விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மிக விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் திலகரத்னே தில்ஷன்! ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடித்து இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை எட்டிய 11வது வீரர் இவர் ஆவார். ஹம்பான்தொட்டாவில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 55 ரன்கள் எட்டிய போது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா, மகிலா ஜெயவர்த்தனே, சஙகக்காரா ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய வீரர் இவர். தற்போது 39 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தில்ஷன் 318 சர்வதேச போட்டிகளில் விளையாடி 293வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார். அந்த வகையி…
-
- 1 reply
- 353 views
-
-
போதும்... போறேன்...! மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் சென்று டி20 போட்டிகளில் பங்கேற்பதுதான் கெயிலின் தற்போதைய முக்கிய வேலை. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் அவருக்கு முதுகு வலி இருந்து வந்தது. அண்மை காலங்களில் வலி அதிகரித்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய கிறிஸ் கெயில் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட்டுக்கு தற்காலிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், ''ஆகஸ்ட் 2ஆம் தேதி சாரிட்டி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறேன். அதற்கு பின், அறுவை சிகிச்சைக்காக என்னை தயார் செய்ய வேண்டியது உள்ளது. அனேகமாக டிசம்பர்…
-
- 0 replies
- 464 views
-
-
மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் தனது பொன்விழாவையொட்டி பெருமெடுப்பில் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுத் தொடரை நாவாந்துறை மற்றும் குருநகர்வாசிகள் குழப்பி, மட்டுவில் வாசிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளனர். அண்மைக்காலமாக உதைபந்தாட்டத்தை விட, மல்யுத்தத்திலேயே அதிக அக்கறை காட்டும் நாவாந்துறை சென்.மேரில் மற்றும் குருநகர் பாடுமீன் ரசிகர்கள் மைதானத்திற்குள் கொலைவெறியுடன் மோதிக் கொண்டதால், பெரும் அல்லோலகல்லோலமே நிகழ்ந்தது. மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம் தனது பொன்விழாவை முன்னிட்டு அணிக்கு 7 பேரை கொண்ட உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. இதை முன்னிட்டு பெருமெடுப்பில் மைதானம் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக தொடர் நடத்தப்பட்டது. இதற்காக மட்டுவிலை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் ஊரு…
-
- 0 replies
- 352 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை! புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு …
-
- 3 replies
- 428 views
-
-
உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 9வது இடம் உலகிலேயே அதிக மதிப்புள்ள விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின்னரே கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் ரொனால்டோ, லயனல் மெஸ்சி இந்த பட்டியலில் வருகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை விட இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. தோனியின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் விளம்பரங்கள் மூலம் கிடை…
-
- 0 replies
- 203 views
-
-
அறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர்! அறிமுகமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பெற்றுள்ளார். வங்கதேசத்தின் 20 வயது இளம் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தாபிசுர் ரஹ்மான், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்தியாவை அடுத்து வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற தென்ஆப்ரிக்க அணியும், வங்தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று இழந்தது. இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் தேதி சிட்டகாங்கில் தொடங்க…
-
- 1 reply
- 253 views
-
-
காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட் உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளர் ஆவார். 100 மீட்டரில் 9.58 வினாடியில் கடந்தும், 200 மீட்டரில் 19.19 வினாடியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதற்காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் நீண்ட காலத்துக்கு பிறகு களம் இறங்குகிறார். லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தில் தடகள போட்டி தொடங்குகிறது. இதில் உசேன் போல்ட் களம் இறங்குகிறார். அதிவேக 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது. காயம் குணம் அடைந்து மீண்டும் பிரவே…
-
- 1 reply
- 337 views
-
-
டி20 உலகக் கோப்பை: ஓமன், ஆப்கானிஸ்தான் தகுதி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் ஓமன் அணியினர். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஓமன், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அயர்லாந்தின் துல்பின் அருகேயுள்ள மலாஹைடில் நடைபெற்ற டி20 தகுதிச்சுற்றில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வாய்ப்பை பெற்றுள்ளது ஓமன். உலகக் கோப்பை போன்ற பெரிய சர்வதேச போட்டிகளில் விளையாட ஓமன் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கனடா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை ஓமன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கனடா உள்ளிட்ட 3 அணிகளும் நிறைய போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றவையாகும…
-
- 2 replies
- 346 views
-
-
பாரதரத்னா மறுக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவானுக்கு பிரிட்டன் பார்லியில் விருது! ஹிட்லர் அழைத்தும் ஜெர்மனி அணியில் இணைய மறுத்த, இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்துக்கு 'பாரத் கவுரவ் 'வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பார்லிமென்டில் இன்று வழங்கப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் அமைப்பான 'சன்ஸ்கிரிட் யுவா சங்கம்' என்ற அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. பிரிட்டன் பார்லிமென்டில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிற இந்த விருதை மேஜர் தயான்சந்த் சார்பில் அவரது மகன் அசோக் பெற்றுக் கொள்கிறார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கி உலகின் பிதாமகன். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார். 1928,1932, 1936ஆம் ஆண்டு இந்…
-
- 0 replies
- 330 views
-
-
வங்க தேச சிறுவர்களுக்கு இன்பஅதிர்ச்சியளித்த டேல் ஸ்டெயின் ! தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. சிட்டாகாங் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் தென்ஆப்ரிக்க அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று விடுவார். அதற்கேற்றார் போல் முதல் இன்னிங்சில் ஸ்டெயின் 3 வங்கதேச வீரர்களை அவுட் செய்து, 399 விக்கெட்டுகளை ஸ்டெயின் எட்டிவிட்டார். ஆனால் நேற்று 4வது நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை எட்டி விடும் ஸ்டெயினின் ஆர்வத்துக…
-
- 0 replies
- 419 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்க பேட்டிங்கே என்னை நல்ல பவுலராக்கியது: டேமியன் பிளெமிங் ஷார்ஜா போட்டியில் பின்னால் சென்று வெளுக்கும் சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். ஆஸி. வேகப்பந்து வீச்சாளரை சிக்சருக்கு அடித்த சச்சின். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளெமிங், நேர்காணல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுவது என்றால் என்ன என்பதன் அனுபவத்தை விளக்கிப் பேசியுள்ளார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நீண்ட பேட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது பற்றி கூறும்போது, “நான் ஒரு ஸ்விங் பவுலராகவே 1996-ம் ஆண்டு போராடினேன். 1998-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம், அப்போது எங்களிடையே சச்சின்டெண்டுல்கர் …
-
- 0 replies
- 335 views
-
-
கறுப்பினத்தவரை அவமதித்தனர் : 'இனவெறி' கால்பந்து ரசிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை ! கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணியுடன் லண்டனை சேர்ந்த செல்சி அணி மோதியது. முதல் லெக் ஆட்டம் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான செல்சி அணியின் ரசிகர்கள் பாரிசுக்கு படையெடுத்தனர். போட்டியை காண பாரிஸ் நகர மெட்ரோ ரயிலில் ஆரவாரத்துடன் சென்ற செல்சி ரசிகர்கள், சூலைமான் சில்லா என்ற கறுப்பினத்தவரை ரயிலில் ஏற விடாமல் தடுத்து அவமதித்தனர். ரயிலில் ஏற முயற்சித்த அவரை, கீழே தள்ளி விட்டு அவமானப்படுத்தினர். ஏராளமான ரயில் பயணிகள் முன் இந்த சம்பவம் நடந்தது. மேலும் அந்த ரசிகர்கள், "நாங்…
-
- 0 replies
- 213 views
-
-
ஐந்து மாதங்களில் ஐந்து கிரிக்கெட்' டாடி'கள்! கடந்த 5 மாதங்களில் இந்திய அணியின் கேப்டன் தோனி உள்பட 5 கிரிக்கெட் பிரபலங்கள் தந்தையாகியுள்ளனர். உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு குழந்தை பிறந்தது. சாக் ஷி கையில் குழந்தை தவழ்ந்த சமயத்தில்,தோனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார். தோனியின் குழந்தையின் பெயர் ஷீவா. ஐ.பி.எல். போட்டியின் போது மைதானங்களில் தோனி, ஷீவாவை கையில் வைத்துக் கொண்டு அலைவதே தனி அழகு. கடந்த மே மாதம் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு பெயர் மெடில்டா விக்டோரியா வாட்சன் என்று பெயரிடப்பட்டது. ஷேன் வாட்சன், அவரது மனைவி, மூத்த மகன் ஆகிய…
-
- 0 replies
- 437 views
-
-
ஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில் நடந்த 10 சுவாரஸ்ய நிகழ்வுகள்! கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வான்கடே மைதானத்தில் வென்றது. அதற்கடுத்து 2016ம் ஆண்டில் இந்தியாவில் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெறவுள்ளது. அதன் இறுதி போட்டிக்கான மைதனாத்தையும் மற்ற மைதானங்களையும் ஐசிசி அறிவித்தது. இறுதி போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் மைதானங்கள் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிபட்ட மைதானங்களில் ஒன்றுதான் ஈடன் கார்டன் மைதானம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று. 1864 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மைதானம், இன்று 150 ஆண்டுகள…
-
- 0 replies
- 423 views
-
-
அக்சர் படேல் டெஸ்ட் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் அல்ல: சுனில் கவாஸ்கர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். | கோப்புப் படம். சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். என்.டி.டிவி-யில் சுனில் கவாஸ்கர் பேட்டியளித்த போது, “இந்திய அணி எதிர்பார்க்கும் அடுத்த பெரிய ஸ்பின்னர் என்று அக்சர் படேலைக் கூற முடியாது. அவர் பந்தை சும்மா உருட்டுகிறார், அவரிடம் பிளைட் இல்லை, அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது. பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. ஒரு மிதவேகப்பந்து வீச்சாளரை விட மெதுவாக வீசுகிறார் அவ்வளவே. ஆம்! அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித…
-
- 0 replies
- 331 views
-
-
சென்னையை கைகழுவுகிறார் தோனி : ராஞ்சியை மையமாக வைத்து புதிய ஐ.பி.எல். அணி? ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணி உருவாகவுள்ளதாகவும் அந்த அணியை தோனி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரில் இரு சீசன்களில் பங்கேற்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு இரு நகரங்களை மையமாக கொண்டு ஐ.பி.எல். அணிகள் உருவாகவுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிதான் கேப்டன் தோனியின் சொந்த ஊர் ஆகும். எனவே ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணியை உருவாக்கி அதனை வாங்க தோனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி., ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாடும் ராஞ்சி அணி, மகி ரேஸிங் டீம் போன…
-
- 0 replies
- 435 views
-
-
தேவை: கபில்தேவ்களா, குருநாத்களா? கிரிக்கெட் வாரியத்தால் கபில்தேவ்களை அல்ல; குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும்! ‘அப்படியானால் தோனியின் கதி?’- இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சராசரியான ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஐ.பி.எல்லின் இந்த இரு அணிகளின் உரிமையாளர்கள் / உயர் மட்ட நிர்வாகிகள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஐ.பி.எல்லை ரசித்துப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தந்த இந்தத் தீர்ப்பு, ஐ.பி.எல். போட்டிகளில் மலிந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழல்களுக்கான நிரூ…
-
- 0 replies
- 266 views
-
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஆஷஸ் தொடர்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டோன்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் மற்றும் சர்வதேச ஒருநாள் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எலிஸ் பெரி 78 ஓட்டங்களையும் அலெக்ஸாண்ட்ரா பிளக்வெல் 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் நான்காவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இங்கிலாந்து மகளிர் பந்துவீச்சில் கத்தரின் ப்ரன்ட் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலு…
-
- 0 replies
- 303 views
-
-
பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு அவ்றிடி தலைவர் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட சரவ்தேச இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக ஷஹித் அவ்றிடி தொடர்ந்தும் செயற்படவுள்ளார். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் விளையாடிவரும் மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்ஃபான், ஷொயெப் மாலிக் ஆகியோர் இருபது 20 கிரிக்கெட் குழாமிலும் இடம்பெறுகின்றனர். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஷஹித் அவ்ரிடி (அணித் தலைவர்), சர்வ்ராஸ் அஹ்மத் (உதவி அணித் தலைவர்), அஹ்மத் ஷேஹ்ஸாத், அன்வர் அலி, இமாத் வசிம், மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்வான், மொஹமத் …
-
- 10 replies
- 589 views
-
-
சுதந்திர தினத்தன்று கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் குழந்தைகளுக்கான கிரிக்கெட் அகாடமி தொடங்கவுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ நகரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியுடன் இதற்காக தோனியின் ஆர்கா அறக்கட்டளை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கிரிக்கெட் அகாடமி, வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் செயல்படவுள்ள இந்த அகாடமியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த அகாடமி, கேப்டன் தோனியின் முழு கண்காணிப்பில் இயங்கும். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் இந்த அகாடமியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளி…
-
- 0 replies
- 343 views
-
-
ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மீது சந்தேகம்: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டனவா கத்துக்குட்டிகள்? அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 2வது தகுதி சுற்றில் விளையாட, ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்து ஹாங்காங் அணி வெற்றி பெற்றதுதான் மேட்ச் பிக்சிங்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 161 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஹாங்காங் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் 4 பந்துகளில் 15 ரன்களை அடித்து விட்டார்…
-
- 0 replies
- 276 views
-
-
இலங்கை பயணம்: இந்திய டெஸ்ட் அணி வியாழக்கிழமை தேர்வு அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீலுடன் பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி. ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை (வியாழன்) தேர்வு செய்யப்படுகிறது. சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக நாளை கூடுகிறது. 3-வது ஸ்பின்னர் யார் என்பதை மையமாகக் கொண்டு தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது. 3-வது ஸ்பின்னர் யார் என்பதுடன் 15 வீரர்கள் கொண்ட அணியா அல்லது 16-வீரர்கள் கொண்ட அணியா என்பதும் ஆர்வமூட்டும் விஷயமாக உள்ளது. பேட்ஸ்மென்களைப் பொறுத்தவரை தேர்வுக்குழுவுக்கு கடினம் இல்லை. முரளி விஜய், ஷிகர் தவண், விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா,…
-
- 10 replies
- 832 views
-
-
ஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதல் இந்தியர்... அதுவும் தமிழர்! ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள்தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். கிரேக் சேப்பல், வாட்மோர், ஜோ டேவ்ஸ் இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். அணிகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இதுவரை ஒரு இந்தியர் கூட ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது இல்லை. தற்போது முதல் முறையாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீராம்தான் ஆஸ்திரேலிய பேட்டிங் கன்சல்டிங்காக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணிக்க…
-
- 0 replies
- 299 views
-
-
கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன்: கெவின் பீட்டர்சன் கடும் சோகம் கெவின் பீட்டர்சன். | கோப்புப் படம்: ஏ.பி. இங்கிலாந்தினால் புறக்கணிக்கப்பட்ட கெவின் பீட்டர்சன், மியாமி கடற்கரையிலிருந்து சோகத்துடன் ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணி தத்தளிக்கும் போதும் தன்னை புறக்கணிப்பது குறித்து கோபாவேசத்துடனும், சோகத்துடனும், ட்வீட்களைச் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எப்போதையும் விட சிறப்பாக பேட் செய்து வருகிறேன். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பெரும் சிக்கலில் இருக்கிறது. என்ன ஒரு விரயம்?! கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன். நான் இங்கிலாந்து அணிக்கு உதவ முடியும், உதவ விரும்புகிறேன் என்று ஒரு ட்வீட் பதிவும், இப்போது ஆழ்சிந்தனையில் இருக்கிறேன்..…
-
- 0 replies
- 331 views
-
-
4 பந்துகளில் 3 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்காவை மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் டெஸ்ட் அறிமுக போட்டியிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: ஏ.எஃப்.பி. சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கல் அறிமுகம் கண்ட முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப் படுத்தப்பட்ட…
-
- 8 replies
- 929 views
-