Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தொடர்ந்து 3வது முறையாக யு.எஸ்.ஓபன் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார். இதன் மூலம் மார்டினா நவ்ரதிலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் லாய்ட் என்ற டென்னிஸ் பெருந்தகைகள் பட்டியலில் செரினா இணைந்துள்ளார். மேலும் செரினா வில்லியம்ஸ் வெல்லும் 18வது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் பட்டமாகும் இது. முதல் செட்டில் இருவருமே தொடக்கத்தில் சற்று திணற கடைசியில் செரினாவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க 5-2 என்று முன்னிலை பெற்றார். ஆனால் 8வது சர்வ் கேமில் வோஸ்னியாக்கி செட் ப…

  2. அமைதியாக இருந்து தோற்பது எனக்குப் பிடிக்காது: கவுதம் கம்பீர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் குறித்தும் தனது அணுகுமுறை குறித்தும் பேசிய கவுதம் கம்பீர் கூறும்போது, “அமைதியாக இருந்து தோற்பதை விட, ஆக்ரோஷமாக இருந்து வெற்றி பெறுவதுதான் எனக்குப் பிடித்தமானது” என்று கூறியுள்ளார். "எப்போதுமே களத்தில் இறங்கும் முன்னர் நாம் வெற்றி பெறுவோம் என்றுதான் இறங்குவேன், இம்முறையும் அதுதான் எனது அணுகுமுறையாக இருக்கும். எடுத்த எடுப்பில் சாம்பியன் பட்டம் பற்றி யோசிக்கக் கூடாது, ஆனாலும் ஆழ்மனதில் அதுதான் இருக்குமென்றாலும் படிப்படியாகவே அதனைப் பற்ற…

  3. நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்ட இலங்கை வீரர் திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் திசர பெரேரா நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்டதாக அவர் இலங்கைப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 2 அருமையான் ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற திசர பெரேரா, சிங்கள மொழி செய்தித்தாள் லக்பிமாவுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறியதாவது: "ஆம். நியூசீலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மைதான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள். பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர். எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நி…

  4. மாரின் சிலிச் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் சாதனை வாய்ப்பைக் கோட்டைவிட்ட நிஷிகோரி அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குரேசிய வீரர் மாரின் சிலிச், ஜப்பான் வீரர் நிஷிகோரியை நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் பட்டம் வெல்லும் முதல் ஆசிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜப்பான் வீரர் நிஷிகோரி நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ 1 மணி 54 நிமிட ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். கோரான் இவானிசவிச் என்ற ஒரு அபாரமான குரேசிய வீரர் அப்போது சாம்ப்ராஸ், அகாஸி உள்ளிட்ட பெரிய வீரர்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களுக்கு அச்சுறுத்தலையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ…

  5. தோனியை விமர்சித்த பிரிட்டன் ஊடகங்கள்: இந்திய ரசிகர்கள் கூச்சல் எதிரொலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்ட இந்திய ரசிகர்களை கண்டிக்க மறுத்த தோனியை பிரிட்டன் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. 20 ஓவர் போட்டியின்போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி ரசிகர்கள்தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிகம் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்தபோதும், பவுண்டரிக்கு பந்தை விரட்டியபோதும் பெரும் கரவொலி எழுந்தது. இந்திய வீரர்களுக்கு ஆதரவாக குறிப்பாக தோனியைப் புகழும் வாசக அட்டைகள் பலவற்றையும் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கொண்டு வந்திருந்தனர். போட்டியில் இங்கிலாந்தில் நடைபெறுகிறதா அல்லது இந்தியாவில் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இங்கில…

  6. உலக சாம்பியன் ஜெர்மனிக்கு நெருக்கடி கொடுத்த ஸ்காட்லாந்து கடந்த ஜூலையில் அர்ஜெண்டீனாவை வீழ்த்தி உலகக் கோப்பைக் கால்பந்து சாம்பியனான ஜெர்மனி அதன் பிறகு முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று விளையாடியது. யூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் நேற்று டார்ட்மண்டில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது ஜெர்மனி. ஸ்காட்லாந்து கடும் நெருக்கடி கொடுக்க மீண்டும் தாமஸ் முல்லரின் அபாரமான 2 கோல்களினால் ஜெர்மனி 2-1 என்று வெற்றி பெற்றது. இடைவேளைக்கு முன்பாக தாமஸ் முல்லர் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுக்க, ஸ்காட்லாந்தின் இகேச்சி அன்யா என்பவர் 66வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார். உலக சாம்பியன்களின் இறுக்கமான தடுப்பு உத்திகளை கேள்விக…

  7. நேசத்துடன் இந்தியா செல்கிறோம்: லாகூர் லயன்ஸ் கேப்டன் மொகமது ஹபீஸ் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதனையடுத்து கேப்டன் மொகமது ஹபீஸ் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடும் உமர் அக்மல், அகமது ஷேஜாத், வஹாப் ரியாஸ், நசீர் ஜாம்ஷேட் ஆகியோர் உள்ளனர். மேலும் அய்ஜாஸ் சீமா என்ற வீரரும் உள்ளார். விசா கிடைத்தது பற்றிய மகிழ்ச்சியைத் தெரிவித்த மொகமது ஹபீஸ், “நாங்கள் நேசம் என்ற செய்தியுடன் இந்தியா செல்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அங்கு எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். பாகிஸ்தான் நாட்டின் தூதர்களாக நாங்கள் அங்கு செல்ல…

  8. ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினால் இந்தியாவை நிறுத்த முடியாது: ஷோயப் அக்தர் இந்தியா உலக சாம்பியன்கள் என்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக வீசுவது முக்கியம் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார். "ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை 2015 உலகக் கோப்பைப் போட்டிகளை மனதில் கொண்டு பயிற்சியில் ஈடுபடச்செய்ய வேண்டும். இந்த மூவரும் உடற்தகுதி அளவில் கட்டுக்கோப்புடன் முழுதும் ஃபிட் என்றால், இவர்கள் சிறப்பாக விசினால் இந்திய அணியை யாராலும் நிறுத்த முடியாது. உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு ஒருமாதம் முன்பாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வு அளிப்பது அ…

  9. டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை வெற்றியோடு முடிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்திய அணி ஷிகர் தவன், ரஹானே, கோலி, ரெய்னா, ராயுடு, கேப்டன் தோனி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பெயர் போன இந்திய படை இந்த போட்டியில் வாணவேடிக்கை காட்டும் என எதிர்பார்க்கப்படு கிறது. பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இங்கிலாந்து அண…

  10. இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் செம்மலை உதயசூரியன் அணி வெற்றி பெற்றுள்ளது. வாழ்த்துக்கள். https://www.facebook.com/video/video.php?v=914720025207351

  11. மைக்கேல் கிளார்க்கை என்னால் ஒரு போதும் மன்னிக்க முடியாது: டேல் ஸ்டெய்ன் காட்டம் கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது தன்னை நோக்கி ஆஸ்திரேலிய கேப்டன் வசைச்சொல்லை ஏவியதை மறக்கப்போவதில்லை என்றும் இதற்காக மைக்கேல் கிளார்க்கை ஒரு போதும் தான் மன்னிக்க மாட்டேன் என்றும் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் காட்டமாகக் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆட்டக்களத்தில் தன்னை மிகவும் காயப்படுத்திய வசைச்சொல் ஒன்று உண்டென்றால் அது அன்று மைக்கேல் கிளார்க் கூறியதே என்று ஸ்டெய்ன் இப்போது கூறியுள்ளார். ஆட்டத்தை தோல்வியிலிருந்து காப்பாற்ற டேல் ஸ்டெய்ன் பேட்டிங்கில் போராடிக் கொண்டிருந்த போது, ஜேம்ஸ் பேட்டின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னை நோக்கி ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள, …

  12. உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கே வாய்ப்பு: இயன் சாப்பல் 2015ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுக்கே அதிக வாய்ப்புளது என்று இயன் சாப்பல் தெரிவித்துள்ளார். இது குறித்து இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: "உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. வெற்றி அணி இந்த 3 அணிகளிலிருந்துதான் வரும் என்று எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து சுத்தமாக மடிந்து விட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியை நம்ப முடியாது. அவர்கள் வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வெ…

  13. ஐபிஎல் கிரிக்கெட்டை அகற்ற வேண்டும்: இயன் போத்தம் ஐபிஎல் கிரிக்கெட்டை அகற்ற வேண்டும், கிரிக்கெட்டின் நீண்ட கால ஆயுளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாதகம் விளைவித்து வருகிறது என்று இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் சாடியுள்ளார். லார்ட்ஸில் எம்.சி.சி. ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் கவுட்ரி சொற்பொழிவில் இயன் போத்தம் இவ்வாறு கூறியுள்ளார். "நான் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி மிகுந்த கவலையடைகிறேன், உண்மையில், அந்த கிரிக்கெட் வடிவம் இருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன், உலக கிரிக்கெட்டின் முன்னுரிமைகளை அது மாற்றிவிடுகிறது. வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு அடிமைகளாக இருக்கின்றனர். நிர்வாகிகள் அதற்குத் தலைவணங்குகின்றனர். 2 மாத காலங்களுக்கு உலகின் சிறந்த வீரர்களை தன்னகத்தே பிடித்துப…

  14. கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா 350 ரன்கள் குவிப்பு முத்தர்ப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் ஜிம்பாவேயிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களைக் குவித்தது. ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாவே கேப்டன் எல்டன் சிகும்பரா ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் பற்றி அறியாமல் முதலில் பேட் செய்ய அழைத்தார். பிராட் ஹேடின், ஆரோன் ஃபின்ச் ஜோடி அதிரடியாகத் தொடங்கி 18 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து அபாரத் தொடக்கம் கண்டனர். பன்யாங்கரா, மற்றும் சடரா என்ற பவுலர்கள் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். 48 ரன்களில் 2 பவுண்டரி …

  15. யு.எஸ் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா சாம்பியன் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். டை பிரேக் வரை சென்ற இந்த போட்டியில், 6—1 2—6 11—9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் அபிகெயில் ஸ்பியர்ஸ் மற்றும் மெக்சிகோவின் சாண்டியாகோ கொன்ஸாலஸ் ஜோடியை, பிரேசிலின் புருனோ சோர்ஸ், இந்தியாவின் சானியா ஜோடி வீழ்த்தியது. சோர்ஸ் மற்றும் சானியா கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்திருப்பது இதுவே முதல்முறை. சோர்ஸ் உடன் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ள சானியா, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் இந்த ஜோடி தொடரும் என…

  16. பிரேசில் கால்பந்தாட்ட அணி கப்டனாக 22 வயதான நட்சத்திர வீரர் நெய்மர் நியமனம் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட அணி வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள கேப்டனாக நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார். நெய்மர் தலைமையில் அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் என்று அந்த அணி பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பையில் அடைந்த படுதோல்வியை மறந்து நெய்மர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் பிரேசிலுக்கு டி.சில்வா கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். பயிற்சியாளராக லூயிஸ் பெலிப் ஸ்கோலரி பதவி வகித்தார். அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றப்பட்டு துங்கா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில…

  17. பதிலடி கொடுக்க இளம் படை ரெடி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் ஆகஸ்ட் 23, 2014. பிரிஸ்டல்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இவர்கள் பணியை மேற்பார்வை செய்யவுள்ள ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, நேற்று அணியினருடன் இணைந்தார். இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டலில் …

  18. மக்கள் அபிமான வீரராக மீண்டும் சங்கக்கார, அதிசிறந்த வீரராக மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வரு­டத்தின் அதி சிறந்த வீரர் விருதை ஏஞ்சலோ மெத்தியூஸ் வென்­றெ­டுத்த அதே­வேளை மக்கள் அபி­மான வீரர் விருதை குமார் சங்­கக்­கார மூன்றாவது தட­வை­யாக வென்­றெ­டுத்தார். டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்­று இரவு கோலா­க­ல­மாக நடத்­தப்­பட்­டது. இதில் மெத்தியூஸ் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் துடுப்­பாட்ட வீரர் விரு­தையும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் அதி சிறந்த சக­ல­துறை வீர­ருக்­கான விருதையும் வென்றெடுத்தார். லசித் மாலிங்க அதி­சி­றந்த சர்­வ­தேச ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் பந்­து­வீச…

  19. பிடிவாத அலிஸ்டர் குக்கை நீக்க வேண்டும்: மைக்கேல் வான் காட்டம் அலிஸ்டர் குக் இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை உதற மறுத்தால் அவரை நீக்குவதுதான் ஒரே வழி என்று முன்னாள் ஈகேப்டன் மைக்கேல் வான் காட்டமாகக் கூறியுள்ளார். "ஒருநாள் கிரிக்கெட் வித்தியாசமானது. அலிஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து இறங்க மறுத்தால் அவரை நீக்குவதுதான் சிறந்தது. அவர் ராஜினாமா செய்யவில்லை, ஜேம்ஸ் விடேகர், பால் டவுண்டன் போன்ற வாரிய நிர்வாகிகளும் மாற்றம் வேண்டும் என்பதை உணரவில்லையெனில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்கால நன்மை குறித்த இவர்களது நோக்கத்தை நான் சீரியசாகக் கேள்வி கேட்க நேரிடும். டெஸ்ட் தொடரை வென்று அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்…

  20. முதல் முறை காதிலிருந்து ரத்தம்; 2ஆம் முறை கை ஒடிந்தது: மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷம் ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார். செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்ட…

  21. யுவராஜ் சிங் அணியுடனடான கிரிக்கெட் போட்டியில்5 சிக்ஸர்கள் அடித்து வென்ற யூஸைன் போல்ட்: 100 மீற்றர் ஓட்டத்தில் போல்ட்டை முந்தினார் யுவராஜ் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியனும் ஒலிம்பிக் சம்பியனுமான ஜமைக்கா வீரர் யூஸைன் போல்ட், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தலைமையிலான அணியுடனான கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். இந்தியாவின் பெங்களூர் நகரிலுள்ள சின்னஸ்வாமி அரங்கில் நேற்றுமுன்தினம் இக்கண்காட்சி போட்டி நடைபெற்றது. பியூமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான அணியும் உசைன் போல்ட் தலைமையிலான அணியும் மோதின. தலா 4 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெ…

  22. நாங்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியாகத் திகழ்கிறோம்: தோனி பெருமிதம் இங்கிலாந்து அணியை ஒருநாள் தொடரில் சகல பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி பற்றி தோனி குறிப்பிடும்போது, "நாங்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி" என்று பெருமிதமடைந்துள்ளார். எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை ரஹானே, ஷிகர் தவன் தொடக்க ஜோடி துவம்சம் செய்து வெற்றி பெற்றது குறித்து தோனி கூறியதாவது: "நல்ல விஷயம் என்னவெனில், முதல் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு கொண்டே வந்தோம். இதுதான் மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு விஷயம். டாஸ் வென்றது முக்கியமாக அமைந்தது. அதற்கேற்ப வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். அவர்கள் கொடுத்த தொடக்க விக்கெட…

  23. கடந்த கால சம்பவங்களை கிளற விரும்பிவில்லை: திசர பெரேரா 2014-09-01 10:50:27 கடந்த கால சம்பவங்களைக் கிளற விரும்பவில்லை என பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகனாக தெரிவான திசர பெரேரா தெரிவிக்கின்றார். தம்புளையில் சனிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிலகால இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானுடான தொடருக்கு அழைக்கப்பட்ட திசர பேரேரா, தான் விளையாடி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகனானமை குறிப்பிடத்தக்கது. சில காலம் இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனமைக்கு சில கருத்துமுரண்பாடுகளா காரணம் எனவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாக எனவும் அவரிடம் கேட்கப்படபோது, 'கட…

  24. இந்தியா மீண்டும் நம்பர்–1 செப்டம்பர் 01, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. பின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு த…

  25. 1983ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயிடம் தோற்றதற்கு குடிதான் காரணம்: ராட்னி ஹாக் ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா 31 ஆண்டுகள் கழித்து தோல்வி கண்டது. அதாவது 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளின் போது ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட பிறகு நேற்று மீண்டும் தோல்வி கண்டது. இந்தத் தோல்விகளை அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் மீது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதற்கு முதல் நாள் இரவு கடுமையாக, கேன் கேனாக குடித்ததே காரணம் என்று அந்த அணியில் இடம்பெற்றிருந்த ராட்னி ஹாக் தனது டிவிட்டரில் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.