
-
யாரென்று தெரிகிறதா இவர் ‘தீ’ என்று புரிகிறதா...! இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பை வென்று தந்த தோனி சமீப காலமாக தடுமாறினார். உடனே ‘டுவென்டி–20’, ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து இவரை துாக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதை கேட்டு ‘கூலா’க இருந்த தோனி, நேற்று ‘பேட்’ மூலம் பதிலடி தந்தார். 126 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை, தனது அசத்தலான பேட்டிங்கினால் மீட்டு எடுத்தார். எதிரணிக்கு ‘நெருப்பாக’ மாறிய இவர், 86 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி சேர்த்து 92 ரன்கள் குவித்தார். அதிகமான விமர்சனங்கள் காரணமாக வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தனது ‘கேட்ச்’ மூலம் தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட்டான போதெல்லாம் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த…
-
- 0 replies
- 376 views
-
-
பிக்ஸ் செய்ய கெய்ன்ஸ் பணித்தார்: வின்சென்ட் தனது அணித்தலைவராக இருந்த கிறிஸ் கெய்ன்ஸின் நேரடி உத்தரவின் கீழேயே, போட்டிகளை நிர்ணயம் செய்ததாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லூ வின்சென்ட் வாக்குமூலமளித்துள்ளார். இலண்டனில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தின் போது கிறிஸ் கெய்ன்ஸ் சேர்க்கப்படாமைக்கு, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) தொடரில் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டமையே காரணமென, அப்போதைய ஐ.பி.எல் பணிப்பாளரான லலித் மோடி பதிவிட்ட டுவீட், தனது நற்பெயரைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்து, கிறிஸ் கெய்ன்ஸ் 2012ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்து, நட்டஈடு பெற்றிருந்தார். எனினும், கிறிஸ்…
-
- 0 replies
- 372 views
-
-
யூரோ 2016 : பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி அதிர்ச்சியுடன் வெளியேற்றம்! பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை. நேற்று செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, நெதர்லாந்தின் யூரோ கனவு முடிவுக்கு வந்தது. தகுதி சுற்றில் ' ஏ ' பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி செக்குடியரசு அணியை எதிர்கொண்டது. இதே பிரிவில் இடம் பெற்றிருந்த துருக்கி அணி மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளையும் துருக்கி அணி 15 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10வது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வெற்றி பெற்று துருக்கி அணி தோல்வியடைந்தால் நெதர்லாந்…
-
- 1 reply
- 247 views
-
-
400 மீற்றர் தடை தாண்டல் மத்திக்கு வெற்றி October 14, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட தடகளத்தொடரில் தடைதாண்டலில் யாழ். மத்திய கல்லூரிக்கு வர்ணச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 400மீற்றர் தடைதாண்டலில்; யாழ். மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்ததே. செந்தூர்ஜன் 56.95 செக்கன்களில் தடைகளைத்தாண்டி வர்ணச் சான்றிதழைப் பெற்றார். http://www.onlineuthayan.com/sports/?p=2051
-
- 0 replies
- 338 views
-
-
தோனி–கோஹ்லி சண்டை சரியா இந்துார்: கேப்டன் தோனி, கோஹ்லி இடையிலான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கான்பூர் போட்டிக்கான ‘பேட்டிங் ஆர்டர்’ தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதில் இருந்து வீரர்கள் மத்தியில் மோதல் போக்கு உருவானது. கேப்டன் தோனிக்கு எதிராக கோஹ்லியை கொம்பு சீவி விட்டார். டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்ட பின், இது இன்னும் அதிகமானது. தோனியின் பேச்சுக்கு வீரர்கள், நிர்வாகத்திடம் மதிப்பில்லாமல் போனது. இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் தோனியை ரகானே பகைத்துக் கொண்டார். ‘இவருக்கு பேட்டிங்கே வரவில்லை’ என, வெளிப்படையாக சாடினார் தோனி. சமீபத்திய தென் ஆப்ரிக்க அண…
-
- 0 replies
- 402 views
-
-
பிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப்பு முத்து' பீலே! ' கருப்பு முத்து 'என்ற செல்லப்பெயரும் எடிசன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர் கொண்ட பீலே 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி பிரேசிலில் உள்ள ட்ரஸ் கராகஸ் என்ற சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தை டோன்டின்ஹோ ஒரு தொழில் முறை கால்பந்தாட்டக்காரர். இதனால் பீலேவின் ரத்தத்திலேயே கால்பந்தும் கலந்திருந்தது. கடந்த 1934ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய பிரிட்டோவின் கண்களில் இளம் வயது பீலே தென்பட, அவரை பிரேசில் நாட்டின் தொழில் நகரமான சான்டோசுக்கு அழைத்து வந்தார். சான்டோஸ் எப்.சி என்ற புகழ் பெற்ற கால்பந்து அணி இங்குதான் இயங்கி வந்தது. அந்த அணியின் இயக்குனர்களை சந்தித்த பிரிட்…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதிய இலங்கைக்கான புதிய சவால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜாம்பவான்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தனவின் பின்னரான புதிய அணியாக, இக்குழாமிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள அணி அமையவுள்ளது. அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், உப தலைவராக லஹிரு திரிமான்ன தொடர்ந்தும் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியொன்றில் அவர் சதத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆகியுள்ள போதிலும், அவரது இறுதி 26 இனிங்ஸ்களில் (13 டெஸ்ட்கள்) இரண்டே இரண்டு அரைச்சதங்களுடன் 19.13 என்ற சராசரியைக் கொண்டிருக்கின்ற போதிலும், அவர் மீதான நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. லஹிரு திர…
-
- 0 replies
- 257 views
-
-
சுனில் கவாஸ்கரை ஒப்பிட்டு என்னை இம்ரான் கடிந்து கொண்டார்: ரமீஸ் ராஜாவின் அனுபவப் பகிர்வு டிசம்பர் 13, 1981. பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிராக 172 ரன்களை குவித்த சுனில் கவாஸ்கர் இயன் போத்தம் பந்தை விளாசும் காட்சி. | கோப்புப் படம். இம்ரான் கான் எப்போதும் சுனில் கவாஸ்கர் ஆட்டத்தை பெரிதும் மதிப்பவர் என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, சுவையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 1981 என்று நினைக்கிறேன், விவ் ரிச்சர்ட்ஸ் தனது உச்சகட்ட பேட்டிங் நிலையில் இருந்த காலம். உலகில் அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது பெரிய சிக்சர்களால் மைதானம் நெடுக சிதற அடித்துக் கொண்டிருந்தார் வி…
-
- 0 replies
- 207 views
-
-
வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியது மகாஜனக்கல்லூரி October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய் வன்மைப் போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 15வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனக்கல்லூரியின் மாணவி ச.செரீனா 1.49மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். http://www.onlineuthayan.com/sports/?p=2025
-
- 1 reply
- 339 views
-
-
22 வருட சாதனையை முறியடிப்பாரா யூனுஸ்கான் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் அபூதாபியில் இன்று ஆமை்பமாகிறது. இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனுஸ்கான் மேலும் 19 ஓட்டங்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கடந்த 22 ஆண்டுகளாக தக்க வைத்து இருக்கும் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் (124…
-
- 0 replies
- 314 views
-
-
தொடர்ச்சியான தோல்விகளால் முற்றுகிறது நெருக்கடி: வெற்றியை தாரை வார்க்கும் தோனி இந்திய அணி கிரிக்கெட் அணியை கடந்த சில ஆண்டுகளாக புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற கேப்டன் தோனிக்கு தற்போது போதாத காலம். 34 வயதான தோனி கடந்த 2004 டிசம்பர் 1ம் தேதி சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிர டியால் புகழ்பெற்ற அவர் 2007ல் டி20 உலககோப்பையின் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தார். 2007 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் ஆனார் தோனி. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தார். இதற்கிடையே கும்ப்ளேயின் ஓய்வை தொடர்ந்து 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்டு அணிக்க…
-
- 0 replies
- 277 views
-
-
அருணோதயா வீரன் புதிய சாதனை October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்று வரும் தடகளத் தொடரில் ஓர் அங்கமான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரன் என்.நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனை யைப் பதிவு செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தடகளத்தொடரில் மாதம்பை சேன நாயக்க மத்திய மகா வித்தியாலய வீரன் மதுரங்கா பெர்னாந்துவினால் 4 மீற்றர் உயரம் பாய்ந்து நிலைநாட்டப்பட்ட சாதனையை நடப்பு வருடத்தில் ஜொய்சன் 4.21 மீற்றர் உயரம் பாயந்து முறிய டித்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2020
-
- 0 replies
- 468 views
-
-
யூரோ 2016க்கு தகுதி பெற்றது இத்தாலி அஸார்பைஜானுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, குழு எச் இலிருந்து யூரோ 2016க்கு நேரடியாக தானாக தகுதிபெறும் ஒரு அணியாக மாறியுள்ளது. 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இத்தாலி அணி, குழுநிலைப்போட்டிகளில் ஒரு தோல்வியையும் தளுவாது, தனது ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றியும், மூன்று போட்டிகளில் சமநிலையாகவும் முடித்துக் கொண்டது. இந்நிலையில் இத்தாலி அணி 21 புள்ளிகளையும், நோர்வே 19 புள்ளிகளையும், குரோஷியா 14 புள்ளியகளையும் பெற்றிருந்தன. - See more at: http://www.tamilmirror.lk/156250#sthash.GpgsYaql.dpuf
-
- 0 replies
- 390 views
-
-
தேசியமட்ட கோலூன்றிப்பாய்தலில் தமிழ் மாணவிகள் அசத்தல் October 12, 2015 தேசியமட்ட கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் கணிசமான பதக்கங்கள் யாழ். மாவட்டத்துக்கு கிடைத்துள்ளன. 21வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த மேரி பெளசினா 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், எம்.கமலினி 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.அனித்தா 3.2 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். அனித்தா கடந்த வருடம் நடை பெற்ற கோலூன்றிப் பாய்தலில் 3.3 மீற்றர் உயரம் பாய்ந்து தேசியமட்ட சாதனையைச் சமப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/spo…
-
- 1 reply
- 370 views
-
-
கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வருந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இன்று 07 காலை ஒன்பது மணிக்க இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம்,போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி இன்றைய முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், …
-
- 11 replies
- 1.4k views
-
-
ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் மெர்சிடிஸ் அணியின் ஃபார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றிபெற்றுள்ளார். ஸோச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பல விபத்துக்களும் நடந்துள்ளன. ஹாமில்டனின் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த சக போட்டியாளர் நிகோ ரோஸ்பெர்க், காரின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பந்தயத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்துக்கு வந்தார். ஃபோர்ஸ் இந்தியா அணியைச் சேர்ந்த செர்கியோ பெரெஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றார். ஸ்பெயின் ஃபார்முலா ஒன் வீரர் கார்லோஸ் செயின்ஸ், கடந்த சனியன்று பயிற்சியின்போது எதிர்நோக்கியிருந்த விபத்துக்குப் பின்னரும் இன்றைய பந்தயத்தில் கலந்து…
-
- 0 replies
- 898 views
-
-
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சு: இங்கிலாந்து கடும் அச்சம் ரூட் மற்றும் குக். | கோப்புப் படம் கடந்த முறை யு.ஏ.இ.-யில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்க் தொடரில் 3-0 என்று இங்கிலாந்து உதை வாங்கியதற்கு பாகிஸ்தான் ஸ்பின்னர்களே காரணம் என்பதால் இம்முறையும் இங்கிலாந்து பாக். ஸ்பின் பந்து வீச்சு குறித்து கடும் அச்சம் கொண்டுள்ளது. வரும் செவ்வாயன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா, மற்றும் சுல்பிகர் பாபர் ஆகியோர் குறித்து இங்கிலாந்து கேட்பன் குக் அச்சம் வெளியிட்டுள்ளார். 2012-ம் ஆண்டு தெஸ்ட் தொடரின் போது நம்பர் 1 டெஸ்ட் அணியாக இங்கிலாந்தை பாகிஸ்தான் 3-0 என்று வீழ்த்தி ஒன்றுமில்லாமல் செய்தது. அந்தத் தொடரில் சயீத் அஜ்மல் 24 விக்கெட்டுகளையும், அப்துல் ரெ…
-
- 0 replies
- 267 views
-