விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஓய்வு பற்றி மனம் திறக்கும் மிஸ்பா உல் ஹக் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 13-ம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு, 41 வயதான மிஸ்பா உல் ஹக் தலைவராக இருந்து வருகிறார். இவர் இந்தியாவுடன் ஒரு தொடர் விளையாடிய பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இநதியாவுடன் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கும் தன்னுடைய தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 380 views
-
-
முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்டுக்கான முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பிக்கிறது. 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆவது முறையாக நடைபெறும் முரளி ஹார்மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் பங்குபற்றுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் வடக்குப் பகுதியிலுள்ள மைதானங்களில் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும். யாழ்ப்பாணம், ஒட்டுச்சுட்டான், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேச மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, மலியதேவ கல்லூரி, மொனராகலை ஆகிய அணிகள…
-
- 1 reply
- 270 views
-
-
டேல் ஸ்டெயினின் 'பேபிஸ் டே அவுட்'! (வீடியோ) தென்ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிடம், ஒரு குழந்தையை கொடுத்து 24 மணி நேரம் பார்த்துக்க சொன்னால் என்ன செய்வார்? இதற்காக நியூ பேலன்ஸ் தென்ஆப்ரிக்கா என்ற காலணி நிறுவனம் ஒரு ஏற்பாடு செய்தது. டேல் ஸ்டெயினை ஒன்றரை வயது குழந்தையுடன் ஒருநாள் பொழுதை கழிக்க வைத்தது. ஆனால் அந்த குழந்தையை டேல் ஸ்டெயினால் சரிவர கவனிக்க முடியவில்லை. குழந்தையுடன் ஸ்டெயின் போராடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. http://www.vikatan.com/news/article.php?aid=53208
-
- 0 replies
- 219 views
-
-
முன்னதாக ஆரம்பிக்கும் போர்மியுலா வன் 2016 பருவகாலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது போன்று இல்லாமல், அடுத்த 2016ஆம் ஆண்டு பருவகாலம் இரண்டு வாரங்கள் முன்பதாக அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. மெல்போர்ன் ஓட்டப்பந்தயம் முன்னர் எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி ஆரம்பிப்பதாய் இருந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், எதிர்வரும் வருடமே முன்னதாய் ஆரம்பிக்கவுள்ளது. எனினும் ஒரு வருட காலத்தில் சாதனை ரீதியாக 21 பந்தயங்களை நடாத்தும் பொருட்டு, நெருக்கடியான அட்டவணையைத் தயாரித்ததாக அணிகள் முறைப்பாடு செய்ததையடுத்தே, பருவகாலத்தின் ஆரம்பம் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பஹ்ரெயின், சீனா, ரஷ்யாவில் இரு வார இடைவெளிகளில் பந்தயங்கள் இ…
-
- 0 replies
- 217 views
-
-
சென்றல் டிஸ்றிக்கில் ஜெயவர்த்தன Commentsநியூசிலாந்தின் உள்ளூர் இருபது-20 போட்டித்தொடரான ஜோர்ஜி பை சுப்பர் ஸ்மாஷில் இலங்கையணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ள முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்த்தன சென்றல் டிஸ்றிக்ஸ் அணிக்காக பங்கேற்கவுள்ளார். http://tamil.wisdensrilanka.lk/article/2061
-
- 0 replies
- 329 views
-
-
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். | கோப்புப் படம்: பிடிஐ. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதலில் வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கு மட்டும் இன்சமாம் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஆப்கான் கிரிக்கெட் சங்க தலைமைச் செயலதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவிக்கும் போது, “இன்சமாம் ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்” என்று கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக இன்சமாம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இன்று வரை அது குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் எடுக்க…
-
- 4 replies
- 383 views
-
-
மட்டையிலும் பந்திலும் மனிதத்தை இழக்கக்கூடாது -கப்டன் கூல் அட்வைஸ் October 03, 2015 ஆக்ரோசமாக விளையாடலாம். ஆனால், அந்த ஆக்ரோசம் தவறான நடத்தைக்குக் கொண்டு சென்று விடக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் டோனி. இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோக்லி, இயக்குநர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்கள் எனப்பலரும் ஆக்ரோசம் தொடர்பாக எதிர்மாறான கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 தொடர் ஆரம்ப மாகும் முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து டோனி ஆக்ரோசம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். டோனி மேலும் தெரிவித்ததாவது – ஆக்ரோசம் என்பதற்கு சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடலளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச் சிறந்த வ…
-
- 0 replies
- 432 views
-
-
செய்தித் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனது கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம். எனினும் ஓய்வு பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். ------------------------------------------- முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதி ரான தொடருக்காக அவர் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட் டிருக்கிறார். ------------------------------------------- ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஒடிசா அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட…
-
- 0 replies
- 318 views
-
-
இந்தியா, தென் ஆபிரிக்க தொடர் முன்னோட்டம் இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பலமான இரண்டு அணிகள் மோதும் தொடர் என்பதினால் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. 3 டுவென்டி டுவென்டி போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ளது. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு நல்ல பலப் பரீட்சைக்கான தொடராக இது அமையவுள்ளது. இந்தியா அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது சொந்த நாட்டில் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் சொந்த நாட்டில் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது. சொந்த நாட்டில் புலிகளாகவும், வெளிநாடுகளில் எலிகலாகவும் திகழும் இந்திய அணிக்கு க…
-
- 0 replies
- 416 views
-
-
இன்று இரவு 7 மணிக்கு கேப்டன் தோனி...! இந்திய அணியின் கேப்டன் தோனி 50 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை இன்று பெறப் போகிறார். உலகிலேயே இத்தகையை சாதனையை எட்டும் முதல் கேப்டன் தோனிதான். தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேசத்தில் உள்ள எழில்கொஞ்சும் தரம்சாலாவில் இன்று இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் கேப்டன் தோனியின் 50வது டி20 போட்டி ஆகும். இந்த பட்டியலில் அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 41 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி 2வது இடத்தை பிடிக்கிறார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி 39 போட்டிகளுக்கு கேப்டனாக பண…
-
- 0 replies
- 263 views
-
-
இங்கிலாந்து, ஆஸி ஒ.ச. போட்டித் தொடர்: மீள் பார்வை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. உலக சம்பியன் அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இரண்டு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று ஐந்தாவது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தாம் உலகச்சம்பியன் என்பதனை நிரூபித்துவிட்டனர். ஆனாலும் இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இது பெரிய தோல்வியாக கருதமுடியாது. உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து…
-
- 0 replies
- 296 views
-
-
யாழில் கரம் சுற்றுப்போட்டி யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டி நாளையும் நாளைமறுதினமும் யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகில் இடம்பெறவுள்ளது. இச் சுற்றுப்போட்டியை யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் உடற்கல்வி அலகும் இணைந்து நடத்தவுள்ளன. இப்போட்டிக்கு ஹரிகரன் பிறின்டேர்ஸ் அனுசரணை வழங்குகின்றனர். முதல்நாள் போட்டிகள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும். இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய் வலி தென்மேற்குப் பிரதேச சபை செயலாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கரம் பெண்கள் அணியின் தலைவியுமாகிய திருமதி. ஜெயந்தா சோமராஜ் கலந்து சிறப்பி…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை வந்தது மேற்கிந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இன்று கொழும்பை வந்தடைந்தனர். இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 2 இருபது20 போட்டிகளில் மேற்கிந்திய அணி மோதவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (படம்:ஏ.எவ்.பி) - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12437#sthash.CeKM5ZhZ.dpuf
-
- 1 reply
- 279 views
-
-
கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கிரிக்கெட்டில் களத்தடுப்புச் சம்பந்தமான விதியொன்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள , கிரிக்கெட் விதிகளுக்குப் பொறுப்பான அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, துடுப்பாட்ட வீரரொருவர் தான் பந்தை அடிக்கப் போகும் திசை குறித்துத் தெளிவான சமிக்ஞைகளை மேற்கொண்டால், விக்கெட் காப்பாளர் தவிர்ந்த ஏனைய களத்தடுப்பாளர்கள், பந்துசெல்லவுள்ள திசையை நோக்கிக் கணிசமானளவு நகர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாவட் அலாமின் பிடியொன்றைப் பிடித்த போது, இது தொடர்பான விவாதம் ஏற்பட்டு, சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நடைமுறைகளில் இம்மாற்றம் ஏற்பட்டது. அதுவே, தற்…
-
- 0 replies
- 299 views
-
-
செல்சி, ஆர்சனல் தோல்வி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது. ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது. 65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற …
-
- 0 replies
- 450 views
-
-
கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை! ரியல்மாட்ரிட் ஸ்டிரைக்கர் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி மால்மோ அணியை எதிர்கொண்டது. ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த இந்த போட்டியில் 28வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கும் 500வது கோல் ஆகும். இதற்கு ரொனால்டோவுக்கு 753 போட்டிகள் தேவைப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 117 போட்டியிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் 81வது கோலாகவும் இது அமைந்தது. பிற்பாதி ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒர…
-
- 0 replies
- 231 views
-
-
2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் 30 ம் திகதியான இன்றைய நாள் வரையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கின்ற அணிகள் இதற்கு தேர்வாகியிருக்கின்றன. மேற்கிந்திய தீவுகள் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. Rank Team Points 1 Australia 127 2 India 115 3 South Africa 110 4 New Zealand 109 5 Sri Lanka 103 6 England 100 7 Bangladesh 96 8 Pakistan 90 9 West Indies 88 10 Ireland 49 11 Zimbabwe 45 12 Afghanistan 41 http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017
-
- 1 reply
- 381 views
-
-
2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை இலங்கை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு கெய்ல் இல்லை, சுனில் நரைன் மீண்டும் தேர்வு. | படம்: ஏ.எஃப்.பி. இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகி…
-
- 0 replies
- 227 views
-
-
செய்தித் துளிகள் - கருத்து தெரிவிக்க மறுத்த கங்குலி கங்குலி. | கோப்புப் படம். துருக்கியின் அக்ரி நகரில் நடைபெற்று வரும் அக்ரி கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா வின் சாகேத் மைனேனி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முதல் சுற்றில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் செர்பியாவின் மதிஜா பெகோட்டிக்கை தோற் கடித்தார். ------------------------------------------------- சர்வதேச கால்பந்து சம்மேள னத்தின் (பிஃபா) முன்னாள் தலை வரான ஜேக் வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச விளையாட்டு நெறிமுறை தீர்ப்பாயம். வார்னர் இனிமேல் கால்பந்து தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபட முடியாது. ------------------------------------------------- பிசிசிஐயின் தலைவராக வரவுள்ள சஷ…
-
- 0 replies
- 312 views
-
-
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கராத்தே உட்பட 5 விளையாட்டுகளை இணைக்க ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு சிபாரிசு செய்துள்ளது. 2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோவில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டடு ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அனுமதியை பொறுத்துதான் புதிய போட்டிகள் இடம் பெறுவது இறுதி செய்யப்படும். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால், கராத்தே, போர்ட் ஸ்கேட்டிங், மலையேற்…
-
- 0 replies
- 195 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இணைகிறார் சமிந்தவாஸ் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்ளிட்ட பலர் பயிற்சியாளர்களாக இணைய உள்ளனர். பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இலங்கையின் முன் னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், மேற்கிந்திய தீவுகளின் ஜோர்டன் கிரினிஜ், இந்தியாவின் முன்னாள் சகலதுறை வீரர் ரொபின் சிங் உட்பட 15 பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் தலைவர் நஜம் சேத்தி கூறுகையில், 15 பயிற்சியாளர்கள் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில பயிற்சியாளர்களை ஒப்பந்தம்…
-
- 0 replies
- 296 views
-
-
மத்திய கல்லூரி அபார வெற்றி! September 30, 2015 யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையே நடத்தி வரும் ரி-20 தொடரில் கடந்த சனிக்கிழமை சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரி அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 170 ஒட்டங் களைப் பெற்றனர். அதிகபட்சமாக டினோசன் 58 ஓட்டங்களையும், பிரியலக்சன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி சார்பில் சண்முகன், அஜந்தன், பிரசாந், மிதுசன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர். 171 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்கு துடுப…
-
- 0 replies
- 329 views
-
-
கால்பந்து வீரரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நடுவர்! (வீடியோ) பேளோ ஹாரிஜொந்தே: பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ஒருவரை, நடுவர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டிலுள்ள பேளோ ஹாரிஜொந்தே அருகேயுள்ள புருமாண்டினோவில், உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், அமெச்சூர் புருமாண்டினோ அணியும், அமண்டஸ் டா பேளோ அணியும் மோதின. கேப்ரில் முர்தா என்பவர் நடுவராக இருந்தார். அப்போது அமண்டஸ் டா பேளோ அணி வீரர் ஒருவருக்கும், நடுவர் கேப்ரில் முர்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடுவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, கால்பந்து வீரரை மிரட்டினார். மேலும், அந்த வீரரை உதைத்து தள்ளி கன்னத்திலும் அறைந்ததா…
-
- 0 replies
- 356 views
-
-
சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கும் பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோ பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ. | கோப்புப் படம். பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ, சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கிறார். மேலும் கால்பந்தில் சீன இளைஞர்களை புதுவிதமான பயிற்சியின்ஹ் மூலம் உருவாக்க முயற்சி எடுப்பதாக அவர் தெரிவித்தார். சாவோ போலோவில் உள்ள கேம்பினாஸில் தனது கால்பந்து பள்ளியின் தொடக்க விழாவின் போது இத்தகவலை ரொனால்டோ தெரிவித்தார். "வணிக நோக்கம் தவிர, சீனாவில் கால்பந்து பள்ளிகளைத் தொடங்கக் காரணம், அங்கு கால்பந்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர், நிறைய வீரர்கள் விளையாடி வருகின்றனர். சீன அரசும், குடிமை அமைப்புகளும் கூட கால்பந்தை வளர்த்தெடுப்பதில் ம…
-
- 1 reply
- 304 views
-
-
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல் தூஸ்ரா வீச ஐசிசி தடை தூஸ்ரா வீச தடை செய்யப்பட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல். | படம்: ராய்ட்டர்ஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷல் சர்வதேச போட்டிகளில் தூஸ்ரா வீச ஐசிசி தடை விதித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது தாரிந்து கவுஷல் பந்து வீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் உள்ள சோதனைக் கூடத்தில் தாரிந்து கவுஷலின் பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இவர் ஆஃப் ஸ்பின் வீசும் போது முழங்கை 15 டிகிரிக்கும் குறைவாக மடங்குவது தெரியவந்தது. ஆனால் தூஸ்ரா வீ…
-
- 0 replies
- 183 views
-