Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஜப்பான் கிராண்ட் பிரியில் விபத்தில் சிக்கிய வீரர் 9 மாதங்களுக்கு பிறகு மரணம்! ஜப்பான் கிராண்ட் பிரி பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, 9 மாதங்கள் சிகிச்சைக்கு பின்,நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 25. பிரான்சை சேர்ந்த பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஜப்பான் கிராண்ட் பிரி போட்டியின்போது மெர்சியா குழுவுக்காக பங்கேற்ற பியான்ச்சியின் பந்தய கார், விபத்தில் சிக்கியது. பலத்த மழை காரணமாக பியான்ச்சியின் கார் பந்தய பாதையில் இருந்து வழுக்கி சென்று, அருகில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவி வாகனத்தின் மீது ம…

  2. மைக்கேல் கிளார்க் 66666... அது என்ன? டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அவுட் ஆகியுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடருக்கான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 566 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 7 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்துவீச்சில் பல்லான்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக மைக்கேல் கிளார்க் அவுட் ஆனதுதான் சிறப்பம்சம். இந்த போட்டியில் 2வது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. http://…

    • 1 reply
    • 312 views
  3. பந்துவீச்சுக்கு பதிலாக 'த்ரோ ' : பாகிஸ்தான் பந்து வீச்சாளருக்கு மீண்டும் தடை! விதிகளுக்கு புறம்பாக பந்துவீசுவதாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹபீசுக்கு மீண்டும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 21ஆம் தேதி காலே நகரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முகமது ஹபீசின் பந்துவீச்சு சந்தேகத்துக்கிடமான முறையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக வளாகத்தில், ஐ.சி.சி. அங்கீகரித்த பரிசோதனை மையத்தில் ஹபீசின் பந்துவீச்சு குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில் முகமது ஹபீசின் எல்போ 31 டிகிரி வரை வளைந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹபீசுக்கு 12 மாதங்கள் பந்துவீச ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. மு…

  4. மீண்டும் எட்டி பார்க்கிறது டெக்கான் சார்ஜர்ஸ்? ஐ.பி.எல்.தொடரில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 5 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கடந்த 2009 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றது. டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி. வெங்கட்ராம ரெட்டி, அவரது மகள் காயத்ரி ரெட்டி ஆகியோர்தான் இந்த அணியை நிர்வகித்து வந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டுவாக்கில் பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனம், வங்கி கியாரண்டித் தொகையை செலுத்த தவறியது. இதை காரணமாக காட்டி டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அங்கீகாரத்தை பி.சி.சி.ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தை மையமாக கொண்டு ச…

  5. யூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ்க்கையில் அழுகிறார்! பாகிஸ்தான் அணியின் தற்போதைய மூத்த வீரர் யூனிஸ் கான், அண்மையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனால் யூனிஸ் கானின் சொந்த வாழ்க்கை, சோகம் ததும்பியது. தந்தை, இரு சகோதரர்கள், சகோதரி என அடுத்தடுத்து அவர் வீட்டில் நிகழ்ந்த மரணங்கள் யூனிஸ் கானை உலுக்கி எடுத்தன. தற்போது 37 வயதான யூனிஸ்கானின் தந்தை இறந்த போது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். தந்தை இறந்ததை தொடர்ந்து தாய்நாடு திரும்பினார். தொடர்ந்து உக்ரேனில் நடந்த கார் விபத்தில் யூனிஸ் கானின் மூ…

  6. சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனை விம்பிள்டன் சாம்பியனாக்கிய மகேஷ் பூபதி! விம்பிள்டனில் ஒன்றல்ல... மூன்று சாம்பியன் பட்டங்களை தட்டிவந்திருக்கிறது இந்திய படை. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், ஜூனியர் இரட்டையர் போட்டியில் சுமித் நாகல் என ஒரே நேரத்தில் மூன்று இந்தியர்களும் சாம்பியன் பட்டத்தை அள்ள, இந்திய டென்னிஸ் உலகமும், ரசிகர்களும் உற்சாகத்தில் மிதிக்கிறார்கள். சானியாவின் நம்பர் ஒன் கனவு! மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்தபிறகு சானியா மிர்ஸாவுக்கு வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. இந்த ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து ஆட ஆரம்பித்த பிறகு மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றதோடு உலகின் நம்பர் ஒன் ஜோடியாக ரேங்கிங்கிலும் முதலிடம் பிடித்தார்கள்.…

    • 1 reply
    • 412 views
  7. ஐபிஎல் அணியை தொட்டு கெட்டவர்கள்...! துரதிர்ஷ்டம் தொடருவதால் அதிர்ச்சி! உலகிலேயே மிக கிளாமரான கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐ.பி.எல். தொடரின் அணிகளை வாங்கினால், அதன் உரிமையாளர்களுக்கு துரதிர்ஷ்டம் தொடருவதாக கூறி, பெங்களூருவை சேர்ந்த ஜிண்டால் ஸ்டீல் குழுமம், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். அணியான ஹைதராபாத் அணியை வாங்கிய மாறன் சகோதரர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அவர்களது ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கைமாற்றி விடப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விஜய் மல்லையா, யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்து விலக நேரிட்டது. அவரது கிங்பிஷர் நிறுவனம் திவாலானதாகவே அறிவிக்கப்பட்டது. புனே வாரியர்ஸ் அணி, ஒரு காலத்தில…

  8. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாமல் ஓய்வு பெற மாட்டேன்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சூளுரை யூனிஸ் கான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வரையில் ஓய்வுபெற மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது 100-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் 37 வயதான யூனிஸ்கான். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவிக்க, அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில்…

  9. சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு... களம் இறங்கும் சுப்பிரமணியசாமி.. Mail டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்துள்ள இரண்டாண்டு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் லோதா குழுவின் அறிக்கையில் கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணிக்கான தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா த…

  10. ஊழலில் கைது செய்யப்பட்ட ஃபிஃபா அதிகாரி அமெரிக்காவிடம் ஒப்படைப்பு! லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஃபிஃபா நிர்வாகி ஒருவரை, சுவிட்சர்லாந்து அரசு அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. லஞ்சம் ஊழலில் திளைத்த 7 ஃபிபா அதிகாரிகளை சுவிட்சர்லாந்து அரசு, கடந்த மே 27ஆம் தேதி கைது செய்தது. அமெரிக்க புலனாய்வுத்துறையான எப்.பி.ஐ, சுவிட்சர்லாந்து அரசை கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உலககையே அதிர வைத்த இந்த கைது நடவடிக்கைக்குள்ளான 7 பேரும், உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள், இருப்பவர்கள். அப்படி கைது செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரை சுவிட்சர்லாந்து அரசு, நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டது. இதற்காக அமெரிக்காவ…

  11. உலக கிண்ணத்தில் 12 அணிகள் இடம்பெற வேண்டும்; ரி 20 கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இணைக்கப்படவேண்டும் - எம்.சி.சி.கோரிக்கை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்கை பத்­தாக குறைக்­கப்­பட்­டுள்­ளமை ஒரு பின்­னோக்­கிய நகர்வு எனவும் ரி 20 கிரிக்கெட் போட்டி ஒலிம்­பிக்கில் அரங்­கேற்­றப்­ப­ட­வேண்டும் எனவும் எம். சி. சி. உலகக் கிரிக்கெட் குழு கோரிக்கை விடுத்­துள்­ளது. உலகக் கிண்ணப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 14 இலி­ருந்து 10 ஆகக் குறைப்­ப­தற்கு சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்­மா­னத்தை மீளாய்வு செய்­ய­வேண்டும் எனவும் அந்தக் குழு தெரி­வித்­துள்­ளது. அணி­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா…

  12. தந்தையும் தனயனும் ஒரே அணிக்காக விளையாடி கோல் அடித்து அசத்தல்! கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம் பிடித்தவர் ரிவல்டோ. ரிவல்டோ விளையாடிய காலக்கட்டத்தில் உலகிலேயே மிகச்சிறந்த அட்டாக்கிங் மிட்பீல்டராக திகழ்ந்தார். ரொனால்டோ, ரிவல்டோ, ரொனால்டினோ கூட்டணிதான் பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது. 1999ஆம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரராக ரிவல்டோவை ஃபிஃபா தேர்வு செய்தது. கிளப் கால்பந்தை பொறுத்த வரை ஏ.சி.மிலன்,பார்சிலோனா போன்ற புகழ்பெற்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிரேசில் அணிக்காக 74 சர்வதேச போட்டிகளில் விளையாடி 35 கோல்களை அடித்துள்ள ரிவல்டோ, 24 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கைக்கு பின், கடந்த வருடம் ஓய்வு அறிவித்தார். தொடர்ந்து…

    • 1 reply
    • 279 views
  13. சச்சின் மகனை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரெய்னிங் எடுத்த இங்கிலாந்து லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை தங்களது குழு பயிற்சியின்போது ஈடுபடுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். இங்கிலாந்து வீரர்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசி அவர்களுக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்தார். முதலில் பந்து வீசிய சிறுவன் யார் என்று இங்கிலாந்து வீரர்களுக்குத் தெரியவில்லையாம். பின்னர்தான் அது சச்சின் மகன் அர்ஜூன் என்று தெரிய வந்து ஆச்சரியப்பட்டனராம். 2வது ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். நெட் பவுலராக மாறிய அர்ஜூன் லார்ட்…

  14. வாழ்நாளில் மறக்க முடியாத அறிமுகப் போட்டி: மணீஷ் பாண்டே நெகிழ்ச்சி மணீஷ் பாண்டே ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இனிமையான தருணத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என இந்திய வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய மணீஷ் பாண்டே 71 ரன்கள் குவித்ததோடு, கேதார் ஜாதவுடன் இணைந்து இந்திய அணியையும் சரிவிலிருந்து மீட்டார். போட்டி முடிந்த பிறகு அறிமுகப் போட்டியில் ஆடிய அனுபவம் குறித்து பாண்டே கூறியதாவது: இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எனது நீண்டகால கனவு இப்போது நனவாகியிருக்கிறது. இந்தியாவுக்காக விளையாடி…

  15. தோனியை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு? ஐ.பி.எல். போட்டியில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இனி எந்த அணிக்காக விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் முன் எழுந்து நிற்கிறது. லோதா கமிட்டியின் தண்டனை விபரம் வெளியிட்ட பின்னர் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி ஒரு மிகப் பெரிய பிராண்ட் வேல்யூ உள்ள அணியோ அது போல் தோனியும் பிராண்ட் வேல்யூ மிக்க ஒரு வீரர். எனவே அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர கட்டாயப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு சென்னை அணி நிர்வாகத்தினர் வந்திருப்பதாக கூறப்ப…

  16. இந்தியாவின் முதல் பெண் 'பாடிபில்டர் ': ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி அஸ்வினி! பொதுவாக பாடி பில்டிங் என்பது ஆண்கள் பங்கேற்கும் விளையாட்டு. இந்திய பெண்கள் அந்த பக்கமே திரும்புவதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை உடைத்து எறிந்திருக்கிறார் ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி ஒருவர். மும்பையை சேர்ந்த அஸ்வினி வாஸ்கர் என்பவர்தான் அவர். இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் பாடிபில்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வரை அஸ்வினி சாதாரண இந்திய பெண்களை போலத்தான் இருந்தார். ஓவர் வெயிட் காரணமாக மிகுந்த சோகத்தில் இருந்தார். தோழிகள் கூறியதன் பேரில், உடல் வெயிட்டை குறைக்க ஜிம்முக்கு சென்றவர்தான் தற்போது பாடிபில்டராக மாறி விட்டார். ஜிம்மில் முத…

    • 2 replies
    • 418 views
  17. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து! சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடரை ரத்து செய்வதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ், தென்ஆப்ரிக்காவின் ராம்ஸ்லாம் டி20 தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் மற்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகளை கொண்டு சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டுக்கான தொடர் செடப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஸ்பான்சர்களின் கூ…

  18. ஜேம்ஸ் ஃபாக்னரை மது மீட்பு மையத்துக்கு அனுப்ப கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு! குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னருக்கு 4 போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. கடந்த ஜுலை 2ஆம் தேதி சில நாட்களுக்கு முன், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஃபாக்னர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனால் ஒரு நாள் இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த வழக்கில் மான்செஸ்டர் நகர நீதிமன்றத்தில் இந்த மாத இறுதியில் ஜேம்ஸ் ஃபாக்னர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அ…

  19. ஐ.பி.எல். தொடரில் சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் ! அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி மற்றும் புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுல் ஒருவரான ராஜ் குந்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கும் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த இரு சீசன்களில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி டஸ்கர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு விளையாட வாய்ப…

  20. 'எல்.பி.டபிள்யூ' ஷேன் வாட்சனுக்கு சிக்கல் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்சனை வீழ்த்த அப்பீல் செய்யும் இங்கி. பவுலர் மார்க் உட். | படம்: ராய்ட்டர்ஸ். ஷேன் வாட்சன். | படம்: கெட்டி தொடர்ந்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வரும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நோட்டீஸ் பீரியடில் இருப்பதாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். 19 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 14 முறை ஷேன் வாட்சன் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறியுள்ளார். இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் இந்த 14 முறைகளில் 9 முறை அவர் மேல்முறையீடு செய்ததில் ஒருமுறைதான் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமைந்த்து. 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் 109 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை மட்டுமே எடுத்துள்ளார், 74 விக்கெட்டுகளைக் கைப்பற்…

  21. விமர்சகர்களின்றி முன்னேற்றம் ஏற்படாது: அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின்.| தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த முழு பேட்டி. | கோப்புப் படம். ஸ்பின்னர் அஸ்வின், தனது ஆட்டம், அவர் மீதான விமர்சனங்கள், கேப்டன் தோனி கூறினால் களத்தில் உயிர்விடவும் தயார் என்று கூறியது ஆகியவை பற்றி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி. ஆஸ்திரேலியா தொடர், மற்றும் உலகக் கோப்பை, வங்கதேசத்தொடரில் மற்றொரு 5 விக்கெட் பவுலிங், இவற்றுடன் நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருப்பதாக கருதுகிறீர்களா? ஆம்.! நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கியதிலிருந்து இதுதான் எனது சிறந்த பவுலிங்காக அமைந்தது. அனுபவம் கூடக்கூட இன்னும் சிறப்பாக மாறும். நான் என்னையே ஆச்சரியத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள…

  22. ஸ்ரீசாந்த் வாங்கிய புதிய ஜாகுவார் கார்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் புதியதாக ஜாகுவார் ரக கார் வாங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஸ்ரீசாந்த், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படவில்லை. கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட பிறகே அவருக்கு திருமணமும் நடந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த புவனேஷ்வரி குமாரியை ஸ்ரீசாந்த் மணந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஸ்ரீசாந்த், புதியதாக ஜாகுவார் ரக காரை வாங்கியுள்ளார். ப…

  23. ஐ.பி.எல். லில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை! சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பனுக்கும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் 6-ஆவது கிரிக்கெட் தொடரில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் எழுந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத…

  24. அறிமுக வீரர் மணீஷ் பாண்டே மைதானத்தில் ஆனந்த கண்ணீர் : சக வீரர்கள் நெகிழ்ச்சி! இந்திய அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டதால் இளம் வீரர் மணீஷ் பாண்டே மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதது சக வீரர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. ஹராரேவில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாட இளம் வீரர் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது சந்தோஷம் மிகுதியால் மணீஷ் பாண்டே ஆனந்த கண்ணீர் வடித்தார். மூத்த வீரர் ஹர்பஜன்…

  25. இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராகிறார் மஹேல இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன ஆலோசனையாளராக இணைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு இருபது- ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கையணிக்கு பயிற்சியாளராக விருந்த தற்போதைய இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் போல் பப்ரி காஸ் ஏற்கனவே மஹேலவுடன் பேசியதாகவும், ஆனால் இங்கிலாந்து அணியின் இயக்குனர் அன்ரூ ஸ்ராஸ் இன்னும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் இணங்க வில்லையென் றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான ட்ரேவர் பெய்லிஸும், இலங்கையணிக்கு பயிற்சியாளராகவிருந்த சமயம் மஹே லவுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வருடங்களாக சர்வதேச க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.