விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
தோனி இடித்த வங்கதேச பந்துவீச்சாளரை உருவாக்கியதே இந்தியர்தான்...! இந்திய கேப்டன் தோனியால் இடித்து தள்ளப்பட்ட வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இந்தியர் ஒருவர்தான் உருவாக்கியுள்ளார். மிர்பூரில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில், வங்கதேசத்தின் 19 வயது பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான், முதன் முதலாக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அதே வேளையில் ரோகித் சர்மா, தோனி ஆகியோர் ரன் எடுக்க ஓடும் போது பிட்சின் குறுக்கே அடிக்கடி ஓடினார். ஒரு கட்டத்தில் இந்திய கேப்டன் தோனியால் இடித்தும் தள்ளப்பட்டார். இந்த சம்பவத்தில் ரக்மானுக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீ…
-
- 0 replies
- 228 views
-
-
விளையாட்டுத் துளிகள் நார்வே செஸ்: 3-வது சுற்றிலும் ஆனந்த் டிரா கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வரும் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் தனது 3-வது சுற்றிலும் டிரா செய்துள்ளார். ஏற்கெனவே முதல் இரு சுற்றுகளிலும் டிரா செய்திருந்த ஆனந்த், இப்போது 3-வது சுற்றில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிசுக்குடன் டிரா செய்துள்ளார். 3 சுற்றுகளின் முடிவில் 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆனந்த், இத்தாலியின் பேபியானோ கருணா, பிரான்ஸின் வச்சியர் ஆகியோருடன் 4-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, பல்கேரியாவின் வெசலின் டோபலோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்தின் அனீஷ் கிரி 2 புள்ளிகளுடன் 3-…
-
- 0 replies
- 258 views
-
-
உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுக்கான குழாம்கள் அறிவிப்பு இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் 16 இணை உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் ஜூலை 9 முதல் 26வரை நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள 16 நாடுகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ளன. இந்த தகுதிகாண் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆறு இணை உறுப்பு நாடுகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அங்கத்துவம் வகிக்கும் பத்து நாடுகளுடன் இணைந்து உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும். தகு…
-
- 0 replies
- 231 views
-
-
கராத்தே போட்டியில் வேலணை மத்தி மாணவன் 2 ஆம் இடம் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதற்காக கல்வித்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கராத்தே சுற்றுப்போட்டியில் 2015 ஆண்டுக்கான வடமாகாண போட்டிகள் வவுனியா சி.சி.ரி.என்.எஸ். பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது. யாழ்மாவட்டம் சார்பாக வேலணை மத்திய கல்லூரி மாணவனும் கராத்தே பயிற்றுவிப்பாளர் “சென்சேய்” முருகானந்தனின் சீடனுமான முருகானந்தன் முரளி 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான “குமித்தே” கராத்தே போட்டியில் பங்குகொண்டு 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார். தீவக கல்வி வலய மாணவன் ஒருவர் முதற்தடவையாக பதக்கம் ஒன்றை வட மாகாண போட்டியில் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.virak…
-
- 6 replies
- 571 views
-
-
ஒவ்வொருவர் கேப்டன்சியும் வித்தியாசமானதே: தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 பவுலர்களுடன் கோலி களமிறங்கியது குறித்து தோனி கூறும்போது, ஒவ்வொரு தனிநபரும் தலைமைத்துவ அணுகுமுறையும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இது ஒரு நல்ல கேள்வி. நாம் ஒருநாள் போட்டிகள் பற்றி பேசுவோம். ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமனவரே. நீங்கள் அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் உங்கள் கேள்வி வித்தியாசமாக இல்லையா அது போல்தான் இதுவும். அணி தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை நாம் இயல்பான நிலையில் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதே சமயத்தில் தனிநபர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம். அனைவரும் ஒ…
-
- 0 replies
- 277 views
-
-
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 'பிங்க்' வர்ண பந்து! ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தவும் ரசிகர்களை மைதானத்திற்கு இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி. நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டியில் முதன் முதலாக ரோஜா நிறத்திலான கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. விளக்குகளின் வெளிச்சத்தில் 'பிங்க்' வர்ணத்திலான பந்து தெள்ளத் தெளிவா தெரியும் என்பதால் பகலிரவு டெஸ்ட் போட்டிளில் இந்த ரக பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.அதுபோல் மங்கலான வெளிச்சத்திலும் இந்த ரக பந்துகளை எளிதாக காண முடியும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஐந்து வருடங்களின் பின்னர் புற்றரை டென்னிஸில் நடால் சம்பியனானார் ஸ்டுட்கார்ட் டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற மேர்சிடெஸ் கிண்ண டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் சேர்பிய வீரர் விக்டர் ட்ரொய்க்கியிடம் கடும் சவாலை எதிர் கொண்ட ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் 2 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனானார். புற்தரை டென்னிஸ் போட்டி ஒன்றில் 2010 இல் சம்பியனான பின்னர் புற்றரையில் நடால் சம்பியனாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும். இருவருக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தின் முதலாவது செட் யார் வெற்றிபெறுவார் எனக் கூற முடியாத அளவுக்கு கடுமையாக மோதிக்கொள்ளப்பட்டது. சமநிலை முறிப்புவரை நீடித்த முதலாவது செட்டில் கடும் முயற்சிக்குப் பின…
-
- 0 replies
- 352 views
-
-
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்: அப்ரிடி வரவிருக்கும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்ததில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அப்ரிடி கூறும்போது, “உள்நாட்டில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு சாதகங்கள் அதிகம். இங்கிலாந்தில் எப்படி வீச வேண்டும் என்பதை அந்த அணியின் பவுலர்கள் நன்கு அறிவார்கள். இங்கிலாந்தில் அவர்கள் சிறப்பாக வீசுவதை நாம் பார்த்து வருகிறோம், மற்ற நாடுகளில் அவர்கள் சோபிக்க முடிவதில்லை. ஒருநாள் போட்டிகளில் அவர்கள…
-
- 0 replies
- 386 views
-
-
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: இந்தியாவிடம் ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டும்- இயன் சாப்பல் திறமைகளை வளர்த்தெடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பழக்கத்தை இந்தியாவிடமிருந்து ஆஸ்திரேலியா கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். மிட் டே பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியில் இது குறித்து கூறியிருப்பதாவது: முன்பு ஆஸ்திரேலியாவில் இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்து அவர்கள் சிறப்பாக விளையாடி ஜொலிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தக் கொள்கையை தற்போது ஆஸ்திரேலிய அணி தேர்வுக்குழு கடைபிடிப்பதில்லை. மார்கஸ் நார்த், எட் கோவன், ராப் குயினி, ஜார்ஜ் பெய்லி, கிறிஸ் ராஜர்ஸ், அலெக்ஸ் தூலன், தற்போது ஆடம் வோஜஸ் என்று பழைய வீர…
-
- 0 replies
- 299 views
-
-
தோனி ஒரு நேர்மையான வீரர்: டிவைன் ஸ்மித் புகழாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் மே.இ.தீவுகளின் டிவைன் ஸ்மித், கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தான் விளையாடும் தேசிய அணியை புகழ்ந்து பேசுவது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் டிவைன் ஸ்மித் ஒரு தனி உரிமையாளர் அணிக்கு விளையாடியதை பெருமை பொங்கும் குதூகலத்துடன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, “நான் விளையாடும் அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சிறந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வறையில் நாம் நிம்மதியாக இருக்கலாம். அனைத்து விதங்களிலும் நம்மீது அக்கறை இருக்கும். ஸ்டீபன் பிளெமிங் போன்ற ஒரு பயிற்சியாளர், சுரேஷ் ரெய்…
-
- 1 reply
- 473 views
-
-
கத்தார் கழகத்தில் இணைந்தார் ஸாவி ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றிய சம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியனான பார்சிலோனா கழகத்திற்காக 17 வருடங்களாக விளையாடிய ஸ்பெய்ன் வீரர் ஸாவி ஹேர்னெண்டெஸ் அங்கிருந்து விடைபெற்று புதிய கழகத்தில் இணைந்துள்ளார். 11 வயதில் பார்சிலோனா கழகத்தின் கனிஷ்ட பிரிவில் இணைந்த ஸாவி, அதன் பின்னர் தனது 35ஆவது வயதுவரை அதாவது 24 வருடங்களாக அதே கழகத்திற்காகவே விளையாடிவந்துள்ளார். 17 வருடங்களாக பார்சிலோனாவின் சிரேஷ்ட அணியில் இடம்பெற்ற அவர் பல வெற்றிக் கிண்ணங்களை அக்கழகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இவ்வாறாக 24 வருடங்கள் பார்ஸிலோன கழக ஜேர்சியை மாத்திரம் அணி…
-
- 0 replies
- 410 views
-
-
அட மிஸ்டர். கூல் கூட சண்டைக்கு போயிருக்காருப்பா...! ( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் தோனிக்கு 'கூல் கேப்ட' என்ற செல்லப் பெயர் உண்டு.ஆனால் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உண்மையிலேயே மிக கூலான மனிதர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜென்டிலாக பல விஷயங்களில் நடந்து கொண்ட நிஜ கிரிக்கெட்டர். ஆனால் இவர் கூட ஒரு முறை உணர்ச்சிவசப்பட்டு எதிரணி வீரரருடன் சண்டைக்கு போன வரலாறும் உண்டு. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோகைப் அக்தருடன் ராகுல் டிராவிட் கோபத்தில் சண்டைக்கு போன வீடியோ காட்சி இது. இருவருக்கும் வாக்குவாதம் நடந…
-
- 0 replies
- 324 views
-
-
இது ஆரம்பம் தான் *மனம் திறக்கிறார் மோகித் சர்மா புதுடில்லி: ‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளேன். மற்றபடி சமீபத்திய வெற்றிகள் சென்னை அணி கேப்டன் தோனி கொடுத்த வாய்ப்புகளால் கிடைத்தவை,’’ என மோகித் சர்மா தெரிவித்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா, 26. பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுபவர். கடந்த 2013 ஆக., 1ல் அறிமுகமான இவர், இதுவரை இந்திய அணிக்காக 20 ஒருநாள், 4 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வரும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள இவர் தனது திறமை குறித்து கூறியது: சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகி 2 ஆண்டுகள் ஆகவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் எனது பவுலிங் மற்றும் உடற்தகு…
-
- 0 replies
- 339 views
-
-
தோனியை ‘மிஸ்’ பண்ணுகிறேன் * கோஹ்லி உருக்கம் தாகா: ‘‘வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’ தோனி இல்லாதது புதுமையான உணர்வை தந்தது. இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகளை முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் பாராட்டினர். கோஹ்லியை பொறுத்தவரை தோனி மீதான தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாதவராக உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியது: வங்கதேசத்துக்கு எத…
-
- 0 replies
- 295 views
-
-
அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை *விராத் கோஹ்லி ஆதரவு புதுடில்லி: அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.,’) முறைக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதை துவக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் பி.சி.சி.ஐ., என்ன செய்ய போகிறது என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கொண்டு வரப்பட்டது அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை. இதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால், துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பி.சி.சி.ஐ.,யின் அப்போதைய தலைவர் சீனிவாசன், இந்திய அணி கேப்டன் தோனியும் இதை கடுமையாக குறை கூறினர். இதனால் இந்தியா பங்கேற்கும் இரு நாடுகள் கொண்ட தொடர்களில் டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்…
-
- 0 replies
- 381 views
-
-
உசைன் போல்ட்டின் வேகம் குறைகிறது? உசைன் போல்ட் 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த பிறகு. | படம்: ராய்ட்டர்ஸ். 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தன் வாழ்நாளின் மோசமான ஓட்டமே என்று கூறுகிறார் உசைன் போல்ட் 100 மீ, 200 மீ உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஜமைக்க அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ராண்டல் தீவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் 200 மீ உலக சாதனை 19.19 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடிடாஸ் கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டுள்ளார்.…
-
- 0 replies
- 350 views
-
-
கால்பந்து மைதானத்தில் ஸ்வஸ்திகா சின்னம்: மன்னிப்பு கோரியது குரேஷியா குரேஷியாவின் ஸ்பிளிட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரேஷியா-இத்தாலி அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் தகுதிச் சுற்றின்போது மைதானத்தில் ஹிட்லருடைய நாஜிப் படைகளின் சின்னமான ஸ்வஸ்திகா வரையப்பட்டி ருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இனவெறி தொடர்புடைய ஸ்வஸ்திகா சின்னத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின் போது இத்தாலி அணியினரின் தாக்குதல் ஆட்ட பகுதியில் (அட்டாக்கிங் சைடு) அந்த சின்னம் வரையப்பட்டு இருந்தது. ஸ்வஸ்திகா சின்னம் பெயின்ட்டால் வரையப்பட்டிருந்ததா அல்லது மைதானத்தில் இருந்த புற்களை வெட்டி அதுபோன்று வடிவமைத்திருந்தார்களா எ…
-
- 0 replies
- 414 views
-
-
பேட்டிங் ஸ்டைல் மாற்றம்.. ஹெலிகாப்டர் ஷாட்.. பழைய பன்னீர்செல்வமாக திரும்பும் டோணி! டெல்லி: வங்கதேசத்தில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டோணி பழைய ஹெலிகாப்டர் டோணியாக திரும்ப போகிறாராம். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோணி, தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முழு அளவில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடியது. டெஸ்டில் ஓய்வு டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, கேப்டன் டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்பிறகு உலக கோப்பை முடிந்து தற்போது இந்தியா வங்கதேசத்தில் சுற்றுப் பயணம…
-
- 0 replies
- 327 views
-
-
யூ டியூப்பில் புதிய சாதனை: 415 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்டு வலைக்குள் விழுந்த கூடைப்பந்து ( வீடியோ) ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் இருந்து ஒரு புதிய சாதனை புறப்பட்டு வந்துள்ளது. சுமார் 460 அடி உயரமுள்ள இந்த அணைக்கட்டின் 415வது அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட கூடைப்பந்து மிகச்சரியாக வலைக்குள் சென்று விழுந்தது. இது ஒரு புதிய கின்னஸ் சாதனையும் கூட. இதற்கு முன் ராட்டர்டாம் நகரில் உள்ள 299 அடி உயரமுள்ள யூரேமாஸ்ட் கோபுரத்தில் இருந்து வீசப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இணையங்களில் மிக வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது. யூடியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் இந்த வீடியோ காட்சி புதிய சாதனை படைத்துள்ளது. http://www.vikatan.com/n…
-
- 0 replies
- 336 views
-
-
நாட்வெஸ்ட் ஆட்டம் ரத்து : பீல்டிங் செய்யும் போது மோதல்; ஆபத்தான நிலையில் இரு வீரர்கள்! இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த இரு வீரர்கள் கேட்ச் பிடிக்கு முயற்சியின்போது மோதிக்கொண்டனர். இருவருமே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்வெஸ்ட் தொடரில் சஸ்சக்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில், சஸ்சக்ஸ் அணியுடன் சர்ரே அணி மோதியது. 19வது ஓவரில் சஸ்சக்ஸ் அணி 141 ரன்கள் எடுத்திருந்தபோது, கேட்ச்சாக வந்த பந்தை பிடிக்க சர்ரே அணி வீரர்கள் ராரி பர்ன்சும், மொய்சஸ் ஹென்ரிக்சும் முயன்று மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் இருவரும் பலத்த காயமடைந்து மைதானத்தில் விழுந்தனர். இருவருக்குமே பலத்த அடிபட்டிருந்தது. அ…
-
- 1 reply
- 367 views
-
-
இந்தியாவுக்கு விருப்பம் இல்லை... எமிரேட்ஸில் 2016 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி? கராச்சி: 2016ம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று தெரிகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டித் தொடர் இடம் பெறலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பான இறுதி முடிவு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. என்றாலும், எமிரேட்ஸில் இப்போட்டிகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வருடத்திற்கு ஒருமுறை ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தொடரை 2016ம் ஆண்டு நடத்த எந்த ஆசிய நாடும் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்…
-
- 0 replies
- 399 views
-
-
டெஸ்ட் தரவரிசை பேட்டிங், பந்துவீச்சு :முதல் பத்தில் ஒரு இந்தியர் கூட இல்லை...! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஒரு ரன்னில் இரட்டை சதத்தை கோட்டை விட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஐ.சி.சி. லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 913 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு பிறகு இப்போதுதான் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் சங்கக்காரா 909 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். தென்ஆப்ரிக்க அணியின் கேப…
-
- 0 replies
- 371 views
-
-
வெஸ்லி ஹாலுக்கு ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிப்பு அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையே கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் வெஸ்லி ஹால் ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த ஆண்டில் ஐ.சி.சி. பிரபலமாக அங்கீகரிக்கப்படும் 4ஆவது வீரர் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெட்டி வில்சன்இ அனில் கும்ளேஇ மார்டின் குரோவ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக மொத்தம் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஹால் 192 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 81…
-
- 0 replies
- 371 views
-
-
திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி ஜே.பி.எல்.க்கு தகுதி யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் எனப்படும் ஜே.பி.எல் டுவெண்டி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தகுதிகாண் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று ஜே.பி.எல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. யாழ்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் சுழிபுரம் விக்டோரியன்ஸ் அணியும் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. என்.லவகாந் அதிரடியாக ஆடி 120 ஓட்டங்களையும், எஸ்.சுரேந்திரன் 36, என்.சிவராஜ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்த…
-
- 0 replies
- 282 views
-
-
அன்டேர்சனுக்கு ராணியின் கௌரவம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன், இங்கிலாந்து மகாராணியின் கௌரவத்தை அவரின் பிறந்த நாள் அன்று பெற்றுக்கொள்ளவுள்ளார். அண்மையின் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இங்கிலாந்து அணி சார்பாக கூடுதலான டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையைக் கைப்பற்றிக்கொண்டார். அண்மையில் நியூசிலாந்து தொடரில் 400 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற மைல்க்கல்லை தாண்டினார். இங்கிலாந்து அணி சார்பாக 400 விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற முதலாவது வீரர் ஆக இவர் மாறியுள்ளார். இங்கிலாந்தில் சாதனை படைத்தவர்களை மகாராணியின் பிறந்த நாள் அன்று கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் அன்டர்சன் இந்த கௌரவத்தைப் பெறவுள்ளார். 2002ஆம் ஆண்டு தனது சர்வதேச …
-
- 0 replies
- 360 views
-