Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அமெரிக்க கண்டத்தின் சிறந்த வீரராக ரொட்ரிகஸ் 27-12-2014 அமெரிக்க கண்டத்தின், 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக கொலம்பிய நாட்டின் வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து வித விளையாடுக்களிலும் இவர் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வருட உலகக்கிண்ண தொடரில் கூடுதலான கோல்களை அடித்து தங்க பாதணி விருதை வென்றவர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ். உலகக்கிண்ண பெறுதியை தொடர்ந்து இவர் ஸ்பெயினின் முன்னணிக் கழகமும் உலகின் பணக்கார கழகமும் என போற்றப்படும் ரியல் மாட்ரிட் கழகத்தில் இணைக்கப்பட்டு, அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்கின்றார். இதேவேளை சிறந்த அணியாக ஆர்ஜன்டீனா காற்ப்பந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகக்கிண்ண த…

  2. சங்காவின் சாதனையை முறியடித்தார் டோனி 27-12-2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் கூடுதலான ஸ்டம்ப் முறையிலான ஆட்டமிழப்புக்களை செய்தவர் என்ற சாதனையை இன்று முறியடித்தார். அவுஸ்திரேலியா வீரர் மிச்சல் ஜோன்சனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணியின் குமார் சங்ககாராவுக்கு சொந்தமாக இருந்த இந்த சாதனையை தனதாக்கினார். 460 இன்னிங்சில் 134 ஸ்டம்புகளை செய்துள்ளார் டோனி. 485 இன்னிங்சில் 133 ஸ்டம்புகளை செய்துள்ளார் குமார் சங்ககார. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் ரொமேஷ் களுவிதாரண. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கார 724 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டோனி 638 …

  3. யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம் யாழில் உள்ள அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=124023754426102012#sthash.H2o8hcRw.dpuf

  4. Boxing Day Tests: மூன்று டெஸ்ட் போட்டிகள் ஒரு பார்வை 25-12-2014 04 நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட். தென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட். இந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று நாளைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன. ஆனால், கிரைச்ட்சேர்ச்சில் நாளை ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கையின…

  5. சிம்பாவே வீரருக்கு தடை 25-12-2014 சிம்பாவே அணியின் பந்துவீச்சாளர் மல்கொம் வொலர், பந்துவீச முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபையினால் தடை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வொலர், விதிமுறைகளை தாண்டி வீசுவதாக முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது பந்துவீச்சு பாணியை பரிசோதனை செய்த நிபுணர்கள், அவரின் ஓஃப் ஸ்பின் பந்துவீச்சுக்கள் யாவும் 15 பாகை கோணத்தை விட அதிகமாக இருப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/136406#sthash.finQ10tv.dpuf

  6. அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கு இல்லை: ஹெய்டன் அயல்நாட்டு மைதானங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்கிறார் முன்னாள் ஆஸி. தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன். தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியில் வந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்பதே அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். ஒன்று டெஸ்ட் போட்டியின் முதல் நாளை மோசமாகத் தொடங்குகின்றனர், அல்லது முடிவுத் தருணங்களில் கோட்டை விடுகின்றனர். ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை அவர்கள் இழக்கின்றனர். மேலும், அந்த அணி எழுப்பும் புகார் சத்தங்களும் நன்றா…

  7. உலகக் கிண்ணமும் பந்துவீச்சுத் தடையும் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்துக்குள் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் முறையற்ற விதத்தில் பந்துவீசுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். 2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சாமுவேல்ஸில் ஆரம்பித்து ஷேன் ஸிலிங்போர்ட் (மேற்கிற்திய தீவுகள்), சசித்ர சேனநாயக்க (இலங்கை), கேன் வில்லியம்ஸன் (நியூசிலாந்து), சயீட் அஜ்மல் (பாகிஸ்தான்), சொஹைக் ஹாசி (பங்களாதேஸ்), மல்கொல்ம் வோலர் (சிம்பாவே), பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் வரை தொடர்கிறது. இவர்களில் தற்போது சேனநாயக்க மற்றும் வில்லியம்ஸன் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவது புதிதில்லை என்றாலும், உலகக் …

  8. நல்லது, கெட்டது இரண்டும் கலந்த 2014-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனை 264 ரன்கள், எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பும் அயல்நாட்டுத் தோல்விகள், ஐபிஎல்-6-ல் குறித்த நீதிமன்ற வழக்குகள், பிசிசிஐ-யிலிருந்து சீனிவாசன் விலகியிருக்கக் காரணமான ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகள் என்று 2014-ல் இந்திய கிரிக்கெட் பன்முகம் எய்தியுள்ளது. ஈடன் கார்டனில் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச 264 ரன்கள் சாதனை இந்த ஆண்டின் பிரதான கிரிக்கெட் உற்சாகமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அணி 264 ரன்கள் எடுத்தால் அது வெற்றிக்கான ஸ்கோர் என்ற நிலை மாறி ஒரு தனிப்பட்ட வீரர் 264 ரன்கள் என்பதாக ஒருநாள் கிரிக்கெட் வளர்ச்சி கண்…

  9. மோசமாக நடந்து கொண்ட ரசிகரை ஓய்வறைக்கு அழைத்து அறைந்த யூசுப் பத்தான் ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்தில் வீரர்கள் மீது கடும் வசை வார்த்தைகளை பிரயோகித்த ரசிகரை கிரிக்கெட் வீர்ர் யூசுப் பத்தான் 2 அறைவிட்டார். பரோடா, ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மோசமாக நடந்து கொண்ட ரசிகரை யூசுப் பத்தான் ஓய்வறைக்கு அழைத்து 2 முறை அடித்தது பரபரப்பாகியுள்ளது. வதோதராவில் நடைபெறும் இந்த போட்டியின் போத் யூசுப் பத்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் கடுமையான கெட்ட வார்த்தைகளால் ஏசியுள்ளார். பத்தான் மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பேட்டிங் செய்யும் போதும் அதே ரசிகர் தனது கெட்ட வசைகளை கடுமையாக ஏவியுள்ளார். இது குறித்து …

    • 5 replies
    • 601 views
  10. இதுதான் உலகம்: குக் வேதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்காத நிலையில் அலாஸ்டர் குக், தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதால் வருத்தமும் வெறுப்பும் அடைந்துள்ளேன். சிலநேரங்களில் இப்படி நடக்கும். இதுதான் உலகம். இதிலிருந்து நாம் மீண்டுவரவேண்டும். இங்கிலாந்து அணி வீரர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன். ஜனவரி 2016 வரை இங்கிலாந்து அணி 17 டெஸ்டுகளில் ஆடவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்கள் முக்கியமானவை. இந்தத் தொடர்களில் நன்றாக விளையாடி மீண்டும் கிரிக்கெட்டை விரும்ப ஆரம்பி…

  11. வணக்கம் எல்லோருக்கும் ! பலருக்கு இது முகத்தைச் சுளிக்க வைக்கலாம், சிலருக்கு மகிழ்வாக இருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்ததை எழுதும் உரிமை எனக்கிருக்கிறதென்று நான் நம்புவதால் இதை எழுதுகிறேன். இன்றைய கிரிக்கெட் உலகில் பல வீரர்களைப் பார்க்கிறோம். எதிரணிப் பந்துவீச்சைத் துவசம் செய்து தனது அணியை வெற்றியை நோக்கிக் கொண்டுபோகும் தனிமனித செயல்களை அவ்வப்போது காண்கிறோம். அந்த துடுப்பாட்டக்காரர் மைதானத்திற்குள் நுழைந்தாலே ரசிகர்கள் கூச்சலிடுவதும், வர்ணனையாளர்கள் உசாராகிவிடுவதும், களத்தடுப்பாளர்களும், பந்து வீச்சாளர்களும் கலக்கமடைவதும் நடக்கிறது. இப்படியான ஒப்பற்ற வீரர்கள் ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியாவின் டேவிட் வோர…

  12. சச்சினை முந்தியாச்சு டிசம்பர் 23, 2014. புதுடில்லி: சமூகவலைதளமான ‘டுவிட்டரில்’ அதிக ரசிகர்கள் பின்பற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை இளம் நட்சத்திரம் கோஹ்லி முந்தினார். ‘டுவிட்டரில்’ சச்சினை 48 லட்சத்து 69 ஆயிரத்து 849 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். கோஹ்லியை 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்தப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் தோனி (33,27,033 லட்சம்), சேவக் (31,80,081 லட்சம்) முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர். 5 மற்றும் 6வது இடம் முறையே யுவராஜ் (27,23,090 லட்சம்), ரெய்னா (26,17,828 லட்சம்) வகிக்கின்றனர். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா 7வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களா…

  13. Started by நவீனன்,

    தோனி ‘10’ டிசம்பர் 23, 2014. பெங்களூரு: உலக கிரிக்கெட்டில் தனது 10 ஆண்டுகள் பயணத்தை பல்வேறு சாதனைகளுடன் நிறைவு செய்தார் தோனி. கடந்த 2004ல் டிச., 23ல் வங்கதேசத்துக்கு எதிரான சிட்டகாங் ஒருநாள் போட்டியில், தனது 23வது வயதில் இந்திய அணியில் அறிமுகமானார் தோனி. தற்போது 10 ஆண்டுகள் முடிந்து 11வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதுவரை 89 டெஸ்ட், 250 ஒருநாள், 50 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முதல் கேப்டன்: 2007ல் இந்திய ‘டுவென்டி–20’ அணிக்கு கேப்டனான இவர், முதல் தொடரிலேயே, உலக கோப்பை வென்று தந்தார். 1983ல் கபில்தேவ் சாதித்த, 28 ஆண்டுக்குப் பின் 2011ல் 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன் டிராபி (மினி உலக கோப்பை) வென்றுள்ளார். இந்த மூன்றிலும் சாம்ப…

  14. ஜேம்ஸ் பேட்டின்சன் வீசிய பவுன்சர் தாக்கியதில் நடுங்கிப் போன வாட்சன் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் நெற்றிப்பகுதியை தாக்க நடுங்கிப் போன வாட்சனை மருத்துவர் அழைத்துச் செல்லும் காட்சி. | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஆஸதிரேலிய வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் ஒன்று வாட்சனின் ஹெல்மெட்டைத் தாக்க வாட்சன் ஒருநிமிடம் ஆடிப்போனார். பிறகு மைதானத்தை விட்டு ஓய்வறைக்குத் திரும்பினார். பேட்டின்சனும் மேலும் பயிற்சியைத் தொடராமல் வருத்தத்துடன் வெளியேறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மைதானத்திலேயே ஆஸி, அணி மருத்துவர் பீட்டர் பக்னர் முதலுதவி செய்ய பிறகு அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ஓய்வறைக்குத் திரும்பினார். மிகவும் வருத்தம…

  15. "மீசைக்கார" தவனுடன் சண்டை போட்ட "ரோஷக்கார" கோஹ்லி.. அமைதிப்படுத்திய "டைரக்டர்" ரவி சாஸ்திரி! பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா உடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதால் ரசிகர்கள் கடுப்பாக உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்குள் ஒரு குடுமி பிடி சண்டை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சண்டையை ஆரம்பித்து வைத்தவர் துணை கேப்டனான விராத் கோஹ்லி. அவர் போய் சண்டை போட்டது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனுடன். காரணம் - 2வது இன்னிங்ஸில் 4வது நாள் ஆட்டத்தின்போது காயம் காரணமாக கடைசி நேரத்தில் தவன் ஆட முன்வராததால். தவன் காயத்தை கடைசி நேரம் வரை சொல்லாமல் இருந்து கடைசியில் சொன்னதால் ஏற்பட்ட குழப்பத்தால் கோஹ்லியை திடீரென களம் இறக்க நேரிட்டு விட்டதாக கேப்டன் டோணி கூறியிருந்தார். ஆனால் அ…

  16. உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் : மிட்செல் ஜான்சன் எதிரணியை அச்சுறுத்த உளவியல் ரீதியான போர்முறை அவசியமானது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். ‘மிட்சல் ஜான்சன்: பவுன்சிங் பேக்’ என்கிற புதிய டிவிடியில் வேகப்பந்து வீச்சின் உத்திகள் பற்றி ஜான்சன் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிலநேரங்களில் ஆடுகளங்களில் மோசமாகப் பேசிவிடுகிறோம். சிலநேரங்களில் நாம் பேசுவது பேட்ஸ்மேனிடம் சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய கால்நகர்த்தல்களைப் பற்றி யோசிக்கவைக்கிறோம், அல்லது ஷார்ட் பந்து வீசுவதை அவர்கள் அறியும்படி செய்கிறோம். இவை எல்லாமே மனஉறுதியை தீர்மானிக்கும் விளையாட்டு. சிலநேரங்களில் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஒருவருக்…

  17. புவனேஷ்வருக்கு யோகம்! * யுவராஜ் சிங் புறக்கணிப்பு டிசம்பர் 22, 2014. மும்பை: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தத்தில் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தார். இவருக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். வரும் ஆண்டுக்கான 32 பேர் கொண்ட ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியானது. இதில் தோனி, அஷ்வின், கோஹ்லி, ரெய்னா ஆகியோருடன் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றார். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து, இவர் ‘ஏ’ பிரிவில் இருந்து நீக்கப்…

  18. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் டிசம்பர் 21, 2014. மாரக்கேஷ்: ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், சான் லாரன்சோ அணியை தோற்கடித்தது. மொராக்கோவில், ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான 11வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி, அர்ஜென்டினாவின் சான் லாரன்சோ அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் அணி சார்பில் ரமோஸ் (37வது நிமிடம்), பாலே (51வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி, ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான உலக கோப்பையில் முதன்ம…

  19. யாழின் தேவையை நிறைவேற்றவுள்ள துரையப்பா மைதானம் திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 யாழ்ப்பாணத்தின் தேவையாக இருந்த நவீன வசதிகளைக்கொண்ட விளையாட்டுமைதானம், தற்போது யாழ். துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மூலம் நிறைவேறவுள்ளது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனைவருக்கும் ஏற்றவிதத்தில் பொது மைதானமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கு விளங்குகின்றது. கழகங்கள் நடத்தும் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம் தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகள் வரை துரையப்பா மைதானத்தில் நடத்தப்படுகின்றன. விளையாட்டுப்போட்டிகள், கால்பந்தாட்ட போட்டிகள், ஹொக்கி போட்டிகள், களியாட்ட நிகழ்வுகள் என்பன இந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மைதானத்தின் தேவைகள் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தரம் உரிய முறையில் பேணப்படவில்லை…

  20. அப்ரிதி ஓய்வு எப்போது டிசம்பர் 21, 2014. கராச்சி: பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ அப்ரிதி, 34. இதுவரை 27 டெஸ்ட் (1716 ரன், 48 விக்.,), 389 ஒருநாள் (7870 ரன், 391 விக்.,), 77 சர்வதேச ‘டுவென்டி–20’ (1142 ரன், 81 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2010ல் டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெற்ற அப்ரிதி, தற்போது ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அப்ரிதி கூறியது: நல்ல நிலையில் இருக்கும் போதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனவே அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நட…

  21. டி.ஆர்.எஸ்., முறையை ஏற்குமா இந்தியா டிசம்பர் 21, 2014. புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அம்பயரின் தவறான முடிவுகள் சர்ச்சை கிளப்பின. இதனால், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சில நேரங்களில் அம்பயர்கள் தவறான தீர்ப்பு தருவர். இதனால் போட்டியின் முடிவே மாறிவிடும். இதை தடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையை கொண்டு வந்தது. இரு அணிகள் மோதும் தொடரில், ஏதாவது ஒரு அணி எதிர்ப்பு தெரிவித்தாலும் இதனை பயன்படுத்த முடியாது. இந்திய அணி துவக்கம் முதலே எதிர்த்து வருவதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ்., முறை பி…

  22. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். குறிப்பாக சைவ உணவு கிடைக்காமல் போனதால் இஷாந்த் சர்மா ரொம்பவே கொந்தளித்துப் போனாராம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னர் 5 டெஸ்ட் போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் பட்டு உயிரிழந்தார். இதனால் போட…

  23. ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து குக் நீக்கம்: இங்கிலாந்து அதிரடி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தலைமையேற்று நடத்தும் கனவு குக்கை பொறுத்தவரையில் தகர்ந்து போனது. அவர் நீக்கப்பட்டு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அலிஸ்டர் குக் ஒரேயொரு அரைசதம் மட்டுமே எடுத்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-5 என்று படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து. இதனையடுத்து குக் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இயன் மோர்கன் இங்கிலாந்தை வழி நடத்திச் செ…

  24. குக்கை நீக்க வேண்டும் : நாசர் குசைன் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-5 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டர் குக் மீது விமர்சனம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் குசைன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்திற்கு முன்பு ஒருநாள் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து அலிஸ்டர் குக்கை மாற்ற வேண்டும். அவர் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவராக இருக்கிறார். இளம் வீரருக்கு அணித் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றார். http://www.virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE…

  25. 2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டம்: லார்ட்ஸில் நடத்த பரிந்துரை 2019 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்குப் பரிந்துரை செய்துள்ளது. 2017 மகளிர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தையும் லார்ட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1975, 1979, 1983, 1999 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டங்கள் லார்ட்ஸில் நடைபெற்றுள்ளன. உலகக் கோப்பையின் அரை யிறுதி ஆட்டங்களை மான்செஸ்டர், பர்மிங்காம் (எட்பாஸ்டன்) ஆகிய நகரங்களிலும், தொடக்கப் போட்டியை ஓவலிலும் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.