விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தவான் திடீர் விலகல்! கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தவான், முதல் இன்னிங்சில் 134 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்னும் எடுத்தார். இந்நிலையில், காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக ஷிகர் தவான் திடீரென இன்று அறிவித்துள்ளார். காயம் காரணமாக மற்ற இரண்டு போட்டிகளில் விளையாட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 302 views
-
-
14 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி:11 ஆவது தடவையாக ஆஸி. சம்பியன் 14 ஆவது உலக கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனாகியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா கடும் சவாலுக்கு மத்தியில் 58 க்கு 55 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று பதினோறாவது தடவையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. 16,752 இரசிகர்கள் நேரில் கண்டு களித்த இப்போட்டி இரண்டாவது கால் பகுதியிலிருந்து விறுவிறுப்பைத் தோற்றுவித்தது. மேலும், அரங்கில் குழுமியிருந்த இரசிகர்கள்…
-
- 0 replies
- 309 views
-
-
டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே புதிய சாதனை சங்கக்காராவுக்கு ரஹானே பிடித்த அருமையான கேட்ச். | ஏ.எப்.பி. கால்லே டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களைப் பிடித்து இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே புதிய சாதனை புரிந்துள்ளார். இந்தியாவின் யஜுவேந்திர சிங் என்ற விக்கெட் கீப்பர் அல்லாத பீல்டர் ஒருவர் இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை புரிந்திருந்தார். ஆனால் யஜுவேந்திர சிங்குக்கு அது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது இந்தச் சாதனையை ரஹானே முறியடித்து 8 கேட்ச்களை கால்லே டெஸ்ட் போட்டியில் இதுவரை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஹர்பஜன் வீசிய பந்தை ஜெஹன் முபாரக் ஆடிய போது விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது இது அவர் பிடி…
-
- 2 replies
- 1.7k views
-
-
கால்கள் இல்லாமல் சாதிக்கும் மல்யுத்த சுட்டி (வீடியோ) வாழ்க்கையில் ஏதும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்துவிட்ட பின்பும் கூட, நாம் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படிப்பட்ட காரணத்தைக் கண்டுபிடிப்பவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள். அப்படியொரு சாதனையாளன்தான் ஆறு வயதே நிரம்பிய ஐசயா பேர்ட் (isaiah bird). நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஐசயா பேர்ட், தங்குவதற்கு என்று வீடும் இல்லை, நடப்பதற்கு என்று கால்களும் இல்லை. பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்த ஐசயா, தன் குடும்பத்துடன் ஒரு சர்ச்சில் கூடாரம் போன்ற இடத்தில் வசித்து வருகிறான். இப்படியொரு மோசமான சூழ்நிலையில் பிறந்த ஐசயா, இப்பொழுது ஒரு மல்யுத்த வீரன். இந்த சிறுவனை கண்ட ரோட்ரீகஸ் என்ற மல்யுத்த பயிற்சியாளர், இவனை கை…
-
- 1 reply
- 333 views
-
-
ட்விட்டரில் ட்ரென்ட் ஆன செரினாவின் அட்டகாச போஸ்! பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், கறுப்பாக இருந்தாலும் களையானவர். விளையாட போகும் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி ஆடை அணிந்து, ஃபேஷன் விழாக்களில் பங்கேற்பது செரினாவின் பொழுது போக்கு. இந்தியாவுக்கு ஒரு முறை வந்த போது பெங்களுருவில் நடந்த ஃபேஷன் விழாவில் செரினாவும், வீனசும் சேலை கட்டி வலம் வந்தது குபீர் சிரிப்பை வரவழைத்தது. டென்னிசில் 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, விளையாட்டுலகில் கனக்கச்சிதமான உடல் அமைப்பை கொண்ட வீராங்கனைதான். சில சமயங்களில் அவர் கொடுக்கும் போஸ்கள் உலகையே அதிர வைக்கும். அந்த வகையில் 'நியூயார்க் மேகசின்' இதழுக்காக அவர் கொடுத்த போஸ்தான் இப்பேது ட்விட்டரில் ட்ரென்ட் ஆகியுள்ளது. ட…
-
- 3 replies
- 368 views
-
-
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதியில் ஜூவாலா கட்டா ஜோடி! இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில், இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி, காலியிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரும் காலிறுதிக்கு சென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி ஜோடி, ஜப்பானின் ரேய்கா- மியாகி ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் சுற்றை 21-15 என்ற செட்கணக்கில் வென்ற கட்டா ஜோடி, இரண்டாவது செட்டை 18-21 என்ற செட்டில் இழந்தது. இதைத் தொடர்ந்து சுதாரித்து விளையாடி இந்திய ஜோடி, 3வது செட்டை 21-19 என்று கைப்பற்றி காலியிறுத்திக்கு முன்னேறியது. முன்னதாக நடைபெற்ற…
-
- 0 replies
- 342 views
-
-
சாதனைகள் பல புரிந்தாலும் சங்ககாராவுக்கு மிஞ்சியது வருத்தம்தான்! உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார். இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். '' உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற முடிவு செய்திருந்தேன். ஆனால…
-
- 1 reply
- 346 views
-
-
ஆஷஸ் தோல்வி: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் மன்னிப்பு ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் மன்னிப்பு. | கோப்புப் படம். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடர் தோல்விக்கு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் அணியின் சார்பாக மன்னிப்பு கோரினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் இதுபற்றி கூறியதாவது: நாங்கள் மோசமாக விளையாடினோம். எங்களைவிடவும் சிறப்பான அணியிடம் தோல்வி அடைந்தோம். ஒரு பயிற்சியாளராக, வீரர்கள், அணித் தேர்வாளர்கள் ஆகியோர் சார்பில் முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம். பொறுப்பிலிருந்து ஒருநாளும் வெளியேற மாட்டோம். தோல்விகளுக்கு சாக்குபோக்குகள் கூற விரும்பவில்லை. எங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, தோற்ற விதத்து…
-
- 0 replies
- 231 views
-
-
ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமனம்! ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்த மாத இறுதிவாக்கில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் ஜோ பர்ன்ஸ் சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டன் ஆகர், ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோயினிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆரோன் பின்ச்சுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டி முடிந்ததும் மிட்செல் ஜான்சன்,ஹேஸ்லிவுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படுகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டி வழக்கில் சிக்கியுள்ள ஃபாக்னர் 4 போட்டிகளில் விளையாடத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாதியில் முறிந்த மைக்கேல் கிளார்க்கின் பயணம் மைக்கேல் கிளார்க் முதலில் சுவாரஸ்யமான ஒரு புள்ளிவிவரம். இந்த மாதக் கடைசியில் ஓய்வுபெறவிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் ஜான் கிளார்க்கும் அவரை விரைவில் ஓய்வுபெற வைத்ததில் மறைமுகமாகப் பங்காற்றிய இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக்கும் ஒரே சமயத்தில் (2013, டிசம்பர்) தத்தமது 100-வது டெஸ்ட் போட்டியை ஆடியவர்கள். 100-வது போட்டி முடிந்த பிறகு அவர்களுடைய நிலை என்ன தெரியுமா? அலாஸ்டர் 100 + கிளார்க் 100 = சச்சின் 200 என்பதுதான் அந்தத் தகவல். புதிராக உள்ளதா? இதைப் பாருங்கள்: கிளார்க்: 100 போட்டிகள், 7966 ரன்கள், 26 சதங்கள். குக்: 100 போட்டிகள், 7955 ரன்கள், 25 சதங்கள். இவை இரண்டையும் கூட்டினால் 200 போட்டிகள், …
-
- 0 replies
- 260 views
-
-
மனைவிகள் மோதலால் இரண்டாக உடைந்த ஆஸ்திரேலிய அணி! ஆஸ்திரேலிய அணியின் இரு வீரர்களின் மனைவிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாக உடைந்து விட்டதாக சிட்னி டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி கண்ட தோல்வியால் அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மைக்கேல் கிளார்க் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறுகையில், “ ஒரு போட்டியின் போது பேட்ஸ்மெனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் ஜஸ்டின் லாங்கர் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் லாங்கரால், அந்த இடத்தில் பீல்டிங் செய்ய முடியவில்லை. இளம் வீரராக அப்போதிருந்த மைக்கேல் கிளார்க்கை அந்த இடத்தில்…
-
- 1 reply
- 258 views
-
-
ஆன்டி முர்ரேவுடன் இணைகிறார் பயஸ் : 42 வயதில் 101 பார்ட்னர்கள்! இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயசுக்கு தற்போது 42 வயதாகிறது. இன்னும் ஒரு வருட காலம் டென்னிஸ் விளையாட அவர் திட்டமிட்டுருக்கிறார். அண்மையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் லியாண்டர் பயஸ் டேனியல் நெஸ்டருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். இந்த டேனியல் நெஸ்டர், லியாண்டரின் 100வது பார்ட்னர் ஆவார். இந்த இருவரும் 8 தொடர்களில் ஆடினர். ஆனால் ஒரு தொடரில் கூட இறுதி ஆட்டத்துக்கு முன்னேறவில்லை. இதையடுத்து டேனியல் நெஸ்டரை விட்டு பிரிந்து ஆன்டி முர்ரேவுடன் இணைந்து விளையாட லியாண்டர் பயஸ் முடிவு செய்துள்ளார். மான்ட்ரியல…
-
- 0 replies
- 324 views
-
-
பேட்ஸ்மென் அருகில் பீல்ட் செய்ய மறுத்தவர்தான் இந்த மைக்கேல் கிளார்க்: மேத்யூ ஹெய்டன் சாடல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஹெய்டன், சைமண்ட்ஸ் இருவரும் சதம் எடுத்தனர். | படம்: ஏ.எஃப்.பி. படுதோல்விகளினால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கே கிளார்க் குறித்து முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹெய்டன் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடும் விமர்சனங்களை வைத்தனர். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் மேத்யூ ஹெய்டன், கிளார்க் அறிமுகமான புதிதில் நடந்து கொண்ட விதம் பற்றி குறிப்பிடும் போது, “என்னால் அந்த தினத்தை மறக்க முடியாது. பேட்ஸ்மெனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் ஒரு போட்டியின் போது ஜஸ்டின் லாங்கரால் நிற்க முடியவில்லை. காரணம் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிர…
-
- 0 replies
- 286 views
-
-
கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக்கைதி! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும், அவரது தந்தைக்கும் சிறைக்கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மீரட்டில் இவரது குடும்பம் வசிக்கிறது. இவரது தந்தை கிரண்பால் சிங், நிலம் வாங்க 80 லட்ச ரூபாயை ரன்வீர் சிங் என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார். பணம் இன்டர்நெட் வழியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்தை வாங்கிய ரன்வீர் சிங், நிலத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். பணத்தையும் திருப்பித் தரவில்லை.இது தொடர்பாக கிரண்பால் சிங்குக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.…
-
- 0 replies
- 820 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டை முற்றிலும் ஒழித்து விட லலித் மோடி போடும் புது ஐடியா! தற்போது உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுதான் கால்பரப்பி உள்ளது. உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வந்தாலும், ஆசிய நாடுகளைத் தவிர பிற கண்டங்களில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தென்அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில் கிரிக்கெட்னா என்ன? என்று கேட்கும் நிலைதான் உள்ளது. ஐ.சி.சி.ஐ.யின் தவறான முடிவுகளும், கிரிக்கெட்டை பரப்புவதற்கு எடுத்த முயற்சிகளும் சரியாக பலனளிக்கவில்லை என்று ஏற்கனவே லலித் மோடி, ஐ.சி.சி. மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே ஐ.சி.சி.க்கு போட்டியாக, மற்றொரு கிரிக்கெட் அமைப்பையும் உருவாக்கும் முயற்சியில் லலித் மோடி ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. …
-
- 0 replies
- 914 views
-
-
தென்ஆப்ரிக்காவுக்கு வீரரை கடன் கொடுத்த இந்தியா...இதுவல்லவோ விளையாட்டு உணர்வு! பொதுவாக சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில்தான் எதிரணி வீரர்கள், ஆள் பற்றாக்குறை காரணமாக பீல்டிங் செய்வார்கள். தற்போது ஆள்பற்றாக்குறை காரணமாக சர்வதேச போட்டியிலும் மாற்று அணி வீரர் பீல்டிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் சென்னையில் உள்ள வணிக வளாகம் சென்று உணவருந்தியுள்ளனர். உணவு அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட தென்ஆப்ரிக்க வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட வீரர்கள் சென்னை அப்பல்லோ மருத்த…
-
- 0 replies
- 882 views
-
-
ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கிற்கு விராட் கோலி வாழ்த்து விராட் கோலி. | கோப்புப் படம். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ---------------------------------------------------------------------------- கொலம்பியாவின் பொகோட்டா நகரில் நடைபெற்ற பிஎஸ்ஏ சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் தோல்வி கண்டார். சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் அவர் 9-11, 11-8, 4-11, 8-11 என்ற செட் கணக்கில் 54-வது இடத்தில் இருக்கும் மெக்ஸிகோவின் அல்பிரெட்டோ அவில்லாவிடம் தோல்வி கண்டார். ---------------------…
-
- 0 replies
- 238 views
-
-
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: அகர்வால் சதம்; இந்தியா அபார வெற்றி சதமடித்த மகிழ்ச்சியில் மயங்க் அகர்வால். படம்: எம்.மூர்த்தி. ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியா சத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹென்ரிக்ஸ் 1 ரன்னில் ஆட்ட மிழந்தபோதும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் சதமடித்தார். 124 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் விக்கெட் கீப்பர் டேன் விலா…
-
- 0 replies
- 246 views
-
-
ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் புதிய மகுடம் பெற்ற ஜோ ரூட். | படம்: ராய்ட்டர்ஸ். ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்வதில் முக்கிய பங்கு வகித்த இங்கிலாந்து பேட்ஸ்மென் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை கீழிறக்கி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 3-ம் இடத்துக்குச் செல்ல ஜோ ரூட் முதலிடம் பிடித்தார், ஏ.பி.டிவில்லியர்ஸ் 2-ம் இடத்தில் உள்ளார். டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து நிறுத்தி வைத்து வீழ்த்தினர், ஒரு பவுண்டரியை ஆஃப் திசையில் அடித்த பிறகு பீல்டர் ஒருவரை அதே திசையில் சுமார் 25-30 அடி வலப்புறமாக நகர்த்தியதைக் கவனியாமல் தேநீர் இடைவேளைக்கு 2 பந்துகளே இருக்கும் போது …
-
- 1 reply
- 307 views
-
-
ஐ.பி.எல். தொடரில் வெளிநாட்டு அணிகள் பங்கேற்க எதிர்ப்பு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக வெளிநாட்டு அணிகளை ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று வந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல் போட்டியில் மேலும் இரு அணிகளை உருவாக்கும் நிலைக்கு பி.சி.சி.ஐ தள்ளப்பட்டுள்ளது. வரும் ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஐ.பி.எல் நிர்வாகக் குழு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் உள்ளிட்ட டி20 தொடர்களில் விளையாடும் இரு அணிகளை ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வைக்கலாம் என்ற ஆலோசன…
-
- 0 replies
- 201 views
-
-
தழிழீழக்கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா எதிர்வரும் ஆவணி மாதம் 8 மற்றும் 9 ம் திகதிகளில் வழமைபோல சூரிச் நகரில் நடைபெறவுள்ளது இப்போட்டிகளில் குறிப்பாக உதைபந்தாட்டப்போட்டிகளில் வழமைபோல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,நீண்ட இடைவெளிக்குப்பிறகு கனடா நாட்டிலிருந்தும் தெரிவு அணி கலந்துகொள்ளவுள்ளது. அந்த வகையில் இங்கே சுவிசிலிருந்தும் 2014/2015 தொடரில் தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப்பெற்ற SC YOUNGSTAR Lyss SC ROYAL Bern YOUNGBIRDS FC Luzern SC THAIMAN Zug SC LIMMATHAL Baden ILLAM SIRUTHAIKAL SC Swiss தெரிவாகியுள்ளன. குழு நிலைத் தெரிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிக்கப்படவுள்ளன. தீபம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. SC Young Stars SC Ro…
-
- 3 replies
- 651 views
-
-
திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு முரளி விஜய்யை உதாரணம் காட்டும் கவாஸ்கர் ஸ்விங் பவுலிங்கை கையாள்வதில் முரளி விஜய்யை ஆஸி.பேட்ஸ்மென்களுக்கு உதாரணம் காட்டும் சுனில் கவாஸ்கர். | கோப்பு படம். இங்கிலாந்து பிட்ச்களில் ஸ்விங் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியுள்ளது பற்றி சுனில் கவாஸ்கர் கூறும் போது முரளி விஜய்யின் உத்தியை ஆஸ்திரேலிய வீரர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். உலகின் அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்களான வெஸ்லி ஹால் தொடங்கி கிரிபித், ராபர்ட்ஸ், கார்னர், கிராப்ட், ஹோல்டிங் மார்ஷல், இங்கிலாந்தின் ஜான் ஸ்னோ, பாப் விலிஸ், கிறிஸ் ஓல்ட், போத்தம், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி, ஆஸ்திரேலியாவில் தாம்சன். லில்லி, லென் பாஸ்கோ, பாகிஸ்தானின் இம்ரான்,…
-
- 0 replies
- 286 views
-
-
ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு! ஆஷஸ் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் கிளார்க்கின் மோசமான பார்மும் அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்களையும், மீடியாக்களையும் திருப்பி விட்டுள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 28 இன்னிங்சுகளில் 668 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இதில் 2 முறை சதமடித்துள்ளார். சராசரி 28.67 ஆகும். இந்த 28 இன்னிங்ஸ்களில் கிளார்க் 23 முறை, 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரானத் தொடரில்தான் கிளார்க் அறிமுகம் ஆனார். கிளார்க் அறிமுகமான இந…
-
- 1 reply
- 295 views
-
-
மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்! இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படு கேவலத்தை சந்தித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால் 331 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் ரோஜர்சும் டேவிட் வார்னரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இரண்டாவது இன்னிங்சில் ரோஜர்ஸ் 52 ரன்னிலும் வார்னர் 64 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.ஆனால் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித் வெறும் 5 ரன்னில் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் தோல்வியை நோக்கி அழைத்து செல்ல காரணமாக அமைந்து விட்டது. உலகின் நம்பர் …
-
- 0 replies
- 271 views
-
-
நாட்டிங்ஹாமில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியர்! ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வம்சாவளி வீரர் ஒருவரும் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கினார். காயமடைந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சுக்கு பதிலாக களமிறங்கிய அனுஜ் தால் 19 வயதே நிரம்பியவர். இங்கிலாந்து அணியின் 12வது வீரராக இருந்த அவருக்கு ஸ்டோக்ஸ் காயமடைந்ததையடுத்து இந்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1996ஆம் ஆண்டு பிறந்த அனுஜ் தால், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். நாட்டிங்ஹாமில் உள்ள டர்பன் பள்ளியில் அவர் படித்து வருகிறார். நாட்டிங்ஹாம்ஷயர் லெவன் அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான அனு…
-
- 0 replies
- 196 views
-