விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வங்க தேச சிறுவர்களுக்கு இன்பஅதிர்ச்சியளித்த டேல் ஸ்டெயின் ! தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. சிட்டாகாங் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் தென்ஆப்ரிக்க அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று விடுவார். அதற்கேற்றார் போல் முதல் இன்னிங்சில் ஸ்டெயின் 3 வங்கதேச வீரர்களை அவுட் செய்து, 399 விக்கெட்டுகளை ஸ்டெயின் எட்டிவிட்டார். ஆனால் நேற்று 4வது நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை எட்டி விடும் ஸ்டெயினின் ஆர்வத்துக…
-
- 0 replies
- 415 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்க பேட்டிங்கே என்னை நல்ல பவுலராக்கியது: டேமியன் பிளெமிங் ஷார்ஜா போட்டியில் பின்னால் சென்று வெளுக்கும் சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். ஆஸி. வேகப்பந்து வீச்சாளரை சிக்சருக்கு அடித்த சச்சின். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங், நேர்காணல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுவது என்றால் என்ன என்பதன் அனுபவத்தை விளக்கிப் பேசியுள்ளார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நீண்ட பேட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது பற்றி கூறும்போது, “நான் ஒரு ஸ்விங் பவுலராகவே 1996-ம் ஆண்டு போராடினேன். 1998-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம், அப்போது எங்களிடையே சச்சின்டெண்டுல்கர் …
-
- 0 replies
- 331 views
-
-
கறுப்பினத்தவரை அவமதித்தனர் : 'இனவெறி' கால்பந்து ரசிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை ! கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணியுடன் லண்டனை சேர்ந்த செல்சி அணி மோதியது. முதல் லெக் ஆட்டம் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான செல்சி அணியின் ரசிகர்கள் பாரிசுக்கு படையெடுத்தனர். போட்டியை காண பாரிஸ் நகர மெட்ரோ ரயிலில் ஆரவாரத்துடன் சென்ற செல்சி ரசிகர்கள், சூலைமான் சில்லா என்ற கறுப்பினத்தவரை ரயிலில் ஏற விடாமல் தடுத்து அவமதித்தனர். ரயிலில் ஏற முயற்சித்த அவரை, கீழே தள்ளி விட்டு அவமானப்படுத்தினர். ஏராளமான ரயில் பயணிகள் முன் இந்த சம்பவம் நடந்தது. மேலும் அந்த ரசிகர்கள், "நாங்…
-
- 0 replies
- 209 views
-
-
ஐந்து மாதங்களில் ஐந்து கிரிக்கெட்' டாடி'கள்! கடந்த 5 மாதங்களில் இந்திய அணியின் கேப்டன் தோனி உள்பட 5 கிரிக்கெட் பிரபலங்கள் தந்தையாகியுள்ளனர். உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு குழந்தை பிறந்தது. சாக் ஷி கையில் குழந்தை தவழ்ந்த சமயத்தில்,தோனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார். தோனியின் குழந்தையின் பெயர் ஷீவா. ஐ.பி.எல். போட்டியின் போது மைதானங்களில் தோனி, ஷீவாவை கையில் வைத்துக் கொண்டு அலைவதே தனி அழகு. கடந்த மே மாதம் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு பெயர் மெடில்டா விக்டோரியா வாட்சன் என்று பெயரிடப்பட்டது. ஷேன் வாட்சன், அவரது மனைவி, மூத்த மகன் ஆகிய…
-
- 0 replies
- 433 views
-
-
ஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில் நடந்த 10 சுவாரஸ்ய நிகழ்வுகள்! கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வான்கடே மைதானத்தில் வென்றது. அதற்கடுத்து 2016ம் ஆண்டில் இந்தியாவில் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெறவுள்ளது. அதன் இறுதி போட்டிக்கான மைதனாத்தையும் மற்ற மைதானங்களையும் ஐசிசி அறிவித்தது. இறுதி போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் மைதானங்கள் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிபட்ட மைதானங்களில் ஒன்றுதான் ஈடன் கார்டன் மைதானம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று. 1864 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மைதானம், இன்று 150 ஆண்டுகள…
-
- 0 replies
- 413 views
-
-
அக்சர் படேல் டெஸ்ட் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் அல்ல: சுனில் கவாஸ்கர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். | கோப்புப் படம். சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். என்.டி.டிவி-யில் சுனில் கவாஸ்கர் பேட்டியளித்த போது, “இந்திய அணி எதிர்பார்க்கும் அடுத்த பெரிய ஸ்பின்னர் என்று அக்சர் படேலைக் கூற முடியாது. அவர் பந்தை சும்மா உருட்டுகிறார், அவரிடம் பிளைட் இல்லை, அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது. பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. ஒரு மிதவேகப்பந்து வீச்சாளரை விட மெதுவாக வீசுகிறார் அவ்வளவே. ஆம்! அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித…
-
- 0 replies
- 328 views
-
-
சென்னையை கைகழுவுகிறார் தோனி : ராஞ்சியை மையமாக வைத்து புதிய ஐ.பி.எல். அணி? ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணி உருவாகவுள்ளதாகவும் அந்த அணியை தோனி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் இரு சீசன்களில் பங்கேற்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு இரு நகரங்களை மையமாக கொண்டு ஐ.பி.எல். அணிகள் உருவாகவுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிதான் கேப்டன் தோனியின் சொந்த ஊர் ஆகும். எனவே ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணியை உருவாக்கி அதனை வாங்க தோனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி., ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாடும் ராஞ்சி அணி, மகி ரேஸிங் டீம் போன…
-
- 0 replies
- 428 views
-
-
தேவை: கபில்தேவ்களா, குருநாத்களா? கிரிக்கெட் வாரியத்தால் கபில்தேவ்களை அல்ல; குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும்! ‘அப்படியானால் தோனியின் கதி?’- இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சராசரியான ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஐ.பி.எல்லின் இந்த இரு அணிகளின் உரிமையாளர்கள் / உயர் மட்ட நிர்வாகிகள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஐ.பி.எல்லை ரசித்துப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தந்த இந்தத் தீர்ப்பு, ஐ.பி.எல். போட்டிகளில் மலிந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழல்களுக்கான நிரூ…
-
- 0 replies
- 259 views
-
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஆஷஸ் தொடர்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டோன்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் மற்றும் சர்வதேச ஒருநாள் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எலிஸ் பெரி 78 ஓட்டங்களையும் அலெக்ஸாண்ட்ரா பிளக்வெல் 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் நான்காவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இங்கிலாந்து மகளிர் பந்துவீச்சில் கத்தரின் ப்ரன்ட் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலு…
-
- 0 replies
- 297 views
-
-
சுதந்திர தினத்தன்று கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் குழந்தைகளுக்கான கிரிக்கெட் அகாடமி தொடங்கவுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ நகரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியுடன் இதற்காக தோனியின் ஆர்கா அறக்கட்டளை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கிரிக்கெட் அகாடமி, வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் செயல்படவுள்ள இந்த அகாடமியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த அகாடமி, கேப்டன் தோனியின் முழு கண்காணிப்பில் இயங்கும். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் இந்த அகாடமியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளி…
-
- 0 replies
- 339 views
-
-
ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மீது சந்தேகம்: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டனவா கத்துக்குட்டிகள்? அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 2வது தகுதி சுற்றில் விளையாட, ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்து ஹாங்காங் அணி வெற்றி பெற்றதுதான் மேட்ச் பிக்சிங்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 161 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஹாங்காங் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் 4 பந்துகளில் 15 ரன்களை அடித்து விட்டார்…
-
- 0 replies
- 271 views
-
-
வடகொரியாவில் உலகக் கோப்பை கால்பந்து நடத்த லஞ்சம் கொடுத்த காமெடி நடிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் ஊழலில் ஈடுபட்டதாக 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார். ஊழலைத் சர்ச்சை வெடித்த நிலையில் நடந்த தலைவருக்கான தேர்தலிலும் ஜோசப் பிளேட்டர் போட்டியிட்டு 5வது முறையாக வெற்றி பெற்றார். எனினும் ஜோசப் பிளேட்டர் தொடர்ந்து பதவி வகிக்க விரும்பாமல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை விதிமுறைகள் படி, ஜோசப் பிளேட்டர் ஃபிஃபா தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித…
-
- 1 reply
- 1k views
-
-
ஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதல் இந்தியர்... அதுவும் தமிழர்! ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள்தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். கிரேக் சேப்பல், வாட்மோர், ஜோ டேவ்ஸ் இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். அணிகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இதுவரை ஒரு இந்தியர் கூட ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது இல்லை. தற்போது முதல் முறையாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீராம்தான் ஆஸ்திரேலிய பேட்டிங் கன்சல்டிங்காக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணிக்க…
-
- 0 replies
- 294 views
-
-
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது பிசிசிஐ- கொல்கத்தாவில் பைனல்! மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், டெல்லியில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 3-ந் தேதியன்ற…
-
- 1 reply
- 304 views
-
-
கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன்: கெவின் பீட்டர்சன் கடும் சோகம் கெவின் பீட்டர்சன். | கோப்புப் படம்: ஏ.பி. இங்கிலாந்தினால் புறக்கணிக்கப்பட்ட கெவின் பீட்டர்சன், மியாமி கடற்கரையிலிருந்து சோகத்துடன் ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணி தத்தளிக்கும் போதும் தன்னை புறக்கணிப்பது குறித்து கோபாவேசத்துடனும், சோகத்துடனும், ட்வீட்களைச் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எப்போதையும் விட சிறப்பாக பேட் செய்து வருகிறேன். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பெரும் சிக்கலில் இருக்கிறது. என்ன ஒரு விரயம்?! கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன். நான் இங்கிலாந்து அணிக்கு உதவ முடியும், உதவ விரும்புகிறேன் என்று ஒரு ட்வீட் பதிவும், இப்போது ஆழ்சிந்தனையில் இருக்கிறேன்..…
-
- 0 replies
- 324 views
-
-
கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு மூத்த மகன் பிறந்த தினம் இன்று! கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் மூத்த மகன்... இவருக்குதான் ஒருநாள், டி20 என இரு சகோதரர்கள். கடந்த 1884ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடந்த போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த1983ஆம் ஆண்டு இந்திய அணி, இந்த மைதானத்தில்தான் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது. அதற்கு பின் லார்ட்ஸ் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போன, பழகிப் போன வார்த்தையாகி விட்டது. வாழ்நாளில் ஒரு முறையாவது லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிவிட வேண்டுமென்பதுத…
-
- 0 replies
- 356 views
-
-
இலங்கையில் சானியா மிர்ஸா உலகப் புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தற்போது இலங்கைக்கு பிரத்தியேக விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கை அணியுடனான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஷொய்ப் மாலிக் சானியா மிர்ஸாவின் கணவர் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தனது கணவருக்கு உற்சாகமளிப்பதற்காக சானியாவும் இலங்கைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பு ஆர். பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின்போது சானியா மிர்ஸா அரங்கில் காணப்பட்டார். 33 வயதான ஷொய்ப் மாலிக் 2 வருடங்களின் ப…
-
- 0 replies
- 391 views
-
-
151 கால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் 501 ரன்கள் குவித்து புதிய சாதனை! கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஒரு ஜோடி 501 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், லாங்ஷயர் கிரிக்கெட் அணியும் கிளமார்கன் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் பீட்டர்சன் 286 ரன்களையும் ஆஷ்வெல் பிரின்ஸ் 261 ரன்களையும் எடுத்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 501 ரன்கள் சேர்த்தது. இது கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜோடி அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். 151 கால வரலாற்றில் ஒரு ஜோடி 500 ரன்களை கடப்பதும் இதுவே முதல் …
-
- 0 replies
- 910 views
-
-
20 விக்கெட்டுகளை வீழ்த்த உங்கள் உதவி அவசியம்: ஹர்பஜனிடம் விராட் கோலி ஹர்பஜன் சிங். | கோப்புப் படம். இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ள ஹர்பஜன் சிங், தான் அணிக்குள் வர ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மிகவும் விரும்பினர் என்று கூறியுள்ளார். பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “நான் ஓய்வறைக்குள் நுழைந்த போது முற்றிலும் புதுமுகங்கள் காணப்பட்டன. இவ்வளவு புதிய வீரர்களுடன் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளித்தது. ஓய்வறையில் விராட் கோலி பேசும்போது, என்னைக் குறிப்பிட்டு, 'நீங்கள் இந்திய அணி வெற்றி பெறுவதற்குத் தேவையான 20 விக்கெட்டுகளை வீழ்த்த உதவி புரிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சீசனில் நீங்கள் எங்களில் ஒரு…
-
- 0 replies
- 247 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் ஆடும் புதிய ஷாட்டுக்குப் பெயர் ‘ட்வீனர்’ ஸ்டிவ் ஸ்மித் மோர்னி மோர்கெலுக்கு எதிராக ஆடிய ‘ட்வீனர்’ ஷாட். படம்: ஏ.எஃப்.பி. ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 215 ரன்களையும் 2-வது இன்னிங்சில் 58 ரன்களையும் விளாசி இங்கிலாந்தை படுத்தி எடுத்த ஸ்டீவ் ஸ்மித் புதிய ஷாட் ஒன்றை பயன்படுத்தினார். ஆஃப் திசையில் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டு தனது இருகால்களுக்கும் இடையே பந்தை லெக் திசையில் அடிக்கும் கடினமான ஒரு ஷாட்டை ஸ்மித் பயன்படுத்தி வருகிறார். இந்த ஷாட் ‘ட்வீனர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது in-between என்பதை குறிக்க ட்வீனர் (tweener) என்று அழைக்கின்றனர். அதாவது இந்த ஷாட் கிரிக்கெட்டுக்குப் புதிது ஆனால் டென்னிஸ், கூடைப்பந்து ஆகியவற்றில் இந்த வ…
-
- 0 replies
- 368 views
-
-
50 ஆண்டுகால பாரம்பரிய பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட்டை ரத்து செய்த பிசிசிஐ 2012-ம் ஆண்டு துலீப் கோப்பையை வென்ற கிழக்கு மண்டல வீரர்கள் கொண்டாடும் காட்சி. | கோப்புப் படம்: கே.பிச்சுமணி. வரும் கிரிக்கெட் சீசனில் இந்திய கிரிக்கெட்டின் 50 ஆண்டு கால பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இடம் பெறவில்லை. இது குறித்து பிசிசிஐ மவுனம் சாதித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் நெரிசல் காரணமாக, ரஞ்சி டிராபிக்குப் பிறகு பழம்பெருமை வாய்ந்த மண்டலங்களுக்கு இடையேயான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சீசனில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது. அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் இந்த புதிய கிரிக்கெட் சீசனில் 6 மாத காலக்கட்டத்தில் 900 கிரிக்கெட் போட்டிகளை நடத்…
-
- 0 replies
- 225 views
-
-
பிரிமியர் கிரிக்கெட்: முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் அவசர கூட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. ஆறாவது (2013) பிரிமியர் தொடர் சூதாட்டம் காரணமாக சென்னை அணியை வைத்திருந்த பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவி பறிபோனது. இதன் பின், உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழு தீர்ப்பு காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கு (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டன. இதனிடையே பிரிமியர் தொடரின் நிர்வாக கவுன்சிலின் அவசர கூட்டம் ராஜிவ் சுக்லா தலைமையில் மும்பையில் நடக்கிறது. இதில் இரு அணிகளின் தடை குறித்து ம…
-
- 2 replies
- 246 views
-
-
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்! ஹராரே: ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால்தான் ஒருநாள் தரவரிசையில் இந்தியாவால் 2வது இடத்தில் நீடிக்க முடியும். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில், வழக்கமான கேப்டன் ட…
-
- 17 replies
- 603 views
-
-
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் எழுதிய 'இனவெறி' குறித்த கடிதத்தால் சர்ச்சை! ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இயக்குநருமான அலெஸ்டர் கேம்பெல் என்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிராஸ்பர் உத்சயா புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத் தலைவர் தலைவர் வில்சன் மனசேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் '' ஜிம்பாப்வே அணி வீரர்களில் என்னிடம் மட்டும் கேம்பெல் பாரபட்சமாக நடக்கிறார். தனிப்பட்ட பகைமை பாராட்டுகிறார். அண்மையில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நான் அணியின் முதல் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படாமல் போனதற்கு கேம்பெல்தான் காரணம். கடந்த 2010முதல் 2012 ஆம் ஆண்டு வரை அ…
-
- 0 replies
- 283 views
-
-
சச்சின் மகனை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரெய்னிங் எடுத்த இங்கிலாந்து லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை தங்களது குழு பயிற்சியின்போது ஈடுபடுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். இங்கிலாந்து வீரர்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசி அவர்களுக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்தார். முதலில் பந்து வீசிய சிறுவன் யார் என்று இங்கிலாந்து வீரர்களுக்குத் தெரியவில்லையாம். பின்னர்தான் அது சச்சின் மகன் அர்ஜூன் என்று தெரிய வந்து ஆச்சரியப்பட்டனராம். 2வது ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். நெட் பவுலராக மாறிய அர்ஜூன் லார்ட்…
-
- 2 replies
- 793 views
-