விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக்: வங்கதேச பந்துவீச்சாளர் உலக சாதனை வங்கதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து உலகசாதனை நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீர்ராகக் களமிறங்கிய தைஜுல் இஸ்லாம் ஹாட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் வீரரானார் தைஜுல் இஸ்லாம். 22 வயதாகும் தைஜுல் இஸ்லாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 7 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே அணி 30 ஓவர்களில் 12…
-
- 1 reply
- 441 views
-
-
பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது- நியூஸி வீரர்களின் 'மனித நேயம்' சார்ஜா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. நியூசிலாந்து-பாகிஸ்தான் நடுவேயான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். நியூசிலாந்து பயிற்சியாளர் அறிவுரையின்படி பாகிஸ்தானின் 2வது இன்னிங்சில் பவுன்சரே வீசாமல் ஹியூக்ஸ்சுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் அர்ஜூன ரணதுங்க 2014-12-01 09:39:47 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இன்று தனது 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 18 வயது பாடசாலை மாணவனாக இருந்த அர்ஜூன ரணதுங்கவும் பங்குபற்றினார். இங்கிலாந்துடனான அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அர்ஜூன அரைச்சதம் (54) குவித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சார்பில் 93 டெஸ்ட் போட்டிகளில் 5105 ஓட்டங்களையும் 269 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 7456 ஓட்டங்களையும் குவித்த அர்ஜூன டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 79 விக்கெட்களையும் வீழ்த்தினார். 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட…
-
- 0 replies
- 506 views
-
-
சங்கா, மஹேலவுக்கு மெத்தியூஸ் புகழாரம் குமார் சங்கக்கார மற்றும் ஜெயவர்தன போன்ற மூத்த வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்திய தொடரின் போது நாங்கள் முழு நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் …
-
- 0 replies
- 376 views
-
-
‘பல்டி’ அடிக்க தடையா நவம்பர் 30, 2014. மும்பை: கால்பந்து போட்டிகள் கோல் அடித்தால் வீரர்கள் தலைகீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடும் ‘சோமர்சால்ட்’ முறைக்கு, தடை விதிப்பது குறித்து ‘பிபா’ யோசித்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (16) இருப்பவர் ஜெர்மனி வீரர் குளோஸ், 36. இவர் கோல் அடித்தவுடன் அப்படியே தலை கீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடுவார். இதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. தற்போது நடக்கும் ஐ.எஸ்.எல்., தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. இதில், தொடரின் முதல் கோல் அடித்தார் கோல்கட்டா வீரர் பிக்ரு. இதை விட, பிக்ரு ‘சோமர்சால்ட்’ முறையில், ‘டைவ்’ அடித்தது தான் மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த …
-
- 0 replies
- 935 views
-
-
ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம் ஜெருசலம்: இஸ்ரேலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அம்பயராக இருந்த ஹிலல் ஆஸ்கர் தலையில் பந்து பட்டு மரணம் அடைந்துள்ளார். இஸ்ரேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹிலல் ஆஸ்கர்(55). இஸ்ரேலில் உள்ள துறைமுக நகரமான அஷ்தோதில் தேசிய லீக் சீசனின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஹிலல் அம்பயராக இருந்தார். அப்போது பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்து வேகமாக வந்து ஹிலலின் தலையில் பட்டது. இதில் கீழே விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம் ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரின் மறைவ…
-
- 2 replies
- 755 views
-
-
'சச்சின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்..' என செய்தி வெளியிட்ட ஆங்கில செய்தித்தாள்! ரசிகர்கள் ஆத்திரம் சென்னை: பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் குறித்த டிவிட்டுகளை செய்தியாக்கிய தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று, பிலிப் ஹியூக்ஸ்சுக்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரிண்ட் செய்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளது. பவுன்சர் பந்தால் தலையில் படுகாயத்துடன் போராடி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தனர். 'சச்சின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்..' என செய்தி வெளியிட்ட ஆங்கில…
-
- 1 reply
- 907 views
-
-
குழந்தைப் பருவம் முதல் உலக சாம்பியன் வரை.. - கார்ல்சனைப் பற்றிய ஒரு நிருபரின் அனுபவம் செஸ் விளையாட்டில் மீண்டும் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சரித்திரம் படைத்திருப்பதாகக் கூறுகிறார் ராக்கேஷ் ராவ். கார்ல்சன், பத்து வயது குழந்தை பருவத்தில் களம் இறங்கியது முதல் அவரைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார் ‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட்ஸ்டார்’நாளிதழின் மூத்த செய்தியாளரான ராக்கேஷ் ராவ். அவர் தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார். முதன் முதலில் கார்ல்சன் நவம்பர், 2004-ல் செஸ் விளையாட ஸ்பெயின் வந்த போது அவரை அனைவரும் அதிசயமாக பார்த்தனர். கார்ல்சன் ஆடிய ஆட்டத்தைவிட குழந்தை முகம் மாறாத அவரை பார்க்கவே அனைவருமே ஆர்வம் காட்டினர். புகைப்படக்காரர்களும் போட்டி போட்டு…
-
- 0 replies
- 368 views
-
-
எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆயிடுச்சே..! சென்னை: எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆகிவிட்டது.. என்று புலம்பும் நிலையை உருவாக்கிவிட்டனரே என்ற ஆதங்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 அணிகள் அப்போது களம் கண்டன. 'ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர்' என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர்தான் மகேந்திரசிங் டோணி. சென்னை அணியின் கேப்டனாக அப்போது முதல் டோணிதான் சென்னையின் கேப்டனாக தொடருகிறார். பவுலிங் மட்டும்தான் வீக்கு இந்திய அணிக்கு பல மகுடங்களை சூட்டிய டோணி, சென்னையையும் டாப் அணியாக கொண்டுவர தவறவில்லை. பவுலிங் எல்லா சீசனிலும் சொதப்பலாகவே அமைந்திருந்தாலும், ம…
-
- 0 replies
- 610 views
-
-
ஹியூக்ஸின் மறைவு எமது அணிகளை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: மெத்யூஸ், குக் கூட்டாக தெரிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹியூஸின் மறைவு தங்ளது அணிகளைப் பெருந்துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர்அலஸ்டெயார் குக்கும் தெரிவித்தனர். இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தொடர்பான ஆயத்தங்கள் குறித்து செய்தியாளர்ளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் இன்று பகல் நடைபெற்றபோது இரண்டு அணிகளிதும் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறினர். ஏஞ்சலோ மெத்யூஸ் 'பிலிப் ஹியூஸின் மறைவு குறித்த செய்தியை நேற்று காலை அறிந்தபோது பயிற்சியில் ஈட…
-
- 0 replies
- 304 views
-
-
சம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி. சைப்ரஸின் நிகோஸியா நகரில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணியும் ஏபோல் நிகோஸியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் கோலடித்த மெஸ்ஸி 72 கோல்களுடன் சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இவரது சாதனைக்கு முன்னதாக ஸ்பெயினின் ராவ்ல் 71 கோல்கள் (142 ஆட்டங்கள்) அடித்ததே சாதனையாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின் லீக்கில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்த மெஸ்ஸி தற்போது அடுத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். http://onlineuthayan.com/News_More.php?id=749733…
-
- 0 replies
- 467 views
-
-
மைல்கல்லை எட்டிய சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சங்கக்கார 450 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மொத்தமாக 452 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து இரண்டாம் இடத்திலுள்ளார். முதலிடத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 472 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். சங்கக்காராவின் 450 ஆவது விக்கெட் ஜோ ரூட். ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்நிலையில் இங்கிலாந்து அணி 18 ஆவது முறையாக 300 ஓட்டங்களுக்கு மேல் உள்ள இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E…
-
- 0 replies
- 526 views
-
-
"கால்பந்து ராஜா" பீலே... ஐசியூவில் அனுமதி! பிரேசிலியா: கால்பந்து ஜாம்பவானும், பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனுமான பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீலேயின் உண்மையான பெயர் எட்சன் அரண்டெஸ் டோ நசிமென்டோ. பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனா கோலோச்சியவர். பீலேவுக்கு தற்போது 74 வயது ஆகிறது. கடந்த 13ம் தேதி பீலேவிற்கு சிறுநீரகக் கல் நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பீலேக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக திங்களன்று மீண்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பீலே. இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், பீலே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டதா…
-
- 1 reply
- 415 views
-
-
ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி! டோணிக்கும் குட்டு!! டெல்லி: பெட்டிங், பிக்ஸிங்கில் என பல முறைகேடுகளில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நீக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறியுள்ளனர். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாகவும் டோணி செயல்படுவது கவலைக்குரியதும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6வது ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான …
-
- 2 replies
- 3.2k views
-
-
முதல் டெஸ்ட் போட்டி பற்றி கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் வீரர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்கிறார் சுனில் கவாஸ்கர். “விளையாடுவது என்பது கடினம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, ஆனாலும் எந்த வீரரும் விளையாடும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் விளையாடுவதற்கான மனநிலை இருக்காது. நியூசவுத்வேல்ஸ்-தெற்கு ஆஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது. ஆகவே முதல் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதா வேண்டாமா என்பது பற்றி வாரியங்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும். பிலிப் ஹியூஸ் மரணம் ஆழமான துயரங்களை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரர் பற்றியு…
-
- 0 replies
- 400 views
-
-
கிரிக்கெட்டில் தொடரும் படுகாயங்களும், மரணங்களும்! ஜென்டில்மேன் விளையாட்டின் சோகம் சென்னை: பிலிப் ஹியூக்ஸ் தலையில் காயம் பட்டு மரணமடைந்துள்ள நிலையில் கிரிக்கெட்டில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. பல நேரங்களில் படுகாயங்களும், சில நேரங்களில் வீரர்களின் உயிரையும் இதுபோன்ற விபத்துகள் பறித்துள்ளன. 1932-33ல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்பீல்ட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்ட் லார்வூட் பவுன்சரால் ஏற்பட்ட காயத்தால் மண்டை ஓடு விரிசலடைந்தது. அந்த காலகட்டத்தில் பாடிலைன் எனப்படும் உடலை நோக்கி ஆக்ரோஷமாக பந்து வீசி தாக்கிக்கொள்ளும் நிலை இருந்தது. நாரி கான்ட்ராக்டர் தப்பினார் 1960ல் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச…
-
- 2 replies
- 1.5k views
-
-
மும்மூர்த்திகளுக்கு மகத்தான பிரியாவிடை வழங்க உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் அணிதிரள வேண்டும்: லஹிரு திரிமான்ன 2014-11-27 10:12:00 இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் 'மும்மூர்த்தி'களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, திலக்கரட்ன டில்ஷான் ஆகியோர் தங்களது தாய்நாட்டில் விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின்போது இரசிகர்கள் அவர்களுக்கு கௌரவமானதும் மகத்தானதுமான பிரியாவிடை அளிப்பர் என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக இங்க நடைபெறும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவர்கள் மூவரும் சொந்த மண்ணில் விளையாடும் கடைசி தொடராக அமையும் எனக் கருதப்படுகின்றது. ஷஷஅவர்கள் மூவரும் இங்கு விளையாடும் கடைசி தொடராக இங்கிலாந்துடா…
-
- 0 replies
- 486 views
-
-
யாழ். மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட கால்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் நடத்திய மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியது. மைலோ கிண்ண சுற்றுப்போட்டிகள் கடந்த இரண்டு வார காலமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வந்தன. சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (23) அதே மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியை எதிர்த்து வடமராட்சி நவிண்டில் கலைமதி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் சென்.மேரிஷ் அணியினர் முதல் கோலை போட்டனர். அணியின் அருள்ராசா யூட் முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியாட்டம் அந்த ஒரு கோலுடன் முடிவுற்றது. இரண்டாவது…
-
- 0 replies
- 361 views
-
-
உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெற ஹர்பஜன் இலக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தனது கேப்டன்சி மூலம் இறுதிப் போட்டி வரை அழைத்துவந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது, “நான் உலகக் கோப்பை போட்டிகளுக்கு திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எந்த ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான ஒன்று, நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். தினமும் நான் விழித்தவுடன் நினைப்பதெல்லாம் உலகக் கோப்பைக…
-
- 0 replies
- 865 views
-
-
இடது கை வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சரில் அடிபட்டு மயக்கமடைந்தார். | படம்: ஏ.எஃப்.பி. மயங்கிய நிலையில் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லபப்டும் பிலிப் ஹியூஸ். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி…
-
- 33 replies
- 2.5k views
-
-
முறையற்ற பந்துவீச்சின் மீதான நடவடிக்கை ‘சதி’ அல்ல: ஐசிசி பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை விட்டெறிவதன் மீதான ஐசிசி நடவடிக்கையில் சதி எதுவும் இல்லை என்று தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். 2015 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இத்தகைய தருணத்தில் அணிகளின் முன்னணி பவுலர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மீது இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதில் ‘சதி’ நடப்பதாக கிரிக்கெட் அரங்கில் சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறும்போது, “விதிமுறைகளை ‘வளைக்கும்’ (சிலேடைக்கு மன்னிக்கவும்) பவுலர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக…
-
- 0 replies
- 347 views
-
-
கிரிக்கெட் போட்டிகளில் விசித்திரமான ஆட்டமிழப்புகள், நடுவர்களின் தீர்ப்புகள், இப்படி பல நிகழ்வுகளை பகிரலாம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டேல் ஸ்டெய்னின் வேகத்தில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லின் மட்டை உடைந்தது. http://www.dailymotion.com/video/x2at9cx_dale-steyn-broke-maxwell-s-bat-usm-cricket-blogspot-com_sport
-
- 34 replies
- 2.8k views
-
-
‘அழகிய’ ஆபத்து நவம்பர் 23, 2014. கால்பந்து களத்தில் பிரபல ‘மாடல்’ கிளாடியா, நடுவராக களமிறங்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பெண் நடுவர்கள் இல்லை. இருப்பினும், சியான் மேசே–எல்லிஸ், 29, என்பவர், நீண்ட நாட்களாக ‘லைன்’ நடுவராக செயல்பட்டு வருகிறார். ஆண்கள் கால்பந்து போட்டிகளில் முதன் முறையாக நடுவராக களமிறங்கிய பெருமை, ஜெர்மனியின் பிபியானா ஸ்டெயின்ஹாஸ், 35, என்பவருக்கு உண்டு. சமீபத்தில் பேயர்ன் முனிக், மான்சென்கிளாடுபேக் அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. அப்போது கூடுதல் நேரம் வழங்குவதில் நடுவர் பிபியானாவுடன் மோதலில் ஈடுபட்டார் பேயர்ன் அணி மானேஜர் குவார்டியலோ. அப்போது, பெண் தானே என…
-
- 7 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=lw2m-iU8gKE காணொளியை, இறுதி வரை பார்க்கவும்.
-
- 6 replies
- 771 views
-
-
போர்ம்யூலா 1 சம்பியன் ஹமில்டனா? ரொஸ்பேர்கா? அபு தாபி குரோன் ப்றீ பந்தயம் தீர்மானிக்கவுள்ளது இவ் வருடம் போர்ம்யூலா 1 குரோன் ப்றீ சம்பியன் யார் என்பதை நாளை நடைபெறவுள்ள இறுதிக் கட்டமான அபுதாபி குரோன் ப்றீ காரோட்டப் போட்டி தீர்மானிக்கவுள்ளது. இறுதிக் கட்டப் போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு வழமையான புள்ளிகளுக்கு பதிலாக இரட்டிப்பு மடங்கு புள்ளிகள் வழங்கப்படுவதால் தற்போது 17 புள்ளிகள் வித்தியாசத்துடன் முதலிரு இடங்களில் உள்ள லூயிஸ் ஹமில்டனுக்கும் நிக்கோ ரொஸ்பேர்குக்கும் இடையில் சம்பியனுக்கான கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருவரும் மெர்சிடெஸ் அணி சார்பாக போட்டியிடுகின…
-
- 2 replies
- 451 views
-