விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஸபார் அன்ஸாரி வெளியே : சமித் பட்டேல் உள்ளே பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்துக் குழாமில், சகலதுறை வீரரான சமித் பட்டேல் இணைக்கப்பட்டுள்ளார். குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்த இளம் வீரர் ஸபார் அன்ஸாரி காயமடைந்து விளையாடமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, சமித் பட்டேலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீசும் சகலதுறை வீரரான சமித் பட்டேல், ஏற்கெனவே காணப்படும் மொய்ன் அலி, அடில் ரஷீத் ஆகிய இரு சுழல்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களுடன் போட்டியிட வேண்டியிருப்பதால், விளையாடும் பதினொருபேரில் இடம்பிடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைப்பது சந்தேகமே. அண்மைய உள்ளூர் கிரிக்கெட் பருவகாலத்தின்போது துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காவிட்டாலும், சுழல் பந்துவீச்ச…
-
- 0 replies
- 393 views
-
-
பாக். கிரிக்கெட் வாரியத்தின் மீது சாடிய யூனிஸ் கான் மீது நடவடிக்கை பாய்கிறது யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது: யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வை…
-
- 0 replies
- 197 views
-
-
டயலொக் கிரிக்கெட் விருது ஒக்டோபர் 19: உங்களின் விருப்பமான வீரர் யார்? உடனே வாக்களியுங்கள் இலங்கை வீரர்களுக்கான வருடாந்த விருதுகள் இம்முறை ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2015’ என அழைக்கப்படவுள்ளதோடு, இம்முறை பிராமாண்டமான முறையில் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாபெரும் விருது விழா எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு இதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் இதற்கான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி, செயலாளர் பிரகாஷ் ஷாப்டர், பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆஷ்லி டீ சில்வா, இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், டயலொக் நிறுவனத்…
-
- 0 replies
- 212 views
-
-
மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்! கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து அந்த பதவியும் காலியாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=52843
-
- 0 replies
- 310 views
-
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு ஜடேஜா தேர்வு செய்யப்படாதது ஏன்? தோனி, ஜடேஜா. | கோப்புப் படம்: விவேக் பெந்த்ரே. இந்தியாவில் நெடுந்தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம். குறிப்பாக ஒருநாள், டி20 அணித் தலைவர் தோனிக்கு நெருக்கமானவர் என்று ஜடேஜா கருதப்பட்டு வரும் நிலையில் இரண்டு அணிகளிலும் அவர் இடம்பெறாதது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டாலும், ஜடேஜாவின் ஆட்டம் அவரது தேர்வுக்கு எதிராக அமைந்தது என்றே கூற வேண்டும். குர்கீரத் சிங் மான் என்ற ஆல்ரவுண்டர் மற்றும் கர்நாடக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் ஆகியோர் அணியில் தேர்வு செ…
-
- 0 replies
- 238 views
-
-
உலகக் கோப்பை டி20 இறுதி ஆட்டம்: புல்லரிக்க வைத்த கடைசி ஓவர் (வீடியோ) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பை டி20 போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி, 145 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது. மிஷ்பா களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரை மறக்க முடியாது. முதல் பந்தை ஜோகிந்தர் சிங், வைடாக வீசி ரன் கொடுத்தார். அடுத்த பந்தை சரியாக வீசினார் மிஷ்பாவால் அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த பந்தை மிஷ்பா உல் ஹக் சிக்சருக்கு விளாச, இந்…
-
- 0 replies
- 198 views
-
-
சதம் சதமாய்க் குவிக்கும் குமார் சங்ககாரா இங்கிலாந்தில் சரே அணிக்காக ஆடி வரும் குமார் சங்ககாரா கவுன்டி சம்பியன்ஷிப் போட்டியில் இன்று Northamptonshire அணிக்கு எதிராக 101 ஓட்டங்களை எடுத்து உள்ளார். http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804445.html
-
- 0 replies
- 256 views
-
-
இன்னுமா டாப் வீரர்?- 11 ஆண்டுகள் கோமாவில் மீண்ட ரசிகருக்கு பெடரர் இன்ப அதிர்ச்சி 11 ஆண்டுகள் கோமாவில் வீழ்ந்த பெடரரின் ரசிகர் கண்விழித்த போது 34 வயதில் பெடரர் இன்னமும் ஆடிவருவது குறித்து மகிழ்ச்சியடைந்தார். | படம்: ஏ.பி. டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகர் ஒருவர் 11 ஆண்டுகள் கோமாவில் வீழ்ந்து தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். அவர் ரோஜர் பெடரர் இன்னமும் டென்னிஸ் உலகில் அபாரமாக ஆடிவரும் செய்தியைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜீசஸ் அபாரிசியோ ஒரு கார் விபத்தில் சிக்கி 2004-ம் ஆண்டு டிசம்பர் முதல் கோமாவில் வீழ்ந்தார். அந்த ஆண்டில்தான் பெடரர் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார். அதாவது ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் …
-
- 0 replies
- 278 views
-
-
மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 9 நிமிடங்களில் 5 கோல்கள் அடித்த லெவோண்டஸ்கி (வீடியோ) ஜெர்மனி பந்தஸ்லிகா(bundesliga) தொடரில் நேற்று பேயர்ன் மியூனிச் அணி, வுல்ஸ்பர்க் அணியிடம் மோதியது. இந்த போட்டியில் பேயர்ன் அணியின் 27 வயது இளம் வீரரான ராபர்ட் லெவோண்டஸ்கி, முதல் 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் பெப் கார்டியாலா அவரை பெஞ்சில் வைத்து விட்டார். இந்த ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் வுல்ஸ்பர்க் அணி, ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் பேயர்னால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. பிற்பாதியில் 50வது நிமிடத்தில்தான் லெவான்டோஸ்கி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். களமிறங்கிய அடுத்த நிமிடமே, லெவோண்டஸ்கி ஒரு கோல் அடித்து ஆ…
-
- 0 replies
- 352 views
-
-
துயரம் தரும் கணங்கள்: உலகக் கோப்பை தோல்வியை அசைபோடும் டிவில்லியர்ஸ் ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம். 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் கடைசி தருணத்தில் தோல்வியடைய நேரிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் மனநிலை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். ஐசிசி இணையதளத்தில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. சில துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள் சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிடைத்த வாய்…
-
- 0 replies
- 644 views
-
-
வங்கதேசத் தொடரில் எங்களுடன் பணியாற்ற விருப்பமா? ஸ்ரீராமுக்கு டேரன் லீ மேன் அனுப்பிய மின்னஞ்சல் எஸ்.ஸ்ரீராம். | கோப்புப் படம். கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் ஒரு அணியின் ஆலோசகராக தான் பணியாற்றுவது குறித்து முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரருமான எஸ்.ஸ்ரீராம் பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்பதை நினைவுகூர்ந்த எஸ்.ஸ்ரீராம், அன்று காலை மின்னஞ்சலை அவர் பார்த்துக் கொண்டிருந்த போது, ஆச்சரியகரமான ஒரு மின்னஞ்சல் ஸ்ரீராம் பார்வைக்கு வந்தது. அதில், “ஹாய் ஸ்ரீ.. (ஆஸ்திரேலியா) ஏ அணியுடன் நீங்கள் பணியாற்றிய விதம் குறித்து அறிந்தேன். வங்கதேச தொடரில் எங்களுடன் பணியாற்ற விருப்பமா? -டேரன் லீ மேன்” என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்…
-
- 0 replies
- 252 views
-
-
37 வருடங்களின் பின்னர் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு பிரித்தானியா தகுதி க்ளாஸ்கோ, எமிரேட்ஸ் எரினா டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் ஓர் இரட்டையர் ஆட்டத்திலும் அண்டி மறே வெற்றிபெற்றதன் மூலம் அவுஸ்திரேலியாவை 3 – 2 என்ற ஆட்டக் கணக்கில் பெரிய பிரித்தானியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியின்மூலம் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு 37 வருடங்களின் பின்னர் பெரிய பிரித்தானியா தகுதிபெற்றுக் கொண்டது. ஞாயிறன்று நடைபெற்ற முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் 7– 5, 6– 3, 6– 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் பேர்னார்ட…
-
- 0 replies
- 234 views
-
-
மஹானாமவின் பதவி ரிச்சி ரிச்சார்ட்சன் வசம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரோஷான் மஹானாம ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், அவருக்குப் பதிலான ஐ.சி.சி.யின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தற்போது ரிச்சார்ட்சன் மேற்கிந்திய தீவுகள் அணியின் மானேஜர் பதவியில் இருக்கிறார். இந்த பதவி அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெறும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது. அதன்பின் ஐ.சி.சி.யின் நடுவர் பதவியை ஏற்றுக்கொள்வார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 313 views
-
-
சிரிய அகதிகளை கவுரவப்படுத்திய ரியல்மாட்ரிட் அணி! ( வீடியோ ) உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து ஏராளமான மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அப்படி ஹங்கேரிக்கு வந்த ஒசமா அப்துல் மோக்சன் என்ற கால்பந்து பயிற்சியாளரை, பெண் நிருபர் ஒருவர் காலை இடறி கீழே விழ வைத்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து அந்த பெண் நிருபர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே கால்பந்து பயிற்சியாளரான ஒசமா அப்துல் மோக்சனுக்கு ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் பணி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், கடந்த புதன்கிழமை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தனது மகன்கள் சையத்,அகமது ஆகியோருடன் வந்தார். அவருக்கு மாட்ரிட…
-
- 0 replies
- 330 views
-
-
கிரிக்கெட் மைதானத்தை ரெஸ்லிங் மேடையாக்கியவருக்கு வாழ்நாள் தடை! (வீடியா) பெர்முடாவில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதி ஆட்டத்தில் கிளைவ்லேண்ட் அணியுடன் வில்லோ கட் அணி மோதியது. பெர்முடா அணிக்காக 14 சர்வதேச போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், கிளைவ்லேண்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியின் போது, கிளைவ்லேண்ட் அணியின் விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சனுக்கும் வில்லோ கட் அணியின் பேட்ஸ்மேன், ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், ஓ பிரையன் முகத்தில் கையால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஓ பிரையனும் பதிலுக்கு ஜேசன் ஆண்டர்சனை பேட்டால் தாக்கினார். பின்னர் இருவரும் …
-
- 0 replies
- 434 views
-
-
பிரிமியர் லீக் கால்பந்து போட்டி: மீண்டெழுந்த சாம்பியன்கள்: சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றாலும், இம்முறை தொடர்ந்து சொதப்பி வந்த செல்சி, ஜுவன்டஸ் அணிகள், சென்ற ஆண்டு சொதப்பினாலும் இந்த முறை முன்னணியில் இருக்கும் இன்டர் மிலன்,டார்ட்மண்ட் அணிகள், இரண்டு சிவப்பு அட்டைகள் பெற்று தோல்வியைத் தழுவிய அர்சனல் என இந்த வார பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் எப்பொழுதும் போல் அமர்க்களமாகவே அமைந்தன அட்டைகளால் ஆட்டம் கண்ட அர்சனல் பிரிமியர் லீக்கின் இருபெரும் அணிகளான அர்சனலும், செல்சியும் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. செல்சி அணி இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால், அர்சனல் அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் …
-
- 0 replies
- 503 views
-
-
பெக்கமின் தந்தையுடன் காரில் பயணித்த மஹேல இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்கமின் தந்தையுடன் மஹேல ஜெயவர்தன கால்பந்து போட்டியை பார்க்க காரில் பயணித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் மஹேல பங்கேற்று விளையாடியிருந்தார். இந்நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் சவுத்தம்ப்டன் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிய போட்டியை பார்க்க மஹேல, இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்கமின் தந்தை உடன் சென்றுள்ளார். இருவரும் காரில் அமர்ந்திருப்பது மற்றும் மைதானத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 619 views
-
-
மெஸ்ஸி 100 ஆர்ஜென்ரினா அணியின் தலைவரும் பார்ஸிலோனா அணியின் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி பார்ஸிலோனா அணிக்காக தனது 100ஆவது ஆட்டத்தினை நேற்றுமுன்தினம் நிறைவு செய்தார். வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் மெஸ்ஸிக்கும் பார்ஸி லோனாவுக்கும் ஏனோ தெரியவில்லை இந்த ஆட்டம் வெற்றியைக் கொடுக்கவில்லை. மெஸ்ஸியின் நூறாவது ஆட்டத்தில் உரோமா அணியுடன் பார்ஸிலோனா மோதியது. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் பார்ஸி லோனாவின் ஆதிக்கம் இருந்த போதிலும் உரோமாவின் முன்களவீரர் ஒருவர் மைதானத்தின் மத்திய பகுதியில் வைத்து பதில்கோலை விளாச ஆட்டம் 1-1 என்று முடிவடைந்தது. உரோமாவை மிக இலகுவாக பார்ஸிலோனா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தமையானது கிட்டத்தட்ட பார்ஸிலோனாவின் தோல்வி…
-
- 2 replies
- 319 views
-
-
வர்த்தக கிரிக்கெட் வித்தகர்: டால்மியா ஒரு சகாப்தம் கோல்கட்டா: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணமடைந்தார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக இருந்தவர் கோல்கட்டாவின் ஜக்மோகன் டால்மியா, 75. வயது முதிர்வின் காரணமாக, இவரது உடல்நிலையில் ஞாபக மறதி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. வாரத்துக்கு இரு முறை கோல்கட்டா கிரிக்கெட் சங்கத்துக்கு வருகை தந்த இவர், சமீப காலமாக முக்கிய கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று வந்தார். இதனிடையே கடந்த 17ம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கோல்கட்டா பி.எம்.பிர்லா இருதய ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, ‘ஆஞ்சியோகிராபி’ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரத…
-
- 1 reply
- 410 views
-
-
மூன்றாவது தடவையாக ஒரே அணிகள் இறுதியில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என அழைக்கப்படும் ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் 3 ஆவது தடவையாகவும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன. இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை (19) யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 3 ஆவது பருவகால போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானங்களில் நடைபெற்றது. கடந்த ஆண்டுப் போட்டியில் காலிறுதி வரையில் …
-
- 2 replies
- 351 views
-
-
கிண்ணத்தை கைப்பற்றியது குளொசெஸ்டெயர்ஷையர் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான ரோயல் லண்டன் கிண்ணத்தை, குளொசெஸ்டெயர்ஷையர் அணி கைப்பற்றியுள்ளது. பதினொரு வருடங்களின் பின் அவ்வணி கைப்பற்றும் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிண்ணம் இதுவாகும். இலண்டன் ஓவலில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சரே அணி, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குளொசெஸ்டெயர்ஷையர் அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக தனது இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெரைன்ற் ஜோன்ஸ், 50 ஓட்டங்களைப் பெற்றார். கரெத் றொட்ரிக் 39, பந்துவீச்சாளர் ஜக் டெய்லர…
-
- 0 replies
- 213 views
-
-
பிபிஎல் நவம்பரில் தொடக்கம் இரண்டு வருடங்கள் இடைவேளையின் பின், பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் மூன்றாவது பருவகாலம், எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரானது ஆறு அணிகளைக் கொண்டதாக அமையவுள்ளதுடன், மூன்று புதிய அணி உரிமையாளர்களும் பங்கெடுக்கவுள்ளனர். டாக்கா அணியானது பெக்சிம்கோ குழுமத்தாலும், சிட்டகொங் அணியானது டிபிஎல் குழுமத்தாலும், பரிசல் அணியானது அக்ஸிம் டெக்னோலஜிஸாலும் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், ராஜஸ்தானி, குளுநா ஆகிய அணிகளே இந்த வருடம் உரிமையாளர்கள் இல்லாமல் உள்ளன. மூன்று பழைய அணி உரிமையாளர்களை மட்டுமே அனுமதித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, 2013 ஆம் இடம்பெற்ற போட்டிகளுக்கான மிகுதி பணத்தை செலுத்துபவர்களுக்கும், மூன்றாவது பருவகாலத்துக்…
-
- 0 replies
- 321 views
-
-
'மின்னல் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், தான் படித்த பள்ளிக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் 100 மற்றும் 200 ஓட்ட பந்தயங்களில் அசத்தி வருபவர். அண்மையில் பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளத்திலும் உசேன் போல்ட் இந்த இரு பிரிவிலும் தங்கம் வென்று அசததினார். ஐமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்த உசேன் போல்ட் , அங்குள்ள வில்லியம் நிப் என்ற பள்ளியில் படித்தார். இந்த பள்ளிதான் உசேன் போல்ட் சிறந்த தடகள வீரராக உருவாக அடித்தளமிட்டது. தற்போது தடகள உலகின் மன்னனாக திகழும் உசேன் போல்ட், தான் படித்த இந்த பள்ளிக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஈடான பல்வேறு விளையாட…
-
- 1 reply
- 283 views
-
-
இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை யாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இந்தி யாவுக்கு எதிரான 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கவுள்ள நிலை யில், தேர்வுக் குழுவினர் பெங்களூரில் இன்று கூடி இந்திய அணியை தேர்வு செய்கின்றனர். டி20 தொடரில் விளை யாடும் அணியும், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளை யாடும் அணியும் மட்டுமே இன்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதை க…
-
- 2 replies
- 283 views
-
-
‘‘யார் என்ன கூறினாலும் டென்னிஸை தொடர்வேன்’’ சானியா மிர்சா ‘‘யார் என்ன கூறுகின்றார்கள் என்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. டென்னிஸ் விளையாட்டை நான் தொடர்வேன்’’ என இவ் வருடம் ஐக்கிய அமெரிக்க பகிரங்க மக ளிர் இரட்டையர் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த இந்தியாவின் சானியா மிர்ஸா கூறியுள்ளார். இந்த வெற்றியுடன் மகளிர் இரட்டையருக்கான உலக டென்னிஸ் தரப்படுத்தல் நிலை யில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ள சானியா மிர்ஸா, அரங்குக்கு வெளியே அநாவசிய சர்ச்சைகளை எதிர்கொண்டார். ஐக்கிய அமெரிக்க மகளிர் இரட்டையர் பட்டத்தை வெல்வதற்கு சில வாரங்களுக்கு முன்னர், சானியா மிர்ஸாவுக்கு இந்தியா வின் அதி உயர் விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுவ…
-
- 1 reply
- 421 views
-