விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஒரு 'சேம்சைட்' கோலும் 6 தோட்டாக்களும்...! கடந்த 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. கொலம்பியா அணிதான் கோப்பையை வெல்லும் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கணித்திருந்தார். அதற்கேற்றார் போல் உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன், அந்த அணி விளையாடிய 26 போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது. கார்லெஸ் வால்டராமா,ஃபாஸ்டினோ அஸ்பெரிலா,லூயீஸ் ஹெரைரா என உலகின் நட்சத்திர வீரர்கள் கொலம்பிய அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை கொலம்பிய அணி கோப்பையை வெல்லவில்லையென்றால் இனிமேல் எப்போதும் வெல்லாது என்றும் பத்திரிகைகள் கூறின. கொலம்பிய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே பிரிவில் போட்டியை நடத்திய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ருமேனியா என அவ்வளவா…
-
- 0 replies
- 569 views
-
-
வங்கதேசத்தில் ஆளில்லாத விமானத்தை பறக்க விட்ட தென்ஆப்ரிக்க வீரர்கள்! வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டாக்காவில் முகாமிட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டு வரும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு மேலே 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டு, கேமரா மூலம், பயிற்சிமுறைகளை படம் பிடித்தனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் வங்க தேசத்தில் அனுமதியில்லாமல் இது போன்று ட்ரோன் பறக்க விட தடையிருக்கும் நிலையில், இதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் போனது. உடனடியாக அவர்கள் ட்ரோனை தரையிறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து ட்ரோன் இறக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம், தென் ஆப்ப…
-
- 0 replies
- 397 views
-
-
111 ஓவர்களில் 562 ரன்கள் விளாசித் தள்ளிய ஆஸ்திரேலியா எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக பந்தை வெளுத்து வாங்கும் மிட்செல் மார்ஷ். | படம்: ராய்ட்டர்ஸ். செம்ஸ்போர்டில் நடைபெறும் எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ஓவர்களில் 562 ரன்களை விளாசி தள்ளியது. நேற்று தொடங்கிய இந்த 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற எஸ்ஸெக்ஸ் அணியின் கேப்டன் ரவி பொபாரா முதலில் ஆஸ்திரேலியாவை தெரியாமல் களமிறக்கி விட்டார். ஆனால் எஸ்ஸெக்ஸ் பந்து வீச்சு அவ்வளவு பலமானது அல்ல என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், ஜே.ஏ.போர்ட்டரை விட்டால் அடுத்த முனையில் நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் பந்து வீசினார். சாலிஸ்பரி, வெஸ்ட்லி, ரியான் டென் டஸ்சாதே, நிஜ்ஜர், பிரவுன் என்று 8 பவுலர்கள் …
-
- 0 replies
- 323 views
-
-
ஒரு கையில் ஐஸ்கிரீம், இன்னொரு கையில் கேட்ச்: கிளென் மேக்ஸ்வெல் அசத்தல் கிளென் மேக்ஸ்வெல். | ட்விட்டர் படம். இங்கிலாந்தில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் ஒரு கையில் ஐஸ்கீரீமை வைத்துக் கொண்டே மற்றொரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: இங்கிலிஷ் கிளப் அணியான யார்க் ஷயர் அணிக்கும், பார்ட்ஸே என்ற கிராமப்புற கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் யார்க்ஷயர் அணிக்கு ஆடிய கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டருகே 'கார்னெட்டோ' ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பார்ட்ஸே அணி பேட்ஸ்மென் எட் கிளேய்ட்டன் ஒரு பந்தை எல்லைக்…
-
- 1 reply
- 233 views
-
-
கைமாறுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் கிங் பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா வசம் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் கூறும்போது, “இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் பேரால் விரும்பக்கூடிய விளை யாட்டாக உள்ளது. எனவே, ஐபிஎல் அணியை வாங்க முடிவெடுத் துள்ளோம். ஆனால், எந்த அணி என்பதைச் சொல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். அந்த அணி பெங்களூரு அணியா எனக் கேட்டதற்கு, அதை மறுக் கவோ, ஆமோதிக்கவோ இல்லை. “அது அவர்களைப் (ஆர்சிபி) பொறுத்தது” என்றார். http://tamil.thehindu.com/sports/கைமாறுகிறது-ராயல்-சேலஞ்சர்ஸ்/article7382133.ece
-
- 1 reply
- 381 views
-
-
குதிரை பந்தயங்களில் கலக்கிய 'குயிட்டோ ஸ்டார்' மரணம்! சர்வதேச அளவில் குதிரை பந்தயங்களில் வெற்றி பெற்ற, புகழ்பெற்ற 'குயிட்டோ ஸ்டார்' குதிரை, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக நேற்று மரணமடைந்தது. இங்கிலாந்தில் நடைபெறும் பல்வேறு குதிரை பந்தயங்களில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்ற குதிரை குயிட்டோ ஸ்டார். தற்போது 15 வயதான குயிட்டோ ஸ்டார், கடந்த 2012ஆம் ஆண்டு குதிரை பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றது. ஓய்வுக்கு பின், இந்த குதிரை அதன் உரிமையாளர் ஸ்மித்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தநிலையில் மேய்ச்சலுக்கு போன குயிட்டோ ஸ்டார், கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குதிரைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று குயிட்டோ ஸ்டார் பர…
-
- 0 replies
- 287 views
-
-
முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்றாலும் தயார்: முரளி விஜய் முரளி விஜய். | கோப்புப் படம். டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத…
-
- 0 replies
- 327 views
-
-
அடிலெய்ட் மைதானத்தில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நவம்பர் 27-ம் தேதி ஆஸி.-நியூஸி. அணிகள் மோதுகின்றன. | படம்: ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் விதமாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, இந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே முதன் முதலாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காகவென்றே ‘பிங்க்’ நிறப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் 3-வது…
-
- 0 replies
- 567 views
-
-
கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதி மொட்டையடித்து வங்கதேசத்தில் விளம்பரம்! டாக்கா : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டையடித்து விட்டது போல, வங்கதேச பத்திரிகை சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதன் முறையாக வங்கதேசம் அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணி சந்தித்த இந்த தோல்வியை குறிக்கும் வகையில் ‘புரோதோம் ஆலோ’ என்ற வங்கதேசத்தை சேர்ந்த வாரப்பத்திரிகை, இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வைத்துள்ள பேனரில், இந்த…
-
- 0 replies
- 343 views
-
-
விம்பிள்டன் வின்னர் ‘யார்’ லண்டன்: பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில் பெடரர் 8வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கிறார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், கிவிட்டோவா என நிறைய பேர் களத்தில் உள்ளனர். லண்டனில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற 129வது விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. ஆண்கள் ஒற்றையரில் இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ள ‘புல்தரை கள மன்னன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர், கடைசியாக 2012ல் கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில…
-
- 28 replies
- 4.5k views
-
-
பாடும் மீன்களின் சமரில் புனித மிக்கேல் கல்லூரி சம்பியன் -எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு நகரில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் கல்லூரிக்கும் மற்றும் மெதடிஸ்த கல்லூரிக்குமடையிலான பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மிக்கேல் கல்லூரி அணி இவ்வருடத்துக்கான சம்பியானகத் தெரிவு செய்யப்பட்டது. இரு அணிகளுக்குமிடையிலான 50 ஓவர்கள் கொண்ட போட்டி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது. இதன்போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி, 39.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மிக்கேல் கல்லூரி அணிக்கு வெற்றிக் கி…
-
- 0 replies
- 384 views
-
-
திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் முதலிடத்தில் -குணசேகரன் சுரேன் யாழ். சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் ஜோர்ஜ் வெப்ஸர் தரவரிசையில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 53.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் கழகங்களை வருடா வருடம் தரவரிசைப்படுத்தும் நடவடிக்கையை சென்ரல் விளையாட்டுக்கழகம் மேற்கொள்கின்றது. 50 ஓவர் போட்டியில் வெற்றியீட்டினால் 5 புள்ளிகள், 30 ஓவரில் வெற்றியீட்டினால் 3 புள்ளிகள், இருபது – 20 வெற்றியீட்டினால் 2 புள்ளிகள் இதற்கு வழங்கப்படுகின்றது. இதனைவிட பெறப்படும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கு 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 0.1 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி அணி, இந்தாண்டு இதுவரைய…
-
- 0 replies
- 407 views
-
-
ரகானே புதிய கேப்டன் * இந்திய அணி அறிவிப்பு புதுடில்லி: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி, கோஹ்லி உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி (ஜூலை 10, 12, 14), இரண்டு ‘டுவென்டி–20’ போட்டிகளில் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. முடிவில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தோனி ஓய்வு: கடந்த 7 மாதங்களாக கேப்டன் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, அஷ்வின் மற்றும் ரெய்னா உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஜிம்பாப்வே தொடரில் …
-
- 3 replies
- 459 views
-
-
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான இவர்தான் உலகிலேயே தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அத்துடன் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 450 கோடிக்கும் அதிகம் ஆகும். ரொனால்டோவுக்கு பல மாடல் அழகிகளுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரொனால்டோ, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஆனால் குழந்தைக்கு தாய் யார்?என்பதை ரொனால்டோ இன்று வரை அறிவிக்கவில்லை. ஜுனியர் ரொனால்டோ பிறந்தது முதல் ரொனால்டோவின் தாயார் மற்றும் சகோதரிகள் பராம…
-
- 0 replies
- 327 views
-
-
சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பிரவிண் டாம்பேவை, மற்றொரு மும்பை வீரர் ‘பிக்சிங்கில்’ ஈடுபட அணுகியது அம்பலமாகியுள்ளது. ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவியே பறிபோனது. இதனிடையே எட்டாவது பிரிமியர் தொடரின் போது,‘ ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த வீரர் ஒருவரை, இந்த தொடரில் பங்கேற்காத மற்றொரு மும்பை வீரர் அணுகினார்,’ என, செய்திகள்…
-
- 6 replies
- 833 views
-
-
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: சங்கக்காரா அறிவிப்பு குமார் சங்கக்காரா. | படம்: ஏ.பி. இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று சங்கக்காரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான நடப்பு தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா விளையாட மாட்டார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு மீண்டும் வந்து, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 2-வது டெஸ்ட் போட்டி முடிவில் ஓய்வு பெறுகிறார். இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய …
-
- 5 replies
- 573 views
-
-
என்னுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு லாரா தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்தார்: கர்ட்லி ஆம்புரோஸ் லாராவுக்கும் தனக்குமான வேறுபாடுகளையும் நட்பையும் விளக்கும் ஆம்புரோஸ். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் அதிகம் பேசாதவர், ஆனால் அவர் ‘டைம் டு டாக்’ என்ற சுயசரிதை நூலுக்குப் பிறகே நிறைய பேசத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கூரியர் மெயில் ஊடகத்துக்கு அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் பிரையன் லாராவுக்கும் இடையேயான முரண்பட்ட உறவுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில் பிரையன் லாரா கேப்டன் ஆனது உங்களுக்கு பிடித்தமானதாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆம்புரோஸ், “லாரா எவ்வளவு பெரிய பேட்ஸ்மென் என்பது எங…
-
- 0 replies
- 214 views
-
-
அப்பாவுக்கு டார்ச்லைட், மகனுக்கு சாம்பியன்ஷிப்: தங்க மகன் சாய்நரேன்! வீட்டில் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு கடிகாரத்தைத் தவிர அந்த ஒற்றை அறை வீடு முழுக்க நிரம்பி யிருப்பவை பதக்கங்களும், கோப்பைகளும், சான்றிதழ்களும்தான். இத்தனைக்கும் சொந்தக்காரன் சிறுவன் சாய்நரேன். சென்னை கே.கே நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் சாய்நரேன் தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஓப்பன் ரோலர் ஸ்கேடிங் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று திரும்பியிருக்கிறான். கே.கே. நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சாய்நரேன் மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஸ்கேட்டிங், இசை, ஓவியம் என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கிக் குவித்து வருகிறான். தாய்லாந்து நாட்டில் …
-
- 0 replies
- 287 views
-
-
சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!! அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்.பி.ஏவில் விளையாட இந்தியாவை சேர்ந்த சத்னம்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியம் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர்தான் சத்னம் சிங்கின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமாக இருந்துள்ளார். இந்தியாவுக்கு கிரிக்கெட், தென் அமெரிக்காவுக்கு கால்பந்து எப்படியோ அப்படிதான் வட அமெரிக்கர்களுக்கு கூடைப்பந்து என்றால் உயிர். கடந்த 1946ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பாகத்தான் என்.பி.ஏ கூடைப்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 அமெரிக்க அணிகளும் கனடாவை சேர்ந்த ஒரு அணி மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன…
-
- 0 replies
- 352 views
-
-
டென்னிஸ் மைதானத்தில் முத்தத்துக்கு போட்டிபோட்ட ஜோகோவிச்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஜோகோவிச், ரிச்சர்டுக்கு இளம் ரசிகைகள் முத்தம் கொடுத்து மைதானத்தையே அதிர வைத்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு மோதினார். போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஜோகோவிச் திடீரென தனது சட்டையை பார்வையாளர் மாடத்தில் இருந்த இளம் ரசிகை ஒருவரிடம் வீசினார். அதை பார்த்த வீரர் ரிச்சர்டு பதிலுக்கு தனது சட்டையை கழற்றி மற்றொரு இளம் ரசிகையிடம் கொடுத்தார். பதிலுக்கு அ…
-
- 0 replies
- 403 views
-
-
மெக்கல்லம் விலகல் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் களில் இருந்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விலகியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் களைப்படைந்துள்ள மெக்கல்லம் மேற்கண்ட தொடர் களில் இருந்து விலகியிருக்கிறார். மெக்கல்லம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறலாம் என தகவல் வெளியாகியிருந்தது. அது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் கிளம்பின. ஆனால் இப்போது மெக்கல்லம் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரை நியூஸிலாந்துக்கு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். http://tamil.thehindu.com/sports/மெக்கல்லம்-விலகல்/article7360707.ece
-
- 0 replies
- 327 views
-
-
பவுலர்களுக்கு சாதகமாக கிரிக்கெட்டில் பல விதிமுறைகள் மாற்றம்: பார்படோஸ்: பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் தற்போதுள்ள ஒருநாள், கிரிக்கெட் விதிமுறைகள் சிலவற்றில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றம் கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறைகள், ஜூலை மாதம் 5ம் தேதிமுதல் அமலுக்கு வரும். ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால், ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் எடுப்பது கூட சர்வ சாதாரணமாகிவிட்டது. பரிதாப பவுலர்கள் பவுலர்கள் பரிதாபமான ஜீவன்கள் போல மைதானத்தில் காணப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, அனில்கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கடந்த மாதம், ஒரு பரிந்துரையை அளித்திருந்தது. ஃபீல்டர்கள் எண்…
-
- 1 reply
- 693 views
-
-
தோனிக்கு அப்ரிடி ஆதரவு: 'தோற்றால் சாடுவது துணைக்கண்ட போக்கு' 2011 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன் தோனியும், அப்ரிடியும் மொஹாலியில் பேசிக்கொள்ளும் காட்சி. | கோப்புப் படம்: பிடிஐ. ஒரு தொடரை இழந்தால் உடனே தாறுமாறாக விமர்சிப்பது என்பது ‘துணைக் கண்டங்களின் போக்கு’ என்று தோனிக்கு தனது ஆதரவை பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மனதார தெரிவித்துள்ளார். "வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பிறகு தோனியை இலக்காக்கும் விதம் குறித்து நான் மிக மோசமாக உணர்கிறேன். இது துணைக்கண்ட மனோநிலை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன், இங்குதான் ஒரு தொடரைத் தோற்றால் உடனே ஹீரோக்களை கடுமையாக விமர்சனம் செய்யும் போக்கு இருந்து வருகிறது. உண்மையான நிலவரத்தை சித்தரிக்காமல் இருப்பதில் ஊ…
-
- 0 replies
- 318 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்த 10 மாதத்திற்குள் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை ! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த 10 மாதங்களில், 50 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா புதிய வரலாறு ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா களதிறங்கும் 9வது டெஸ்ட் போட்டி ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் பாகிஸ்தான் அணிக்காக முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் யாஷிர் ஷா 3 விக்கெட்டுகள…
-
- 0 replies
- 218 views
-
-
கோல் கீப்பரையே தூக்கி சென்ற பவர்ஃபுல் கிக் : பிரேசில் வீரர் ஹல்க் மிரட்டல் (வீடியோ) பிரேசிலை சேர்ந்த இளம் வீரரான ஹல்க், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அணியில் இடம் பெற்றிருந்தார். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், அவர் பிரேசில் அணியில் இடம் பெறவில்லை. தற்போது அவர், ரஷ்யாவை சேர்ந்த செனித் செயின்ட பீட்டர்ஸ்பர்க் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்த சீசன் தொடங்கவுள்ளதையடுத்து ஹல்க், அந்த அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். http://youtu.be/66z1p5jLKYw நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது ஹல்க் அடித்த பவர்ஃபுல் கிக், கோல்கீப்பரை பந்துடன் சேர்ந்து தூக்கி சென்று விட்டது. இந்த வீடியோ காட்சியை செனித் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணியே வெளியிட்டுள்ளது. http://www.v…
-
- 0 replies
- 400 views
-