விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
லண்டன் செஸ்: ஆனந்த் சாம்பியன் டிசம்பர் 15, 2014. லண்டன்: லண்டன் கிளாசிக் செஸ் தொடரின், கடைசி போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆனந்த், முதன் முறையாக சாம்பியன் ஆனார். உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள 6 வீரர்கள் மட்டும் பங்கேற்ற கிளாசிக் செஸ் தொடர் லண்டனில் நடந்தது. ‘ரவுண்டு ராபின்’ முறையில் நடந்த இப்போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பேபியானோ காருணா (இத்தாலி), விளாடிமிர் கிராம்னிக் (ரஷ்யா), ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), மைக்கேல் ஆடம்ஸ் (இங்கி.,), அனிஸ் கிரி (நெதர்லாந்து) பங்கேற்றனர். முதல் நான்கு போட்டிகளை ‘டிரா’ செய்த ஆனந்த், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் மைக்கேல் ஆடம்சை சந்தித்தார். இதில் கறுப்பு காய்களு…
-
- 0 replies
- 634 views
-
-
ஸ்பெயின் கால்பந்து வீரர் டேவிட் சில்வா ஓய்வு டேவிட் சில்வா. ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் டேவிட் சில்வா. 32 வயதான சில்வா, தற்போது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேற்றம் கண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேவிட் சில்வாவும் ஓய்வு …
-
- 0 replies
- 268 views
-
-
இவானோவிக் அதிர்ச்சி தோல்வி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் உலகின் 5ஆம் நிலை வீராங்கனையான அனா இவானோவிக் (செர்பியா) ஆரம்ப சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். செக் குடியரசுவைச் சேர்ந்த லூசி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இவானோவிக்கை வீழ்த்தினார். 3ஆம் நிலை வீராங்கனையான ஹிமோனா ஹெலப் (ருமேனியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை கர்னை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேவேளை இந்திய வீரர் யூசிபாம்ப்ரி முதல் சுற்றிலேயே வெளியேறினார். 6ஆம் நிலை வீரர் ஹெண்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் பாம்பரியை வீழ்த்தினார். http:/…
-
- 0 replies
- 422 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷகீல் அக்தர் பதவி, பிபிசி உருது.காம், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’க்கு வருமான வரித்துறை சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை வரியைக் கோரி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸை எதிர்த்து 'ட்ரீம் 11' நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. வரி நோட்டீஸ் வந்ததை அடுத்து, 'ட்ரீம் 11' நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிந்தன. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேஸினோ போன்றவற்றுக்கு இந்திய அரசு 28 சதவிகித வரி விதிக்கிறது என்பது நினைவில் கொ…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
ஓய்வை அறிவித்தார் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி 2010ஆம் ஆண்டு டெஸ்டிலும், இரு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இப்போது 20 ஓவர் அணிக்கு தலைவராக இருந்து இருபது ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அப்ரிடி அடுத்த ஆண்டுடன் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அப்ரிடி கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியுடன் 20 ஓவர் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டு விடுவேன். இத்துடன் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்று விடும். ஆனாலும் இங்கிலாந்தில் கழ…
-
- 0 replies
- 702 views
-
-
வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஜூலை 23, 2007-ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனி விளாசுவதை பார்க்கிறார் தற்போது ஓய்வு அறிவித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர். | கோப்புப் படம். குதிகால் தசைநார் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இங்கிலாந்து மற்றும் சசெக்ஸ் அணி விக்கெட் கீப்பர் மேட் பிரையர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இஷாந்த் சர்மா அபாரமாக வீச் இந்தியாவை வெற்றி பெறச் செய்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பிரையர். இதனையடுத்து 2014 சீசன் முழுதும ஆட முடியாத நிலை ஏற்பட்டது. 2015-இல் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழையல…
-
- 0 replies
- 309 views
-
-
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்கு: ஸ்ரீசாந்த் உட்பட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் கோப்புப் படம். ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் கிரிக்கெட் வீர்ர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீட் சவான் உட்பட 36 பேருக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டது. அதாவது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு…
-
- 0 replies
- 240 views
-
-
தண்டனையிலிருந்து தப்பினார் ஹைடன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் [29 - February - 2008] ஹர்பஜன் சிங்கை விமர்சித்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் மத்யூ ஹைடனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை முறைப்படி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அபராதம் மற்றும் தண்டனையிலிருந்து ஹைடன் தப்பிவிட்டார். இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களிடையே வாக்குவாதம் தொடர்கிறது. சிட்னி டெஸ்டின் போது அவுஸ்திரேலியாவின் சைமண்ட்சை நோக்கி ஹர்பஜன் `குரங்கு' என திட்டியதாக பிரச்சினை வெடித்தது. பின்னர் சிட்னியில் நடந்த முக்கோண ஒரு நாள் போட்டியின் போது இஷாந்த் - சைமன்ட்ஸ் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதேபோட்டியில் ஹர்பஜனைப் பார்த்து `முட்டாள் பையன்' என்று அடிக்கடி திட்டியதாக ஹைடன் மீது இந்திய அணியினர…
-
- 0 replies
- 904 views
-
-
அரை குறை ஆடை அணிந்து வந்தால் பேட்டியை மறுத்தார் அம்லா February 07, 2016 தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹசிம் அம்லா, தொகுப்பாளினி முறையாக ஆடை அணியாத காரணத்தினால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இரு அணிகள் மோதிய 5வது ஒருநாள் போட்டியின் போது, இவரை பேட்டி எடுப்பதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் Low Neck Top-யை அணிந்திருந்த காரணத்தினால், அம்லா பேட்டி கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து பேட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெள…
-
- 0 replies
- 622 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடைரை தனதாக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்த்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந் நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரணடாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு நியூஸிலாந்து அணி 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 319 ஓட்டங்களினால் …
-
- 0 replies
- 385 views
-
-
வலன்சியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அடலான்டா: டொட்டன்ஹாமுக்கு நெருக்கடி By Mohamed Shibly - ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (20) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் RB லீப்சிக் டிமோ வோர்னரின் பெனால்டி கோல் மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் ஜெர்மனி கழகமான லீப்சிக் 1-0 என வெற்றியீட்டியது. லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி டொட்டன்ஹம் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…
-
- 0 replies
- 501 views
-
-
பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே முழுமையான இரு தரப்பு தொடர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் நடந்தது. அதன்பின் 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 6 தொடர்களில் விளையாட இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அனைத்து முன்னணி அணிகளும் தவிர்த்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக…
-
- 0 replies
- 414 views
-
-
கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை கபடி உலகக்கோப்பை அதிகாரபூர்வ லோகோ. | பிடிஐ. 12 நாடுகள் பங்கேற்கும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இருநாட்டு உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகளும் ஈரான் அணி புதிய அணியான அமெரிக்க அணியுடனும் மோதுகின்றன. பாகிஸ்தான் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறும்போது, “இர…
-
- 0 replies
- 372 views
-
-
'உயர்ந்து நிற்கிறார் சான்ட்னெர்' இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓரளவு முன்னேற்றமான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், அத்தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடினமான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், மிகவும் சிறப்பான இந்திய அணிக்கெதிராக 2-2 என்ற நிலையில் காணப்பட்ட நிலைக்கு, சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். அது மிகவும் அற்புதமான செயற்பாடு. ஆனால், இறுதித் திறமை வெளிப்பாட்டைத் தாண்டிப் பார்க்க முடியாதுள்ளது" என்றார். 5ஆவது போ…
-
- 0 replies
- 614 views
-
-
இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் பெண்களுக்கான ஆசிய கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நாளை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன. முன்னர், இந்தியா மற்றும் பாக்., மோதிய லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எந்த நாடும் லீக் போட்டிகளில் வீழத்தவில்லை. http://www.vikatan.com/news/sports/74091-india-to-take-on-pakistan-in-finals.art
-
- 0 replies
- 259 views
-
-
ஆஸி. கிரிக்கெட் விஜயத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் இல்லை; தரங்க அல்லது சந்திமால் அணித்தலைவராகலாம் 2017-02-06 09:55:38 (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இம் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் வழமையான அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்கில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியில் அவசரமாக ஓட்டம் ஒன்றைப் பெற விளைந்தபோது மெத்யூஸ் உபாதைக்குள்ளானமை அனைவரும் அறிந்ததே. அவர் இன்னும் பூரண குணமடையாததால் அவுஸ்திரேலியா தொடரில் விளையாடமாட்டார் என்பது உறுதி செய…
-
- 0 replies
- 261 views
-
-
பாரீஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி படு தோல்வி சாம்பியன்ஸ் லீக் கால் பந்து தொடரின் குரூப் பிரிவு ஆட்டத்தில், முன்னனி அணியான பார்சிலோனா, பாரீஸ் அணியிடம் 0-4 என்ற கணக்கில் படு தோல்வியடைந்தது. பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, பாரீஸ் நகரில் நடந்த குரூப் போட்டியில், பாரீசை சேர்ந்த பி.எஸ்.ஜி அணியும், முன்னனி கால்பந்து அணியான பார்சிலோனா அணியும் பலப்பரிட்சை நடத்தின. இரண்…
-
- 0 replies
- 322 views
-
-
எலி, முள்ளம்பன்றி, கார்.. விநோத காரணங்களுக்காக தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள்! இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று மதியம் களத்தில் அதிக மாசு இருப்பதாகக் கூறி இலங்கை வீரர்கள் முகமுடி அணிந்து ஆடினர். லக்மல் உள்ளிட்ட சில இலங்கை வீரர்கள் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறி டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர். இதனால், அவ்வப்போது ஆட்டம் தடைபட்டது. இதேபோல கிரிக்கெட் வரலாற்றில் பல விநோத காரணங்களுக்காக ஆட்டம் தடைபட்டிருக்கிறது. அதன் விவரம்... * 1957 ஜூலை: இங்கிலாந்தில் நடந்த கவுன்டி கிரிக்கெட் போட்டியின் இடையே முள்ளம்பன்றி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்…
-
- 0 replies
- 432 views
-
-
சிற்றியை வென்றது யுனைட்டெட் Editorial / 2018 ஏப்ரல் 08 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 11:38 Comments - 0 Views - 13 இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து வந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றுள்ளது. தமது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்றால் நடப்பு பருவகாலத்தின் இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றியிருக்க முடியுமென்ற நிலையில், தற்போது பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு ஆகக் குறைந்தது இவ்வாரயிறுதிவரை காத்திருக்க வேண்டியுள்ளது. இப்போ…
-
- 0 replies
- 374 views
-
-
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக்தியில் யுவராஜ் சிங் இந்திய அணியில் இனி தான் தேர்வு செய்யப்படாமலே போகக்கூடிய வாய்ப்பிருப்பதாக விரக்தியடைந்துள்ள யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2013-ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார். இந்திய அணியில் தனது வாய்ப்புகள் பற்றி அவர் கூறும்போது, “இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே எனது இலக்கு. அணியில் தேர்வு செய்யப்படாத போது ஏமாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் எனது ஆட்டமும் சீராக இல்லை. ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டது. மாற்றங்கள் வரலாம். நான் மீண்டும் அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையெனில் வாழ்க்கை வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும். என்னால் …
-
- 0 replies
- 655 views
-
-
கிறிஸ் கெயில் பறக்கவிட்ட ‘சிக்ஸர்களுக்கு பலன்’ - ஷாகித் அப்ரிடியின் சாதனை சமன் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடர் விளையாட இருப்பதால், அதில் அடிக்கும் சிக்ஸர்கள் மூலம் உலகிலேயே அதிகமான சிக்ஸர்கள் அடிக்கும் வீரராக கெயில் வலம் வரப்போகிறார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசி மற்றும் 3-வது போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் சனிக்கிழமை நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய…
-
- 0 replies
- 586 views
-
-
'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங் ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறு…
-
- 0 replies
- 338 views
-
-
04 OCT, 2023 | 10:25 AM ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந் 28 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/166031
-
- 0 replies
- 528 views
- 1 follower
-
-
பிலெண்டர் தெரிவில் சர்ச்சை; மறுக்கிறது தென்னாபிரிக்கா உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் பதினொருவரில் இன அடிப்படையிலான தெரிவாகவே வெரோன் பிலெண்டர் உள்ளடக்கப்பட்டதாக பரவிவரும் கருத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் கிறிஸ் நென்ஸானி மறுத்துள்ளார். அவரது கருத்தையே அணியின் பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவும், அணித்தலைவர் ஏ.பி.டி.வில்லியர்சும் வழிமொழிந்துள்ளனர். இனவெறிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சர்வதேச விளையாட்டுக்களிலிருந்து தடைசெய்யப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்து, பல வருடங்களுக்குப் பின்னரே மறுபடியும் சர்வதேச விளையாட்டுத் தளத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரான தென்னாபிரிக்க அரசின் அவதானமான நடவடிக்கைகள் விளையாட்டுத…
-
- 0 replies
- 314 views
-
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லின் சூப்பர் கேட்ச் (வீடியோ) இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 299 ரன் அடித்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் அற்புதமான முறையில் பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.லியாம் பிளங்கெட் அடித்த பந்து சிச்சராக மாற இருந்தது. இந்த சமயத்தில் அந்தரத்தில் பாய்ந்து சென்று மேக்ஸ்வெல் அற்புமாக கேட்ச் செய்து அவரை அவுட் செய்தார். http://www.vikatan.com/news/article.php…
-
- 0 replies
- 168 views
-