Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிக்கெட்டை விடுத்து டென்னிசை பிடிக்கும் கேரள அரசு... ஏன்? திருவனந்தபுரம்: கேரள சுற்றுலா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான விளம்பர தூதராக புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முடிவு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டெஃபி கிராஃபுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகள் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற சில பிரபலங்களையும் கேரள மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்த அம்மாநில அ…

  2. இங்கிலாந்து வெற்றி : நியூசி., ஏமாற்றம் மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி ஒரே ஒரு ‘டுவென்டி-20’ போட்டியில் பங்கேற்றது. மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜோ ரூட் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு ராய் (23), ஹேல்ஸ் (27) சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த ஜோ ரூட் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். பேரிஸ்டோவ் (1), கேப்டன் மார்கன் (4) ஆகியோர் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் அதிரடியாக ரன்கள் சேர்த்த ரூட், ‘டுவென்டி-20’ அரங்கில் தனது இரண்டாவது அரைசதத…

  3. பந்து தாக்கியதில் பின்ச் காயம் பர்மிங்காம்: இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வேகப்பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் படுகாயம் அடைந்தார். இங்கிலாந்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நாட்டிகாம்ஷயர், யார்க்சயர் செகண்டு லெவன் அணிகள் மோதிய போட்டி பர்மிங்காமில் நடக்கிறது. இதில் யார்க்சயர் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் துவக்கம் கொடுத்தனர். பின்ச் 19 ரன் எடுத்த நிலையில், கிறிஸ் ரசல் வீசிய வேகப்பந்து வீச்சை முன் வந்து வேகமாக அடித்து விளையாட முயன்றார். அப்போது பந்து பின்ச் மார்பில் தாக்கியது. வலியால் துடித்த அவர் உடனடியாக களத்தை விட்டு திரும்பினார். பிறகு துப்பிய போது ரத்தமும் சேர்ந்து வந்தது. உடனடியாக…

  4. ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம் ஒலிம்பிக் (2016) போட்­டிக்­கான பல்­வேறு மைதா­னங்கள் இன்னும் தயா­ரா­காமல் உள்­ளன. உலக விளை­யாட்டு திரு­விழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்­டுக்கு ஒரு­மு­றை நடக்கின்றது. கடை­சி­யாக 2012இல் இங்­கி­லாந்தில் இப்­போட்டி நடந்­தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரே­சிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்­க­வுள்­ளது. இதற்­காக மொத்தம் 14 புதிய மைதா­னங்களை கட்­டு­வது, புதுப்­பிப்­பது என, ரூ.120 ஆயி­ரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செல­வி­டு­கி­றது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீத­முள்ள நிலையில் பெரும்­பா­லான பணிகள் முடி­யாமல் உள்­ளன. இங்­குள்ள ஒலிம்பிக் பார்க் மைதானம் 44 ஏக்­கரில் தயா­ரா­கி­றது. ஜிம்­னாஸ்டிக்ஸ், ஜூடோ, ச…

  5. வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்ய தோனியிடம் பரிந்துரை! இந்திய அணிக்கு எதிராக நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மானை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய அந்த அணியின் கேப்டன் மோர்டசா, தோனியிடம் பரிந்துரை செய்துள்ளார். மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபீசூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது ஒருநாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இரு போட்டியிலும், மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, முஸ்தாபீசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதல் ஒருநாள் போட்டியின்போது தோனி ரன் எடுக்க சென்ற போது, பிட்சின்…

  6. தோனி சொன்னால் களத்திலேயே செத்துப் போவேன்..ஓவர் உணர்ச்சியைக் காட்டும் அஷ்வின்.. டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மரணமடையச் சொன்னால், களத்திலேயே அதைச் செய்வேன் என்று, சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஷ்வின் தெரிவித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான தொடர் தோல்வியால் நெருக்கடி ஏற்பட்டுள்ள ஒரு நாள் இந்திய அணி கேப்டன் தோனிக்கு, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். தோனி மிகப்பெரிய நட்சத்திர வீரர் என்றும், அவர் நாட்டிற்காக பல சாதனைகளை செய்துள்ளார் என்றும் அஷ்வின் கூறியுள்ளார். நாட்டிற்காக தோனி செய்ததை நாம் மறக்கக்கூடாது என்றும், ஒட்டு மொத்த இந்திய அணியின் செயல்பாட்டுக்கு தோனியை மட்டுமே குற்றம் சொல்லக் கூடாது எனவும் அஸ்வின் கூறினார். தன்ன…

  7. இலங்கை சுழல்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை என்கிறார் மெத்யூஸ் சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளுக்கு சாதக­மான காலி ஆடு­க­ளத் தில் பாகிஸ்தான் சுழல்­பந்து வீச்­சா­ளர்­க­ளான யசிர் ஷாவும் ஸுல்ஃபிகார் பாபாரும் தனது சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களை விஞ்சிவிட்­டதை இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் ஒப்­புக்­கொண்­டுள்ளார். பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 10 விக்கெட்­களால் தோல்வியடைந்த பின்னர் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் மெத்யூஸ் கருத்து வெளி­யிட்டார். யசிரும் பாபாரும் தங்­க­ளி­டையே 13 விக்கெட்­களைப் பகிர்ந்­து­கொண்­ட­துடன் மொஹமத் ஹஃபீஸ் இரண்டு விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். ஆனால் இலங்­கையின் முன்­னணி சுழல்­பந்­து­வீச்­ச…

  8. மொஹமத்ஹவீஸின் பந்­து­வீச்சு முர­ணா­னது என அறி­விப்பு இலங்­கைக்கு எதி­ராக காலி சர்வதேச விளையாட்­ட­ரங்கில் நடை­பெற்ற போட்டியின்­போது மொஹமத் ஹவீஸின் பந்­து­வீச்சுப் பாணி விதி­க­ளுக்கு முர­ணா­னது என மத்­தி­யஸ்­தர்­களால் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் முகாமைத்துவம் உறுதி செய்துள்ளது. இந்தப் போட்­டியில் ஹவீஸ் 10 ஓவர்கள் பந்­து­வீசி 2 விக்கெட்களைக் கைப்பற்­றி­யி­ருந்தார். சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை விதி­களின் பிர­காரம் ஒரே வருடத்தில் ஒரு பந்து­வீச்­சா­ள­ரது பந்­து­வீச்சுப் பாணி தவ­றா­னது என்­பது நிரூ­பிக்­கப்­பட்டால் அவருக்கு குறைந்தது ஒரு வருடம் பந்து வீசத் தடை விதிக்கப்படும். அதன் பின்னரே அவர் மீண்டும் பந்துவீசுவதற்கான மேன்முறையீட்டைச் …

  9. உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர் யார் தெரியுமா? பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கு இன்று 43வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரை பற்றிய சில அரியத் தகவல்கள் இங்கே... ஜினடேன் ஜிடேன் பிரான்ஸ் நாட்டின் ஹீரேவாக கருதப்படுபவர். கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும், 2000ஆம் ஆண்டு ஐரோப்பா கோப்பை கால்பந்து போட்டியிலும் இவர் தலைமையில் பிரான்ஸ் கோப்பையை வென்றது ஜினடேனுக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை கிடையாது. ஆனாலும் உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிடேன் தனது மனைவி வெரோனிகா ஃபெர்னான்டசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் ஜிடேன் வெரோனிக்காவை சந்தித்ததார். இந்த த…

  10. கிளென் மெக்ராவின் டாப் 5 பேட்ஸ்மென்கள் 2000-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கிளென் மெக்ராவை 'கவனிக்கும்' சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்: வி.வி.கிருஷ்ணன். சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட். | கோப்புப் படம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சிறப்பு நேர்காணலில் தன் காலத்திய சிறந்த 5 பேட்ஸ்மென்கள் யார், ஏன் என்பதை காரணங்களுடன் விளக்கியுள்ளார் மெக்ரா. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் இந்நாளைய எம்.ஆர்.எப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநருமான கிளென் மெக்ரா, 5 பெரிய பேட்ஸ்மென்களை பட்டியலிட்டுள்ளார். இது குறித்து ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் சிறப்பு பேட்டியளித்த போது சச்சின், லாரா, பாண்டிங், திராவிட், ஸ்டீவ் வாஹ் ஆகிய 5 பேட்ஸ்ம…

  11. இந்திய அணியின் பிரிவினைக்கு காரணம் 'சென்னை'! இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்து விட்டது. நாளை 3வது ஒருநாள் போட்டியில் இந்திய-வங்கதேச அணிகள் மீண்டும் மோதவுள்ளன. தோல்வியை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து இறங்கத் தயார் என்று கேப்டன் தோனி அறிவித்துள்ளார். இந்திய அணிக்குள் வீரர்கள் தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் இரு குழுவாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் மோதல் நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தோனிக்கு எதிராக வீரர்கள் பலர் அணி திரள்வதற்கு, இரு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக அவர் பேட்டிங் பார்மில் இல்லை என்பது முதல் காரணமாக இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக…

  12. 21ஆம் நுாற்றாண்டின் இணையற்ற கிரிக்கெட் வீரராக சச்சின் தேர்வு! மெல்பர்ன்: 21 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பிற்கு முன்னதாக, கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் சாதித்த, 100 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் சச்சினுக்கு 23 சதவீத வாக்கு கிடைத்தது. இரண்டாவது இடத்தை இலங்கை வீரர் சங்கக்காரா 14 சதவீத வாக்குகளுடன் பெற்றார். மூன்றாவது இடத்தை கி…

  13. கோலி பிரி ஹிட்டை அடிக்காதது ஏன்?...தோனி மீது வெளியில உருக்கம் உள்ளுக்குள் 'கா'! தோனி டிரெஸ்சிங் அறையில் இல்லாதது என்னை என்னவோ செய்தது என்றெல்லாம் துணை கேப்டன் விராட் கோலி உருகி வந்தாலும் அது சும்மா பேருக்குதானாம். உள்ளுக்குள் விராட் கோலி தோனியை சிக்க வைப்பதில்தான் குறியாக இருக்கிறாம். வங்கதேச தொடருக்கு முன்னமே இந்திய அணி இரண்டாக உடைந்து கிடக்கிறதாம். தோனிக்கு ஆதரவாக சென்னை அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், மோகித் மோகித் சர்மா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் உள்ளனராம். கோலிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் . ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கின்றனராம். அணி இரண்டாக உடைந்து கிடப்பதால்தான் வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெறவில்லை என்றும…

  14. என்ன நடந்ததென்று தெரியும் முன்பே இந்திய அணியை ஊதியது வங்கதேசம்: பிஷன் பேடி தோனி முன்பு போல் கேப்டன் கூல் இல்லை. அவர் அமைதியிழக்கிறார் என்று பிஷன் பேடி கூறியுள்ளார். | படம்: ஏ.பி. என்ன நடந்தது என்று தெரியும் முன்பே வங்கதேசம் இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஊதித் தள்ளியது என்று பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் பேடி கூறும்போது, கேப்டன் தோனி முதன்முறையாக அமைதி இழந்து காணப்படுவதாகக் கூறினார். “முதல் முறையாக அவரது பேச்சில் அர்த்தமின்மை தெரிகிறது. அவர் இனி ‘கேப்டன் கூல்’ இல்லை என்பது தெரியவருகிறது. அவர் அமைதி குலைந்துள்ளார். இதைக் கூறும்போதே, இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறைகூற விரும்பவில்லை. பவுலர் (முஸ்தபிசுர் ரஹ்மான்) இடித்துத் த…

  15. இயன் சாப்பலின் உலகளாவிய மனித நேயம்: தெரியாத இன்னொரு முகம் 2002-ம் ஆண்டு கிழக்கு தைமூரில் முகாம்களில் அகதிகளை சந்தித்த இயன் சாப்பல். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளரும், கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்ப, விஷயஜீவியுமான இயன் சாப்பலின் இன்னொரு உலகளாவிய மனிதநேயவாத முகம் பலரும் அறியாததே. அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பில் இவர் ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக இவர் 2001-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னியில் விருந்து ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த சனிக்கிழமை உலக அகதிகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இவர் இந்த பொறுப்பை ஏற்றவுடன், தெற்கு ஆஸ்திரேல…

  16. ஜிம்பாப்வேயிலும் போய் கேவலப்பட தயாராக இல்லை.. இந்திய அணியின் பயணம் திடீர் ரத்து! டெல்லி: வங்கதேசத்திடம் மிக கேவலமாக தோற்று தொடரை இழந்து அவமானப்பட்டது தொடராமல் இருப்பதற்காகவோ என்னவோ இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது. வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலே அத்திப்பூத்தாற் போல ஜெயிப்பதும் பெரும்பாலும் தோற்பதும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அந்த நாட்டின் சுண்டைக்காய் அணியிடம் படுகேவலமாக தோற்று தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாட இருந்தது…

  17. கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் இவங்க என்ன செஞ்சிக்கிட்டு இருந்தாங்க? சாதாரண குடும்பத்தில் பிறந்து உலகையே வென்ற கிரிக்கெட் வீரர்களாக பலர் உருவெடுத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்போம்... இந்திய அணியின் கேப்டன் தோனி, ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். மேற்கு வங்கத்தில் கராக்பூர் ரயில் நிலையத்தில்தான் தோனிக்கு பணி. கடந்த 2001 முதல் 2003 ஆம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய தோனி, அதற்கு பின் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கால் வைக்காத விளையாட்டே கிடையாது. கால்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ், ரக்பி என அனைத்து விளையாட்டுகளையும் ஒரு கை பார்த்து விட்டு கடைசியில் கிரிக்கெட்டில…

  18. பாகிஸ்தானுக்கு வேட்டு வைக்கும் வங்கதேசம்! வரும் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளதால், பாகிஸ்தான் அல்லது மேற்கிந்திய தீவுகள் அணி அந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மினி உலகக் கோப்பை போட்டியாக கருதப்படும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் நாட்டினைத் தவிர தரவரிசையில் முதல் 7 இடங்களுக்குள் இடம் பெறும் அணி கலந்து கொள்ள முடியும். போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. தற்போது வங்கதேச அணி 93 புள்ளிகளுடன் தர வரிசையில் 7வது இடத்தை பெற்று சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்னேறி விட்டது. இதன் காரணமாக தரவரிசையில் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் அல்லது மேற்கிந்திய…

  19. வங்கதேசத்தில் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிர் கௌதம் மீது தாக்குதல் ! கிரிக்கெட் போட்டியை காண வங்கதேசம் சென்ற சச்சினின் தீவிர ரசிகர் சுதிர் கௌதம் மீது டாக்காவில் சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி சமன் கண்ட நிலையில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்று இழந்தது. இந்த தொடரை காண சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கௌதம் வங்கதேசத்துக்கு சென்றிருந்தார். போட்டி நடைபெற்ற மிர்பூர் மைதானத்தில உடல் முழுக்க இந்திய முவர்ணத்பை பூசிக் கொண்டு தேசியக் கொடியுடன் மைதானத்தில் அவர் வலம் வந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதும் டாக…

  20. செய்தித் துளிகள் கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, சீனா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனையும், ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும் தோற்கடித்தன. --------------------------------------------------------------------------------------------------------------------- சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்கா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தனது 100-வது போட்டியில் விளையாடிய அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு இந்த வெற்றி மறக்க முடியாததாக அமைந்துள்ளது. இதேபோல் நடப்பு சாம்பியன் உருகுவே அண…

  21. என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிடுங்க.. சந்தோஷம்தான்: சொல்வது டோணி மிர்பூர்: கிரிக்கெட் உலகில் 'சுண்டைக்காய்' அணியாக கருதப்படும் வங்கதேசத்தில் கேவலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கினால் மகிழ்ச்சியே என்று டோணி கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியுடனான இதுவரையிலான 2 போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து டோணி கூறியுள்ளதாவத…

  22. யோகாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் முரளிதரன் கொழும்பு நகரில் நடந்த யோகா பயிற்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பங்கேற்றார். உலகம் முழுக்க யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகா தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இலங்கைத் தலைநகர் கொழும்புவிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும் இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். கொழும்புவில் வசித்து வரும் அவர், இன்று அதிகாலையிலேயே யோகா நிகழ்ச்சி நடைபெறும் காலே ஃபேஸ்…

  23. பந்துவீச்சு பயிற்சிக்காக தினமும் 40 கி.மீ பயணம் செய்த முஸ்தாபீகுர் ரக்மான்! வங்கதேச அணியின் இடது கை பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான் விசுவரூபம் எடுத்துள்ளார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற இவர் தனது இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு பிறந்த ரக்மானுக்கு தற்போது வயது 19. அதாவது வங்கதேச அணி முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது இவருக்கு மூன்றரை வயதுதான். பேட்ஸ்மேனாக வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தினார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் சட்கீரா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாபீகுர் ரக்மான் தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து கிர…

  24. நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை பதம் பார்த்த ஆனந்த் அபார வெற்றி கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். | படம்: ராய்ட்டர்ஸ். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 4-வது சுற்றில் வீழ்த்தி நார்வே செஸ் போட்டித் தொடரில் 3-வது இடம் பிடித்தார். இந்தத் தோல்வியினால் கார்ல்சன் கடைசி இடத்துக்குச் சென்றார். முதல் 3 போட்டிகளில் டிரா செய்த ஆனந்த், இந்த முறை வெற்றிக்காக முனைப்பு காட்டி ஆடினார். வெள்ளைக்காய்களில் தனது நகர்த்தலிலும் தடுப்பாட்டத்திலும் சாதுரியம் காட்டிய ஆனந்த் வெற்றியைச் சாதித்தார். வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் தொடக்கத்தில் பழைய கால தடுப்பு உத்தியை மேற்கொண்டர். அதாவது தொடக்கத்தில் ராஜாவுக்கு நேராக உள்ள சிப்பாயை 2 கட்டங்கள் நக…

  25. கடிக்க பல் இருக்கும் போது இடிக்கலாமா தோனி?- ட்விட் கலக்கல் வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை இந்திய கேப்டன் தோனி இடித்து தள்ளி ய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தோனியின் இந்த செய்கை குறித்து ட்விட்டரில் பலவிதமான காமெடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஷ்முல் ஹசன் கூறுகையில், தோனி செய்ததை நாங்கள் விரும்பவில்லை. இதே போன்ற செய்கையை நாங்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தோனியின் இடித்து தள்ளிய விவகாரத்தை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் பலரும் காமெடியாக சித்தரித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மிஸ்டர் தோனி... கடித்து வைக்க பல் இருக்க இடிக்கலாமா?-லூயீஸ் சவுரஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.