விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் டோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதால், அதற்கு பதிலாக, நவம்பரில், இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற்றது. இதன்படி, டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டு கோஹ்லி, இத்தொடருக்கான கேப்டனாக்கப்பட்டுள்ளார். டோணிக்கு பதிலாக விருத்திமான் ச…
-
- 0 replies
- 978 views
-
-
ஈடன் கார்டன் மைதானத்துக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்…
-
- 0 replies
- 437 views
-
-
லார்ட்ஸில் டி-சர்ட்டைக் கழற்றி சுழற்றியது தவறுதான்: கங்குலி 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்தை வென்ற பிறகு தனது சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. அப்போது அது ஒரு சர்ச்சையைக் கிளப்பினாலும் அதற்கு முந்தைய தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் பயணம் செய்து ஒருநாள் தொடரை சமன் செய்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளிண்டாப் தனது சட்டையை மைதானத்திலேயே கழற்றினார். பிளிண்டாஃபின் இந்தச் செயலுக்கு பதிலடியாக கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையைக் கழற்றி ஆக்ரோஷமாகச் சுழற்றியதாகவே அப்போது பார்க்கப்பட்டது. இந்நிலையில், "2002-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தை வென்ற பிறகு, நான் லார்ட்ஸ் மைதானத்தின் என டி-சர்டை கழற்றி ஆக்ரோஷமாக சுழற்றியது …
-
- 0 replies
- 533 views
-
-
உலக பெண்கள் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை செரீனா வெற்றி உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளும் முடிவடைந்த பிறகு ஆண்டின் இறுதியில் உலக சாம்பியன் ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலக தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒற்றையர் பிரிவில் பங்கேற்றுள்ள 8 வீராங்கனைகளும் ‘ரெட்’, ‘ஒயிட்’ என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ரெட்’ ப…
-
- 0 replies
- 363 views
-
-
யாழ்.மாவட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுத்த பயிற்சி முகாம் இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 13, 14, 15 வயதுப் பிரிவு கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த பயிற்சி முகாமில் கொழும்பில் இருந்து வருகைதந்த பயிற்றுவிப்பாளாகள் களத்தடுப்பு பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் தொடர்பில் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர். யாழ்.மாவட்டப்பாடசாலைகளைச் சேர்ந்த முப்பது வீரர்கள் இப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/10/20/%E0%AE%AF%E0%AE%…
-
- 0 replies
- 470 views
-
-
மரணத்தில் முடிந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டம் மிஜோரம் கால்பந்து வீரர் பீட்டர் பியக்சாங்சுலா தான் அடித்த கோலைக் கொண்டாட குட்டிக்கரணங்கள் அடித்தார். இது அவரது மரணத்தில் போய் முடிந்துள்ளது. பீட்டர் பியக்சாங்சுலா தனது அணிக்கு சமன் கொடுத்த தனது கோலைக் கொண்டாடினார். குட்டிக்கரணங்கள் அடித்தார், இதில் அவரது முதுகுத் தண்டு கடும் சேதமடைந்தது. வலியில் துடித்த அவரை ஐஸ்வால் சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் எந்த வித சிகிச்சையும் பலனளிக்காமல் அவர் உயிர் நேற்று பிரிந்தது. இவருக்கு வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது. மிஜோரம் பிரிமியர் லீக் போட்டியில் பெத்லஹம் வெந்த்லாங் கால்பந்து கிளப்பிற்காக ஆடிய பீட்டர், தன் அணிக்காக முதல் கோலை அடித்து சமன் செய்தார். அந்த மகிழ்ச்சித் தி…
-
- 1 reply
- 791 views
-
-
ரவி சாஸ்திரியின் அணுகுமுறையும் உலகக் கோப்பை கனவும்! திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் இந்திய கிரிக்கெட் ‘ரவி சாஸ்திரி காலகட்டம்’ என்ற ஒன்றை விரைவில் காணும் என்று 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் பத்தியில் கிரிக்கெட் எழுத்தாளர் சுரேஷ் மேனன் கூறுகிறார். அவர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: டைகர் பட்டோடிக்குப் பிறகு ஒரு கேப்டனாகவே வளர்த்தெடுக்கப்பட்ட ரவி சாஸ்திரி ஏன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டன்சி செய்தார் என்பது எனக்கு தர்க்கபூர்வமாகத் தெரியவில்லை. அந்த ஒரு போட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, அதில் இந்தியா வெற்றி பெற்றது. ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிராக அண்டர்-19 அணியை தலைமையேற்றுச் சென்ற காலக்கட்டத்திலேயே அவரை ஒரு லீடர் என்றே அனைவரும் கருதி…
-
- 0 replies
- 454 views
-
-
ரெய்னா ‘ரெடி’ அக்டோபர் 19, 2014. டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சாதிக்க ரெய்னா தயாராக உள்ளார். இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’ வீரர் ரெய்னா, 27. குறைந்த ஓவர் போட்டியில் அசத்தும் இவர், சர்வதேச ‘டுவென்டி–20’, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் என, மூன்றிலும் சதம் அடித்துள்ளார். ஆனால், டெஸ்டில் மட்டும் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். கடைசியாக 2012, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் (ஆக., 31) விளையாடினார். இதன் பின், ரோகித் சர்மாவிடம் தனது இடத்தை பறிகொடுத்தார். திடீர் அதிர்ஷ்டம்: தற்போது சிறப்பான ‘பார்மில்’ உள்ள இவருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், ரோகித் சர்மா காயம் காரணமாகத்தான் விலகியுள்ளார். இ…
-
- 0 replies
- 442 views
-
-
உலக கோப்பை பைனலில் இந்தியா–ஆஸ்திரேலியா: ரிக்கி பாண்டிங் கணிப்பு அக்டோபர் 19, 2014. புதுடில்லி: ‘‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரின் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும்,’’ என, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு (பிப்., 14 – மார்ச் 29) 11வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரை(50 ஓவர்) நடத்துகின்றன. இத்தொடரில் சாதிக்கக் கூடிய அணிகள் குறித்து பாண்டிங் கூறியது: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரின் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத அதிக வாய்ப்புகள் உள்ளன. சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான விஷயம். எனவே ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்லும் என நம்…
-
- 0 replies
- 573 views
-
-
மெஸ்சி 250: பார்சிலோனா வெற்றி அக்டோபர் 19, 2014. பார்சிலோனா: எல்பார் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 5–0 என வெற்றி பெற்றது. பார்சிலோனா வீரர் மெஸ்சி லா லிகா தொடரில் 250வது கோல் அடித்து அசத்தினார். ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் எல்பார், பார்சிலோனா அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுடும் அடிக்கப்படவில்லை. விறுவிறுப்பான இரண்டாவது பாதியில் சேவி(60வது நிமிடம்), நெய்மர் (72), மெஸ்சி (74) தலா ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனையை நோக்கி: இந்தப்போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம், லா லிகா வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள…
-
- 0 replies
- 385 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடம்; டாப்-10-ல் புவனேஷ் குமார் ஐசிசி ஒருநாள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் புவனேஷ் குமார் முதல் முறையாக டாப்-10-ல் நுழைந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளை 2-1 என்று வீழ்த்திய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 127 ரன்கள் எடுத்த கோலி, மொத்தம் 191 ரன்கள் எடுத்தார். இதனால் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹஷிம் ஆம்லாவை பின்னுக்குத் தள்ளி அவரது இடத்தை கோலி பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி மாறாமல் அதே 6-வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். ஷிகர் தவன் ஒர…
-
- 0 replies
- 348 views
-
-
தோனி அதிக மாற்றங்களை விரும்ப மாட்டார்; சேவாக், யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை: கங்குலி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேவாக், யுவராஜ் சிங் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. கங்குலி தலைமையில் செழித்து வளர்ந்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் இந்த முறை உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை, காரணம் தோனி அதிக மாற்றங்களை விரும்பமாட்டார் என்று கங்குலி கூறியுள்ளார். இந்தியா டுடே குழுமம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி புது டெல்லியில் செய்தியாளர்களிடம் தனது இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “சேவாக், யுவராஜ் ஆகியோர் நான் பார்த்ததில் மிகச்சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனா…
-
- 0 replies
- 383 views
-
-
அவுஸ்திரேலியாவின் புதிய விக்கெட் காப்பாளர் அரபு தேசத்திலிருந்து !!! மத்திய கிழக்கின் அனல் பறக்கும் பாலை ஆடுகளங்களில் பாகிஸ்தானிய அணியை கிரிக்கெட் போட்டிகளில் எதிர்கொண்டுவரும் அவுஸ்திரேலிய அணிக்கு நேற்றைய தினம் புதிய விக்கெட் காப்பாளரையும் வழங்கியுள்ளது அரபு தேசம். ஆமாம், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானிய A அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நான்கு நாள் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடி வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தங்கள் விக்கெட் காப்பாளர் ப்ரட் ஹடினை கொளுத்தும் பாலை வெயிலில் இருந்து காப்பாற்றும் நோக்கில் அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் விக்கெட் காப்பாளரான சக்லைன் ஹைடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பெருமையோடும், மகிழ்ச்சியோடும…
-
- 0 replies
- 605 views
-
-
சச்சின் - திராவிட் சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் உலக சாதனை ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து அதிக ரன்கள் எடுத்த வகையில் உலக சாதனையை வைத்திருந்த சச்சின் - திராவிட் சாதனையை தென் ஆப்பிரிக்க ஜோடி உடைத்துள்ளனர். நேற்று புளூம்ஃபாண்டீன் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் (லிஸ்ட் ஏ) டால்பின் அணியின் தொடக்க வீரர்களான மோர்னி வான் விக் மற்றும் கேமருன் டெல்போர்ட் ஜோடி 50 ஓவர்கள் முழுதையும் ஆட்டமிழக்காமல் விளையாடி 367 ரன்களைக் குவித்தனர். நைட்ஸ் அணிக்கு எதிராக நேற்று இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், திராவிட் ஜோடி இணைந்து 1999ஆம் ஆண்டு நியுசீலாந்துக்கு எதிராக ஐதரா…
-
- 0 replies
- 333 views
-
-
80 முறை 300 ரன்களைக் கடந்த இந்திய அணி: சுவையான தகவல்கள் தரம்சலாவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 330 ரன்களை எடுத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 80வது முறையாக 300 ரன்களைக் கடந்தது. 80 முறை 300 ரன்களைக் கடந்த அணி என்ற வகையில் அதிகம் 300 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே அணி இந்திய அணியே. ஆனாலும் 300 ரன்களுக்கு மேல் அடித்த போட்டிகளில் வெற்றி விகிதம் பார்த்தால் குறைவாகவே உள்ளது. அதாவது 10 அணிகளில் இந்தியா அல்லாத டாப் 6 அணிகள் 300க்கும் மேல் ரன்கள் எடுத்த போது அதிக வெற்றிகளை சாதித்துள்ளன. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் 300 ரன்களுக்கும் மேல் எடுத்தும் வெற்றி விகிதத்தில் குறைவாக உள்ள அணிகளாகும். 20வது ஒருநாள் ச…
-
- 0 replies
- 413 views
-
-
முரளி மச்சானுடன் இணைந்து பணியாற்றுவதில் மெக்ஸ்வெல் மகிழ்ச்சி 2014-10-17 கிரிக்கெட் விளையாட்டின் மேதையான முத்தையா முரளிதரனுடன் இணைந்து பணியாற்றுவது முழுமையான மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மெக்ஸ்வெல். தனது பேஸ்புக் பக்கத்தில் இக்கருத்தை வெளியிட்டுள்ள கிளென் மெக்ஸ்வெல், மச்சான் என்ற பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7330#sthash.S6gwuhRd.dpuf
-
- 7 replies
- 862 views
-
-
இந்தியத் தொடர்: நரேன் இல்லை சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டி20 போட்டி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் சுநீல் நரேனும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த நரேனின் பந்துவீச்சு குறித்து தொடர்ந்து 2-வது முறையாக சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தடை…
-
- 17 replies
- 806 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்கள் பங்கேற்பை பிசிசிஐ மறு பரிசீலனை பணமழை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டது பிசிசிஐ-யிடத்தில் கடும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் நிச்சயம் இந்த விவகாரம் எழுப்பப்படும். ஒரு சீசனுக்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்ய வேண்டும். கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், டிவைன் ஸ்மித், சுனில் நரைன் ஆகியோருக்கு ஐபிஎல் மூலம்தான் பணம் குவிந்துள்ளது. நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இவர்கள் மீது இந்திய ர…
-
- 0 replies
- 342 views
-
-
மே.இ.தீவுகளுக்குப் பதிலாக இலங்கை; 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டதையடுத்து இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷாந்தா ரணதுங்க இது குறித்துக் கூறும்போது, “கொள்கை அளவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறோம். டி20 கிரிக்கெட்டிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது, ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்” என்றார். நவம்பர் 1 முதல் 15ஆம் தேதிக்குள் இ…
-
- 0 replies
- 326 views
-
-
நடுவர் டேரல் ஹேருக்கு பித்து பிடித்து விட்டது: ஹர்பஜன் காட்டம் ஹர்பஜன், முரளி, சக்லைன் ஆகிய பவுலர்களை பந்து வீச அனுமதித்திருக்கக் கூடாது என்று ஆஸி.முன்னாள் நடுவர் டேரல் ஹேர் கூறியதற்கு ஹர்பஜன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். ஐசிசி.யின் முன்னாள் உயர்மட்ட நடுவர் டேரல் ஹேர், பந்துவீசாமல் த்ரோ செய்பவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேற்றிருக்க வேண்டும் என்று கூறிய கருத்திற்கு ஹர்பஜன் சிங் காட்டமாக பதில் அளித்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் நேர்காணலில் நடுவர் டேரல் ஹேர் கூறியது: 1990-ஆம் ஆண்டுகளின் இறுதியிலேயே நான் கூறினேன், த்ரோ செய்பவர்களை அனுமதித்தால் ஒரு காலத்தில் த்ரோ செய்பவர்களே பவுலர்களாக உருவாகிவிடுவார்கள் என்று எச்சரித்தேன். சக்லைன் முஷ…
-
- 1 reply
- 582 views
-
-
பிரேசிலில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடும் வித்தியாசமான மாரத்தான் ஓட்டம் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. அமேசான் காட்டுக்குள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்ட 17 நாடுகளை சோர்ந்த 65 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அடர்ந்த காட்டுக்குள் ஓடும் ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், செங்குத்தான பாதைகள் ஆகியவற்றை கடந்து ஓட வேண்டி இருந்ததால் போட்டியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானர்கள். சகதி மற்றும் சேறு நிறைந்த சிலர் சிக்கி கொண்டு பெரும் அவதி பட்டனர். இரவு நேரத்தில் சற்று இழைப்பாறி காயங்களுக்கு சற்று மருந்து எடுத்து கொண்ட அவர்கள் விளக்கின் வெளிச்சத்தில் போட்டியை தொடர்ந்தனர். கடும் சவால்களுக்கு மத…
-
- 0 replies
- 289 views
-
-
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வழி நடத்த மிஸ்பாவே சரியான நபர்: அப்ரிதி அந்தர் பல்டி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வழி நடத்த மிஸ்பா உல் ஹக்கே சரியான நபர். அவருக்கு எனது முழு ஆதரவையும் அளிப்பேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டரான ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய கேப்டனான மிஸ்பா உல் ஹக், தன்னால் ரன் குவிக்க முடியாததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட அப்ரிதி, போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உலகக் கோப்பையில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு தலைமை வகிக்க தனக்கு வாய்ப்புள்ளதாக…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்படும் 84ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முதலாம் நாளான நேற்று நிலைநாட்டப்பட்ட சாதனைகளில் ஒரு சாதனை யாழ். மாவட்டத்திலுள்ள அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் என்பவரால் நிலைநாட்டப்பட்டது. ஆண்களுக்கான 18 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் 4.20 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலம் நெப்தலி ஜொய்சன் புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன் மூலம் அவரது கல்லூரியைச் சேர்ந்த பீ. லவணன் 2012இல் நிலைநாட்டிய 3.77 மீற்றர் என்ற சாதனையை நெப்தலி ஜொய்சன் முறியடித்தார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியில் 17 வ…
-
- 6 replies
- 584 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது: ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கடும் சவால்களைச் சந்திக்கும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியாவுக்கு தங்கள் அணி வரும்போது எத்தகைய பிட்ச்களை வழங்கி கடினமாக்கினார்களோ அதே போன்று இங்கு இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் ஷேன் வாட்சன். ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் பிட்ச் தயாரிப்பாளர்கள் நிச்சயம் எங்களுக்குச் சாதகமான பிட்சையே தயாரிப்பார்கள் என்று நம்பலாம், இந்தியாவில் எப்படி அந்த அணிக்குச் சாதகமாக பிட்ச் தயாரிக்கப்படுகிறதோ அப்படி, ஆகவே இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.…
-
- 0 replies
- 333 views
-
-
தோனியின் துருப்புச் சீட்டு ஷமி புதுடில்லி: இங்கிலாந்து தொடரில் ஏமாற்றிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் கேப்டன் தோனியின் துருப்புச் சீட்டாக உருவாகியுள்ளார். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 24. இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 டெஸ்டில் 5 விக்., மற்றுள் 4 ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் மட்டும் சாய்த்தார். இதையடுத்து, கடினமான பயிற்சியில் ஈடுபட்ட ஷமி, பந்தை ‘லேட் சுவிங்’ செய்வதில் மீண்டும் அசத்த துவங்கியுள்ளார். இதற்கான பலனை, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறுவடை செய்யத் துவங்கியுள்ளார். முதல் இரு போட்டியில் தலா 4 என, மொத்தம் 8 விக்கெ…
-
- 0 replies
- 506 views
-