விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! - #TheRealKingmaker சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம் வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு, ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார…
-
- 0 replies
- 376 views
-
-
ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக அடியெடுத்து வைக்கும் தோனி! ஓய்வு வயதை எட்டியிருக்கும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேட் மெக்டர்மார்ட் தொடங்கியிருக்கும் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் மற்றும் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் கிரேக் மெக்டர்மார்ட் தொடங்கியுள்ள 'கிரேக் மெக்டர்மாட் கிரிக்கெட் அகாடமி ' சார்பில், 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்' என்ற பெயரில் 4 வருட பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐடியா தோனியை கவர, அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார். விளையாட்டில் ஈடுபாடு கொண்ட குழந்தைகளை,…
-
- 0 replies
- 422 views
-
-
சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆடடக்காரரான குமார் சங்ககாரா, சர்ரே அணிக்காக கழக மட்டப் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றார். 2015 இல் இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த சங்கா, இப்போது சர்ரே அணியிலும் சாதித்து வருகின்றார். இந்த பருவகாலத்தில் சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்துள்ளார்.டேர்ஹாம் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 30 ஓட்டங்கள் பெற்றபோதே சங்கா இந்த சாதனையைப் படைத்துள்ளார் http://vilaiyattu.com/சர்ரே-அணிக்காக-1000-ஓட்டங்கள/
-
- 0 replies
- 557 views
-
-
டேவிஸ் கிண்ணத்தை ஆர்ஜன்டீனா முதல் தடவையாக சுவீகரித்தது ஆடவருக்கான சர்வதேச டென்னிஸ் அரங்கில் உலகக் கிண்ணப போட்டியாக வருணிக்கப்படும் டேவிஸ் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா முதல் தடவையாக சுவீகரித்தது. ஸக்ரிப் டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியின் கடைசி இரண்டு மாற்று ஒற்றையர் போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி 3 – 2 ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்டதன் மூலம் ஆர்ஜன்டீனா சம்பியன் பட்டததை சுவீரிகத்தது. வெள்ளியன்று ஆரம்பமான இப் போட்டியில் முதல் நாள் நடைபெற்ற ஒற்றையர் போட்டிகளின் நிறைவில் இரண்டு நாடுகளுக்கு 1-1 என்ற ஆட்டக் கணக்கில் ச…
-
- 0 replies
- 286 views
-
-
உலகமே இலங்கை கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருந்த காலங்களிலும் சங்கா, மஹேலவின் ஓய்வின் பின் இலங்கை கிரிக்கெட் இல்லாமலேயே போய்விடும் என்று எழுந்த விமர்சனங்களின் போதும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு தமிழ் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதும் இலங்கை அணியின் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஏங்கியது, எப்போது இலங்கை அணியில் ஒரு தமிழ் வீரன் விளையாடப் போகிறான் என்பதாகத்தான் இருக்கும். 110 வருடங்களுக்கும் மேலாக யாழ் மண்ணில் வடக்கின் பெருஞ்சமர் நடைபெற்று வந்தாலும் அங்கிருந்து ஒரு வீரன் இலங்கைக்காக விளையாடுவது வெறும் கனவாகிப்போவதே வழக்கமாயிருந்தது. ஒருபுறம் நாட்டின் அசாதாரண சூழல், மூன்று தசாப்தகாலப்போர் என சில காரணங்களால் ஏ9 வீதியோடு சேர்த்து யாழ் மண்ணின் கிரிக்கெட் வீரர்களின் கனவுகளும் இ…
-
- 0 replies
- 582 views
-
-
ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி- ஒலிம்பிக் பதக்கம் பறிக்கப்படுமா? -------------------------------------------------------------------------------- ரியோ ஒலிம்பிக்ஸில் மராத்தன் ஓட்டபோட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கென்ய வீராங்கனை ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார். கடந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்-மராத்தன் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் கென்யர் எனும் பெயரை ஜெமிமா சம்காங் பெற்றிருந்தார். போட்டி காலத்துக்கு வெளியே நடைபெற்ற பரிசோதனையில், அவர் சோர்வு ஏற்படாமல் இருக்க, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் ஈ பி ஓ எனும் ஊக்கமருந்தை உட்கொண்டிருந்தது தெரியவந்தது. சோர்வு ஏற்படுவதை தாமதிப்பன் மூ…
-
- 0 replies
- 330 views
-
-
சர்வதேச கிரிக்கெட் பந்துவீச்சில் டேன் சாதனை இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஒன்பதாம் நாளான ஞாயிறன்று எட்டு மகளிர் அணிகளும் விளையாடிய போட்டிகளில் தென் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தங்களது பந்துவீச்சாளினிகளின் அதீத திறமையைக் கொண்டு வெற்றிகளைப் பதிவு செய்தன. தென் ஆபிரிக்க அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சாதனை மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக லெஸ்டர் க்றேஸ் றோட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அபூர்வ சாதனை ஒன்றை நிலைநாட்டினா…
-
- 0 replies
- 451 views
-
-
சிங்கப்பூர் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் பார்முலா1 கார்பந்தயத்தில் இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பார்முலா1 கார்பந்தயத்தில் ரெய்க்கோனன் (வலது), வெட்டல் ஆகியோரின் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சி சிங்கப்பூர்: பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா ஓடுதளத்தில் நேற்று மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்தது. இதில் 308.828 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கை நெருக்கடி: ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல்! Jul 21, 2022 08:32AM IST இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தாமல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும். த…
-
- 0 replies
- 276 views
-
-
12 வயது ரசிகரைத் தாக்கிய வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான்: அபராதத்துடன் தேசிய ஒப்பந்தமும் ரத்து சபீர் ரஹ்மான். - படம்.| ஏ.பி. உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் தன்னை கேலி செய்த 12 வயது சிறுவர், ரசிகரை வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் தாக்கிய விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் தண்டனை அளித்துள்ளது. சபீர் ரஹ்மானுக்கு ரூ.15 லட்சம் அபராதம், 6 மாதகால உள்நாட்டு கிரிக்கெ தடை மற்றும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளானார். வங்கதேச வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தம் ஜனவரி 1, 2018-லிருந்து நடைமுறைக்கு வந்த நிலையில் சபீர் ரஹ்மான் தனது துர்நடத்தையினால் அதனை இழந்துள்ள…
-
- 0 replies
- 361 views
-
-
‘மன்னித்துவிடு மை ஜூனியர்’: அவுட் ஆக்கிய வீரரை ஆவேசமாக ’வழியனுப்பி’யதற்கு இளம் வீரரிடம் அஃப்ரீடி உருக்கம் சாஹித் அப்ரிடி ஆவேசமாக ஓய்வு அறையை நோக்கி கையை காண்பித்த காட்சி - படம் உதவி: ட்விட்டர் கராச்சி நகரில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் இளம் வீரரை வெளியேற்றி ஆவேசமாக பேசிவிட்டு, பின் அவரிடம் மனம்திறந்து மூத்த வீரர் ஷாஹித் அப்ரிடி மன்னிப்பு கோரியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷாஹித் அப்பிரிடி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், தொடர்ந்து உள்நாட்டு போட்டிகளிலும், கிரிக்கெட் லீக…
-
- 0 replies
- 300 views
-
-
ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டு: சிறைத் தண்டனை பெற்ற அல்பி மோர்கல் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்பி மோர்கல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்காவில் வேட்டை ஆடுவதற்காகச் சென்றபோது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைத் தண்டனை பெற்றதாக அண்மையில் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அல்பி மோர்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, "நான் மொசாம்பிக்காவில் எனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது காரை சுத்தம் செய்யுமாற…
-
- 0 replies
- 411 views
-
-
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார் டேனியல் வெட்டோரி! வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சை வைத்தே காலம் கடத்தி வந்த, நியூசிலாந்து அணியில் பெயர் சொல்லக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரிதான். 1997ம் ஆண்டு தனது 18வது வயதில் வெட்டோரி நியூசிலாந்து ஒருநாள் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார். வெட்டோரி 295 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 305 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட் 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 362 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 4531 ரன்களையும் விளாசியுள்ளார். கபில் வரிசையில் கபில்தேவ…
-
- 0 replies
- 292 views
-
-
கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், 800 மீற்றர் தூர ஓட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி தேவதாஸ் டென்சிகா மற்றும் 20 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மாணவி யோகநாதன் சுகிர்தா ஆகியோரை, கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (10) கௌரவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், இருவருக்கும் மாவட்டச்செயலகத்தால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் ராஜா ரணசிங்க, மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்கள், வீராங்கனைகளின் பெற்றோர…
-
- 0 replies
- 263 views
-
-
உலகக் கோப்பை டி20: ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக ஹஸ்ஸியுடன் ஸ்ரீராம் ஸ்ரீதரன் ஸ்ரீராம், மைக் ஹஸ்ஸி. | கோப்புப் படம். இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக மைக் ஹஸ்ஸி மற்றும் முன்னாள் இந்திய-தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 2016-ல் நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆரம்பக்கட்டங்களில் ஆலோசகராக ஸ்ரீராம் பணியாற்றுவார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 டி20 போட்டிகளுக்கான தொடரில் ஏரோன் பின்ச் தலைமை ஆஸ்திரேலிய அணியுடன் ஸ்ரீராம் ஆலோசகராக இணைகிறார். பிறகு மைக் ஹஸ்ஸி உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணியுடன் இணைகிறார். …
-
- 0 replies
- 616 views
-
-
உலக கிண்ண 20 க்கு 20 தொடருக்கான அயர்லாந்து அணிக்கு வாஸ் உதவி வழங்கவுள்ளார் [ Thursday,21 January 2016, 16:54:43 ] உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடருக்கென தயாராகும் அயர்லாந்து அணிக்கு ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் இடதுகர வேகப்பந்துவீச்சாளர் சமிந்தவாஸ் உதவி வழங்கவுள்ளார். சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்படவுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அயர்லாந்து அணியுடன் இணையவுள்ள 41 வயதான சமிந்த வாஸ், தொடர் முடிவுடையும் வரை அணியுடன் இணைந்து செயற்படவுள்ளார். மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி இந்தியாவில் உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அயர்லாந…
-
- 0 replies
- 227 views
-
-
வீட்டில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் விராட் கோலிக்கு உண்டு. பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த, பிஷ்மா மருஃவா கூட நம்ம கோலியின் தீவிர ரசிகைதான். இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானிலும் ஏராளமான விராட் கோலி ரசிகர்கள் பார்த்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஓகாரா மாவட்டத்தில், உமர் ட்ராஸ் என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். நேற்றையை போட்டியில் தனது ஹீரோ ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசி தள்ளியதாலும் அதனால், இந்திய…
-
- 0 replies
- 493 views
-
-
மலிங்கவிற்கு ஓய்வு இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மலிங்கவுக்கு 3 மாதகால ஓய்வு வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5676
-
- 0 replies
- 484 views
-
-
ஐபிஎல்: பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டும் குஜராத் வீரர்! (வீடியோ) ஐபில் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஷிவில் கவ்ஷிக்கின் பந்து வீச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புரில் பிறந்த ஷிவில் கவ்ஷிக்கின் வயது 20. இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத இவர், ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், தனது உடலை வளைத்து, தலையை குனிந்தபடி பந்தினை வீசுகிறார். இது தென் ஆப்பிரிக்க முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்சின் பந்துவீச்சு போன்று இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். இவரின் இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. ஐபிஎல் ப…
-
- 0 replies
- 349 views
-
-
29 பட்டங்கள் வென்று ஜோகோவிச் சாதனை மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனும் ஆன இங்கி லாந்தின் ஆன்டி முர்ரேவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்றது. ஆன்டி முர்ரே தோல்வியடைந்ததால் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பறிகொடுத்துள்ளார்…
-
- 0 replies
- 375 views
-
-
14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தட்டெறிதல் போட்டி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆயிலை முதலிடம் Published By: Vishnu 02 Nov, 2025 | 09:56 PM (நெவில் அன்தனி) எம்பிலிப்பிட்டி பொது மைதானத்தில் நடைபெற்றுவரும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஏ. ஆயிலை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 25.29 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஆயிலை முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வென்னப்புவை புனித இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் ஆங்கில மொழிமூல பாடசாலை மாணவி ஏ. பொன்சேகாவை விட ஒரு மீற்றருக்கும் அதிகமான தூர வித்தியாசத்தி…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
விற்றோரியின் தடை நீக்கம் மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்கள…
-
- 0 replies
- 408 views
-
-
ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி. இந்தியக் கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவரான டோனி, நாளை ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் இன்னுமொரு மைல்கல்லை எட்டித்தொடக் காத்திருக்கிறார். இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்க்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, 3 இலும் தோல்வி கண்டுள்ள நிலையில் ,நாளை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் டோனி 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வாராயின் ஒருநாள் போட்டிகளில் 9000 ஓட்டங்கள் கடந்தவர்கள் வரிசையில் இணைந்துகொள்வார். இது…
-
- 0 replies
- 513 views
-
-
2016-இல் விளையாட்டு உலகம் - சாதனைகளும், சர்ச்சைகளும் கடந்த 2016-ஆம் ஆண்டில், விளையாட்டு உலகில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன; புதிய வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். 2016-இல் நடந்த விளையாட்டு உலக சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம். டென்னிஸ் : புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்த அன்ஜெலீக் கெர்பர், வாவ்ரிங்கா டென்னிஸ் போட்டிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் ஃபிரெஞ் ஓபன் பட்டங்களை ஜோகோவிச் வென்றார். விம்பிள்டன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஆண…
-
- 0 replies
- 376 views
-
-
தப்பினார் செபஸ்டியன் வெட்டல் அஸர்பைஜானில் இடம்பெற்ற கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், லூயிஸ் ஹமில்டனின் காரோடு ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக, போர்மியூலா வண் சம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் செபஸ்டியன் வெட்டல், மேலதிக நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என, சர்வதேச ஓட்டோமொபைல் சம்மேளனம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காருக்குப் பின்னால் நின்ற போது, தனது சக மெர்சிடீஸ் சாரதியான ஹமில்டனின் காரோடு, வெட்டல் மோதியிருந்தார். இதனால் அவருக்கு, 10 செக்கன்கள் நிறுத்திச் செல்லும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மீளாய்வு இடம்பெற்ற நிலையில், தனது நடவடிக்கை தவறானது என ஏற்றுக் கொண்ட வெட்டல், அது தொடர்பாக பகிரங்க மன…
-
- 0 replies
- 293 views
-